கேப்சிகம் ரைஸ்

தேதி: May 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

குடைமிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று ( பொடியாக நறுக்கியது )
தக்காளி - ஒன்று ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி - ஒரு பூண்டின் அளவு ( பொடியாக நறுக்கியது )
பூண்டு - 5 பற்கள் ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 6
எலுமிச்சை - பாதி
கார்ன் மற்றும் பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
புதியா, மல்லித் தழை, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
சாம்பார்த்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - தாளிக்க


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளி மற்றும் தழைகளை சேர்த்து நன்கு குழையும்படி வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும்.
பின் குடைமிளகாய், கார்ன் மற்றும் பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் கழித்து சாம்பார்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும். அதில் தேவைக்கு ஏற்றாற் போல எலுமிச்சை சாற்றை பிழிந்து கிளறிக் கொள்ளவும்.
காரசாரமான, சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ரம்யா,

கொஞ்சம் இடைவெளிக்கப்புறம் உங்க குறிப்பைப் பார்த்ததும் சந்தோஷமாக இருக்கு:):)

நல்ல காரசாரமான ரைஸ். காய்கறிகளும் சேர்த்திருக்கீங்க. லஞ்ச் பாக்ஸுக்கு தோதான குறிப்பு. அவசியம் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

காப்சிகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..... அதோட காய்கறிகளையும் சேர்த்து நல்லா ஹெல்தியா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.... :)

ரம்ஸ்,
கேப்சிகம் ரைஸ் கலர்ஃபுல்லா இருக்கு.பிரசண்ட்டேஷன் ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க.கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன்.வாழ்த்துக்கள் ரம்ஸ்.

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி

சீதாலஷ்மி
ரொம்ப நன்றி.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க :)

தீபா
செய்து பார்த்து சொல்லுங்க.நல்லா இருக்கும் ;) நன்றி

ஹர்ஷு
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.. ரொம்ப நன்றி டா :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ் கேப்சிகம் ரைஸ் எளிமை + அருமை வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

epadi erukenga rams