***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

///////ஒரு பஸ் ஆக்சிடண்ட்டை மையமா கொண்டு படம் வந்தது... அதை பார்த்து எத்தனை பஸ் ட்ரைவர் திருந்தினாங்களோ... தெரியல. ஆனா நிறைய பேர் பஸ்’ல போகவே பயப்படறாங்க.////////
ஆமாம் வனி நடுவரும் ரொம்ப பயந்துதான் போனேன். இப்ப பஸ்னாலே டிரைவர் எப்படின்னுதான் கேட்க தோனுதுப்பா.....:(
அந்தகாலத்தில் தத்ரூபமாக இருக்கும்,உண்மைதான் அதனாலதான் மேக்கப்,உருவ மாற்றம்னு எதுவுமே இல்லாமல் கூட நடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்க முடிந்தது........
ஆனால் இப்போஅடையாளம் தெரியாமல் உருமாறினால்போதும் சிறப்பான நடிப்பாக கருதப்படுகிறது......
மீண்டும் வாதங்களுக்காக காத்திருப்பேன்.......

நடுவர் தோழி ரேணு அவர்களே, தலைப்பு தோழி பூரணி அவர்களே , மற்றும் வந்த வரப்போகும் பெருமக்களே ,

எல்லாருக்கும் இந்த கால வணக்கமுங்க .(70 க்கு அப்பால் ன்னு வைக்கலாமா )
இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

திரைப்படங்கள் எப்பவுமே ரசிக்கரதுக்கு தான் , அது எந்த காலமா இருந்தா என்ன, பட் பட்டின்னு வரப்போ நம்ம ஓட்டு இப்ப வரும் திரைப்படங்களுக்கு தான்.

அந்தக்கால படங்கள் சூப்பர் நு பேசற எதிர் அணி மக்கள் கூட , ஒரு தடவைக்கு மேல் அந்த படங்களை பார்ப்பான்களா என்பது சந்தேகம் தான் .

அதை விடுங்க, நாம் இருப்பது இந்தக்காலத்துல ,-- மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தன்மையோட இருந்த அந்த கால படங்களை விட யதார்த்தமும் , வாழ்வியல் சார்ந்தும் வரும் இந்தக் கால படங்கள் சிறந்தவை தாங்க .

நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் கதைகள், புதிய யுக்திகள், ஏன் மூடநம்பிக்கைகளை எதிர்த்து தைரியமா குரல் கொடுத்த (வேதம் புதிது ) இதெல்லாம் நல்ல படங்கள் இல்லையா என்ன ?

அந்தக்கால வசனம் எதையாவது எதிரணி கிட்ட கேளுங்க , யோசிப்பாங்க,

அதே இப்போ சிம்பிள் அண்ட் சிரிப்பு கலந்த வசனம் தானே நாட்டுல எப்பவுமே ஹாட் .

கஷ்டமான விஷயத்தை கூட காமெடி கலந்து அழகா புரியவைக்கும் படங்கள்,
மண்ணின் மனிதர்களை அப்படியே எந்த மிகைபடுத்தளும் இல்லாமல் காட்டும் படங்கள் ன்னு ஏகப்பட்டது நம்ம கை வசம இருக்கு .

சோ , இப்போதைக்கு கிளம்பறேன்.
அப்பாலிக்கா வந்து நம்ம வாதத்தை சீன போட்டு காட்டறேன் .
நீங்களும் உங்க டிவிடி லிஸ்டில் இதெல்லாம் இருக்கே போய் பாருங்க , எங்க பக்கம் சான்ஜ்ருவீங்க (தேவர்மகன், மௌன ராகம், வீடு, மூன்றாம் பிறை ,அன்பே சிவம் , தெனாலி , ஹே ராம் , நாடோடிகள், கல்கி , அழகன் , சொல்ல மறந்த கதை , பொம்மலாட்டம் ) இன்னும் நிறைய இருக்கு .

தோழிகளே வாங்க .

