***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

ராஜ்பாட் ரங்கதுறை, பில்லா, திருவருட்செல்வர், காகதலிக்க நேரமில்லை, பல பக்தி படங்கள் எல்லாம் வந்து வெற்றி கொடி கட்டியது ஈஸ்ட்மன் கலரில் தாங்க நடுவரே... :)

காரு, குதிரை, பைக்ன்னு எல்லாம் நின்ன இடத்துலையே சண்டை நடந்தது தெரிஞ்சாலும் பரவாயில்லைங்க... இன்னைக்கு உண்மையா நடக்கும்படி தெஇர்யனும்னு கண்ணுக்கு தெரியாம பல உயிர்கள் போகுதுங்க. எத்தனை படத்துல கோழி, ஆடு, மாடு, குதிரை சாகுது... வெளிய வராது. அவ்வளவு ஏன் எத்தனையோ ஸ்டண்ட் மாஸ்டர்ஸ், டூப்புங்க கை, கால் போய் உயிர் போய் இருக்கு... வெளிய வரலன்னு அதெல்லாம் நடக்கலன்னு அர்த்தமில்லை. ஒரு படம் எடுத்து காசு சம்பாதிக்க அடுத்தவன் சாகனுமா??? இது தான் இன்னைக்கு சினிமா.

//மேக்கப் பொருந்தியிருக்காது. இப்ப இருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைவிட 60 டூ 70 களில் வந்த படங்களில் தான் அதிக முகம் சுளிக்கவைக்கும் ரேப் காட்சி, கிளப் காபரே டான்ஸ், ஆபாச வசனம் போன்றவை அதிகமா இருந்தது.// - கமல் நடிச்ச தசாவதாரம் மேக்கப் சூப்பரோ??? இதுக்கு வெளிநாட்டுல இருந்து வேற வர வெச்சாங்களாம் ;) இந்த கேப்ரே டான்ஸுக்குலாம் இப்போ ஆள் தேவையே இல்லை நடுவரே... ஹீரோயின் எல்லா பாட்டுக்குமே அப்படி தான் ஆடுறாங்க... அப்பவாது ஏதோ ஒரு பாட்டு ஒரு படத்தில். இப்போ படமே அப்படி தானே இருக்கு. கந்தசாமி படம் பாட்டு எப்புடி??? விஜய் நடிச்ச டாடி மம்மி வீட்டில் இல்ல??? பில்லா புது வெர்ஷன்?? எதுல கம்மி??? ஈசன்?? மிருகம்?? அரவான்?? ஆயிரத்தில் ஒருவன்?? எல்லா படமும் இந்த லிஸ்ட்ல வந்துரும் தானே??? ஒரே வித்தியாசம் தான் நடுவரே... அப்போ அதுக்குன்னு கவர்ச்சி நடிகை இருந்தாங்க, ஒரே பாட்டோட போனாங்க... இப்போ ஹீரோயினே ஆடுறாங்க, எல்லா பாட்டும் அப்படியே இருக்கு. அவ்வளவு தான். உண்மையில் அதிகமாதான் ஆயிருக்கு.

//மேக்கப் இல்லாம திரையில தோன்றவே மாட்டாங்க.// - இப்ப உங்களை மாதிரி ஆட்களை ஏமாற்ற தான் கேஷுவல் லுக் மேக்கப் போடுறாங்க. சின்ன இண்டெர்வியூக்கு டிவி ஷோ வந்தாலே மேக்கப் இல்லாம வர மாட்டாங்க நடிகர்கள். இன்று தான் சொல்றேன்.

அப்போ குறத்தி மகன்னு ஒரு படம் வந்துச்சே... அதுலையும் கே ஆர் விஜயா அதே சுத்த தமிழ் தான் பேசினாங்களா??? நவராத்திரியில் ஒவ்வொரு சிவாஜி கேரக்டரும் ஒரே மாதிரி தான் வசனம் பேசினாங்களா?? எனக்கு புரியல நடுவரே... கேட்டு சொல்லுங்கோ..

