***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

என்னப்பா , கருப்பு வெள்ளை இல்ல கலர் படங்கள்னு எடுக்த்துக்கலாமா ?
70 க்கு பின் இக்காலம் நு எடுத்து வாதம் பண்ணலாம் தானே ,

ஏன்னா இக்காலம்னுட்டு இப்போ 10 வருஷம் மட்டும் கண்சிடர் பண்ணினா எப்படி ? அப்படியே சரியில்லாத பாடல்கள்/ படங்கள் இப்போ வந்தா கூட (எதிரணி சொல்றாப்புல அது ரொம்ப நாள் போவாது , நிறைய படங்கள் கடந்த ஆண்டில் தான் ரிலீஸ் ஆச்சு . அதுல எதுவுமே சரியில்லைன்னு சொல்லமுடியாது. ).

வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் போது , அவரவர் எண்ணங்கள் வேறுபடும் தான். சினிமா உலகமே இப்போ கார்பரேட் ஆகி , ஒரு வேளை ரெண்டு படத்துக்கு மேல கொடுக்க முடியலைன்னா கூட , அடுத்த வேலையை பார்த்துக்கொள்ள முடியுதே, இதிலென்ன தப்பு. ஓஹோ என்று படம் எடுத்த இயக்குனர்கள் கூட, ஒரு தோல்வியினால் நடுத்தெருவுக்கு வந்த அந்தக் காலத்தில் அவர்கள் குடும்பம் அடைந்த கஷ்டங்களை சொல்லி முடியாது.

சினிமா என்பது ஒரு தொழில் என்பதை மீறி, ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பது தான் சரியானது. அதுவும் ஒரு மீடியா தான் .

வன்முறைகளும் ஆபாசங்களும் ஆங்கில படத்தில் இல்லையா என்ன, தமிழில் இப்போ நேரடி ரிலீஸ் அதுவும் தான் சக்கை போடு போடுது. டி வி இல குடும்பமே , டப்பிங் படத்தை பார்த்து என்ஜாய் பண்றாங்க.

சமீபத்துல கர்ணன் படம் ரிலீஸ் பண்ணியப்ப , நடிகர் திலகத்தின் மகன் , சொன்னது " அப்பாக்கு எப்பவுமே ஒரு குறை உண்டு. தினமும், ஆங்கில படங்கள் பார்த்து, இதை போல என்னை வைத்து எடுக்க இயக்குனர்கள் கிடைக்கவில்லை,. நடிப்பு என்பது இப்படி தான் என்பதற்கு ஒரு இலக்கணம் எல்லாம் இல்லை . மக்களின் வாழ்வை பிரதிபலிப்பது கூட நடிப்பு தான் . எனக்கு அவ்வாறு கொடுக்கவே முதலில் இயக்குனர்கள் தயங்குகிறார்கள், ஏனெனில் மக்கள் விரும்பமடாங்க என்று இவங்களே ஒரு வட்டம் போட்டுடறாங்க . பேரலேல் சினிமாவில் நடிக்க ரொம்ப விருப்பம் உள்ளது , அட்லீஸ்ட் பார்த்து ரசிச்சிக்கிறேன் " என்று சொல்லி வருத்தப்படுவராம் .

எப்பவுமே நல்ல விஷயங்கள் மட்டுமே கொண்ட சினிமாக்கள் இருந்த காலத்தில் (எதிரணி சொல்வது போல ) ஏகப்பட்ட பேர் சினிமா ரசிகர்கள் ஆங்கில படம் ரிலீசாகும் (மொழியே புரியாவிட்டாலும் ) திஎட்ட்டருக்கு போனதை பத்தி நிறைய பேட்டிகளில் கேட்டிருக்கோம். அவங்க எல்லாம் கெட்டு போயிட்டாங்களா என்ன ?
நல்ல டேக்னிக்ஸ், எதிலேந்து கத்துக்கிட்டா என்ன,?
சில பல மாற்றங்களோட அக்கால சினிமாவை அடிப்படையா வைத்து , விறுவிறுப்போடு கொடுக்கும் நான் சொல்லும் (70kku பின் ) வந்த நிறைய சிறந்த படங்கள் இருக்கவே செய்கின்றன .