//ஒரு பஸ் ஆக்சிடண்ட்டை மையமா கொண்டு படம் வந்தது... அதை பார்த்து எத்தனை பஸ் ட்ரைவர் திருந்தினாங்களோ... தெரியல. ஆனா நிறைய பேர் பஸ்’ல போகவே பயப்படறாங்க.// நடுவரே!! எதிரணி தோழி ''எங்கேயும் எப்போதும்'' திரைப்படத்தைதான் சொல்றாங்கனு நினைக்கிறேன். என்ன ஒரு க்ளாசான படம். தமிழ்நாடே அந்த படத்தை பாராட்டோ பாராட்டுனு பாராட்டிச்சி.
இந்த படத்தை பார்த்த பிறகுதான் பஸ்ல போக பயம் வந்ததா என்ன? தினசரி செய்தித்தாளை புரட்டினால் விபத்தில்லாத செய்திகளும் இருக்கிறதா என்ன? இந்த செய்தி ''எங்கேயும் எப்போதும்'' திரைப்படம் வருவதற்கு முன் நடந்தது என நினைக்கிறேன். கிட்டத்தட்ட உங்கள் அனைவருக்கும் தெரியுமென நினைக்கிறேன். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண் மறுநாள் தன் நிச்சயதார்த்தத்திற்காக இரவு பேருந்தில் புறப்பட்டு செல்கிறார், திருமண கனவுகளோடு. ஆனால் பேருந்து விபத்துக்குள்ளாகி இறந்து விடுகிறார். இந்த செய்தியை படித்து விட்டு எனக்கு ஒருவாரம் தூக்கம் வரவில்லை. டூ வீலரில் கணவர் வெளியே கிளம்பினாலே பயம் வந்து பற்றிக்கொள்ளும். பிறகு அந்த படம் பார்த்த பிறகு இந்த செய்திதான் ஞாபகம் வந்தது. சிறிதும் சினிமாத்தனம் இல்லாத சிறந்த படம் என்று தோன்றியது.

//ஒரு பாட்டு மனசுல நிக்காது இப்போ... இசை... டம் டும்ன்னு சத்தம் இசை ஆயிடுச்சு// நடுவரே!! குத்து பாடல்களும், கானா பாடல்களும் கூட இசைதான். பெண்களாகிய நாம் அதை விரும்பவில்லை என்று வெளியில் சொன்னாலும், உள்ளுக்குள் விரும்பிக் கொண்டுதான் இருக்கிறோம். தியேட்டரில் இப்படிப்பட்ட பாடல்களுக்கு விசில் பறக்கும் போது, நம்மை அறியாமல் நாமும் உற்சாகமாகி கால்களால் தாளம் போட்டு தலையாட்டி ரசிக்கவே செய்வோம். அப்போதெல்லாம், சே, நாமும் ஒரு ஆணாய் பிறந்திருக்க கூடாதா, சந்தோஷத்தை விசில் அடித்து, டான்ஸ் ஆடி வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றவே செய்யும்.

''வொய் திஸ் கொலவெறி'' பாடலில் எந்த அர்த்தமும் இல்லைதான், ஆனாலும் அந்த பாடல் சம்திங் ஸ்பெஷல். ''வேணா மச்சா வேணா'' பாடல் பட்டையை கிளப்புது. இதெல்லாம் லாஜிக் இல்லாத மேஜிக்தான். அதேசமயம் இசையே இல்லாத ''ஒரு குரல் கேட்குது பெண்ணே'' என்ற மனதை வருடி இழுக்கும் ஒரு மெல்லிசை பாடல். இப்படி வெரைட்டியான பாடல்களை இந்த காலத்தில்தான் கேட்க முடியும். ''விண்ணைத்தாண்டி வருவாயா"" படமும், பாடல்களும் எத்தனை அழகு. இன்றைய திரைப்படங்களுக்கும் நாளைய காவியங்களாய் மாறும் தகுதி நிச்சயம் உண்டு.

//எல்லாமே இதே மாதிரி ட்ராஜெடி படம் தான்// நடுவரே!! அந்த காலத்தில் மட்டும் அழுகாச்சி படம் இல்லையா என்ன? நிறைய இருக்கு. என்ன நமக்குதான் படத்தோட பேரை குறிப்பிட்டு சொல்ல தெரியாது.
தன் மாணவியையே காதலிக்கும் ஒரு ஆசிரியர். இது கருப்பு வெள்ளை திரைப்படம்தான்.பேர் தெரியல.இதுகூட தவறான முன்னுதாரணத்துக்கு காரணமாகுமே.

நம் வீடுகளிலேயே ஆடை குறைப்பு அமுல் படுத்தப்பட்டு வெகு காலமாகிவிட்டது. உடலை அப்பட்டமாய் காட்டும் ஜீன், டிஷர்ட்தான் இன்றைய உடையே. அப்படி இருக்கும் போது சினிமாவில் ஆடை குறைப்பு பற்றி பேசி பயனில்லை. இந்த சமுதாயம்தான் மாற்றத்தை பழகிக் கொள்ளனும். ஆண்களின் பார்வையும் மாறனும்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

நடுவரே... வீட்டில் உடை குறைப்பு வந்ததே சினிமாவால் தான். சினிமாவில் பார்ப்பதை எல்லாம் வீட்டில் போட்டு பார்க்க எண்ணினார்கள், இப்போ வெளியவும் போட துவங்கிட்டாங்க.

