மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்

தேதி: April 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (16 votes)

 

மஷ்ரூம் - 10/12
பெரிய வெங்காயம் - ஒன்று
ப‌‌ச்சை மிள‌காய் - 3
பூண்டு விழுது - ஒரு தேக்க‌ர‌ண்டி
வெங்காய‌த்தாள் - ஒன்று
சோயா சாஸ் - 4 தேக்கரண்டி
மிள‌குத்தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
வ‌டித்து ஆறவைத்த சாத‌ம் - 1 1/2 கப்
உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முத‌லில் மஷ்ரூமை சுத்தப்படுத்தி, மெல்லிய வில்லைகளாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை மிகப்பொடியாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
ஒரு பெரிய‌ வாய‌க‌ன்ற‌ க‌டாயில், எண்ணெய் விட்டு சூடாக்க‌வும். முதலில் ப‌ச்சை மிள‌காய் போட்டு சில‌ நொடிக‌ள் வ‌த‌க்கி பின்ன‌ர் வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
இத‌னுட‌ன் பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேர‌ம் வத‌க்கி, பின்ன‌ர் ம‌ஷ்ரூம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
எல்லாமுமாக‌ சிறிது வ‌த‌ங்கிய‌ நிலையில், வெங்காய‌த்தாளையும் சேர்த்து ஒரு வதக்கு வ‌த‌க்கவும்.
அத‌னுட‌ன் துளி உப்பு சேர்த்து சாத‌த்தை கொட்டி கிள‌ற‌வும்.
கூட‌வே மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, க‌டாயின் சூட்டிலேயே நன்கு சாதம் உடைந்து விடாதவாறு பார்த்து க‌லந்து விட‌வும். உப்பு ச‌ரிப்பார்த்து தேவைப்ப‌ட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
பிற‌கு மேலும் சிறிது நறுக்கிய வெங்காய‌த்தாள் சேர்த்து கலந்து விட்டு ப‌ரிமாற‌வும். இப்போது கிட்ஸ் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் த‌யார்!

இங்கே காரம், குழந்தைகளுக்காக குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரம் விரும்புகிறவர்கள், பச்சை மிளகாயின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளலாம். இல்லையானால், க்ரீன் சில்லி சாஸ் இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தேக்க‌ரண்டி வரை வதக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். முட்டை சேர்க்க‌ விரும்புவ‌ர்கள், இரண்டு முட்டையை உடைத்து சிறிது உப்பு, மிளகுத்தூள் கலந்து அடித்து, 'ஸ்க்ராம்பிள்டு எக்'காக‌ தயார் செய்து, இந்தக்கலவையில் கொட்டி கலந்து விட்டுக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ஹெல்தி &ஈசியான ரெசிப்பி.கண்டிப்பா செஞ்சுபார்ப்பேன்.உங்க பாதாம் பராத்தா ரொம்ப நல்லா வந்தது, சாரி இங்க பதிவிடுவதற்கு.வாழ்த்துக்கள்.

Very good recipe susri... I like mushroom very much... Definitely i wil try it... I have some doubts, Mushroomai kamboda serthu samaikalama? soya sauce kandippaga serkanuma? What are the uses of soya sauce? Pls tel me...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஸ்ரீ ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.. சுலபமான செய்முறை... வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அன்பு சுஸ்ரீ,

படங்கள், விளக்கங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

சுஜா

அருமையான குறிப்பு :)
வாழ்த்துக்கள்... கண்டிப்பா ஒரு முறை செய்து பார்க்கிறேன் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுஸ்ரீ,
மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் அருமையா செய்து இருக்கீங்க.சாதம் எல்லாம் உடையாமல்,குழையாமல் நீள நீளமாக பார்க்கவே அழகா இருக்கு.எக்ஸ்ட்ரா டிப்ஸ்களும் அருமை.விரைவில் செய்து பார்த்து சொல்றேன் சுஸ்ரீ.சுவையான மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

கண்டிப்பா உங்களுக்கும் எனக்கும் ஏதோ டெலிபதி வொர்க் அவுட் ஆயிட்டே இருக்கு ;) ப்ரோடீன் ரிச் புட். அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குறிப்பை வெளியிட்ட அறுசுவை அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரீம்,

உங்க வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! ஆமா, ரொம்ப ஈசிதான். அவசியம் செய்து பாருங்க. நன்றி!

பாதாம் பராத்தா செய்து பார்த்திங்களா? நல்லா வந்ததா? ரொம்ப சந்தோஷமா இருக்கு ;) எங்க சொன்னா என்ன?! செய்துபார்த்து உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி ரீம். நன்றி!

