ஹாட் க்ராஸ் பன்

தேதி: May 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (7 votes)

 

பால் - 120 மில்லி
ட்ரை ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 50 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
சின்னமன் பொடி - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 20 கிராம்
திராட்சை - தேவைக்கு
மைதா - அரை கிலோ


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பாலை மிதமாக சூடு செய்து கொள்ளவும்.
மேலே பொருட்கள் கொடுக்கப்பட்ட வரிசைப்படி, பாலில் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து பொருட்களையும் போடவும். இறுதியில் மைதா மாவை போடும் போது மட்டும் முழுவதையும் போடாமல், கொஞ்சம் கொஞ்சம் போட்டு கையில் ஒட்டாதவாறு கலவை இருக்கும் படி பிசைந்து, மீதி மாவை எடுத்து வைக்கவும்.
மாவின் பதம் சப்பாத்தி மாவை விடவும் மிக மிருதுவாக இருக்க வேண்டும்.
மாவு பாத்திரத்தை ஒரு துணியால் அல்லது பிளாஸ்டிக் கவரால் 2 மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கும்.
மாவை நன்கு கைகளால் அழுத்தி, காற்றை வெளியேற்றி, நீளவாக்கில் உருட்டவும்.
பின் அதை ஆறு துண்டுகளாய் வெட்டி வைக்கவும்.
வெட்டி வைத்ததை உட்புறமாக திருப்பி பிசைந்து, நைசாக, மிருதுவாக உருட்டவும். மீண்டும் அதை அரை மணி நேரம் துண்டால் மூடி வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பின், அது இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கும். அதன் மீது முட்டையையோ அல்லது வெண்ணெயையோ தடவி விடவும்.
பின் உருண்டைகள் மீது கத்தியால் க்ராஸ் போல வெட்டி விடவும்.
350 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 30 நிமிடம், பொன்னிறமாக மாறும் வரை வைக்கவும். பின் அவனை அணைத்து, அவன் கதவை திறந்து வைத்து 10 நிமிடம் குளிர விடவும்.
சூடான, மிருதுவான ஹோம் மேட் பன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hi Ramya sister... Aduthaduthu marble cake, hot cross bun nu line ah pottu thaakkureengale... Enna ennala parthu rasikkathaan mudiyum. Senju saptu rasikka mudiyadhu sister... because i dont have oven. thatsy sister... if you know any backing method without oven please tel me... thankyou...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்பு ரம்யா,

ஹாட் க்ராஸ் பன்! ஹாட் க்ராஸ் பன்!! ரைம்ஸ் ஞாபகம் வருது:):)

அருமையாக இருக்கு, ஹோம் மேட் பன்ஸ். சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!

அன்புடன்

சீதாலஷ்மி

மிகவும் சுவையான மற்றும் சுலபமாக செய்யக் கூடிய பன்.

அருமையா இருக்கும் போலிருக்கு ரம்யா..இங்கு குறிப்பு தரும் எல்லோருக்கும் ஒரு சபாஷ்.ஒரு நாள் எனக்கும் ஆசை வந்து கேமராவை எடுத்துட்டு கிச்சனில் ஏறினேன் அப்போ தான் ஃபோட்டோ எடுக்க எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுது.இது கண்டிப்பா ட்ரை பண்ணுவேன்

நன்றி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி

நித்யா
ரொம்ப நன்றி.கண்டிப்பா அவனில்லாத பேக்கிங் முறை குறிப்பு அனுப்பறேன்..:) எனக்கு பேக்கிங்கில் ரொம்ப ஆர்வம் அது தான்..

சீதாலஷ்மி
ரொம்ப ரொம்ப நன்றி.. அவசியம் கிடைக்கும் போது செய்து பாருங்க..

கௌதமி
ரொம்ப நன்றிங்க

தளி
ரொம்ப சுலபம் தான்.ஆனா குழந்தைகளை வெச்சிட்டு கொஞ்சம் சிரமம் தான்.ஆனாலும் எடுக்கலாம். அவசியம் ட்ரை பண்ணி பாருங்க. நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்ஸ்,
சுடச்சுட ஹாட் க்ராஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு.அதுவும் முகப்பில் வந்துள்ள படம்,ப்ரசண்ட்டேஷன் இன்னும் சூப்பர்.அருமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள் ரம்ஸ்.

பேக்கிங்ல தொடர்ந்து அசத்தறீங்க ரம்ஸ்! ரொம்ப அழகா செய்து காண்பிச்சிருக்கிங்க 'ஹாட் க்ராஸ்' பன்!

எனக்கும்கூட சீதாலஷ்மிம்மா சொன்னதுபோல, 'ஹாட் க்ராஸ் பன்' பாட்டு மனசில ஓடுச்சி, உங்க குறிப்பை பார்த்ததுமே! :)

வாழ்த்துக்கள் ரம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாட் கிராஸ் பன்ஸ், ஒன் எ பென்னி, டூ எ பென்னி, ஹாட் கிராஸ் பன்ஸ்.....

எனக்கு பாட்டு மட்டுமில்லாது பன்னில் ஒரு ரூபாய் நாணயம் அந்த கதை கூட ஞாபகத்துக்கு வருது.

சூப்பர் சூப்பர், கண்டிப்பாக செய்து படங்கள் அனுப்பறேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கும் கூட அந்த பாட்டு தான் நியாபகம் வந்துச்சு ரொம்ப நல்லா இருக்கு பார்க்கவே. முகப்பில் இருக்கும் படம் அசத்தலா இருக்கு. ரம்யா எனக்கும் அதே ரிக்வெஸ்ட் தாங்க அவன் இல்லாத முறையில் ஏதாவது இதுப் போல் குறிப்பு கொடுங்க

வாவ் வாவ் வாவ்... இதோ கிளம்பிட்டே இருக்கேன் ஊருக்கு, போனதும் பன் செய்துருவோம்ல ;) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா இப்பவே பண்ணிப்பார்க்கனும் போல் இருக்கு, என்க்கும் சேம் பொயம் தான் ஞாபகம் வந்தது பொயத்தில் மட்டுமே ஹாட் க்ரொஸ் பண் கேட்ட எங்களுக்கு அத பார்க்க வச்சிட்டீங்க,ம்ம்ம் சுவைக்க வேண்டியதுதான் பாக்கி, வாழ்த்துக்கல்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சின்னமன் பொடி என்றால் என்ன?திருநெல்வெலியில் கிடைக்குமா?க்ராஸ் பண் சூப்பரா இருக்கு பா.செய்ய ஆசையா இருக்கு.

சின்னமன் பொடி - பட்டை பொடி (cinnamon). வீட்டில் இருக்கும் பட்டையை கொஞ்சம் பொடி செய்துக்கங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா