***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

பட்டி மன்றத்தை பாட்டுமன்றமாக்கிட்டீங்களே ஜென்னி......ஏம்ப்பா இக்கால அணி அக்கால படங்களில் ஏதாவது தவறான படம் வந்திருக்கான்னு கேட்கிறார்கள்ப்பா....இருந்தா சொல்லுங்க.....

அப்பப்பா டெக்னாலஜி வளர்ந்து நம்ம படுத்துதுப்பா.......உதிரா அதச்செய்யுங்க முதல்ல....ஜோடால்லாம் நடுவர் குடிக்கமாட்டார்....நல்லா காஷ்மீர் ஆப்பிள்ள ஜூஸ் போட்டு கொண்டாங்க....இல்லன்னா நடுவர் உதிரம் கொட்டிடுவார்.:-((

(உங்களுக்காவது கேட்கதோனுச்சே,செல்லம்.....இ லைக் யூ டா........)

அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கங்கள்.

//இந்தியன் படம் வந்து எத்தனை வருடங்கள் ஆச்சு? லஞ்சம் ஒழிந்ததா? இன்னும் மோசம் தானே ஆச்சு?// இந்தியன் படத்திற்கு பின்னாடி தான், ஒரு வேலை நடக்க நாம் கொடுக்கும் பணம் லஞ்சமென பல பேருக்கு புரிஞ்சது. இந்தியன் படம் லஞ்சத்தை பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்கள் மனதில் உண்டு பண்ண தான். அதை ஒழிக்க வேண்டியது அரசாங்கத்தின் வேலை. சினிமாவை நாம் ஒரு கருவியா தான் பயன் படுத்துரோம்.

//அரைக்கால் ஆடை இல்லாத ஹீரோயின் எந்த படத்தில் வந்தாங்க... எனக்கு தெரிஞ்சு ஒன்னு ரெண்டு படங்கள் மட்டும்தான் அதுக்கு மட்டும் போனா போதும்னு எதிரணி தோழி சொல்றாங்க போல நடுவரே// நடுவர் அவர்களே, அந்த காலத்திலும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் நடிச்ச ரெட்டை அர்த்த பாடல்கள், ஆபாச ஆடைகள்னு வந்த படங்களை குடும்பத்தோடு உக்கார்ந்து பார்க்க முடிஞ்சதா?

//இப்போ சேலையை கூட சேலை மாதிரியா நம்ம ஹீரோயின்ஸ் கட்டுறாங்க? கண்றாவினு எதிரணி தோழிகளே புலம்புவாங்க..// ஏதோ இவங்க கருப்பு வெள்ளை படத்தை மட்டும் பேசறாங்க போல தெரியுது... இந்த காலத்திலாவது ஆபாசமான உடைகள் நிறைய டிசைன் பண்ணுறாங்க. ஆனா அந்த காலத்தில் சேலையையே ஆபாசமா உடுத்தினாங்க. இதை என்னன்னு சொல்றது?

//நா வூட்ல வந்துச்சு" இது தான் இப்போ உள்ள ஹீரோயன் பேச்சு. தமிழை வளர்த்த அறிகர்கள் இதெல்லாம் கேட்டா தூக்கு போட்டு தொங்கிடுவாங்க// சமீபத்தில் வெளிநாட்டின் ஒரு உணவகத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரை சேர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது. அப்பா அம்மா மட்டும் அழகு தமிழில் பேசுறாங்க, ஆனா அவங்க குழந்தைக்கிட்ட ஆங்கிலத்தில் தான் பேசுறாங்க... அது ஏன்னு கேட்டதுக்கு அப்ப தான் குழந்தைக்கு ஆங்கிலம் சரளமா வருமாம். தாய் தமிழை விடுத்து ஆங்கிலம் கற்பிக்கும் பெற்றோர்களே அதிகம் இருக்கும் காலமிது. இதுல வேறு மாநிலத்தில் இருந்து வந்த நாயகிகள் ஏதோ தமிழ் கத்துக்கணும் நு ஆசைப்பட்டு கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டு பேசறாங்க... இதுல சண்டோஷபடுறதை விட்டுபுட்டு குறை சொல்லிக்கிட்டு இருக்காங்க நம்ம அந்த கால அணிகாரங்க.