---

நித்யா,

பாராட்டுக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி! க‌ண்டிப்பா உங்க‌ளுக்கு முடியும்போது ட்ரை ப‌ண்ணிபாருங்க‌ள். ம‌ஷ்ரூமை காம்போடு ச‌மைக்க‌லாம். மெல்லிய‌தாக‌ அரிந்து சேர்த்துக்கோங்க‌. அப்புற‌ம் சோயா சாஸ், ஃபிளேவ‌ருக்காக‌ சேர்க்கிறோம். அதோடு இன்னொரு விஷயமும் சொல்லிடறேன். சோயா சாஸ் உப்பு த‌ன்மையுடைய‌தா இருக்கும். அத‌னால்தான், உப்பு நிதானமா பார்த்து சிறித‌ள‌வு (1 அல்லது 2 சிட்டிகை மட்டுமே) சேர்த்துக்க‌ சொல்லியிருக்கேன்.
வெகு தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்... வேற‌ எதாவ‌து ட‌வுட்ஸ் இருந்தாலும் கேளுங்க. ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரேவ‌தி,
வாழ்த்துக்க‌ளுக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி!

சிதால‌ஷ்மிமா,
உங்களின் தொடர்ந்த அன்பான வாழ்த்துக்க‌ளுக்கும், பாராட்டுக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றிமா! :)

ர‌ம்யா,
பாராட்டிற்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் ரொம்ப ந‌ன்றி ர‌ம்ஸ்! முடியும்போது செய்துபாருங்க. நன்றி!

ஹ‌ர்ஷா,
எல்லா விஷயங்களையும் கவனித்து குறிப்பிட்டு பதிவு போடுவது உங்க சிறப்பு! :) பாராட்டுக‌ளுக்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி ஹ‌ர்ஷா! முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க‌.

பி.கு. போனவாரம், 'பொங்கல் கொத்சு'ல உங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். நேரம் கிடைக்கும்போது பாருங்க.

லாவண்யா,
அதே,அதே... தொடர்ந்து டெலிபதி வொர்க் அவுட் ஆகிட்டே இருக்கு! :) எப்படி..., க்ரேட் மைன்ட்ஸ் திங்க் அலைக்‍குனு சொல்லிக்கலாமா?! :) ;) பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி லாவண்யா!

அன்புடன்
சுஸ்ரீ

சூப்பரா செய்திருக்கீங்க ஃப்ரைட் ரைஸ்... அதுவும் மஷ்ரூம்... ம்ம்... விட முடியுமா??? செய்துருவோம். இந்த குறிப்பு இத்தனை நாளா கண்ணில் படலயே... பட்டிருந்தா இன்நேரம் செய்திருப்பேன். இட்ஸ் ஓக்கே... செய்துட்டு வருவோம்ல :) ப்ரெசண்டேஷன் வழக்கம் போல சுஸ்ரீன்னு பேர் சொல்லுது. கலக்கல்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பதிவை பார்த்தேன்....பதிலும் கொடுத்துட்டேன்.பதிவை கவனிக்கவில்லை...மன்னிக்கவும்.எல்லார் குறிப்புகளையும் உடனே செய்து பார்த்து பின்னூட்டம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே.மிக்க நன்றி சுஸ்ரீ.

வனி,
ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?! உங்களின் தொடர்ந்த அன்பான பின்னூட்ட பதிவுகளுக்கும், பாராட்டுக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி வனி! :)
உங்களுக்கும் மஷ்ரூம் பிடிக்குமா? எனக்கும்! :) அவசியம் செய்துபார்த்துட்டு சொல்லுங்க வனி, பிடித்ததா என்று!

(பி.கு. இன்னொரு மஷ்ரூம் குறிப்பும் வந்திட்டே இருக்கு... :) இப்ப, படங்கள் மட்டும் எடுத்த நிலையில் இருக்கு, இனிதான் குறிப்பு எழுதி அனுப்பனும் :))

ஹ‌ர்ஷா,
எனக்கு நீங்க அங்க போட்ட பதிலையும் பார்த்தேன். நீங்க‌ பார்த்தா 'ஹேப்பி'யாவிங்க‌ளேன்னு நியாபகப்படுத்தலாம்னு சொன்னேன். அதுக்கு போய் எதுக்கு மன்னிப்பு எல்லாம்?!

உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

எனக்காக குறிப்பை செய்து,பின்னூட்டம் கொடுத்து இருக்கீங்க. நான் பார்க்காததற்கு ஒரு சாரி கூட சொல்ல கூடாதா? ;-) உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப ரொம்ப ஹேப்பி ஆயிட்டேன் சுஸ்ரீ. நன்றி.

school pogum ean kuttisuku ok

"Be Honest For Ever"

What do you mean by Vengaya thaal?