சுவையான மோர் செய்வது எப்படி ?

Please sollungal veyilai samalikka vendum

சுவையான மோர் செய்ய கொத்தமல்லி, உப்பு, மாங்காயினை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மோரினில் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

மோரில் சிறிது இஞ்ஜி,கருவேப்பிலை,கொத்த மல்லி,பச்சை மிளகாய்(காரம் வேண்டாம் என்றால் சேர்க்க வேண்டாம்),உப்பு சேர்த்து பருகவும்..

மோரில் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயப் பவுடர் சேர்த்து நல்லாக் கலக்கணும். அப்புறம் வடிகட்டி, குடிக்கலாம்.

நிறையப் பேருக்கு நீர் மோர் கரைக்கணும்னா, பெரிய பாத்திரத்தில், தயிர் ஊற்றி, நல்லாக் கடைஞ்சதுக்கு அப்புறம், நிறையத் தண்ணீர் ஊற்றி, கலக்கணும்.
மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி, உப்பு, பெருங்காயப் பவுடர் எல்லாம் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து, அதை சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி, இந்த மோரில் போட்டு வைக்கணும். இந்த சாறு மோரில் இறங்கிடும். மோர் குடிக்கறதுக்கு நல்லா வாசனையா, சுவையாக இருக்கும்.

எலுமிச்சை இலை போடலாம்

மோரில் சிறிது சின்ன ஜீரகம் கரிவேப்பிலை உப்பு கலந்து குடித்தால் சரியான குளிர்ச்சி

மேலும் சில பதிவுகள்