//இன்றைய சினிமாவில் இருக்கும் மிகபெரிய சாதனையே அதில் இருக்கும் எதார்த்தம்// - அப்போ இன்னைக்கு லவ் பண்ற எல்லாரும் பாட்டு பாடி டூயட் பாடுறோமா??? இல்ல பாட்டுக்கு ஒரு வெளிநாட்டு லொக்கேஷன் போயிட்டு வரோமா??? எதை எதார்த்தம்னு சொல்றாங்க எதிர் அணி??? இதுவும் புரியல... இல்ல நம்ம கிட்ட யாராவது வம்பிழுத்தா நம்ம காதலனோ, கணவனோ பறந்து பறந்து அடிச்சு பட்டய கிளப்புவாங்களா???

//இன்றைய சினிமாவில் இருக்கும் மிகபெரிய சாதனையே அதில் இருக்கும் எதார்த்தம்// - டெக்னாலஜி வளராம இருந்திருந்தா இன்னைக்கு சினிமா இப்படி தான் இருந்திருக்கும். அது வளர்ந்ததால் சினிமாவில் இதெல்லாம் வந்ததே தவிற, இன்றைய தமிழ் சினிமா அதை வளர்க்கலன்றதை புரிஞ்சுக்கங்க. எவனோ வெள்ளைக்காறன் அவன் படத்துல பயன்படுத்த கண்டு பிடிச்சதை பல வருடம் கழித்து நம்ம தமிழ் சினிமாவில் பயன்படுத்தறாங்க...

ஆமாம்... இன்னைக்கு நம்ம தமிழ் சினிமா பற்றி பேசுறோமா இல்ல ஆங்கில படம் பற்றியும் பேசுறோமா??? இல்ல... ஸ்பைடர் மேன்லாம் நம்ம ஊர் படமில்லையே அதான் கேட்டேன் நடுவரே. ஆனா ஒன்னு நடுவரே... ஒரு காலத்துல எங்க அம்மா ஹிந்தி படம் அசிங்கமா இருக்கும், இங்கிலிஷ் படம் அசிங்கமா இருன்க்கும்னு எங்களை எல்லாம் பார்க்க விட்டதே இல்லை... இப்போ படம் பார்க்க அராம்பிச்ச பிறகு தான் தெரியுது... அவனெல்லாம் தேவல... நம்ம தமிழ் சினிமா தான் ரொம்ப மட்டமா போகுதுன்னு :) அவன் ஸைன்ஸயாது காட்டுறான்... இவனுங்க... இன்னுமே ஹீரோ பேஸ் மூவீஸ் தான் எடுக்கறாங்க... 60 வயசில் ஒரு கிழவனே ஹீரோவா 25 வயசு பொண்ணுகூட நடிச்சாலும் நம்ம ஆளுங்க கை தட்டுவாங்க. பொண்ணுங்கன்னா அவ்வளவு மட்டம் நம்ம தமிழ் சினிமாவில். இந்த ஒரு ஆட்டிடியூடுக்காகவே இன்றைய சினிமாவை வெறுக்கனும் போலிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//விழிப்புணர்வு தான் வந்ததா? நாங்க வீடு அப்ரூவல், தண்ணீர் பைப் கனெக்சன், கரண்ட் கனக்சனுக்குனு எத்தனை கொடுத்தோம் தெரியுமா? (போலீஸ்ல சொல்லிட மாட்டீங்களே, போலீஸ் கூட வாங்குச்சு) வேற வழி எங்களுக்கு இல்லை அந்த சமயத்துல..... சினிமாவால எதையும் மாத்த முடியாது...//

அதானே அந்த கால படம் பார்த்தும் நீங்க திருந்தலை , இப்போ உள்ள படம் பார்த்தும் எதையும் தட்டி கேட்க யோசிக்கறீங்க , என்ன தான் சொல்ல வரீங்க.??
எதுக்காக கொடுக்கணும் லஞ்சம, விட்டா லஞ்சமே சினிமாவுல சொல்லிகொடுத்தாங்க அப்படின்னு போட்டு கவுத்திருவீகளோ ;-((சினிமாவால எதையும் மாத்த முடியாது,