நடுவரே... அந்த காலத்தில் ஒரு ஹீரோயின்கு கல்யாண பொண்ணா மேக்கப் போட்டா பார்த்துட்டே இருக்கலாம்... அந்த கருப்பு வெள்ளையிலும் மேக்கப்பில் ஹீரோயின் ஜொலிப்பாங்க. இன்று... முடியல நடுவரே. ஒரு ஹீரோயின் மூஞ்சும் காண முடியல.

படங்களோட தரம் குறைஞ்சுட்டே போகுது. நிச்சயம் எதிர் அணி தோழிகள் சொல்வது போல் இந்த கால படஙக்ளை தான் மீண்டும் காண முடியாது. எதுவா இருந்தாலும் ஒரு முறை தான். ஆனா இன்றும் க்ளாசிக் மேட்னின்னு பழைய படம் போட்டா நான் ரசிச்சு பார்க்க தான் செய்யறோம்.

கொலவெரிடி, அடிடா அவள ஒதடா அவள... எங்கங்க போகுது இளைய சமுதாயம்??? இப்போ சமீபத்தில் வந்த தனுஷ் படம் ஒன்னாவது வீட்டில் எல்லாரோடையும் சேர்ந்து உட்கார்ந்து பாக்க முடியுமா??? பாட்டு வந்தாலே சேனல் மாத்த வேண்டி இருக்கு. ;( கொடுமை நடுவரே கொடுமை.

டப்பாங்குத்துக்குலாம் தாளம் போடலாம்... ஆனா ரசிக்க முடியாது. நல்லா தூக்கம் வரும் நேரம், மனம் நிறைய மகிழ்ச்சி இருக்கும் போது அந்த கால பாட்டை கேளுங்க நடுவரே... உலகமே அமைதியா இருப்பதாக தோன்றும். இவங்க சொல்ற மாதிரி புது பாடல் தான் ரசிக்க முடியும்னா, ஏன் இன்னும் “ஓல்ட் இஸ் கோல்ட்”னு ப்ரோக்ராம் பண்றாங்க. நல்லா யோசிச்சு பாருங்க நடுவரே... இது போல் பாடலெல்லாம் இரவு நேரங்களில் மனம் அமைதியை விரும்பும்போதுதான் போடுவாங்க. ஏன்னா... அது தான் மனசுக்கு அமைதி தரும்.

அந்த காலத்தில் ஹீரோயின் உடையும் சரி, மேக்கப்பும் சரி... அசத்தும். நல்லா யோசிச்சு பாருங்க சரோஜா தேவிக்கு யார் மேக்கப், சாவித்திரிக்கு யார் மேக்கப்னு மக்கள் பேரை மனப்பாடமா சொன்னாங்க. அத்தனை அழகு பார்க்க. இப்போ யார் யாருக்கு மேக்கப் போடுறனக்கன்னு யார் கவனிக்கறாங்க. கவனிச்சாலும் உடை எங்க?? எதை பாராட்ட? பாராட்டும் அளவு ஒன்னுமில்லை.

தில்லான மோகனாம்பால் எல்லாம் இதுவரை கணக்கில்லாம ரிப்பிட்டடா பார்த்திருக்கேன். கதைக்கும், பாட்டுக்கும், மேக்கப்கும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. பாச மலரை அடிச்சுக்க இன்று ஒரு படமுண்டா?? நவராத்திரி?? திருவிளையாடல்??? இன்னைக்கு இதை எல்லாம் காப்பி அடிக்க நினைச்சாலும் யாராலும் பழசு போல் கொண்டு வர முடியல. சக்ஸஸ் ஆன பல பாடல்களை ரீமிக்ஸ் பண்றாங்க, ஆனா ரீமிக்ஸ் நிலைப்பதில்லை... பழசு தான் இன்றும் ஹம் பண்ண முடியுது, மனசுலையும் நிக்குது.

சரி நடுவரே... உங்களூக்காக கிடைச்ச நேரத்தில் ஓடி வந்துட்டேன். எனக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாச்சுங்கோ, கிளம்பறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்றைய சூழலில் விவாதிக்க கூடிய நல்லதொரு தலைப்பு குடுத்த பூர்ணிமா சங்கர், ரொம்ப நன்றிங்க.