//என்ன கேள்வி இது ? நான் நினைக்குறேன் எதிரணி தோழிகள் நகராட்சி பள்ளிகளை போய் பார்த்தது இல்லை என்று. நான் நகராட்சி பள்ளிஇல் தான் படித்தேன். இதில் என்ன இருக்கு ?// நானும் தான் நகராட்சி பள்ளியில் படித்தேன். ஆனால் இப்ப எல்லாம் வசதி இல்லாதவர்கள் தான் பிள்ளைகளை நகராட்சி பள்ளியில் சேர்த்து விடறாங்க.. அப்படி வசதி இல்லாதவங்களுக்கும் தன் பிள்ளை கான்வென்ட்ல படிக்க வைக்கனும்னு மனதுக்குள் ஆசை இருக்கத்தான் செய்யுது.

//இக்கால நடிகர்களிடம் போய் உங்களுக்கு யார் மாதிரி ஆகணும்ன்னு ஆசை ? யார் உங்க ரோல் மாடல் அப்படின்னு கேட்டா என்ன சொல்லுவாங்க தெர்யுமா ?// அது அந்தகாலம்...

இந்தகாலத்தில் இந்த பெயர்களை தான் சொல்லுவாங்க.

நடிப்பு - ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா

நடனம் - ஷோபனா, ஐஸ்வர்யா ராய், சிம்ரன்

இசை - A R ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், இமாம்

பின்னணி பாடகர்கள் - SPB, ஜேசுதாஸ், ஹரிஹரன்,ஹரிஷ் ராகவேந்திர, சித்ரா, ஜானகி, சாதனாசர்கம், சின்மயி

//சிவாஜி நடிப்பு நடை// அப்ப ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைல் நடையை, கமல்ஹாசனின் நடிப்பை என்னன்னு சொல்றது...

//இந்த காலத்து காமெடி எத்தனை பேர் மனதை புண் படுத்துவதாக உள்ளது. ஆனா அக்காலத்துல காமெடி அப்படின்றது சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது தானே// சாமி படத்தில் விவேக்கோட காமெடி என்ன உங்களை சிந்திக்க வைக்கலையா, இன்னும் எவ்வளவோ இருக்கு, சொல்ல ஆரம்பிச்சால் பட்டி போறாது...

//சமுதாயத்துக்கு நல்லதா விட கெட்டதே அதிகமா சீக்கிரமா பரவும். ஒரு பொண்ணு நல்ல மார்க் எடுத்தா (ஸ்டேட் ரேங்க் இல்ல சும்மா ஒரு 400 மேல) அது பக்கத்துக்கு வீட்டு காரனுக்கு கூட சரியா தெரியாது. ஆனா அதே பொண்ணு ஏதாவது தப்பு பண்ணிட்டா அது இந்த உலகத்துக்கே ஒரு நிமிஷத்துல தெரியும். அப்படிதானே இருக்கு. இங்க என்ன சீக்கிரம் பரவுச்சு நல்ல விஷயம் அல்லது கெட்ட விஷயம் ?// இது இந்த காலத்தில் மட்டும் இல்லைங்க, அந்த காலத்திலும் அப்படி தான். எல்லா காலதிதிலும் அப்படி தான்.

//எல்லாமே மாறனும் புதுசாகனும் அப்படின்னு சொல்லி நாம்ம பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாத்தையும் மாத்தலாமா ? எல்லாத்தையும் மாத்தனும்ம்னு சொல்லி அம்மாவை என்ன ஆன்ட்டி அப்படின்னா கூப்பிடுறோம் ? மாறனும் மாறவேண்டிய விஷயங்கள் மட்டும். ஆனா இக்கால படம் மூலம் ஏற்படும் மாற்றம் அழிவு பாதைக்கு தான் அழைத்து செல்கிறது. சாதரணமா ஒரு டிவி ஷோ நடத்துற ஆண் பெண் எப்படி வராங்க ?// டிவி ல செய்திவாசிகரவங்க எப்பவும் சேலைல தான வராங்க ... ஆனா எத்தனை பேரு உக்கார்ந்து ஒழுங்கா செய்தி பாக்குறாங்க... உங்களையெல்லாம் ஒரு டிவி ஷோ பார்க்க வைக்க அவங்க எவ்ளோ பண்ணவேண்டியிருக்கு... அப்ப சினிமா சொல்லவே வேண்ட..

