ஸ்ட்ராபெர்ரி கப் கேக்

தேதி: April 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

ஸ்ட்ராபெர்ரி - 6 அல்லது 7
ஆல் பர்பஸ் ஃப்ளார் - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பால் - கால் கப்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - அரை கப்
சர்க்கரை - ஒரு கப்
முட்டை - ஒன்று
முட்டை வெள்ளைக்கரு - 2
ரெட் ஃபுட் கலர் - சிறிது
கப் கேக் லைனர் - 12
க்ரீம் சீஸ்/ஸ்ட்ராபெர்ரி ஃப்ராஸ்டிங் - ஒரு கேன்


 

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரியை ப்ளெண்டர்/ஃபுட் ப்ராசஸரில் போட்டு அரைத்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க கூடாது.
ஆல் பர்பஸ் ஃப்ளார் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்துக் கொள்ளவும்.
ஸ்ட்ராபெர்ரி பியூரியில் வெனிலா எசன்ஸ் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின்னர் முட்டை மற்றும் முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இப்போது சிறிது மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் ஸ்ட்ராபெர்ரி-பால் கலவையை இதனுடன் சேர்க்கவும்.
பிறகு மீதியுள்ள மாவையும் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
விருப்பப்பட்டால் சிறிது ரெட் கலர் சேர்த்துக் கொள்ளவும். ஓரிரு துளி ரெட் கலர் சேர்த்தால் பின்க் நிறம் கிடைக்கும்.
கப் கேக் லைனரை மஃபின் ட்ரேயில் அடுக்கி, மாவு கலவையை முக்கால் பாகம் ஊற்றவும்.
அவனை 350 டிகிரி முற்சூடு செய்து 22 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
டூத் பிக் கொண்டு வெந்ததை உறுதி செய்து கொள்ளவும். கேக் வெந்துவிட்டால் கேக்கின் மேற்பகுதியை விரல்களால் அழுத்தினால் ஒட்டாமல் இருக்கும்.
ஒரு மணி நேரம் கப் கேக் நன்கு ஆறியதும் ப்ராஸ்ட்டிங் செய்யலாம். ப்ராஸ்டிங்கில் சிறிது ரெட் கலர் சேர்த்தால் அழகிய பின்க் நிறம் கிடைக்கும். வெள்ளை, பின்க் கலர் ப்ராஸ்டிங் இதற்கு நன்றாக இருக்கும்.
மேலே ஸ்ட்ராபெர்ரி, ஸ்ப்ரின்கிள்ஸ் கொண்டு விரும்பியவாறு அலங்கரிக்கலாம்.
சுவையான ஸ்ட்ராபெர்ரி கப் கேக் தயார்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவில் செய்தால் 12 கப் கேக்குகள் செய்யலாம். ஸ்ட்ராபெர்ரி இதய வடிவில் இருப்பதால் வேலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்களில் ஸ்ட்ராபெர்ரி கப் கேக் கண்டிப்பாக இடம்பெறும். குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கும் இந்த ஸ்ட்ராபெர்ரி கப் கேக் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் யம்மி கேக். கப் கேக்கே அழகாக இருக்கும் அதன் மேல் பிங்க் க்ரீம் , ஸ்ட்ராபெர்ரி வைத்து பார்க்க கலர்புல்லா இருக்கு. வாழ்த்துக்கள் ஹர்ஷா.

Hai Harshaa strawberry cup cake is very nice... but what to do? i dont have micro wave oven... so i cant able to try pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

யம்மி யம்மி கேக் பார்க்க சூப்பரா இருக்கு... ரொம்ப அழகா செய்திருக்கீங்க... குட்டிஸ் இதை பார்த்தால் அவ்வளவு தான் விட மாட்டாங்க... அழகான குறிப்பு கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

hai super cake.wonderful presentation..easyana method kandippa try panren.thodarndhu recipies kudunga. vaazthukkal.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அன்பு ஹர்ஷா,

சூப்பர் ப்ரசண்டேஷன், கலர் காம்பினேஷன் அருமையாக இருக்கு. டாப்பிங் கூட இவ்வளவு பிரமாதமாகப் பண்ணியிருக்கீங்க, ரொம்ப நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

வாவ்.. சுப்பர் கேக்.யம்மி.. அழகோ அழகு ;)
வீட்டுக்கு வந்தா கண்டிப்பா செய்து கொடுங்க ;) வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றிகள்.

