கத்தரி புலாவ்

தேதி: May 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

கத்தரிக்காய் - 4
உருளை - 2
வெங்காயம் - 2
பச்சை பட்டாணி - கால் கப்
அரிசி - 1 1/2 கப்
மிளகாய் - 5
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - அரை கட்டு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பட்டை, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை, முந்திரி - தாளிக்க
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

எண்ணெயில்லாமல் மிளகாய், சீரகம், சோம்பு, தனியா, வேர்க்கடலை (தோல் நீக்கியது) ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் மல்லி இலை, பெருங்காயம் சேர்த்து அரைத்து வைக்கவும். அரிசியை முக்கால் பாகமாக உப்பு சேர்த்து வேக வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஆற வைக்கவும்.
வெங்காயம், உருளை, கத்தரிக்காயை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள வாசனை பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் ரொம்பவும் வதங்க விடாமல் அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். (காய்கறிகள் ரொம்பவும் வெந்து குழையாமல் பார்த்துக் கொள்ளவும்).
காய்கறிகள் ஓரளவுக்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து நான்கு மேசைக்கரண்டி சேர்த்து கிளறவும். இப்பொழுது தீயை நன்கு குறைத்து வைக்கவும்.
பொடி காய்கறிகளில் நன்கு பரவியதும் வடித்து ஆறிய சாதத்தை சேர்த்து கிளறவும். பொடி பற்றவில்லை என்றால் சேர்த்துக் கொள்ளவும். கிளறிய பின் தீயை சிம்மில் வைத்து மூடி போடவும்.
ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி ரைத்தாவுடன் பரிமாறவும். சுவையான கத்தரி புலாவ் ரெடி.

கலந்த சாதத்திற்கு அரிசியை வடித்தால் நன்கு குழையாமல் இருக்கும். வடித்தவுடன் அந்த பாத்திரத்திலிருந்து மாற்றி ஒரு வாயகன்ற பாத்திரமோ அல்லது தட்டிலோ கொட்டி மேலே எண்ணெய் விட்டு ஆற விடவும். எண்ணெய் சேர்ப்பதால் காய்ந்து போகாமலும் இருக்கும். இந்த பொடியை அதிக அளவில் செய்து வைத்து விட்டால் தேவையான போது உபயோகித்தும் கொள்ளலாம். லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்ற உணவு. காரம் விரும்பிகள் காரத்தை கூட்டிக் கொள்ளலாம். காரட், பீன்ஸ் கூட சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள்:)))) இனைக்கி வந்த குறிப்பிலே ரொம்ப ஆறுதலான குறிப்பு (அவன் இல்லைல அதான் ஹி ஹி :)))) உங்களுடையது தான் கண்ணடிப்ப செய்வேனே!!!

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

லாவண்யா,இது எல்லா கத்தரிக்காயிலும் செய்யலாமா.இல்ல சுவை மாறுமா
பார்க்கவே அழைக்குதுங்க சாப்பிட கண்டிப்பா ட்ரை பண்ணூவேன்
வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு லாவண்யா,

கத்தரிக்காயில் புலாவ் வெரைட்டி இதுவரைக்கும் முயற்சி செய்ததே இல்ல, இப்ப உங்க குறிப்பு பார்த்ததும் செய்து பார்க்கணும்னு ஆசையாக இருக்கு.

வாசனைப் பொருட்கள் எல்லாம் சேர்த்து, வழக்கம் போலவே ரிச் ஆக செய்திருக்கீங்க. சூப்பர்.

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

லாவி
கத்தரிக்காயில் எது செய்தாலும் நாம் விடறதில்ல.. புலாவ் சூப்பர்.பார்ட்டி டிஷ்.
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.கஷ்டமான குறிப்பை ஈசியா செய்யும் ஆள் தான் நீங்க
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

லாவண்யா,
அருமையான குறிப்பு.பொடி சேர்த்து செய்திருப்பது நல்லா இருக்கு.கண்டிப்பா ட்ரை பண்ணனும்.வாழ்த்துக்கள் லாவண்யா.

லாவ‌ண்யா,

ஈசி ல‌ன்ச் பாக்ஸ் ரெசிப்பின்னாலே என‌க்கு ரொம்ப‌ இஷ்ட‌ம்! :) நானும்கூட பொடி த‌யாரித்து வைத்துக்கொண்டு இப்ப‌டிதான் அப்ப‌ப்ப‌ செய்வேன். நீங்க‌ கொடுத்திருக்கும் பொடி காம்பினேஷ‌ன் ரொம்ப ந‌ல்லா, சீக்கிரமா செய்யக் கூடியதா இருக்கு லாவ‌ண்யா. அடுத்த முறை உங்க மெத்தட்ல செய்துப்பார்க்கனும்.

படங்கள் எல்லாம் தெளிவா, அழகா வந்திருக்கு!. உடனே குறிப்பை செய்துபார்க்க சொல்லுது! :) வாழ்த்துக்க‌ள்!

அன்புடன்
சுஸ்ரீ

என்ன சொல்ல... நான் என்ன சொல்ல... படமே சொல்லுதே லாவி குறிப்பின் சுவையை!! :) எல்லாம் செய்துருவோம்... வருசையா. கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு நன்றிகள் பல.

வாழ்த்துக்கு நன்றி விமலகீதா. ரொம்ப சுலபமான குறிப்பு தான். செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

ரொம்ப தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் இளவரசி. விதை அதிகம் இல்லாத கத்திரிக்காய் எதுவானாலும் இதற்க்கு தோது படும். வாழ்த்துக்கு மிக்க நன்றி. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சீதாலக்ஷ்மி. செய்து பாருங்க உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி ரம்மி. நானும் உங்கள் கட்சி தான். இந்த காய்களின் ராணி நானும் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஒரு புடி பிடிக்கறது தான்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்பரசி. //கண்டிப்பா ட்ரை பண்ணனும்//யார்?

பாருங்க சுஜா உங்களுக்கு எனக்கும் எப்பவுமே டெலிபதி தான்......உங்க பொடி மெத்தட் எப்படின்னு சொல்லுங்க நாங்களும் செய்து பார்க்கிறோம். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நீங்க ஒன்னியும் சொல்ல வேண்டாம் வனி. ஊருக்கு போயிட்டு எல்லாத்தையும் செய்து அசத்துங்க. வாழ்த்துக்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!