//பெண்ணுக்கு என்று பல சிறப்பு அம்சங்கள் இருக்கு "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" இப்படி. ஒரு பெண் எவ்வளவு மடலா இருந்தாலும் அழகா சேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து, நெற்றி நிறைய போட்டு வைத்து, கை நிறைய வளையல் போட்டு, தலைய தலைய தாலி கட்டி, பூ போன்ற பாதங்களை தரையில் ஊன்றி மெல்லிதான கொலுசு ஒளியோடு வந்தால் ஏதோ வானத்து தேவதையே மண்ணில் இறங்கி வந்தது போல அல்லவா இருக்கும். ஒரு பையன் கிட்ட உனக்கு பொண்ணு எந்த மாதிரி வேன்னும்ன்னு கேட்ட சினி பீல்ட்ல இருக்குற நடிகைய மாதிரி வேணும்ன்னா சொல்வான்? குடும்ப பொண்ணுன்னு தானே சொல்வான். அதே மாதிரி தான் அக்கால படங்கள் அம்சமான படங்கள்.// நடுவரே, இப்ப எல்லாம் பொண்ணுங்க ராகேட்ல போற காலம் வந்திருச்சு, அதுல என்ன தழைய தழைய புடவை கட்டிட்டா போக முடியும். காலத்துக்கு எத்த மாதிரி மாறி தான் ஆகணும்.

ஏனுங்க, ஒரு பையன் கிட்ட உனக்கு பொண்ணு எந்த மாதிரி வேன்னும்ன்னு கேட்டா நதியா, ரேவதி, பாவனா, ஜோதிகா, ஹன்சிகா மோத்வாணி மாதிரி பொண்ணுங்க வேணும்னு தான் சொல்லுவாங்க... இந்த காலத்தில் ஆண்கள் சேலை அணியும் பெண்களை விட சுடிதார் அணியர பெண்களை தான் விரும்பறாங்க...

நடுவரே, வெயிட் இன்னும் வரேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அந்தகாலம் அந்தகாலம்னு பேசிக்கொண்டிருக்கிற தோழிகள் அத்தனை பேரும் 70 களில் வாழல என்பதை தெரிந்து தானே பேசிகிட்டு இருக்கீங்க. இல்ல எங்களுக்கு அந்த கால படங்கள் தான் பிடிக்கும் அது தான் சிறந்ததுனுட்டு டெய்லி ஒரு பழைய படம் பார்த்து ரசிச்சுட்டு இருக்கீங்களா இல்லையே, இந்த கால படங்களை பார்த்துகிட்டு தானே இருக்கீங்க.

