***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

பதிலடி பார்ட் - 1 நல்லமுறையில் ரிலீஸ் பண்ணிட்டீங்க.அக்கால அணி படித்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

///மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
குத்தம் குறை எல்லாம் ஒரு குண்டுமணி சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழனும் வாழனுமே.........
இந்த பாட்டு தான் இப்போ ட்ரெண்ட்ங்க அந்தகால தோழிகளே இந்த பாட்டு போடாத திருமணங்களே கிடையாது, ///

(நடுவரின் திருமணத்திற்கு வந்தீங்களா.....என் சி.டி.லகூட இந்த பாட்டுதான் இருக்கு.....)

அடடே இவ்வளவு நல்ல படங்கள் வெளிவந்திருக்கா...?மேலும் மேலும் மெருகேற்கிறது உங்கள் வாதத்தில்.....மீண்டும் வாங்க.....

நானும் பார்த்தேன் பிரியா......மிக அருமையான படம்.
///நடிப்பு தான் முக்கியம் என்றால் இது போன்ற சீன்களை தவிர்த்து நடிப்புக்கு முக்கியம் தரும் சீன்களை மட்டுமே நடித்திருக்கலாமே?///
அதானே நடிப்பு மட்டுமே முக்கியம்னா நல்ல சீனை வைக்கவேண்டியதுதானே.........

நீங்களும் ஒரு பட்டியல் தயார் பண்ணிட்டீங்களா? நல்லது,டுடே வேர் இஸ் த பார்ட்டி.நம்ம பட்டில.........

சந்தேகமா இப்போதைக்கு தெளிஞ்சமாதிரி இருக்கு.ஆனா உங்க எதிரணி வந்தா நடுவர் நிலைமை எப்படியோ தெரிலப்பா...............

நீங்களும் அக்காலமா வாதங்களுடன் வாங்க காத்திருக்கேன்.

நீங்க இக்காலமா? சந்தோஷம்,

///பழைய படம் Gold என்றால் புதிய படங்கள் Diamond . பழைய படமாகிய தங்கத்தை சுத்தம் செய்வது எளிது . ஆனால் இக்கால திரைப்படங்கள் கடின உழைப்புடன் பட்டை தீட்டப்பட்டு வைரங்களாக மக்களின் பார்வைக்கு வருகின்றன. அனைத்து கலைஞர்களுக்கு ரிஸ்க் அதிகம் . எனவே எனது வாதம் இக்கால திரைப்படங்களே .//

வந்தவுடனே பஞ்ச்சா.அட்ராசக்கைன்னான......விவான வாதங்களுடன் வாங்க....

பட்டிமன்றத்தில் மறுபடியும் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அக்காலத்திரைப்படங்களின் பாடல்களில் இசை, ஒளிப்பதிவு நன்றாக தான் இருக்கும்.ஆனாலும் படத்தின் பிண்ணனி இசை முக்கியத்துவம் இருந்தது இல்லை. ஆனால் இக்கால திரைப்படங்களில் ஹீரோ இன்ட்ரோ மற்றும் ஹீரோயின் இன்ட்ரோ , வில்லன் இன்ட்ரோ , காதல் ப்ரபோஸ் பண்ணும் போது வரும் வரும் பிண்ணனி இசை மிக நன்றாக மெய்சிலிர்க்கும்படி இருக்கும். இக்கால திரைப்படத்தின் ஒளிப்பதிவு நவீன கேமராக்களால் பல கோணங்களில் கடினமான மலைகளில் கூட காட்சிஅமைப்புகளை மிக தத்ரூபமாக காட்டமுடிகிறது. எனவே மீண்டும் இக்காலத்திரைப்படங்களே சிறந்தவை என்பது மீண்டும் எனது வாதம் நடுவர் அவர்களே

நட்புடன்
குணா

//இந்தியன் படம் லஞ்சத்தை பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்கள் மனதில் உண்டு பண்ண தான். அதை ஒழிக்க வேண்டியது அரசாங்கத்தின் வேலை.// விழிப்புணர்வு தான் வந்ததா? நாங்க வீடு அப்ரூவல், தண்ணீர் பைப் கனெக்சன், கரண்ட் கனக்சனுக்குனு எத்தனை கொடுத்தோம் தெரியுமா? (போலீஸ்ல சொல்லிட மாட்டீங்களே, போலீஸ் கூட வாங்குச்சு) வேற வழி எங்களுக்கு இல்லை அந்த சமயத்துல..... சினிமாவால எதையும் மாத்த முடியாது...