காலத்தின் அளவை சொல்லிடுங்க .
மீண்டும் வரேன்.

நடுவர் அவர்களுக்கும் பட்டியில் வாதாடும் மற்றும் பார்வையிடும் அறுசுவை அங்கத்தினருக்கு என் வணக்கங்கள்.

காலத்திற்கு ஏற்ற தலைப்பு. கோடை விடுமுறையின் போது தான் இந்த படத்தை வெளியிடுவேன் என்று படக்குழுவை சேர்ந்தவர்களும் இந்த படத்தை இந்த விடுமுறையில் பார்த்தே தீருவேன் என்று ஒருசாராரும் சொல்வதற்கு காரணம் இந்த கோடை விடுமுறைக்கும் படத்துக்கும் உள்ளது ஒரு இணைபுரியாத பந்தம். வெயில் கொளுத்தும் போது என்ன செய்வோம். வெள்ளரிக்காய், தர்பூசணி, ஜிகர்தண்டா, கடற்க்கரை இப்படி குளிர்ந்த இடத்தை தான் மனம் தேடும். அதே போல் படத்துக்கும் எதற்க்காக போகிறோம் , ரிலாக்ஸ் செய்வதற்காகவே தான். அதை இந்த கால சினிமா ரொம்பவே நன்றாக செய்வதால் நம் (நீங்க கண்டிப்பா இதில் சேர்த்தி தான்!) ஓட்டு இந்த கால சினிமாவுக்கு தான்.

அந்த காலத்தில் எத்தனை படம் எடுத்தார்கள் இந்த காலத்தில் எத்தனை படம் வெளியாகுகிறது? அப்படி காலாசார சீரழிவு, கருத்தே இல்லை, சமுதாய சிந்தனை இல்லாமல் படம் இருந்திருக்குமே ஆனால் இந்நேரம் சினிமா என்ற ஒரு கலையே பூண்டோடு அழிந்து போயிருக்கும். அப்படீனா என்ன அர்த்தம் மக்களின் ரசனைக்கேற்ப இப்பொழுதுள்ள சினிமா தன்னையும் மெருகேற்றிக் கொண்டு நம்மோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும் வாதங்களுடன் வருகிறேன். இது வெறும் ட்ரைலர் தான். நடுவரே உங்களுக்காக பிரீமியர் ஷோ வெய்ட்டிங்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவரே வணக்கம், நல்ல தலைப்பு தேர்தெடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள், இக்கால படங்கள் தான் என்ற அணிக்கு பதிவிட வந்திருக்கேன்,
பட்டியில் இது என்னோட முதல் பதிவு ஏதாவது குற்றம் குறை இருந்தால் எல்லாரும் மன்னிச்சு.
பருவங்கள் மாறாமல் இருந்திருந்தாலோ, அறிவியல் வளராமல் இருந்திருந்தாலோ, கலாச்சாரம் வளராமல் இருந்திருந்தாலோ, முக்கியமாக மனிதனின் ரசனை மாறாமல் இருந்திருந்தாலோ நாமும் இன்னும் அதே தொழில் நுட்பத்துடனும், அதே கருப்பு வெள்ளை படங்களையும் ஆ ஊ ன்னா பக்கம் பக்கமா வசனம் பேசும் திரைப்படங்களை தான் பார்த்துட்டு இருந்துருப்போம். மாற்றம் ஒன்றே மாறாது ஆக தொழில் நுட்பம் மாறியாச்சு, கலாச்சாரம் மாறியாச்சு, மக்களின் ரசனை மாறியாச்சு அப்போ அதற்கு ஏற்ற படங்கள் தானே மக்களை போய் சென்றடையும். அப்படி பார்த்தால் இந்த கால படங்கள் தான் அதிகமாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது.
இப்போ எதுலதாங்க கெட்டது இல்ல உணவு கலப்படம், செய்யும் வியாபாரத்தில் பொய் பித்தலாட்டம், ஏங்க அரசு அலுவலகங்களிலேயே எத்தனை ஊழல் நாம சந்திக்கும் எல்லா விசயங்களிலும் நமக்கு தேவையான நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வோம். அதுப்போல இந்த கால படங்கள் எல்லாமே நல்ல படங்கள்னு சொல்ல வரல, நிறைய நல்ல படங்கள் வருகின்றன, அதை பார்த்து நிறைய மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்காங்க.
என்னமோ அந்த கால படங்கள் எல்லாமே நல்ல படம்னு சொல்றீங்க அந்த கால படங்களில் எல்லாம் அபாசம் இல்லையா, கவர்ச்சி நடிகைகள் இல்லையா?