சமுத்திரம், ஆனந்தம், வானத்தை போல, அழகிய தீயே, பொற்காலம், பூவே உனக்காக, அஞ்சலி, சூரியவம்சம், காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, இம்சை அரசன், அறை எண் 108, அங்காடி தெரு, பூ, ரமணா, அபியும் நானும், இனிது இனிது, காஞ்சீவரம், சிநேகிதியே, ஏப்ரல் மாதத்தில், ரோஜா கூட்டம், பிரியமான தோழி, மதராசபட்டினம், தெய்வத்திருமகள், அழகி, வசூல்ராஜா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, பைவ்ஸ்டார், மொழி, அந்நியன், காதல் கோட்டை, பேராண்மை, இந்திரா, டோனி, கிழக்கு சீமையிலே, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், சென்னை 600018, அவ்வைசண்முகி, பூவெல்லாம் உன் வாசம், துள்ளாத மனமும் துள்ளும், முகவரி, பம்மல் கே சம்மதம், உன்னை நினைத்து, கண்ட நாள் முதல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், கண்டுகொண்டேன் கண்டுக்கொண்டேன், பிரிவோம் சந்திப்போம், ஆட்டோகிராப், தேசிய கீதம் (இன்னும் நிறைய படங்கள் இருக்கு) சில படங்கள் மட்டுமே பார்க்கற மாதிரி வருதுனு சொன்ன எதிரணியினருக்கு, இந்த படத்தில் எல்லாம் என்ன ஆபசம் இருந்துச்சு நீங்கல்லாம் குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கல.
இந்த படத்தை எல்லாம் அந்தகாலம்னு பேசிகிட்டு இருக்கற தோழிகள் பார்த்ததே இல்ல? உங்க அடிமனசுலயாவது ஒரு சின்ன பாசமோ, காதலோ, அன்போ, ஆஹா இப்படி நாமும் இருக்கனுங்கற எண்ணமோ தோணல, இப்படி நாமலும் மத்தவங்கள இது போன்றவங்கள நடத்தனும் அப்படிங்கிற எண்ணம் வரல, உங்க நண்பர்கள் நியாபகத்தில் வரல. இல்லங்கிற பதில் சொன்னீங்கன்னா அது நிச்சயமா பொய்யா தான் இருக்கும்.
///மணமகளே மருமகளே வா வா - உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா///
மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்களே மங்களே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
குத்தம் குறை எல்லாம் ஒரு குண்டுமணி சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழனும் வாழனுமே.........
இந்த பாட்டு தான் இப்போ ட்ரெண்ட்ங்க அந்தகால தோழிகளே இந்த பாட்டு போடாத திருமணங்களே கிடையாது, இத கேட்டு உணர்ச்சி வசப்படாத பெற்றோர்களே இருக்க முடியாது இந்த காலத்தில்.
இந்த காலம் படங்கள் தரமானவை இல்லன்னா மக்கள் யாரும் த்யேட்டருக்கு வரவே மாட்டாங்க, இன்னக்கும் த்யேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் போகுது, மக்கள் கூட்டம் கூட்டமாக த்யேட்டருக்கு வந்துக் கொண்டு தான் இருக்காங்க. அப்போ மக்கள் ரசனைக்கு ஏற்றாற்போல நல்ல சிறந்த படங்கள் நிறைய இந்தகாலத்திலும் வந்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று சான்றாக போதாதா?
எந்த ஒரு விஷயத்தையும் நாம காணும் விதத்தில் தானே இருக்கு, நடுவரே, ஒரு விஷயத்தை செய்யாதான்னா செய்யாமல் நாம இருப்போமா? பெரியவர்களே நிறைய விஷயத்த நேரடியா சொல்லாமல் சொல்லி இருப்பாங்க உதாரணத்துக்கு அம்மை போட்டால் வீட்டின் முன் வேப்பிலை சொருக வேண்டும் என்று சொல்வார்கள் அது எதுக்கு என்றால் வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்பதற்காக அதை சொன்னால் மக்கள் உடனே ஏத்துக்க மாட்டாங்க அதனால் அம்மை என்பது சாமி அதற்கு ஏற்றது வேப்பிலை தான் அப்படின்னு சொல்லி புரியவச்சுருக்காங்க அதுப்போல தான் நடுவரே சில படங்களில் நெகட்டிவிட்டியா காண்பிச்சு இருப்பாங்க அது எதுக்குனா அதன் மூலம் நாம் அதில் இருக்கும் தவறை புரிந்துக் கொண்டு அதுப் போல் நம் நடைமுறை வாழ்க்கையில் நடந்தால் எதிர்க்கொள்ளும் துணிவு ஏற்பட தான்.
டைரக்டர் அமீர் ஒரு படத்தில் நாயகனா நடிச்சு இருப்பாரு அதில் அவருக்கு ஒரு ரவுடி கதாபாத்திரம் தான் காசுக்காக எதையும் செய்பவன் அவன் வாழ்க்கையில் ஒரு குழந்தை வரும் அந்த குழந்தைக்காக அவன் மாறுவான், நிறைய மாத்திபான், ஆனால் அந்த குழந்தையை அவன் பெற்றோர்களிடமே விடலாம் என்று போகும் போது அவனை தவறாக எண்ணி சுட்டு கொன்றுவாங்க, இதில் அவர்கள் சொல்ல வரும் விஷயம் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு அவன் எத்தனை பேரை பணத்துக்காக கொண்று இருப்பான் அதான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

நடுவர் அவர்களுக்கு வணக்கம்... இன்னைக்கு TV-ல ஒரு படம் பார்த்து கோண்டு இருக்கிறேன்... மோட்டார் சுந்தரம் பிள்ளை... அதில் அவரது நடிப்பு, தமிழ்,,, அப்பப்பா... உடனே பட்டி ஞாபகம் தான் வந்தது... அவரது அந்த அருமையான நடிப்புக்கு ஈடு இணை இன்று எவருமே இல்லை... பார்க்க பார்க்க நேரம் போகிறதே தெரியல... அதில் அவருக்கு இரு தாரம், நிறைய குழந்தைகள் ஆனால் அதை அவ்வளவு கண்ணியமாக காண்பித்து இருக்கிறார்கள்... இதே இன்றாக இருந்திருந்தால் ம்ம்ம் வெளினாட்டு டூயட், ரவுடிகளின் சண்டை, நகைச்சுவைங்கிற பேர்ல அவரின் இரு தாரங்களையும் கிண்டல்னு ஒரு வழி பண்ணி இருப்பாங்க....
இன்றைக்கு 60 வயது நடிகர், பேரன் பேத்திகள் எடுத்த நடிகர் தன்னோட பாதி வயது நடிகை கூட ஏடாகூடமா நடிப்பார்... ஏன் பணம் மட்டுமே காரணம்... நடிப்பு தான் முக்கியம் என்றால் இது போன்ற சீன்களை தவிர்த்து நடிப்புக்கு முக்கியம் தரும் சீன்களை மட்டுமே நடித்திருக்கலாமே?

