தக்காளி-எலுமிச்சை ரசம்

தேதி: May 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (15 votes)

 

பருப்பு - கால் கப்
தக்காளி (அரைக்க) - 2
தக்காளி - ஒன்று
எலுமிச்சை - ஒன்று
பூண்டு - 5 பல்
ரசப் பொடி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நெய் - சிறிது
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு


 

தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். இரண்டு தக்காளிகளை அரைத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை நறுக்கி வைக்கவும். பருப்பை குழைய வேக வைத்து தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு பொரிந்ததும் இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில் தக்காளி விழுது சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
இதில் பருப்பு தண்ணீர் ஊற்றவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும். (ரசப்பொடியில் ஒரு கப் சீரகம், அரை கப் மிளகு மற்றும் 5 அல்லது 6 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து உள்ளேன்.)
ரசம் ஒரு கொதி வந்ததும் பூண்டை தோலுடன் தட்டி ரசத்தில் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும். அதனுடன் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் ஒரு துளி நெய் விட்டு தயாராக வைக்கவும்.
இதில் ரசத்தை ஊற்றவும்.
சுவையான தக்காளி-எலுமிச்சை ரசம் தயார்.

இந்த குறிப்பு தொலைக்காட்சியில் பார்த்து கற்று கொண்டது. எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் ரசம் இது. கொத்தமல்லி காம்பு தான் ரசத்துக்கு வாசம் தரும். அதனால் வேர்ப்பகுதியை மட்டும் நறுக்கிவிட்டு தழையுடன் காம்பையும் போடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hai harshaa... epdi irukeenga? unga tomato lime rasam superb ah iruku paarkave... paakumpodhe echil oorudhu. nichayama senju parpen. vazhthukkal.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai harsha ,ungal tomatolimerasam nanum inniki seyaporen eppadi irukunu seithu parthutu solren,valthugal

அன்பு ஹர்ஷா,

குறிப்புக்குள் ஒரு குறிப்பாக ரசப் பொடி செய்யறதுக்கும் சொல்லித் தந்திருக்கீங்க, மிகவும் நன்றி.

பார்த்ததுமே ஒரு கப் எடுத்து சூடாகக் குடிச்சுடலாம் போல இருக்கு. அவ்வளவு அழகாக ப்ரெசெண்ட் செய்திருக்கீங்க.

சூப்பர்.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

ஹர்ஷு

ரசத்தை பார்த்தலே , அப்படியே குடிக்க தோணுது.
தெளிவான படங்கள். வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது விளக்கப்பட குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

நித்யா,
இந்த ரசம் ரொம்ப சுவையா இருக்கும்.கண்டிப்பா ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்க.முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி நித்யா.

பூரணி,
கண்டிப்பா செய்து பாருங்க.உங்க பின்னூட்டத்திற்காக காத்திருக்கேன். :-)
பதிவுக்கு ரொம்ப நன்றி.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
ஒவ்வொரு விஷயத்தையும் கவனிச்சு குறிப்பிட்டு பாராட்டும்,உங்க பதிவுக்காகவே இன்னும் நிறைய குறிப்புகள் அனுப்ப ஆசையா இருக்கு.உங்க அன்பான பதிவுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க.

ரம்ஸ்,
சுவையும் சூப்பரா இருக்கும் ரம்ஸ்.உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்களும் மிக்க நன்றி.

உங்க ரசம் சூப்பர்ங்க இப்படி ஒரு செய்முறைல ரசம் நான் செய்ததும் இல்ல பார்த்ததும் இல்ல. இன்னைக்கே செய்துடுறேன். பருப்பு ரசம் ரொம்ப பிடிக்கும்

ரசம் நல்லா இருந்துதுங்க அன்பரசி. புளி இல்லாம ரசம் வைக்கணும் என்ற என் நீண்டநாள் ஆசை நிறைவேறிடுச்சு. நன்றி!

அன்புடன்,
மகி

சூப்பர் ரசம்... பார்க்கும் போதே கை நீட்டி ஒரு கரண்டி கேட்கலாம் போல இருக்கு :) கண்டிப்பா செய்துடறேன் ஹர்ஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai harsha, netru naan seitha rasam superaga irunthathu,engal veetil irupavargal anaivarukum migavum pidithirunthadhu,melum akkam pakkam irudavargalukum tasteku koduthen,avargalum idhe pol seithu parkiren enru solliirukirargal,very very super valthugal

உமா,
கண்டிப்பா செய்து பார்த்து பிடிச்சதானு சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

மஹிஅருண்,
உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க.ரசம் உங்களுக்கு பிடிச்சதில் சந்தோஷம்.அதற்குள் செய்து பார்த்து பின்னூட்டமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

வனிதா,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி வனிதா.