நீண்ட இடைவேளைக்குப் பின் நடுவர் பதவி ஏற்றிருக்கும் அன்புத்தோழி ரேணுகா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...
உங்களுடைய பிரம்மாண்டமான தீர்ப்பு எப்படி இருக்கும் என்ற ஆவல் இப்பவே வந்திடுச்சு.

அன்பு நடுவர் அவர்களே....... இக்கால திரைப்படங்களே சிறந்தவைகளாக இருக்கு என்பதில் சந்தேகமே இல்லை.

அந்தகால திரைப்படங்களைப் பற்றி சிலவற்றை பார்த்தால்

1. எல்லாவற்றிலுமே ஒரு நாடகத்தன்மை இருக்கும்.

2. பல புகழ்பெற்ற நடிகர்களின் நடிப்பு எல்லாமே ஓவர் ஆக்ட்டிங்காக இருக்கும்.

3. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் எல்லா படமுமே ஒரே மாதிரி தான் இருக்கும்.

4. இசையிலும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்காது.

5. புது முகக் கலைஞர்களுக்கு அவ்வளவு சப்போர்ட் இருக்காது.

6. நடப்பு வாழ்க்கை முறையும் சினிமாவில் காட்டப்படும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

7. வசனங்களிலும், பாடல்களிலும் நிறய வடமொழி கலப்பு இருந்தது.
உதாரணத்துக்கு சொல்லப்போனால் எல்லா பாடலுமே ஏதோ கர்நாடக இசைக்கச்சேரியில உட்கார்ந்து கேட்கறமாதிரிதான் இருக்கு.

உதாரணத்துக்கு ஒரு மூட்டைதூக்கும் உழைப்பாளி கூட சுருதி சுத்தமாக நல்ல கர்நாடக சங்கீதம் பாடுவார். ஆனா எதார்த்த வாழ்க்கையில இது எப்படி சாத்தியமாகும்.

8. புதுமைகள் படைப்பதில் ஆர்வம் குறைவாகவே இருந்தது.

9. ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் பிற கலைஞ்ஞர்களின் உடைகள் பொறுத்தமே இல்லாமல் இருக்கும். உடைகளின் வடிவமைப்பு, டிசைன் நல்லா இருக்கும். ஆனா அவர்களுக்கு பொறுந்தி இருக்காது.

10. மேக்கப் எல்லாம் ரொம்ப மோசமா இருக்கும். உதாரணத்துக்கு முகத்துக்கும் கழுத்துக்கும் மட்டும்தான் வெள்ளை பெயின்ட் அடிச்சமாதிரி போட்டுயிருப்பார்கள்.

11. அந்தகால திரப்பட நடிகைகளும் ஆபாசமாகத்தான் உடை அணிந்தனர். பத்மினி அவர்கள் மயில் பாட்டுக்கு எவ்வளவு டைட்டா ட்ரெஸ் போட்டு ஆடியிருப்பாங்க. மஞ்சுளா, கேஆர் விஜயா(ஒல்லியா இருந்த போது), ஜெயலலிதா இப்படி நிறைய பேர் ரொம்ப கிளாமரா உடையணிந்து நடிச்சிருக்காங்க.