பதிலடி பார்ட் 2

அக்பராக மனதில் பதிந்த - ஹ்ரிதிக் ரோஷன்

இணை பிரியா ஜோடியாக - கமல் ஸ்ரீதேவி, ரஜினி ராதிகா
சூர்யா ஜோதிகா...

அருந்ததி - அனுஷ்கா

ரா ரா சரசுக்கு ரா ரா சந்திரமுகி - ஜோதிகா

தஞ்சாவூரு மண்ணு எடுத்து செஞ்ச பொம்ம - மீனா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை - நதியா

ஔவையார் கே.பி. சுந்தராம்பாள் - நம் இந்தகாலத்தின் மாலதி லஷ்மன்

நகைச்சுவை நடன நாயகனாய் - நம்ம வடிவேலு

கருப்பு நிற தங்கந்தான் - கஞ்சா கருப்பு

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த - செந்தில், கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம்

ஆலினால் ஆச்சி மனோரமா, அவங்க இந்த காலத்திலும் உண்டுங்க மற்றும் கோவைசரளா

மென்மையான காதல் காவியங்களில் - அலைபாயுதே மாதவன்

காலத்தால் அழியாத பாடல்கள் தந்த - கவிப்பேரரசு வைரமுத்து

இசையால் உலகையே ஆட்டி வைத்த - A R ரகுமான்

காதல் வந்தால் சொல்லியனுப்பு, உயிரோடிருந்தால் வருகிறேன் - மாணிக்க விநாயகம், திப்பு

நிஜ வில்லனாகவே பலர் மனதில் குடி கொண்ட - ராதாரவி, லேட்டஸ்ட் சிவாஜி ஆதி (சுமன்)

இன்னும் எவ்ளோ திறமைசாலிகள் இந்த காலத்திலும் இருக்காங்க...

//இன்னைக்கும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள் இவங்களை போன்ற குறல்களை வைத்தே வாழ்க்கை ஓட்டுறாங்க. புது முகங்களுக்கு தனக்கென குறலேது???// எங்க பழைகர்களில் ஒரு சிலரை மட்டும்தான் நம்ம மக்கள் மிமிக்ரி பண்றாங்க... ஆனா இக்கால நடிகர்களில் கார்த்திக், பிரபு, விஜயகாந்த், ரஜினி, அஜித், ராஜ்கிரண், வடிவேலு, சின்னிஜெயந்த் நு இன்னும் எவ்ளவோ பேரை மிமிக்ரி பண்ணி தான் ஓட்டிட்டு இருக்காங்க... (விஜய் டிவி கலக்கப்போவது பார்த்ததில்லையா நம்ம எதிரணி)

//இவங்க எல்லாம் பெரிய பேக்ரவுண்ட், அப்பா அம்மா தாத்தா பாட்டி உதவியோட சினிமாவில் வரல. ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவங்க தான் அதிகம்// ரஜினிகாந்த், அஜீத், விக்ரம், ஆர்யா இவங்க எல்லாம் யார் சப்போர்டில் வந்தாங்க... இப்படியே சொல்லபோனால் இந்த இழை பத்தாதுங்கோ...

//நடிப்பு வந்தா நடனம் வரல, நடனம் வந்தா குறல் வரல, இப்படி அடுக்கிட்டே போகலாம்// சினிமா ல நடிக்கரதுனால் ஏதோ காமர்க்கடு சாபிடற மாதிரி சுலபம்னு நினைச்சிடாங்க போல எதிரணி... இந்த காலத்தில் டைலாக்க்கு ஏற்ற மாதிரி முக பாவனை, பஞ்ச் பஞ்ச் டைலாக்ஸ், பறந்து பறந்து சண்ட, சிக்ச்பேக் நு எவளவோ இருக்கு... திறமை உள்ளவனால மட்டும் தான் இங்க பொழைக்க முடியும் அதா புரிஞ்சுகோங்க...