//அந்த காலத்திலும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் நடிச்ச ரெட்டை அர்த்த பாடல்கள், ஆபாச ஆடைகள்னு வந்த படங்களை குடும்பத்தோடு உக்கார்ந்து பார்க்க முடிஞ்சதா?// ஒண்ணு ரெண்டு தான் அப்போ வந்து இருக்கும்... இப்பொ எல்லா படமுமே அப்படிதானுங்களே இருக்கு.... முதல் படத்துல ஒழுங்கா சேலை கட்டிட்டு வர்ற ஹீரோயின்ஸ் அப்புறம் போடுராங்களே ட்ரஸ்... ஐயோ ஐயோ (எ.கா. சதா, நயன் தாரா, சிம்ரன், அசின் இன்னும் பல பேர்... ) சுவலட்சுமினு ஒரு நடிகை இருந்தாங்க... கவர்ச்சி காட்டாதனால நல்ல நடிகையா இருந்தா கூட காணாம போய்ட்டாங்க.... சில படங்களுக்கு அப்புறம் நடிகைகளே அறிக்கை விடுறாங்களாம் கவர்ச்சிக்கு தயார்னு இதுக்கு என்ன சொல்றீங்க நடுவரே?

// வேறு மாநிலத்தில் இருந்து வந்த நாயகிகள் ஏதோ தமிழ் கத்துக்கணும் நு ஆசைப்பட்டு கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டு பேசறாங்க... இதுல சண்டோஷபடுறதை விட்டுபுட்டு குறை சொல்லிக்கிட்டு இருக்காங்க நம்ம அந்த கால அணிகாரங்க.// வேறு மாநில நடிகைகள் ஓகேங்க... நம்ம தமிழ் நடிகைகள் ஏங்க தமிழை கொன்னு எடுக்கிறாங்க... தமிழை தப்பு தப்பா பேசுறதுல அவ்வளவு சந்தோசம்... ம்ம்ம் கலிகாலம் நடுவரே...

இன்னும் ஒன்று இப்பொ புதுசா ஒன்னு கிளம்பி இருக்கு நடிகைகளை பார்த்துட்டு ஜீரோ சைஸ் இடுப்பு வேணும்னு சாப்பிடாம கொள்ளாம இருக்காங்களாம் பருவ பொண்ணுகள்... இக்கால சினிமா எப்படி எல்லாம் கஷ்டபடுத்துனு பாருங்க நடுவரே......
//இந்தகாலத்தில் இந்த பெயர்களை தான் சொல்லுவாங்க.// இவங்க சொல்ற இந்த நடிகர்களுக்கெல்லாம் அந்த கால நடிகர்கள் தானே ரோல்மாடல்.... அத எதிரணி ஒத்துகிட்டே ஆகணும்....

// டிவி ல செய்திவாசிகரவங்க எப்பவும் சேலைல தான வராங்க ... ஆனா எத்தனை பேரு உக்கார்ந்து ஒழுங்கா செய்தி பாக்குறாங்க... உங்களையெல்லாம் ஒரு டிவி ஷோ பார்க்க வைக்க அவங்க எவ்ளோ பண்ணவேண்டியிருக்கு... அப்ப சினிமா சொல்லவே வேண்ட..// அவங்க ஒழுங்கா சேலை கட்டிட்டு வந்தா கூட ப்ரோகிராம் நல்லா இல்லைனா யாரும் சீண்டக்கூட மாட்டாங்க... எல்லாம் சினிமாவை பார்த்துதான் காம்பியர்ஸும் அதே மாதிரி பண்றாங்க...

// நடுவரே, இப்ப எல்லாம் பொண்ணுங்க ராகேட்ல போற காலம் வந்திருச்சு, அதுல என்ன தழைய தழைய புடவை கட்டிட்டா போக முடியும். காலத்துக்கு எத்த மாதிரி மாறி தான் ஆகணும்.// ராக்கெட்ல போற பொன்னுங்க புடவை கட்ட வேண்டாம்....மாற்றம் மாற்றம்னு சொல்லி மணமேடையில் ஜீன்ஸ் போடாம இருந்தா போதும்... சினிமா போற போக்கை பார்த்தால் இனி அதுவும் காட்டிடுவாங்க.... ஏற்கனவே பொண்ணு பாக்க போறதுங்கிறதை காமெடி சீனு ஆக்கிட்டாங்க...

