சேப்பங்கிழங்கு காரக்குழம்பு

தேதி: August 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - அரை கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கருவடாம் - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

சேப்பங்கிழங்கை வேகவைத்து, பின்னர் அதன் தோலை நீக்கி, நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.
வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
குழம்பு வெந்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்