//தன் சொந்த தமிழில் டயலாக் பேசி அட்டர் ஃப்லாப்பாக்கிய சிட்டிசன் பட அஜித்தா??// சிட்டிசன் படம் அட்ட ப்ளாப்பா... அட கடவுளே... அத்திப்பட்டிய தமிழ்நாடு முழுதும் பரப்பிய சூப்பர் ஹிட் படம்ங்க அது... என்ன நடுவரே நீங்க பார்க்கலையா?

//ஒன்னுமே இல்லன்னாலும் பந்தா குறையாத சிம்புவா?// இப்ப எங்க பார்ட்டி நாலும் அவரோட வேர் இஸ் தா பார்ட்டி தான் பிரபலம்.

//தமிழ் படத்தையே பார்க்க முடியாத அளவுக்கு கொண்டு போன தனுஷா??// உத்தமபுத்திரன் பார்க்கலையா நீங்க, என்னமா நடிச்சிருப்பாரு... ஏதோ சில படங்கள் அப்படி இப்படி நு இருக்கு... இதுகேல்லமா அவர் மேல கோவப்படுவாங்க.... கூல் டவுன்

//பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், வெய்யில்னு வன்முறையும் கவர்ச்சியும் தலை விரித்தாடிய படங்கள் கம்மியா???// சண்டைனு வந்தாலே வன்முறைனால் அந்த காலத்தில் வாளெடுத்து, கத்தி எடுத்து சண்ட போட்டதை என்ன சொல்றதுங்க?

//அந்த கால சிங்கார வேலனே பாட்டுக்கு இணையா இன்று ஒன்று உண்டா???// சிந்துபைரவி இசைக்கென்றே முக்கியத்துவம் எடுக்கப்பட்ட படம்... அதில் வரும் அத்தனை பாடல்களையும் அடிச்சிக்க முடியுமா?

//மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாட்டுக்கு இணையா இன்று ஒரு பிக்சரைஷேஷன் உண்டா??// இது பெஸ்ட் பிக்சரைஷேஷன் க்கு பேர் போன பாடல்கள் பச்சை நிறமே, பச்சை நிறமே... விடைகொடு எங்கள் நாடே... கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது... பூவுக்குள் ஒளிந்திருக்கும் பணிக்கூட்டம் அதிசயம்... அப்பறம் அவன் இவன் படத்தில் ஒரு சீக்வென்சுக்கு நவரசங்களையும் நடிப்பில் பாவனை செய்வாரு பாருங்க நம்ம விஷால், கைதட்டல் பறக்கும்...

//அன்று சொல்லாத வரலாரா? அன்று சொல்லாத இதிகாசமா? அன்று சொல்லாத ஆன்மீகமா?// அந்த கால ராமாயணமே லேட்டஸ்டா எடுக்கப்பட்டு சீரியலா போடுறாங்களே... அம்மன் படம் பார்க்கும்போது தியேட்டர்ல எத்தனை பேரு சாமி வந்து ஆடினாங்கனு நான் கூட பார்த்தேனே...

//அதனால் தான் இன்றைய நட்சத்திரங்களும் கூட அன்றைய சிவாஜி கூட நடிச்சதை பெறுமையா நிஅனிக்கறாங்க// நடுவரே... இன்றைய ரஜினி கூடவோ கமல் கூடவோ எப்ப வேணும்னாலும் நடிக்க முடியும்... ஆனா இறந்துபோன எம்ஜிஆர், சிவாஜி கூட நடிக்க முடியுமோ அது தான் காரணம் ...

//இன்னைக்கும் நெஞ்சில் நின்றவை,என்றும் இனியவை, ஓல்ட் இஸ் கோல்ட், காவிய புதன், க்ளாசிக் மேட்னி, நினைத்தாலே இனிக்கும், தேன் கின்னம்னு அழகான பெயர்களில் இடம் பிடிப்பவை அந்த கால படமும், பாட்டும்... குத்து பாட்டு, மசாலா மெயில், ரீமிக்ஸ், பாட்டு புதுசு என ரசனை இல்லாமல் போனது புது படங்களும், பாட்டும். சிந்தியுங்கள்...// ஆனா இப்ப எல்லாம் எங்க பங்க்சன்னாலும் கச்செரினாலும் நம்ம மக்கள் அதும் லேட்டஸ்டா வந்த பாட்டை தானே போடா சொல்லுறாங்க...