பூரணி,
உங்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

hai harsha,
Rasam romba nalla irukku. enaku romba pidichu irundhuthu. innum niraya items solli kodunga.

நேற்று உங்கள் ரசம் செய்தேன் ரொம்ப நன்றாக இருந்தது
வீட்டில் அனைவர்க்கும் பிடித்திருந்தது

அபிஸ்ரீ,
உங்கள் பதிவுக்கும்,பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க.கண்டிப்பா எனக்கு தெரிந்த குறிப்புகள் அனுப்புறேன்.

லலிசிவா,
ரசம் செய்து பார்த்து,பின்னூட்டம் தந்ததற்கு ரொம்ப நன்றி.உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

அன்பு

நலமா? சூப்பர் டிஷ் கொடுத்திருக்கீங்க, பார்க்கும் போதே நா ஊறுகிறது. நான் புளிப்பு பிரியை. தக்காளி எலுமிச்சை ரெண்டும் சேர்ப்பதால் புளிப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கும் என்று நினைக்கிறேன், கண்டிப்பா ட்ரை பண்ணிடறேன்.

விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு.

வாழ்த்துக்கள்

அன்புடன்
பவித்ரா

பவி,
நலமா?மீண்டும் உங்க பதிவு பார்த்து ரொம்ப சந்தோஷம்.இனி தொடர்ந்து வாங்க.ஒரு ’கொத்தமல்லி ரசம்’ குறிப்பில் உங்க பதிவு பார்த்து நானும் அந்த ரசம் ட்ரை பண்ணேன்.;-) இந்த ரசம் நான் அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுட்டேன்.செய்து பாருங்க.கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும். பதிவுக்கு மிக்க நன்றி பவி.

ஹர்ஷா,

ரசம் ரொம்ப நல்லா இறுக்கு. நீங்க சொல்லுவது போல் அடிக்கடி செய்ய தூண்டும் ரசம் recipe இது.

நிதி- நிர்மல்,
ரசம் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

நேற்று பார்ட்டியில் வெள்ளை சாதமும் இந்த ரசமும் இடம் பிடித்திருந்தது. எல்லாருமே ரசம் சூப்பர்ன்னு சொன்னாங்க. அதை விட என்னவர் ரசம் நல்லா இருக்குன்னு சொன்னது பெரிய ஆச்சர்யம் எனக்கு... அத்தனை சுலபமா ரசம் சூப்பர்னு அவர்கிட்ட பெயர் வாங்கிட முடியாது. வாங்கி கொடுத்தது உங்கள் குறிப்பு. மீண்டும் நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு உங்களோட இந்த ரசம் இன்னைக்கு செய்தேன்...ரொம்ப நல்லா இருந்துச்சு..வாழ்த்துக்கள்பா

Kalai

உங்க ரசம் 2 முறை செய்துவிட்டேன். ரொம்ப நல்லா இருந்தது.

Innaiku unga tomato lemon rasam senjen. Superb... Superb... Superb... En hus ku romba pudichu pochu pa. Ini adikkadi unga rasam thaan veetla. vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்பு, இன்று தக்காளி - எலுமிச்சை ரசம் வைத்தேன். எலுமிச்சை சுவையில் ரசத்தை டேஸ்ட் பண்ணுவது இதுவே முதல்முறை நல்ல மணமா டேஸ்டா இருந்தது. சாதாரணமா ரசத்தை சாப்பிடுறதை விட கொதிக்கும் வாசனையை (நுகர) பிடிக்க பிடிக்கும். இன்னைக்கு வாசனையோட, சுடு சாதத்தோட சேர்த்து ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து தான் பதிவே போடுறேன். வாசனையான குறிப்புக்கு மணமான வாழ்த்துக்கள் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ஹர்ஷா

ரசம் அருமைங்க, என் குழந்தை உங்க ரசம் சாதத்தோடு சாப்பிட்டுவிட்டு தூங்கியும் ஆச்சு, உங்க குறிப்பு எளிமையாக அருமையாக இருந்தது மிக்க நன்றி...