நம் மேன்மைமிகு நடுவர் ரேணுகா ராஜசேகரன் அவர்களுக்கும் மற்றும் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.

நடுவரே, அந்த காலபடங்களில் ஆபாசம் இல்லை, ரெட்டை அர்த்தம் இல்லை, நல்ல நடிப்பு, பிரமிப்பான சண்டை காட்சிகள் எல்லாம் நம்ம தோழீஸ் சொல்றாங்க தான்... இந்த நாகரீக உலகிற்கு ஏற்ற மாதிரி தாவணி, சேலை அணிந்த நாமே இப்பொழுது காக்ரா சோலி, சுடிதார் நு அணிவதில்லையா, அது தான் கம்பார்டபளவும் இருக்கு... அதேபோல் தான் அந்த கால சினிமாக்களின் வசங்களை இந்த காலத்து பிள்ளைகள் புரிஞ்சுகறதே ரொம்ப சிரமம்... சோ இந்த காலத்திருக்கு ஏற்ற மாதிரி மார்டனா கொஞ்சம் மசாலா சேர்த்தும் குடுக்கறாங்க... இன்னும் சொல்லப்போனால் அந்த காலத்தை விட இந்த காலத்தில் மிக பிரமாண்டமான படங்கள் வந்திட்டு இருக்கு... ஜோதா அக்பர், தசாவதாரம், எந்திரன் வாவ்...

பாடல் வரிகளில் அர்த்தம் இல்லை, என்னென்னமோ எல்லாம் பாடுறாங்கனு எதிரணி சொல்றாங்க... இசைக்கு மொழி தேவை இல்லை.... இனிமையான இசைய புரியாத வார்த்தைகளாலும் ரசிக்க முடியுமே... உங்க வீட்டு குட்டீஸ் எந்த பாடல்கள் அதிகம் விரும்பறாங்க... அவங்க கிட்ட பழைய காலத்து படத்தை போடீங்கனால் போர் மம்மி வேற மூவி சாங் போடுங்க நு ரகளையே பண்ணுவாங்க... பல்லேலக்க.... நான் அடிச்சா தாங்க மாட்ட... ரோபோ ரோபோ... பாடல் பாடாத குட்டீஸ் உண்டோ சொல்லுங்க... நடுவரே... சிறந்ததுனு சொல்றது ஒரு ஜெனரேஷனை மட்டும் போய் சேருவது எல்லா... எல்லா ஜெனறேசனையும் போய் சேருவது சிறந்த சினிமாவாக இருக்க முடியும்...

இன்னும் ஒரு உதாரணம் சொல்லிக்கறேன், எங்க குட்டீஸ்க்கு, அந்த காலத்தில் சித்தி நு பத்மினி நடிச்சு ஒரு மூவி வந்திச்சே, அதில் வரும் ஒரு பாடல்...
"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே... காலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே..."
இந்த பாட்டை ஸ்லீபிங் சங்காக போட்டால்... மம்மி சாங் மாத்து, வா வா என் தேவைதையே சாங் போடு நு சொல்லுது...

அந்த கால பாடல்கள் மட்டும் இல்லை இந்த காலத்திலும் பல நல்ல அர்த்தம் உள்ள பாடல்கள் இருக்கத்தான் செயய்யுது...

நடுவர் அவர்களே... அந்த காலத்திலும் தான் உடம்பை இருக்கும் உடைகள் உடுத்தினார்கள்... இந்த கால நடிகைகள் ஏன் அரை குறை ஆடையின் வருகிறார்கள்... அதை தானே மக்கள் விரும்புகிறார்கள்...

இது எல்லாத்தையும் தாண்டி, அந்த காலத்தில் வருஷத்தில் ஒரு படம் அல்லது இரண்டு படங்கள் மட்டுமே வெளி வந்தது... ஆனால் இன்றோ வருசத்துக்கு 50 அல்லது 60 படங்கள் வெளி வருது... அவங்க சொல்ற மாதிரி எல்லா படமும் கருத்துள்ள கதை நு பார்த்தோமனால் தியேட்டர்ஸ் கலை கட்டாது... இன்றைய சூழலில் பல ரக படங்கள் குடுக்க வேண்டிய கட்டாயம்... நகைச்சுவை, ஆக்சன், மசாலா, செண்டிமெண்ட் எல்லாம் கலந்து தான் தர வேண்டி இருக்கு... அதற்காக மசாலா படங்கள் நல்லதுன்னு சொல்ல வரலை, மசாலா என்பது படத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே, நல்ல கரு, சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பே படத்தின் முழு வெற்றிக்கும் காரணம்...