நோட் திஸ் பாயின்ட் யுவர ஆனர். அதை தாங்க நாங்க சொல்றோம். இப்போ நீங்க கூட மாரிட்டீங்க :-(( பிம்பிளிக்கா பிலாபி

//சுவலட்சுமினு ஒரு நடிகை இருந்தாங்க... கவர்ச்சி காட்டாதனால நல்ல நடிகையா இருந்தா கூட காணாம போய்ட்டாங்க.... சில படங்களுக்கு அப்புறம் நடிகைகளே அறிக்கை விடுறாங்களாம் கவர்ச்சிக்கு தயார்னு இதுக்கு என்ன சொல்றீங்க நடுவரே?//

என்ன இது தேவயானி, ரேவதி ,இவங்க எல்லாம் இல்லையா ? ஏதோ அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி அந்த வேலையில் மூழ்கிட்டா நீங்க எப்படிங்க கானா போனவர்களின் பட்டியலில் போடலாம், இப்பவும் ஆசை கோகுலத்தில் சீதை படம் மூலமா நம் வீட்டு ஹாலுக்கு வராங்க தானே ?? தேவயானி சினிமா மூலம் அடைந்த புகழை அப்படியே டி வி மூலமா தக்க வைச்சுகிட்டாங்க . என்ன சொன்னாலும் அடிப்படை அவங்களுக்கு சினிமா தானே .

// வேறு மாநில நடிகைகள் ஓகேங்க... நம்ம தமிழ் நடிகைகள் ஏங்க தமிழை கொன்னு எடுக்கிறாங்க... தமிழை தப்பு தப்பா பேசுறதுல அவ்வளவு சந்தோசம்... ம்ம்ம் கலிகாலம் நடுவரே...//

நாமும் போய் வேறு மொழியில் நடித்தால் தப்பு தப்பாக தான் பேசுவோம்., பேசும் ஆங்கிலத்தில் கூட கிராமடிகள் மிஸ்டேக் வரதில்லையா ? ஆங்கில மீடியத்தில் படித்து இவ்ளோ தமிழ் பேசுவதே பெரிய விஷயம் தானே !! கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆர்வமாவது இருக்கே, அதை சொல்லுங்க, நம்ம குழந்தைக்கு நாம் தமிழ் மொழியை கற்றுகொள்ள தூண்ட வேண்டும், ஏதோ ஒருவர் எதிரணியில் சொன்னால் போதாது.மாநகராட்சி பள்ளி எந்த குறையும் இல்லாத போது ஏன் எல்லாரும் ஆங்கில பள்ளிகளுக்கு படைஎடுக்கிறோம் ?? தூய தமிழில் பேசும் மக்கள் இன்றும் இருக்க தான் செய்கிறார்கள். அந்த அந்த வட்டார வழக்கு தமிழும் அழகு தான்.

//சுடிதார் அணியற பெண்கள் கூட தாலி கட்டுற நேரத்தில் சேலையில் தான் இருக்கணும்னு தான் மாப்பிள்ளைகள் விரும்புவாங்க....//.

ஏன்பா ஏன் விரும்பணும்/// அவங்க மட்டும் வேட்டியை மறந்துடுவாங்க , நாம் சுடிதார் போட்டு மணமேடையில நிக்க கூடாதா என்ன, வேறொரு மதத்தில் லாங்கவுன் போட்டு மோதிரம் மாற்றுகிரார்களே ? என்ன குறைந்து விட்டது , அன்பை பரிமாரிக்கொள்ளவே திருமணம், என்ன உடை என்பதில் இல்லை.

//அக்காலத்தில் அப்படி இல்லை ரொம்ப நாள் ஹவுஸ்புல்லா ஓடின படங்கள் நிறைய இருக்கு......//

