வாழைப்பூ வடை

தேதி: May 3, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (9 votes)

 

அரைக்க :
கடலை பருப்பு - 2 கப்
உளுந்து - அரை கப்
பட்டை - ஒரு இன்ச் அளவில்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 4
பொடியாய் நறுக்க :
வாழைப் பூ - 1 1 /2 கப்
பெரிய வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை, புதினா, மல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிது
பூண்டு - 3 பல்
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கடலை, உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பொடியாய் நறுக்க வேண்டியவற்றை நறுக்கிக் கொள்ளவும். ஊறிய கடலை பருப்பில், இரண்டு தேக்கரண்டி அளவில் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையில், தனியே வைக்கப்பட்ட பருப்பு மற்றும் பொடியாய் நறுக்கிய பொருட்களை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
அந்த கலவையில் எடுத்து வைத்துள்ள கடலை மாவினையும், உப்பையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
உருண்டையாக உருட்டி சிறிது தட்டி, நன்கு காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மணமான, சுவையான வாழைப் பூ மசால் வடை தயார்.

மசால் வடை பட்டாணி பருப்பில் தான் மிகவும் சுவையாகவும், உட்புறம் மிருதுவாகவும் இருக்கும். ஆனால் கடலை பருப்புடன் செய்யும் போது சிறிது உளுந்து சேர்த்தால், பட்டாணி பருப்பில் கிடைக்கும் அதே சுவையுடன், மிருதுவாகவும் இருக்கும். மேலும் உப்பு மற்றும் வெங்காயத்தை பொரிக்கும் நேரத்திற்கு முன் சேர்த்தால் கலவை நீர் விடாது. உளுந்து சேர்ப்பதால் ஏற்படும் வழவழப்பு தன்மையை போக்க தான் கடலை மாவு கடைசியாக சேர்க்கப்படுகிறது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ரம்யா,

படங்கள் பளிச். விளக்கங்களும் மிகவும் நன்றாக இருக்கு.

நுணுக்கமான டிப்ஸ் கொடுத்திருக்கீங்க. மிகவும் உபயோகமாக இருக்கும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

parkum bodhe nanraga irukirathu,sapidanum pola irukuvery good

UDAITHA KADALAI POTTUM VAZHAIPOO VADAI SEIYALAMA,EPPADI SOLLUNGA

ரம்ஸ்,

வாழைப்பூ வடை க்ரிஸ்ப்பியா, ஜோரா இருக்கு! :)
போன வாரம் ஷர்ஷா, இப்ப நீங்க, எனக்கு ரொம்ப பிடிச்ச வாழைப்பூ வடையை தொடர்ந்து நியாபகப்ப‌டுத்திட்டே இருக்கிங்க! :) வாழைப்பூவை தேடும் படலத்தில் இறங்கிடவேண்டியதுதான்! :) வாழ்த்துக்கள் ரம்யா!

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி ;)

சீதாலஷ்மி
ரொம்ப நன்றிங்க.. ;) உங்க வடையும் செய்து பார்க்கணும். :)

பூரணி
இதே போல தான் எல்லாமே செய்யணும். ரொம்ப நன்றி

சுஜா
ரொம்ப நன்றி.கிடைத்ததும் கண்டிப்பா செய்து பாருங்க
:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ்,
வாழைப்பூ வடை செம சூப்பரா இருக்கு.முதல் முறை ட்ரை பண்றவங்க கூட அருமையா செய்ய அத்தனை டிப்ஸ் கொடுத்திருக்கீங்க.சூப்பர்.படங்கள்,விளக்கம் எல்லாமே அருமை.உங்க முறையிலும் விரைவில் செய்து பார்த்து சொல்றேன்.வாழ்த்துக்கள் ரம்ஸ்.

Hai ramya sister... Unga vaazhaipoo vadai nallaa iruku pakave... inga andha plate ah apdiye courier la anupidunga pls...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

உங்க வாழை பூ வடை பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு....
இதுவரைக்கும் நா வாழைபூ சமச்சதே இல்லை.... உங்க குறிப்பை பார்க்கும்
போது வாழை பூ மீது ஆசை வருது..... விருப்ப பட்டியலில் சேர்த்து விட்டேன்... :) செய்து பார்த்துட்டு சொல்றேன்.... :)

ரம்யா,
வாழைப்பூ வடையில் உளுந்து சேர்த்து செய்ததில்லை..
கிடைத்தால் செய்து பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்ஸ் வாழைப்பூ வடை ப்ரமாதமா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனக்கொரு ப்ளேட் பார்சல் ப்ளீஸ்..

சூப்பர்வடை சூப்பர் டிப்ஸ்...நானும் செய்வேன் ஆனா உளுந்து சேர்த்ததில்ல
சுஷா அகெட்கிறா ஆண்டி ஏன் அவ்வளவு தூரத்தில இருக்காங்க..பக்கத்துலன்ன ஓடிப்போய் சாப்பிட்டு வரலாமேன்னு;)

வாழ்த்துக்கள்....
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.