அதற்காக அந்த கால படங்களுக்கு இந்த கால நல்ல படங்களும் சளைத்தது இல்லை...

இந்தியன், அந்நியன் படம் தப்பு செய்றவங்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் அமைஞ்சது...

பசங்க, வாகை சூட வா, தோனி அந்த பிஞ்சு நெஞ்சங்களின் கதைய என்னமா சொல்லி இருக்காங்க...

முதல்வன் படம் தமிழ் சரியா தெரியா சிங்கப்பூரியன்ஸ் கூட ஓ தட் ஓன் டே சீப் மினிஸ்டர் மூவி, இட்ஸ் வெரி நைஸ்நு சொல்ல வச்சது... இப்படி ஒரு முதல்வர் வேணும்னு நாம எல்லாரும் கூட தான் ஏங்கினோம் இல்லையா...

சூரிய வம்சம், வானத்தை போல படங்கள் ஒரு அழகான குடும்பக்கதையை நம் கண் முன் காட்டினாங்க...

வரவு எட்டணா, செலவு பத்தணா படம், பணத்தின் அருமையை சிக்கனத்தை உணர்த்தியது...

அபியும் நானும், சந்தோஷ் சுப்ரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படங்கள் பெற்றோர் பிள்ளைகளின் உணர்சிகளை பாசத்தை புரிய வைத்த படங்கள்....

இன்னும் ஏகப்பட்ட படங்கள் இருக்கு... நினைவுக்கு தான் வரலை...

நடுவர் மேம், அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு... அந்த கால படங்களை ரசிக்க மட்டுமே முடியும், இந்த கால வாழ்க்கைக்கு ஒத்துவராது... இந்த காலத்தில் வரும் சிறந்த படங்களை பாருங்களேன்... அதில் வரும் நல்லவைகளை எடுத்துக்கோங்களேன்....

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அன்பு நடுவருக்கும் மற்றும் என் முகம் பாரா தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் கனிந்த வணக்கம் வணக்கம் வணக்கமுங்கோ.

பட்டி தலைப்பு இப்போதைக்கு ரொம்ப முக்கியமே.

*** "சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?" *** - கண்டிப்பாக அக்கால திரைப்படங்கள் தான்.

இப்போ என்ன படமாவ எடுக்குறாங்க ? படம் எதுக்கு பார்க்குறோம் வேலை வெட்டி இல்லாமலா ? ஜஸ்ட் ஒரு ரிலாக்ஸ்க்காக தானே பார்க்குறோம். ஆனா இப்போ எடுக்குற படத்துக்கு போயிட்டு வந்தா டென்ஷன் ஏறி pp அதிகமாகி எங்க நாமலே ஒரு நல்ல மனநோயாளியாக தான் வருவோம்.

1 . ஆடை - முக்கியமாது இது தான். கதையின் நாயகனுக்கு புல் பான்ட், சட்டை, அதுக்கு மேல கோட், அப்புறம் கைக்கு க்லோவுஸ் காலுக்கு சாக்ஸ் அப்புறம் சூ வேற. ஆனா ஹீரோயன்க்கு 2 வயது சிறுமி போடும் கவுன் அல்லது ஏதாவது ஒரு சின்ன துண்டு கிழிந்த துணி அவ்ளோ தான். என்ன கொடுமைங்க இது ? கோடி கோடியாய் பணத்தை கொட்டி படம் எடுத்தாலும் பெண்களுக்கு மட்டும் ஆடை கொடுப்பதில் ரொம்ப கஞ்சத்தனம் பண்ணுறாங்க நம்ம மக்கள். என்ன பண்ண ?இத கண் கொண்டு பார்க்கவா முடிது ?

2 . வசனங்கள் - இப்போ உள்ள படத்துல வசனமாவா எழுதுறாங்க ? அப்பப்பா காத்து கொடுத்து கேட்கவே முடியல. எல்லாமே கேட்ட வார்த்தை. அவுங்களே --- போட்டு தான் படத்தையே ஓட்டுறாங்க. கதையின் நாகனே இப்படி பேசினால் அதை பார்த்து அப்படியே செயும் நம் பிள்ளைகளின் எதிர் காலம் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

3 . கலாச்சாரம் - அப்படின்னா என்னன்னு கேட்ப்பாங்க இப்போ படம் எடுக்குரவுங்க. உண்மைலேயே சொல்றேன் நடுவர் அவர்களே "பாய்ஸ்" படம் பார்த்து தான் நான் "டேடிங்" அப்படின்னா என்னன்னு கத்துக்கிட்டேன். இது ரொம்ப முக்கியம் இல்ல ?