அப்பாடா நாளை வரேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஆஆகாக கா காக கா .,, என்ன ஒரு அருமையான பதிலடி(பிரேமா , உமா வாழ்க ) சிறந்த பதிலடியார் அப்படின்னு பட்டம் இந்த இம்சை அரசி கொடுக்கிறாள் >

(அட்ரா சக்கை அட்ரா சக்கை ) இது நம்ம கவுண்டர் வாய்ஸ்ல படிங்கோ .

நகைச்சுவை என்பது ஒரே மாதிரியா இருந்தா போர் அடிச்சிரும் , அதனால் காலத்துக்கு ஏற்ப மாறிகிட்டே இருந்துச்சு. மக்கள் கிட்டே அமோக ஆதரவும் கிடைச்சது . கரகாட்டக்காரன் காமெடிய இன்னும் மறக்க முடியுமோ ?

" ஒரு பழம் இங்க இருக்கு, அந்த இன்னொரு பழம் எங்கடா ?? " வித வித டோனி ல் கவுண்டமணி கேட்டு நம்மை இன்னும் சிரிக்க வைக்கலையா (நீங்க அதெல்லாம் காமெடி இல்லைன்னு சொன்னீங்க ,அம்புடு தென் , ஒரு நாள் புல்லும் உங்களை இந்த காமெடிய போட்டு பார்க்க வச்சிருவோம் .

மக்களையும் சமுதாயத்தையும் மாற்ற திரைப்படங்கள் வந்தா , எதுக்குங்க ஸ்கூல் , படிப்பு எல்லாம் ?

தேவர் மகன் படத்தில் வரும் மணப்பெண் பாட்டு கூட ஹிட் தாங்கோ !!

அஞ்சலி படத்தில் குழந்தையை நடிக்க வைத்து ஒரு புதிய கதை களம அமைக்க வில்லையா ?

மாரல் ச்டோரிஸ் மாதிரி தான் படங்கள் இருக்கணும் என்றால் இங்கே படங்களே ஓடாது , எல்லாரும் ஆங்கில படங்களுக்கு அப்பிடியே அலேக்கா தாவிருவாங்க.

கண்றாவி படங்களே அந்த காலத்தில் இல்லை, அருமையான வசனம் இருந்துச்சு. எல்லாத்திலேயும் ஒரு நாகரீகம் இருந்தது என்று சொல்லும் அக்கால அணியினர்.,
இவ்ளோ நல்ல விஷயம் இருக்கறப்ப ஏன் யார் ஹூ இப்படி மாத்தினாங்க என்பதையும் சொல்லிபுட்டா தேவலை,

கண்டிப்பா நாங்க இல்லை அம்மணி, நானெல்லாம் அப்புறமா தான் பொறந்தேன் .
அந்த கால சாயலில் வரும் படங்கள் கூட இன்றைய டேக்னாலஜியினாலும் சொல்லப்பட்ட விதத்தாலும் ரொம்பவே அழகா இருக்கு .

உதாரணம் நம்ம மதராசபட்டினம் -- எதிரணியினருக்கு இந்த படம் பிடிக்கலை என்றால் கூட அந்த கால கட்டம் பிடிக்கலை என்று அர்த்தம் வரும்.
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பாட்டை நம்ம ஊர் பாடகர் கூட பாடலை , ஆனால் அந்த பாவம் ,உச்சரிப்பு எல்லாமே அப்படியே அந்த பாட்டில் நம்மை மூழ்கடித்து விடுதே!!

காட்சி அமைப்பு கூட இண்டர்ச்டிங் ஆ இருந்தா தான் படங்கள் ஓடுவதற்கு சந்திரமுகி சொல்லலாம் .
மனிசித்ரதாழ் என்ற அருமையான படம் தான் இதன் மூலம், ஆனால் அதையே விறுவிறுப்பாக கொண்டு போனதால் எல்லாரும் பார்க்க முடிந்தது.

பேப்பரை பிரித்தால் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்துருக்கு , எல்லாமே ஹிட் ஆகுமா, கிடையாது.

முன்பு நடிகருக்காக அவரின் பேஸ் வேல்யூ வுக்காக (சொதப்பல் கதை என்றால் கூட ) மக்கள் போய் பார்த்தாங்க. வேற வழி, கடுமையான விமர்சனம் பண்ண முடியாது .