இனிமே இது சாத்தியமே இல்லை தான். ஒரே படத்தை மாலின் 20 அரங்கிலும் அடுத்தடுத்த நிமிஷம் வெளியிடறாங்க, எத்தனை மக்கள் பார்த்தாங்க என்பது தான் பேசணும், எத்தனை நாள் என்பது போச்சு (ஒரு வார கலெக்ஷன் நூறு நாளுக்கு சமம ), இன்னும் நம்ம லெட்டரை விட்டு ஈ மெயில் யூஸ் பண்றோம் , போஸ்ட் தான் சிறந்தது என்று சொல்வீங்களா என்ன இல்லை எல்லாரையும் மாற்ற முடியுமா / அம்மிக்கல் போய் மிக்சி வந்தாச்சு , அதை ஒத்துகிடுவோம், போட்டோ எடுத்து அனுப்ப கூட இப்போ போனை யூஸ் பண்ணி நம்ம பெருமை படுத்திக்கிறோம் . பத்து மாடி ஏற லிப்ட் யூஸ் பன்றாபுல நம்ம சினிமா ,மேல்நாட்டு பாணியை நிறைய விஷயத்துல பின்பற்ற ஆரம்பிச்சது உண்மை தாங்க. ஆணா நம் வேர்களை மறக்காம இருக்க தான் இங்கே உள்ள கதைகளை சொல்றாங்க.

இன்னும் படங்கள் எடுத்து நேரடியா டி வி இல ரிலீஸ் பண்ண போறாங்க பாருங்க .

//ஆனால் இப்பொழுது வரும் படங்கள் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை சீர்கெடுப்பதாகவே உள்ளது. இப்பொழுது வரும் படங்கள் பத்தில் ஒன்று உறுப்படியாக உள்ளது. ஆனால் அக்காலத்தில் பத்து வந்தால் பத்துமே பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்தது..//

படங்கள் கெடுக்கல நடுவரே , சமுதாயத்தை அப்படியே படம் போட்டு காட்டறாங்க. அக்காலத்தில்; பத்து படம் வந்தாலும் வேற எதுவும் பொழுதுபோக்கு இல்லாததால் எல்லா படத்துக்கும் போவாங்க, அதனால் எல்லாம் சொக்க தங்கம் ஆகிவிடுமா ?

கல் வைரக்கல்லா இல்லை தங்கப்புதையலா , அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஏன் ஆத்தோரம் இருக்கும் கூழாங்கல் கூட அழகு தாங்க.

ஆலோசனை, எனக்கு பதில் சொல்லுங்க இப்படி பத்திரிகைகளில் கொடுமை படுத்தும் கணவரை பற்றி வருவதில்லையா , ஈரம படம் பார்த்து இருப்பீங்க தானே , சைலேன்ட் கில்லர் மாதிரி அந்த அடாவடி ஹீரோ போல் நிஜத்தில் சில பேர் இருக்க தானே செய்யறாங்க. இந்த படத்தை பார்த்து தான் சமுதாயம் கெட்டு போச்சா ?

பலரின் உண்மை வாழ்க்கையை கொஞ்சம் பூசி (பாடல்கள் நம் நாட்டில் ஊறிய விஷயம் ) கொடுக்கறாங்க நம் இயக்குனர்கள் .நிஜத்தை மட்டுமே தான் கொடுக்க வேண்டும் என்றால் சொந்த கதையை தான் சொல்லணும்.

அடுத்த பட்டாச போட்டாச்சா ஜென்னி....எங்களை போன்ற மக்களின் ரசனையை கீழ்தரமா யோசிக்காதீங்கன்னு சொல்றாங்க இது தப்பா......சிந்தனை செய்யுங்க்க இக்காலமே..
///நாங்க என்ன சொல்றோம், மக்களின் ரசனைய ரொம்ப கீழ்த்தரமா நினைத்து படம் எடுக்காதீங்க. பெண்களுக்கு நல்ல ஆடை கொடுங்க. எல்லாம் ஒரு வரம்புக்குள் காட்டுங்க. ///

. 60 வயசில் ஒரு கிழவனே ஹீரோவா 25 வயசு பொண்ணுகூட நடிச்சாலும் நம்ம ஆளுங்க கை தட்டுவாங்க. பொண்ணுங்கன்னா அவ்வளவு மட்டம் நம்ம தமிழ் சினிமாவில். இந்த ஒரு ஆட்டிடியூடுக்காகவே இன்றைய சினிமாவை வெறுக்கனும் போலிருக்கு.//