இதில் ஸ்ட்ராபெர்ரி அரைத்து வரும் பியூரியில் 1/3 கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.ரெஸிப்பியில் குறிப்பிட மறந்துவிட்டேன்.

வினோஜா,
முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி.எல்லா குறிப்புகளிலும் தொடர்ந்து பதிவிட்டு ஊக்கப்படுத்துவதற்கு ரொம்ப நன்றி வினோஜா.

நித்யா,
சீக்கிரமே ’அவன்’ வாங்க வாழ்த்துக்கள்.அவன் வாங்கியதும் செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி.

ரேவதி,
ஆமாம்.குட்டீஸ்க்கு கப் கேக்னா ரொம்வே பிடிக்கும்.எங்க வீட்டு குட்டிக்காக செய்ததுதான் இந்த கப் கேக்.உங்க அழகான பதிவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரேவதி.

சம்னாஸ்,
இந்த கப் கேக் ரொம்ப சுலபமா செய்துடலாம்.கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க.பதிவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
இந்த குறிப்பை அனுப்பனும்னு ரொம்ப நாளா நினச்சுட்டு இருந்தேன்.இப்போ தான் அனுப்ப முடிந்தது.உங்க அன்பான பதிவுக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.

ரம்ஸ்,
வாங்க..வாங்க...கண்டிப்பா செய்து கொடுக்கிறேன்.உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி ரம்ஸ்.

கலக்கல் கப் கேக். ஐசிங் அமர்க்களம். பிங்க், இதய வடிவம், சிகப்பு , வேலண்டைன்ஸ் டே....... என்னவோ சொல்ல வரீங்க ;) அன்பரசி இந்த குறிப்பை எப்போவே எதிர்ப்பார்த்தேன்! அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாவ்... யம்மி கப் கேக், சூப்பரா வ‌ந்திருக்கு ஹர்ஷா! எங்கவீட்டு குட்டீஸ் இரண்டுக்கும் ஸ்ட்ராபெர்ரி, கப் கேக்குஸ் இரண்டுமே ரொம்ப இஷ்டம், இது இரண்டும் கலந்து... :) இப்ப சரியா இங்கே ஸ்ட்ராபெர்ரி சீசனும்கூட! அப்புறம் என்ன கையோட செய்தும் பார்த்து சொல்லிடறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

லாவண்யா,
//பிங்க், இதய வடிவம், சிகப்பு , வேலண்டைன்ஸ் டே....... என்னவோ சொல்ல வரீங்க ;) //
அடுத்த வருஷம் வேலண்டைன்ஸ் டே அன்று பொக்கே,டெக்கரேஷனுடன் இந்த கப் கேக்கையும் செய்து கொண்டாடுங்கனு சொல்ல வந்தேன். ;-) குறிப்பு உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.பதிவுக்கும் மிக்க நன்றி லாண்யா. ;-)

சுஸ்ரீ,
இந்த சீசனில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி புளிப்பு இல்லாமல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும்.அதனால் தைரியமா கப் கேக் செய்யலாம். :-) சேம் பின்ச்....எங்க வீட்டு குட்டீஸ்க்கும் ஸ்ட்ராபெர்ரினா ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்து குழந்தைகள் என்ன சொன்னாங்கனு சொல்லுங்க.ரொம்ப ஈஸியான செய்முறைதான்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி சுஸ்ரீ.

Dear madam,

is this cake can be made in Microwave oven or electric oven. Please reply.

thanks

gshalini

gshalini,
நான் பயன்படுத்துவது ’எலக்ட்ரிக் அவன்’.(Electric oven).
மைக்ரோவேவ் அவனில் செய்ததில்லை.ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.