12. அப்ப இருந்த குறைந்த டெக்னாலஜியில பிளாக் அண்ட் ஒயிட் கலர் ஸ்க்ரீன்ல அப்ப இருந்த போராட்ட கலத்தில, அப்ப இருந்த பஞ்சம், வறுமை போன்ற பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படமாக்கியிருக்காங்க.

பிளாக் அண்ட் ஒயிட், ஆரம்பகால வண்ணத்திரைகள் காட்சி அமைப்பில் இருந்த குறைகளை எடுத்துக் காட்ட முடியாத காரணத்தினால் நமக்கு அவ்வளவாக குறைகள் நம் கண்ணுக்கு படவில்லை. ஆனால் அந்தகாலத்திலும் ஆபாச நடனம், அபாச உடை அமைப்பு என்பது இருக்கத்தான் செய்தன.

13. ஹீரோ, ஹீரோயினை மையப்படுத்டுகின்ற கதை அமைப்புகளே பெரும்பாலும் இருக்கும்.

14. படித்தவர்களாலும், கலை ஞானம் பெற்றவர்களால் மட்டுமே பாடலையும், நடனத்தையும், வசனங்களையும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

15. கதைகளும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளயே தான் இருந்தது. ஜனநாயகத்தில் இருக்கும் குறைகளை ஆட்சியிலிருக்கும் குறைகளை ஊழல்களை நேரடியாக சுட்டிக்காட்டவில்லை.

16. ரிஸ்க் எடுக்காமல் ஒரு மேலோட்டமான் உடம்பை வளைக்காமல் ஒரு சொகுசான நடிப்பையே வெளிப்படுத்தினர். மிஞ்சிபோனா நடிகர் ஒரு கத்தி சண்டையும், நடிகை ஒரு பரத நாட்டியமும் ஆடி கைத்தட்டு வாங்கினர்.

17. திரையில் தோண்றும் கலைஞ்ஞர்களுக்கு மட்டுமே அதிக மதிப்பு இருந்தது. திரைக்குப்பின்னால் உழைக்கும் கலைஞ்ஞர்களுக்கு மதிப்பும், கவுரவமும் குறைவாகவே இருந்தது.

நடுவர் அவர்களே....... இதுதாங்க அந்தகால திரைப்படங்கள்...... அடுத்த பதிவில் இந்தகால திரைப்படத்தை பதிவிடறேன்....... நன்றி......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

அன்பு நடுவரான ரேணுகா அவர்களுக்கு முதலில் எனது காலை வணக்கங்கள் .
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நான் பட்டிக்கு வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..
"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"
சந்தேகமே இல்லை நடுவர் அவர்களே ,என்றும் சிறந்தவை "அக்கால திரைப்படங்களே " தான் .
அக்கால திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் உயிர் இருந்தது ,ஆனால் இக்கால திரைப்படங்களில் பெரும்பாலானவைகளில் காட்சிக்கு இடையிடையே வெறும் உடல் மட்டும் தான் (நடிகையின் உடல் ) மட்டுமே சித்தரித்து காட்டப்படுகிறது .

"இக்காலத்தில் வெளியாகி வரும் திரைப்படங்களில் விருது வழங்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் எளிதான காரியமாக ஆகிவிட்டது ",ஏனெனில் அவைகளில்(இக்கால திரைப்படத்தில் ) வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே சிறந்த கதையம்சம் கொண்ட சிறந்த திரைப்படமாக இருக்கிறது ,அவைகளில் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது எளிதான காரியம் தானே ,ஏனைய பல படங்கள் எடுப்பது வெறும் வியாபார நோக்கத்தில் மட்டும் தான் ,சமுதாயத்திற்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என இயக்குனர் நினைப்பதில்லையே நடுவரே,இது கொடுமையல்லவோ ??? இது நூற்றுக்கு நூறு உண்மை நடுவர் அவர்களே .