4 . பாடல் - அந்த காலத்து படத்துல பாடல் வரிகள் நல்லா புரியும். கருத்துக்களும் அபாரமாக இருக்கும். ஆனா இப்போ உள்ள பாடல் வரிகளை நீங்க பாடி காட்டுங்க பார்ப்போம். உதாரணத்துக்கு "நண்பன்" படத்துல வர்ற "ஜெல்லி பெல்லி". ட்ரை பண்ணி பாருங்க நடுவரே.

5 . கதை - ஒரு படத்துக்கு மிகவும் முக்கியமானது கதை தான். இது எங்க இப்போ உள்ள படத்துல இருக்கு ? கதையா அப்படின்னா என்ன அப்படின்னு தான் இப்போ உள்ள இயக்குனர்கள் கேட்பாங்க. படம்னா கதையின் நாயகனும் நாயகியும் பாத்தும் காதலிப்பாங்க (ஸ்கூல்ல இருந்து) அப்புறம் வீட்டுக்கு தெரியாம ஊரு சுத்துவாங்க, சோத்துக்கே வலி இல்லாட்டி கூட வெளிநாட்டுல போய் டூயட் பாடுவாங்க, கட்டிபிடித்து கிஸ் அடித்து பற்ப்பல அசிங்கம் பண்ணி ஒரு வழியா வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணிடுவாங்க. கடைசியா நாயகனுக்கு மனநோய் வந்திடும் அப்படியே முடிச்சிடுவாங்க. இதுல நம்ம பிள்ளைகள் கத்துகிட்டது,
* காதல் பண்றது (அறியாத சிறு வயசுலேயே)
* தம், தண்ணி அடிப்பது
* பெண்களை எப்படி எல்லாம் கேவலமா பார்ப்பது & கிண்டல் அடிப்பது
* வீட்டுக்கு தெரியாம ஊர் சுற்றுவது
இப்படி ஏராளம் ஏராளம்.

நம்ம படத்துல நாகன் என்ன பன்றாரோ அதை அப்படியே செய்வதுதான் நம்ம பிள்ளைகளோட பழக்கம். நாயகனே சிகரெட், தண்ணி அப்படி இப்படின்னு இருந்தா பிள்ளைகளும் அதையே தானே பண்ணுறாங்க.

அப்போ வந்த படங்கள் எப்படி இருந்தது? கதை கதையோடு சேர்ந்து நல்ல பழக்க வழக்கங்கள், தேசப்பற்று, அழகான காதல், அன்பான குடும்பம் இப்படி அனைத்தும் சேர்த்து நல்ல மனம் வீசும் கதம்பமாகவல்லவா இருந்தது. அன்றைய காலத்துலேயே இப்போ எப்படி இருக்கும்னுள்ள பாடி வச்சாங்க. பாடல் வரிகள் நன்றாக புரியும் இசை தாலாட்டுவது போல அல்லவா இருக்கும். ஒவ்வொரு பாடல் வரியும் நம் நெஞ்கத்தை அப்படியே கொள்ளை கொண்டு அல்லவா போகும். படமும் குடும்பத்தோடு போய் பார்க்கலாம்.

// நாம் இருப்பது இந்தக்காலத்துல ,-- மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தன்மையோட இருந்த அந்த கால படங்களை விட யதார்த்தமும் , வாழ்வியல் சார்ந்தும் வரும் இந்தக் கால படங்கள் சிறந்தவை தாங்க // எதுங்க நாடகத்தன்மை ? நாடகத்துல இருந்து தான் cinemaa வே வந்தது. இது தெரியாதா எதிரணி மக்களுக்கு ? இந்த கால படத்துல என்ன யதார்த்தம் இருக்கு வீட்டுக்கு தெரியாம எப்படி எல்லாம் தப்பு செய்யலாம் அப்படின்ற யதார்த்தமா ?

