க்ரீன் சூப்

தேதி: August 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முளைக்கீரை - ஒரு கப்
முருங்கைக்கீரை - 2 கப்
மணத்தக்காளி கீரை - அரை கப்
பசலைக்கீரை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - ஒரு ஸ்பூன்
(இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர் - ஒரு ஸ்பூன்
தண்ணீர் - 8 அல்லது 10 கப்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்


 

பாதி வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை கீறி விட்டு தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் கீரை வகைகளை சுத்தம் செய்து, கழுவி அதில் போட்டு, (இன்ஸ்டண்ட்) வெஜிடபிள் பவுடர் சேர்க்கவும்.
கீரை வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, மீதி வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, பொன் முறுகலானவுடன் சோம்புத்தூள் போட்டு தாளித்து, வேகவைத்துள்ள க்ரீன் சூப்பில் ஊற்றவும்.
மிக சத்துள்ள க்ரீன் சூப் தயார்.


மணத்தக்காளி கீரை சேர்ப்பதால் சிறிது கசப்பு சுவை தரும். ஆனால் அது வாய்ப்புண், வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியது. கசப்பு சுவை விரும்பாதவர்கள் மணத்தக்காளிக்கீரையை தவிர்த்துவிட்டு செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்