என்சிலாடா

தேதி: May 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

ரீஃப்ரைட் பீன்ஸ் - ஒரு டின்
டார்ட்டில்லா - 5 முதல் 8 வரை
என்சிலாடா சாஸ் - ஒரு டின்
துருவிய சீஸ் - 3/4 முதல் 1 கப் வரை
டாக்கோ சீசனிங் பவுடர் - ஒரு சிறிய பாக்கெட்
அலங்கரிக்க:
கொத்தமல்லி இலைகள்
சவர் க்ரீம் சிறிது


 

தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அவனை 350 டிகிரி முற்சூடு செய்து வைக்கவும்.
ரீஃப்ரைட் பீன்ஸ் டின்னில் இருந்து பீன்ஸை எடுத்து, இதனுடன், இரண்டு மேசைக்கரண்டி அளவு டாக்கோ சீசனிங் பவுடர் சேர்த்து, கலந்துவிட்டு மைக்ரோவேவ் அவனில் வைத்து 2 நிமிடம் சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். (மைக்ரோவேவ் இல்லையென்றால், அடுப்பில் வைத்தும் சூடு செய்து எடுத்துக் கொள்ளலாம்)
அடுத்து, ஒரு தட்டில் பாதி என்சிலாடா சாஸை ஊற்றி தயாராக வைக்கவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து, டார்ட்டில்லாவை போட்டு இரண்டு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி, தட்டில் ஊற்றி வைத்திருக்கும் சாஸின் மீது வைக்கவும்.
இதன் மேலே, கலந்து வைத்திருக்கும் பீன்ஸ் கலவையை சுமார் 2 மேசைக்கரண்டி அளவுக்கு வைக்கவும்.
இரண்டு பக்கத்திலிருந்தும், டார்ட்டிலாவை மடித்து லேசான இறுக்கம் கொடுத்து சுருட்டி வைக்கவும்.
இதே போல எல்லா டார்ட்டில்லாவையும் சுருட்டி, நாண்ஸ்டிக் ஸ்ப்ரே செய்த ஒரு பேக்கிங் டிஷ்/ட்ரேயில் நெருக்கமாக அடுக்கவும்.
பிறகு இதன் மேலே மீதி உள்ள சாஸ் முழுவதையும் எல்லா டார்ட்டிலாவின் மேலும் படுமாறு பரவலாக ஊற்றவும். பிறகு சீஸ் துருவலை எல்லா இடங்களிலும் சமமாக இருக்குமாறு தூவி விடவும்.
அடுத்து, ஒரு அலுமினிய ஃபாயிலை எடுத்து, பேக்கிங் ட்ரேவை இறுக்கமாக மூடி, ஓரங்களை சுற்றி மடித்து விடவும்.
இதனை முற்சூடு செய்த அவனில் வைத்து, 15 - 18 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். திறந்து பார்க்கும் போது மேலே தூவிய சீஸ் நன்றாக உருகி வந்திருப்பது தெரியும்.
இதன் மேலே, கொத்தமல்லி/வெங்காயத்தாள் மெலிதாக நறுக்கி அலங்கரித்து கொள்ளவும். பரிமாறும் போது ஒரு மேசைக்கரண்டி, சவர் க்ரீமுடன் சேர்த்து பரிமாற சுவையான வெஜிடேரியன் என்சிலாடா ரெடி!

என்சிலாடா ஒரு மெக்சிகன் நாட்டு உணவு வகையாகும். இங்கே கொடுத்திருப்பது பேசிக் வெஜிடேரியன் என்சிலாடா. இதையே பீன்ஸ் கலவைக்கு பதிலாக, சிக்கன் சேர்த்து ஸ்ட‌ஃபிங் செய்து உள்ளே வைத்தால் சிக்கன் என்சிலாடா. வெஜிடேரியனிலேயே, பீன்ஸுடன் டாக்கோ சீசனிங் சேர்க்கும் போது பொடியாக நறுக்கிய ஸ்பினாச் சிறிது சேர்த்தும், அடுப்பில் சிறிது வேக வைத்து எடுத்து செய்யலாம். காரம் பிடித்தவர்கள் 'ஹாலப்பினோ பிக்கிள்' சிறிது சேர்த்தும் ஸ்டஃபிங் தயார் செய்யலாம். வேறுவிதமாக காரம்/சுவை கூட்டும் பொருட்களை சேர்த்துக் கொள்வது எல்லாம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரிதான்.
டாக்கோஸ் அடுக்கும் போது, பேக்கிங் ட்ரேயின் அளவை பொருத்து எண்ணிக்கை மாறுபடும். நான் இங்கே 8 X 8 அளவு சதுர வடிவ ட்ரே எடுத்துள்ளேன். இதில் 5 டாக்கோஸ் வரை சுலபமாக அடுக்கலாம். அதுவே பெரிய அளவில் செவ்வக வடிவ ட்ரேயானால் 8 வரை அடுக்கலாம்.
* டின்டு ரீஃப்ரைட் பீன்ஸ் இல்லையென்றால், முதல் நாள் இரவே ஒரு கப் ராஜ்மா பீன்ஸை தண்ணீரில் போட்டு குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பயிரை குக்கரில் போட்டு, ஆறு, ஏழு விசில்வரை விட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேக வைத்த பீன்ஸை ஒரு மத்து/ கரண்டி கொண்டு மசித்து வைத்துக் கொள்ளவும்.
* டாக்கோ சீசனிங் பவுடருக்கு, சில்லிப்பவுடர் அரை மேசைக்கரண்டி, ஆனியன் பவுடர் ஒரு தேக்கரண்டி, கார்லிக் பவுடர் அரை தேக்கரண்டி, சீரகத்தூள் அரை தேக்கரண்டி, பெப்ரிகா பவுடர் அரை தேக்கரண்டி, சர்க்கரை அரை தேக்கரண்டி, உப்பு அரை தேக்கரண்டி என்ற அளவில் கலந்து உபயோப்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு சுஸ்ரீ,