இப்போ பாருங்க ஒரு உச்ச கட்ட நடிகர் படம் சரியில்லைனா கூட ,படம் சுருண்டு விடுது.
இயக்குனர்களை எதிர்பார்த்து நடிகர்கள் செல்லும் காலமே சிறந்த காலம், அந்த வகையில் பார்த்தால் இப்போ பொற்காலம் தான்.

பொற்காலம் சொன்னவுடன் அந்த படம் , பாரதி கண்ணம்மா , ஹவுஸ்புல் , பேர் நியாபகம் இல்லை (முரளி பார்த்திபன் நடித்த வெளிநாட்டில் வேலைக்கு எடுக்கிறேன் என்று ஏமாறும்/ ஏமாற்றும் கும்பலை பற்றிய படம் ) நினைவுக்கு வருகிறது.

பொற்காலம் படம் ஊனம் பற்றி பேசிய கதை தான்.
கதை சொல்லும் போது அதன் சூழல்கள், கதா பாத்திரங்கள் , ஒவ்வொரு ஷாட்ஸ் உம் ஒத்துவர புனையப்பட்ட இழைகள் எல்லாமே பொருந்தி மக்களுக்கு முழு பொழதுபோக்கு கொடுக்க இக்கால படங்கள் சிறந்தவை தாங்க .

சிரிக்க , சமுதாயத்தை பற்றி சிந்திக்க, நம் வாழ்க்கையை ஒப்பிட , தரமற்ற படங்களை விமர்சிக்க , நம்ம ரசனையை மேம்படுத்திய இக்கால படங்கள் தொழில்நுட்பத்தை ஒரு கருவியா வைத்து நம் மண்ணும் , அதன் பழமை சார்ந்த விஷயங்களையும் அனைவரையும் பார்க்க வைக்க கொஞ்சம் புதுமையா யோசிக்க வைக்குது.

இதுல உங்களுக்கு எதாச்சும் சந்தேகம் இருக்கா நடுவர் அவர்களே ??

முதலில்.. அனைத்து தோழிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றும் பூர்ணிமா சங்கருக்கும் எனது பாராட்டுக்கள். எனது கருத்து இக்காலத் திரைப்படங்களை விட அக்காலத் திரைப்படங்களே சிறந்தவை என்ற அணியில் வாதாட உள்ளேன்.. மேலும் எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன். நன்றி.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நடுவர் அவர்களுக்கு வணக்கம். அக்கால மக்களின் ரசனைகளுக்கு அக்கால திரைப்படங்கள் ஒத்துப்போனது. ஆனால் இக்கால மக்களின் ரசனை மாறிவருவதால் திரைப்படங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் மேம்பட்டு படங்கள் நன்கு வருகின்றன். இன்றைய சூழ்நிலைகளை எடுத்துக்காட்டும் விதமாக இக்காலத்து திரைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன. பழைய படம் Gold என்றால் புதிய படங்கள் Diamond . பழைய படமாகிய தங்கத்தை சுத்தம் செய்வது எளிது . ஆனால் இக்கால திரைப்படங்கள் கடின உழைப்புடன் பட்டை தீட்டப்பட்டு வைரங்களாக மக்களின் பார்வைக்கு வருகின்றன. அனைத்து கலைஞர்களுக்கு ரிஸ்க் அதிகம் . எனவே எனது வாதம் இக்கால திரைப்படங்களே .

நட்புடன்
குணா

நடுவர் அவர்களுக்கு வணக்கம். அக்கால மக்களின் ரசனைகளுக்கு அக்கால திரைப்படங்கள் ஒத்துப்போனது. ஆனால் இக்கால மக்களின் ரசனை மாறிவருவதால் திரைப்படங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் மேம்பட்டு படங்கள் நன்கு வருகின்றன். இன்றைய சூழ்நிலைகளை எடுத்துக்காட்டும் விதமாக இக்காலத்து திரைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன. பழைய படம் Gold என்றால் புதிய படங்கள் Diamond . பழைய படமாகிய தங்கத்தை சுத்தம் செய்வது எளிது . ஆனால் இக்கால திரைப்படங்கள் கடின உழைப்புடன் பட்டை தீட்டப்பட்டு வைரங்களாக மக்களின் பார்வைக்கு வருகின்றன. அனைத்து கலைஞர்களுக்கு ரிஸ்க் அதிகம் . எனவே எனது வாதம் இக்கால திரைப்படங்களே .

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்