// அந்தக்கால வசனம் எதையாவது எதிரணி கிட்ட கேளுங்க , யோசிப்பாங்க, // இந்த காலத்து வசனமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கா ? எங்க பாய்ஸ் பட வசனம் ஏதாவது சொல்லுங்க (பசங்களுக்கு உள்ள பேசிக்கிறது)

//அதே இப்போ சிம்பிள் அண்ட் சிரிப்பு கலந்த வசனம் தானே நாட்டுல எப்பவுமே ஹாட் // அதுல முக்கியமா பெண்களை எவ்வளவு இழிவு படுத்தி பேசுறாங்க நடுவரே இது தான் ஹாட்டா ?

''வொய் திஸ் கொலவெறி' மிகவும் கொலை வெறியான பாடல் தான். எந்த அர்த்தமும் இல்ல. ஆங்கிலம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் கொலை செயும் பாடல் அல்லவா ? இப்படி தப்பு செய்றோம் அப்படின்னு தெரியாமலே தப்பு செய்ய வைப்பது தான் இக்கால படங்கள்.

// நம் வீடுகளிலேயே ஆடை குறைப்பு அமுல் படுத்தப்பட்டு வெகு காலமாகிவிட்டது. உடலை அப்பட்டமாய் காட்டும் ஜீன், டிஷர்ட்தான் இன்றைய உடையே. // ஒரு மனிதனின் மானத்தை காக்க தான் ஆடை. அதே இப்போது அசிங்க மாகி விட்டது. உடலை அப்பட்டமாய் காட்டும் ஆடை போட்டு என்ன போடாமல் இருந்து என்ன பயன் ?

அந்தகாலத்து பாடல் எல்லாம் அமுதம்,
* எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
* புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக
* சிந்து நதிஇன் இசை நிலவினிலே
* ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
* தாயத்து தாயத்து

"சக்கரவத்தி திருமகள்" படத்துல mgr க்கும் nsk க்கும் ஒரு பாடல் வரும் (பாடல் வரிகள் இங்கே தரலமா) மிக அருமையான பாடல். அதில் சொல்லப்படும் கருத்துக்கள் அம்மம்மா எனவென்று சொல்ல ?

--> " உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது ?
நிலைகேட்டுபோன நயவஞ்சகரின் நாக்கு தான் அது

புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது ?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது" <---

இப்படிப்பட்ட கருத்துக்கள் எங்கே இப்போ உள்ள பாடல் வரிகள் சொல்கிறது ?

சொட்ட சொட்ட காதல்,
* மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
* மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
* நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இது மட்டுமா நம் சிறு பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடல்கள் எத்தனை எத்தனை,
--> "வேப்ப மரம் உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாட போகும் பாத்து சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கில்லி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே
நீ வீட்டுக்குளே பயந்து கிடந்து வெம்பி விடாதே" <---

எப்படிப்பட்ட பொன்னான வரிகள்.

இன்னமும் வரேன் ........

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நீங்க இக்கால அணியா...நல்லது வாதங்கள் இப்போதான் துவங்கியுள்ளீர்போல இன்னும் வாருங்கள்....

//////''வொய் திஸ் கொலவெறி'' பாடலில் எந்த அர்த்தமும் இல்லைதான், ஆனாலும் அந்த பாடல் சம்திங் ஸ்பெஷல். ''வேணா மச்சா வேணா'' பாடல் பட்டையை கிளப்புது. இதெல்லாம் லாஜிக் இல்லாத மேஜிக்தான். ///

சரிதான் லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்.....:-)) எழுதியவருக்காவது லாஜிக் தெரிந்தால் பேட்டி கொடுக்கசொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.
இந்த லாஜிக் இல்லா மேஜிக் செய்யும் யுத்தி உங்கள் அந்தகாலத்திற்கு உண்டா?நடுவர் கேட்கலை இக்கால அணி கேட்கிறது

////கொலவெரிடி, அடிடா அவள ஒதடா அவள... எங்கங்க போகுது இளைய சமுதாயம்??? இப்போ சமீபத்தில் வந்த தனுஷ் படம் ஒன்னாவது வீட்டில் எல்லாரோடையும் சேர்ந்து உட்கார்ந்து பாக்க முடியுமா??? பாட்டு வந்தாலே சேனல் மாத்த வேண்டி இருக்கு. ;( கொடுமை நடுவரே கொடுமை.////
ஓ...இப்படிக்கூட பாடல்கள் இருக்கா....?

////சக்ஸஸ் ஆன பல பாடல்களை ரீமிக்ஸ் பண்றாங்க, ஆனா ரீமிக்ஸ் நிலைப்பதில்லை... பழசு தான் இன்றும் ஹம் பண்ண முடியுது, மனசுலையும் நிக்குது.////
என்னப்பா இக்காலமே அணி ரீமிக்ஸ் பாடல்கள் நிலைப்பதில்லையாமே,நிஜமா?