சூப்பராக இருக்கு. சீசனிங் பவுடர், ரிஃப்ரைட் பீன்ஸ் இவற்றுக்கு ஆல்டர்னேடிவ் கொடுத்திருப்பது சிறப்பு.

பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

சுஜா

சூப்பரா இருக்குங்க .. நாமலே இங்கே கடை ஆரம்பிக்கலாம் போங்க..
பார்க்கவே அத்தனை அழகு.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுஸ்ரீ,
என்சிலாடா பிரசண்ட்டேஷன் பார்க்கவே சாப்பிடணும்னு டெம்ப்ட் பண்ணுது. ;-) ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.எல்லா படங்களும் தெளிவா அழகா வந்திருக்கு.குறிப்பின் கீழே கொடுத்திருக்கும் டிப்ஸ்களும்,செய்முறை விளக்கங்களும் சூப்பர்ப்.வீட்டில் டார்ட்டிலா ரெடியா இருக்கு.விரைவில் செய்து பார்த்து சொல்றேன்.அருமையான குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

my daughter, who is residing at USA,who is regularly visiting your website helped her to prepare all dishes from morning to night

ரொம்ப சூப்பரா இருக்கு என்சிலாடா. நோட்ஸும் தெளிவா சொல்லி இருக்கீங்க. படங்கள் ஒவ்வொன்றும் பளீச் என்று இருக்கிறது. வாழ்த்துக்கள் சுஸ்ரீ.

சுஸ்ரீ என்சிலாடா பார்சல் ப்ளீஸ் :)

அருமையா இருக்குப்பா வாழ்த்துக்கள்.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

epadi erukenga

முதலில் என் குறிப்பை வெளியிட்ட அறுசுவை அட்மின் & நண்பர்களுக்கு என் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

கிட்டத்தட்ட 3 வாரங்களாக முயற்சித்து இன்றுதான் இங்கே பதில் பதிவு போடுகிறேன். இத்தனை நாட்கள் வரமுடியாமல் விட்டுபோனதற்கு, சாரி ஃப்ரண்ட்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு சீதாலஷ்மிமா,

என்னுடைய‌ நிறைய‌ குறிப்புக‌ளில் முத‌ல் ப‌திவா உங்க‌ ப‌திவை படிக்கும்போது மனசுக்கு ரொம்ப‌ சந்தோஷ‌மா இருக்கு. பாராட்டுக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி!

ர‌ம்யா,
ம‌ன‌ம் நிறைந்த பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ ந‌ன்றி. :)

ஹர்ஷா,
உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! என் பொண்ணுக்கு இது ரொம்ப ஃபேவரட்! மெக்சிக‌ன் உணவு பிடிக்குமானால் செய்து பார்க்க சுல‌ப‌மான‌ குறிப்பு இது. அப்புற‌ம் செய்து பார்த்திங்க‌ளா ஹ‌ர்ஷா? பசங்களுக்கு பிடித்து இருந்ததா? செய்தா சொல்லுங்க‌ எப்ப‌டி இருந்த‌‌துன்னு. ந‌ன்றி!

பானுமோக‌ன்,
ஆமாம், நிறைய‌ பேருக்கு கை கொடுக்கும் உற்ற‌ தோழியாக‌த்தான் இருக்கிறது நம்ம‌ அறுசுவைத்த‌ளம்!. உங்க‌ வ‌ருகைக்கும், க‌ருத்திற்கும் ந‌ன்றி.

வினோஜா,
உங்க‌ளோட‌ பாராட்டுக‌ளுக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப‌ ந‌ன்றி!

சுவ‌ர்ணா,
அட‌டா... நீங்க கேட்டதை மிஸ் பண்ணிட்டேனா?! அதனால் என்ன, இதோ உட‌னே செய்து கையோட‌ பார்ச‌ல் அனுப்பிவிட‌றேன் :)
உங்க‌ளோட‌ பாராட்டுக்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