நல்ல கருத்துக்கள் சொல்வன மட்டுமே எந்த காலத்திலும் சிறந்த படமாக இருக்க இயலும் ,அப்படியெனில் அந்த இடம் அக்கால திரைப்படங்களுக்கு தான்...ஏனெனில் பழைய படங்கள் அனைத்தும் வெறும் கதையாக மட்டுமல்லாமல் சமூக உணர்வை தூண்டும் விதமாகவும் அமைந்திருப்பதாக இருக்கும் .மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஆயிரக்கணக்கான பழைய திரைப்படங்கள் இதற்க்கு சான்றாகும் .மேலும் நடிகர்,நடிகையர்களின் மக்கள் அந்தஸ்து உயர்ந்து இருந்ததும் அந்த காலங்களில் தான்.

நடுவரே ,மேலும் இக்கால திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் கூட உயிரோட்டமாக இல்லை ,எனபது உச்ச கட்ட கொடுமை .அவை போலி சிரிப்பை வர வைக்கும் வெறும் காட்சி தொகுப்புகளாகவே இருக்கிறது ,மேலும் இக்கால திரைப்படங்களில் நான்கு ஐந்து சண்டை காட்சிகள் ,ஐந்து பாடல்கள் ,அந்த ஐந்திலும் இரண்டு கட்டாய கவர்ச்சி பாடல்கள் என ஒரு "பார்முலா" வாகவே இக்கால திரை உலகம் நினைத்துக் கொண்டு இருக்கிறது .மேலும் பெரும்பாலான கவர்ச்சி நடனங்கள் கதைக்காக உருவாக்க பட்ட கவர்ச்சி பாடலுக்காக(நடனமாக ) இருக்காது ,கவர்ச்சி பாடலுக்காகவே உருவாக்கப் பட்ட கதை காட்சியாக இருக்கும் ,இப்படி இருந்தால் எப்படி ?எப்படி ஒரு நல்ல திரைப்படம் உருவாகும் ?சொல்லுங்கள் நடுவர் அவர்களே ,சொல்லுங்கள் .

நடுவர் அவர்களே நான் கேட்கிறேன் ,இக்காலத்தில் இழுத்து போர்த்தி கொண்டு நடிக்கும் கதாநாயகி நடிகைகள் என்று யாரேனும் ஒருவரை காட்ட இயலுமா ? முடியாது ,என்று தானே நீங்களும் சொல்வீர்கள் அப்படி தானே ?.ஆனால் அக்காலத்திலும் கவர்ச்சி நாயகிகள் இருந்தார்கள் ,நான் இல்லை என்று மறுத்து சொல்லவில்லை ,ஆனால் அவர்கள் படத்தின் கதாநாயகிகளாக இருக்க மாட்டார்கள் ,வெறும் கவர்ச்சி நாயகிகளாக மட்டும் இருந்திருப்பார்கள்

ஏனெனில் அந்த கால திரைப்படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு ஆட என தனியாக "ஆர்டிஸ்ட் " இருப்பார்கள் ,ஆனால் இக்கால திரைப்படங்களில் அந்த தேவையே இல்லை ,ஏனென்றால் இப்பொழுதெல்லாம் படத்தின் கதாநாயகியே கவர்ச்சி வேடம் பூண்டு கவர்ச்சி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறார்களே ???

மேலும் இறுதியாக அக்கால பாடல்களுக்கு இணையானவை அக்கால பாடல்களே தான் .
அவைகளில் அர்த்தம் இருக்கும்,தெளிவு இருக்கும் ,அதனால் கிடைக்ககூடிய நல்ல கருத்துக்கள் இருக்கும் ,இக்கால திரைப்பட பாடல்களில் பெரும்பாலான பாடல்களில் அவைகளுக்கு அப்படியே எதிரானாவை ,ஒரு அர்த்தமும் புரியாது ,தெளிவாக இருக்காது ,மேலும் பாடல் வரிகள் பிள்ளைகள் கேட்டு போகும் வண்ணம் கொச்சையாக அமைந்திருக்கும் .அவைகள் எந்தெந்த பாடல்கள் என நான் தேடி எடுத்து சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன் .