இதச்சொல்லுங்க, பெண்ணை கீழ்த்தரமா காட்ட அந்த பெண்ணே ஒத்துக்குதே ,அவங்க ஹீரோஸ் இன்னும் வயதானா கூட சேர்ந்து நடிக்க தயார் என்கிறார்களே, இது இப்போ மட்டும் இல்லை அக்காலத்திலும் இருந்தது. அக்கால நடிகர்களும் குறைந்த வயது உள்ள நடிகையோடு சேர்ந்து நடிச்சிருக்காங்க. லக்ஷ்மி, மஞ்சுளா இவங்க கூட எம் ஜி ஆர நடிக்கலையா என்ன ? இப்போ மேக் அப மூலம் நம்மையே வயது குறைவா காட்ட விரும்பறோம், தொழிலே ஒப்பனை பூசுவது தான் நடிகை நடிகர்களுக்கு , அவங்க விரும்புவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை .

60 வயது பாட்டி தாத்தா கூட தலைக்கு டை இல்லாமல் ரூமை விட்டு வெளியில வர மாட்டேங்குறாங்க, பேத்தியை பாட்டின்னு கூப்பிடாதே , அப்படின்றாங்க. வயது குறைவா தன்னை காட்டனும் என்பது இயற்கையா எல்லாருக்கும் இருக்கும் எண்ணம தான்.

பெண்களை இழிவுபடுத்துவது ஆண்களின் சினிமா உலகம் என்றால், அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொள்ளும் பெண்ணையும் சேர்த்து தான் சொல்லணும், நாம் பீல் பண்ணுவது போல் அவங்க பீல் பண்ணுவது இல்லை.

ஆடைகளும் அவிழ்ந்து விடுகிரார்போல போட சினிமா உலகம் கற்று தந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் நல்லபடியா சொல்ல வேண்டாமா ? ஐ டி காரிடாரில் நடக்க சினிமா நடிகைகள் தோத்து விடுவாங்க போங்க.

இந்த ஆடை கலாச்சாரம் எப்படி வருது??? எங்க இருந்து நாம ஆடைகள் தேர்வு செய்யறோம்??? ஒரு படம் வந்தா அதை பார்த்து இது நல்லா இருக்கு, அது நல்லா இருக்கு, அந்த ஹீரோயின் பெயர் போட்ட சேலை, சுடிதார் என்று எல்லாம் வருது. உண்மை சொல்லுங்க... மார்கெட்டில் வந்த பின் ஆடைகள் சினிமாவில் வருதா, இல்ல சினிமாவில் வந்த பின் மார்க்கெட்டில் வருதா??? எது முதல்ல???

அப்போ தெரியும் சினிமா உள்லதை காட்டுதா, இல்ல காட்டி கெடுக்குதான்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வனிதா,
உங்களின் அடுத்தகட்ட வாதத்தை சமர்பித்தாயிற்றா? உங்கள் எதிரணியின் பதிலையும் கேட்டிடுவோம்.....

பிஸ்கோத்து கொடுத்துட்டீங்களே உதிரா.... மக்கள் அதிகமாகிட்டாங்க. அன்று 100நாள் ஓடி வந்த கலக்சன் இன்று 10நாள்ல கிடைச்சுடுது அத்தனை மக்கள் வந்து பார்கின்றனர்னு சொல்றாங்க இக்கால அணி.......

பட்டியில் வாதிடுபவர்கள் ஆர்வமிகுதியில் விதிகளை மறந்துவிடக்கூடாது,
பெயர் சொல்லி வாதிடுதல்,சாதி,மதம்,அரசியல் சார்ந்து பேசுதல்.இவையெல்லாம் கூடாது.தோழிகள் விதிகளை நினைவில் கொண்டு வாதிடுங்கள்.

பட்டி இப்பதான் நிஜமாவே கலைகட்டுது போல,
சிறந்தது எதுன்னு அடிச்சு பாத்தாதான தெரியும்...ஆனா ஒன்னு இரு அணிகளும் மோதி மன்றாம் ஒன்றுமாகாமல் இருக்கனும். அப்பதான் பட்டி தீர்ப்பு வெளியாகும்..தொடரட்டும் உங்கள் வாதயுத்தங்கள்.......

மேலும் சில பதிவுகள்