// ஆண்கள் சேலை அணியும் பெண்களை விட சுடிதார் அணியர பெண்களை தான் விரும்பறாங்க..//சுடிதார் அணியற பெண்கள் கூட தாலி கட்டுற நேரத்தில் சேலையில் தான் இருக்கணும்னு தான் மாப்பிள்ளைகள் விரும்புவாங்க.....

// அந்த கால படங்கள் தான் பிடிக்கும் அது தான் சிறந்ததுனுட்டு டெய்லி ஒரு பழைய படம் பார்த்து ரசிச்சுட்டு இருக்கீங்களா இல்லையே, இந்த கால படங்களை பார்த்துகிட்டு தானே இருக்கீங்க.// நிச்சயமாக...மதிய நேரத்தில் பழைய படங்கள் பார்க்கும் சுகமே சுகம்.....
//இந்த படத்தை எல்லாம் அந்தகாலம்னு பேசிகிட்டு இருக்கற தோழிகள் பார்த்ததே இல்ல?// இதை எல்லாம் நாங்க நல்ல படங்கள் இல்லைனு சொல்லவே இல்லை... கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை படங்கள் வந்து இருக்கும் அதில் மொத்தமே இவ்வளவு தான் நல்ல படங்கள்(நீங்க சொல்லாம விட்ட சில படங்களையும் சேர்த்து)... ஆனா இத்தனை நல்ல படங்களையும் தந்த இயக்குனர்கள் ஏன் அடுத்தக்கட்டதுக்கு போகல... இதை விட மோசமாதானுங்க இப்ப படங்கள் வருது.... கோரிப்பளையம்னு ஒரு படம் அதில் ஹீரோ எல்லருமே ரவுடிகள் அதில் ஒருத்தரை ஒருத்தர் கொன்னுக்குவாங்களாம்..... எதற்கு இப்படி எல்லாம் படம் எடுக்கணும்னு தான் கேக்குறொம்?

//இந்த காலம் படங்கள் தரமானவை இல்லன்னா மக்கள் யாரும் த்யேட்டருக்கு வரவே மாட்டாங்க, இன்னக்கும் த்யேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் போகுது, மக்கள் கூட்டம் கூட்டமாக த்யேட்டருக்கு வந்துக் கொண்டு தான் இருக்காங்க.// எத்தனை நாள் வருவாங்க தெரியுமா அதிக பட்சம் ரெண்டே நாள் தான் அதுக்கு அப்புறம் தியேட்டர்கள் எல்லாம் ஈ தான் ஓடுது... (எங்க ஊரில் எல்லாம் அப்படிதான்ப்பா நடக்குது... புது படத்துக்கு போலாம்னு கிளம்பினா ஒரு வாரம் ஆகட்டு கூட்டமே இருக்காதுனு தான் பேசிக்குவோம்) ஆனா அக்காலத்தில் அப்படி இல்லை ரொம்ப நாள் ஹவுஸ்புல்லா ஓடின படங்கள் நிறைய இருக்கு......

ரொம்ப பெரிசா போச்சு அது தான் மறுபடியும் நானே.....

//சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த - செந்தில், கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம்// இவங்களால வந்த சிந்தனைகளை விட கெட்ட வார்த்தைகள் தான் ஏராளம் என்பது நடுவருக்கே தெரியும்........
இவ்வளவு பட்டியல் போட்டாங்களே இவர்களை மனதில் பதிவதால் என்ன பயன்... நம் நாட்டுக்காக உயிரை துறந்த மகான்கள் வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், தியாகி திருப்பூர் குமரன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தமிழ் தொண்டாற்றிய பாரதியார், இவர்களை எல்லாம் மனதில் பதிய செய்தது அக்காலமே..... இத்தனை பட்டியல் போட்டவர்கள் பாரதியாக நடித்த சாயாஜி சிண்டேவையும், பெரியாராக நடித்த சத்யராஜையும் மறந்து விட்டனர் அதுதாங்க இந்த கால சினிமா.......
//திறமை உள்ளவனால மட்டும் தான் இங்க பொழைக்க முடியும் அதா புரிஞ்சுகோங்க...// திறமை உள்ள நடிகர்கள் மட்டும்தான்... மத்தவங்க எல்லாம் எத்தனை திறமை இருந்தாலும் ஓரம்கட்டி சீரியலுக்கு அனுப்பிடுவாங்க.......

