வெஜிடபிள் பாஸ்தா

தேதி: August 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

பாஸ்தா - ஒரு கப்
கேரட் - ஒன்று
பச்சைபட்டாணி - கால் கப்
பீன்ஸ் - 5
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 3 பல்
பிரிஞ்சி இலை - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி சாஸ் - சிறிதளவு
புதினா - 3 இலைகள்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
துருவிய சீஸ் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்கவிடவும். பின் சிறிது உப்பு மற்றும் பாஸ்தாக்களை போட்டு வேகவிடவும்.
பாஸ்தா வெந்த பின் மீதமுள்ள தண்ணீரை வடிக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.
பின் தக்காளி, தக்காளி சாஸ், புதினா, மிளகாய் தூள் போட்டு வதக்கவும். வதங்கியதும் வேகவைத்த காய்கறிகள், உப்பு, கரம் மசாலாத்தூள், அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
கொதிவந்த பின் வேகவைத்த பாஸ்தாவை போட்டு கிளறி இறக்கவும். பின் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்