பட்டாணி சுண்டல்

தேதி: May 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சை பட்டாணி - ஒன்றரை கப்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - அரை தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - பாதி
பட்டை - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
கல் உப்பு - அரை மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டாணியை போட்டு அலசிக் கொள்ளவும். பிறகு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 15 நிமிடம் வேக விடவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும். கடைசியில் வெங்காயத்தை போட்டு அரைத்து எடுத்து விடவும்.
பட்டாணி வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.
அதன் பிறகு பட்டாணியை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து, அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
மேலே கறிவேப்பிலை தூவி 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி பிரட்டி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான பட்டாணி மசாலா சுண்டல் தயார். இந்த பட்டாணி சுண்டல் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சசிகலா அய்யாசாமி அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சசிகலா மேடம் பச்சைநிறத்தில் மசாலா சுண்டல் பார்க்க அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

வித்தியாசமான குறிப்பு :) நல்லா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப‌ட்டாணி சுண்ட‌ல் ந‌ல்லாருக்கு! நான், வெறும் தேங்காய், சோம்பு அரைத்துவிட்டு செய்ததுண்டு. உங்களோடது வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்த்து, இன்னும் வித்தியாசமான, ந‌ல்ல காம்போவா இருக்கு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

பட்டாணி சுண்டல் ரொம்ப நல்லா இருந்தது