//இப்ப எங்க பார்ட்டி நாலும் அவரோட வேர் இஸ் தா பார்ட்டி தான் பிரபலம்.// தமிழை கொலை செய்யும் பாட்டு பிரபலம்.... இது தமிழுக்கு செய்யும் துரோகம் இல்லையா .......
// ஏதோ சில படங்கள் அப்படி இப்படி நு இருக்கு... இதுகேல்லமா அவர் மேல கோவப்படுவாங்க.... கூல் டவுன்// இதுக்கு கோவப்படாம வேற எதுக்கு கோவப்படணும்னு சொல்றாங்க... சில படங்களா எல்லாமே அப்படித்தான்...

// சண்டைனு வந்தாலே வன்முறைனால் அந்த காலத்தில் வாளெடுத்து, கத்தி எடுத்து சண்ட போட்டதை என்ன சொல்றதுங்க?//சண்டை வேற வன்முறை வேற.... பஸ் டேனு மாணவர்கள் கூத்தடிச்சதெல்லாம் எதனால் வந்தது...? சினிமாவை பார்த்துதான் ரோட்டுக்கு வந்து காலேஜ் பசங்க அடிச்சிக்கிறாங்க......

//ஆனா இப்ப எல்லாம் எங்க பங்க்சன்னாலும் கச்செரினாலும் நம்ம மக்கள் அதும் லேட்டஸ்டா வந்த பாட்டை தானே போடா சொல்லுறாங்க...// ஆமாங்க கல்யாண வீட்டில் போய் அடிடா அவள, எவண்டி உன்ன பெத்தான் நடுரோட்டுல செத்தானு பாடினா ரொம்ப நல்லா இருக்கும்......
// கரகாட்டக்காரன் காமெடிய இன்னும் மறக்க முடியுமோ ?// கரகாட்டக்காரன் காமெடியை தான் சொல்றீங்க இப்ப வந்தது எதுவுமே சொல்லிக்கிற மாதிரி இல்லைனு உங்களுக்கே தெரிஞ்சுடுச்சு......
//மாரல் ச்டோரிஸ் மாதிரி தான் படங்கள் இருக்கணும் என்றால் இங்கே படங்களே ஓடாது// மாரல் ஸ்டோரிஸ் வேண்டாம்பா... மாரலை கெடுக்கற ஸ்டோரீஸ் தான் வேண்டாம்ங்கிறோம்.......... ஆனா அது தானெ நிறைய வருது......

//பழைய படம் Gold என்றால் புதிய படங்கள் Diamond .//நல்ல டைமன்ட் என்பது அரிது தான் ஏன்னா அதிலேயே தோஷம்னு பல இருக்கே..... அது போல தான் இன்றைய படங்களும் நல்லவை என்பது அரிது தான் ஆனா கோல்ட் தான் எல்லாராலையும் விரும்பி வாங்கபடுது... பழைய படங்களும் அப்படித்தாம் எல்லாராலையும் விரும்ப படுது...

// இக்கால திரைப்படத்தின் ஒளிப்பதிவு நவீன கேமராக்களால் பல கோணங்களில் கடினமான மலைகளில் கூட காட்சிஅமைப்புகளை மிக தத்ரூபமாக காட்டமுடிகிறது.//நெருக்கமான காட்சிகளை கூட தத்ரூபமா காட்டுறேங்கர பேர்ல பார்க்கர நம்மள நெளிய வைக்கிறது தான் இக்கால படங்கள்... அக்காலத்தில், முத்த, முதலிரவு காட்சிகளை இங்கிதமா கேமராவை வேறு பக்கம் திருப்பி இலை மறை காயா சொல்வாங்க... (சிட்டுக்குருவி பாட்டும் பார்த்திருப்பீங்க, இப்ப வந்த பம்பரகண்ணாலே பாட்டும் பாத்திருப்பீங்க தானே)

இன்னைக்கு பூஜைக்கு வந்த மலர் படத்தில் ஒரு பாட்டு "கையேந்தும் மலராக" அதில் குத்துவிளக்கு, மலர் மாலைனு எல்லாத்தையும் செட்டா போட்டு எடுத்திருப்பாங்க அப்படியே மனசில் இப்பவரைக்கும் நிக்குது... இதில் எல்லாம் கடின உழைப்பு இல்லையா...... அதே போல டெலிபோன், நிலா, இசைக்கருவிகள்னு பல பொருட்களை பிரம்மாண்டமா அமைச்ச படங்கள் அக்காலத்தில் இருந்தன நடுவர் அவர்களே.........

காலையில் மீண்டும் சந்திப்போம்

மேலும் சில பதிவுகள்