///சரி நடுவரே... உங்களூக்காக கிடைச்ச நேரத்தில் ஓடி வந்துட்டேன். எனக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாச்சுங்கோ, கிளம்பறேன். :)///
கிடைத்த நேரத்தில் வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி,மிகுந்த சந்தோஷம்..மீண்டும் வாருங்கள்...

நடுவராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு தோழி ரேனுக்காவிற்கும், ”இக்கால” அருசுவை தோழிகள், மற்றும் எதிரணித் தோழிகள் அனைவருக்கும் என் காலை வணக்கங்கள். தலைப்பைக் கொடுத்த தோழி பூர்ணிமா சங்கர் அவைகளுக்கு பாராட்டுக்கள். தோழி ரேனு பட்டியை சிறப்பாக நடத்த என் வாழ்த்துக்கள்

அன்பு நடுவரே நான் ”இக்கால திரைப்படங்கள் தான் சிறந்தது” என்கிற தலைப்பில் வாதாட வந்திருக்கிறேன். நடுவரே உங்க குட்டி பையன் கிட்ட அந்த கால படம் ஒன்றையும் இப்ப உள்ள படம் ஒன்றையும் போட்டுக் காண்பியுங்கள், குழந்தை சொல்லுவான் எனக்கு கலைபுல்லா இருக்கிற இந்த கால படம் தான் தான் சூப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு.

மாற்றங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. அந்த கால வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரி அந்த கால படங்கள் அமைந்தது. இக்கால வாழ்கைக்கு ஏற்றார்போல் இக்கால படங்கள் உள்ள்து. அக்கால படங்களில் உடைகள் ஒழுக்கமா இருந்தது, இப்போ உள்ள படத்தில் இல்லைனு நம் எதிர் அணி தோழி சொல்றாங்க. அக்காலத்தில் நம் மக்கள் புடவையும், வேட்டியும் அணிந்து வலம் வந்து கொண்டுருந்தார்கள், இப்போ அப்படியா நடுவரே? நம் பெண்களைக் கேட்டால் புடவை எனக்கு கம்பர்டபுலா இல்ல சுடிதார், ஜீன்ஸ் தான் கம்பர்டபுலா இருக்குதுனு சொல்றாங்க. இவங்க காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக்கலாம் ஆனா சினிமா மற்றும் அக்காலத்தைப் போல தான் இருக்கனும்னு சொன்னா நியாயமா நடுவரே? (சின்னப்புள்ளத்தனாமா இருக்கு)

நம்முடைய உடை கலாச்சாரம் சினிமா பார்தெல்லாம் மாறல யுவர் ஆனர், மேற்கத்திய கலாச்சாரத்தால் தான் இவ்வள்வு மாற்றம் அதுவும் ஐடி துறை நம் நாட்டில் காலடி எடுத்து வைத்ததன் காரணம் மட்டுமே (இந்த உடை கலாச்சாரம் மாறியதை பற்றி தனி பட்டியே நடத்தாலாம் நடுவரே!!!) தவற இந்த கால சினிமால இல்லங்கிறதை நம் எதிரணித் தோழிகள் கொஞ்சம் புரிஞ்சுக்கனும்.

எவ்வளவோ நல்ல கருத்துள்ள சினிமாக்கள் இக்காலத்தில வருகிறது யுவர் ஆனர், ஆனா அதையெல்லாம் நம் மக்கள் அங்கிகரிக்கிறது இல்லை. படத்துல மசாலா இருந்ததா தான் பார்ப்பாங்களாம். எத்தனை பேருக்கு ”அழகர் சாமியின் குதிரை” படம் புடிக்கும் நடுவரே (எத்தனை பேர் பார்த்திருப்பாங்கங்கிறதே கேள்விக்கிறி தான்). எத்தனையோ “விசு” படங்கள் உள்ளது நடுவரே.

அக்கால படங்களை இக்கால வாண்டுகள் கிட்ட பார்க்க சொன்னால் அவங்க என்ன சொல்றங்க தெறியுமா நடுவரே, “ஐயோ இந்த படம் போர் அடிக்குது, அந்த அங்கிள் ஓவரா அக்ட் பன்றாங்கனு சொல்றாங்க”.

இன்னும் வருவேன்!!!

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

மேலும் சில பதிவுகள்