"என்றும் இனியவை","தேனிசை " என்று வார்த்தைகள் உண்டு .
அது என்றுமே அந்தக்கால படங்களுக்கும் ,அந்தக்கால பாடல்களுக்கும் தான் பொருந்தும் என கூறி இப்போது எனது கருத்துக்களை இங்கு முடித்துக் கொள்கிறேன் .
மீண்டும் சந்திக்கிறேன் .நன்றி வணக்கம்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நடுவர் அவர்களே
அந்தகால படங்களில் ஆபாசம் இல்லை :வன்முறை இல்லை: குடும்பத்துடன் அமர்ந்து அனைவரும் பார்க்கலாம்
பாடல்களோ தேனாறு தான் போங்கள் .ஒவ்வொரு வரியும் கருத்தாழமிக்கதாய் மனதை கொள்ளை கொள்ளும் .அவை தேன் கிண்ணம் தான் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாம் மனதை மயக்கும் .காலத்தால் அழியாத காவியங்கள் அவை.தங்கவேலு காமெடி ,அறிவுட்டுவத்தையும் காணலாம்.
சொந்தக்குரலில் பேசியும் சிலர் பாடியும் நடித்தனர். ஆடற்கலையும் அவர்கள் அறிந்திருந்தனர்.சகல திறமையும்உள்ளவர்களே ஜெயிக்க முடிந்தது.

இந்தகால படங்களில் ஆபாசம் தலைவிரித்து ஆடுகிறது.வன்முறை கோர தாண்டவம் ஆடுகிறது.தமிழ் நடிகைகட்கு தமிழ் தெரியாது.
"எனுக்கு டமில்கொஞ்சும் கொஞ்சும் தெரிம் "என்று பேசி கைதட்டலை வாங்குகிறார்கள்.
பாடல்களோ ரெட்டை அர்த்தம் .
:கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா " என்ன ஒரு அறிவுரை ..ச்சோ ச்சோ புல்லரிக்குதுங்க.

ஆனலும்,இந்த காலத்தில் நல்ல படமும் உண்டுங்க .நல்ல பாடலும் உண்டுங்க.நாம தான் செலக்ட் பன்னனுமுங்க
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே " அற்புதமான பாடல்.
.

நடுவரே நான் எந்த அணி
சிறந்ததுன்னு சொன்ன அந்தக்கால படமே

கருத்து அண்ட் கதை அம்சம் :

இக்கால சினிமாவில் ஆழமான யோசிக்க வைக்கும், நம்மை மட்டுமல்ல, நம் பிற்போக்கான எண்ணங்களையும் மாற்றி அமைக்கும் கருத்துள்ள படங்கள் /பாடங்கள் நிறையவே இருக்கு யுவர ஆனர்!!

கருத்தம்ம்மா : பெண் சிசுக்கொலைக்கு எதிரான, அதே சமயம் அதை பாமாரரும் பார்க்கும் வண்ணம் ,அழகான கதையோட்டம், இயல்பு மாறாத வாழ்க்கை, ஆண்களின் மனப்ப்போக்கு , திருவிழாக்களில் அவலங்கள், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தெரியாத மண்ணின் மக்கள் , அருமையான காதல், முடிவில் அப்பெண் எடுக்கும் அதிர வைக்கும் க்ளைமாக்ஸ் , இதையே வெறும் ஆர்ட் பிலிமாக எடுத்திருந்தால் எவ்ளோ பேர் பார்த்திருப்பங்க. கிராமத்துக்கே போகாத பல மனிதர்களுக்கு அங்கு நடக்கும் அறியாமை போராட்டம், அடக்குமுறை வர்க்கம் எப்படி தான் எழுத்தில் புரிய வைப்பது ?

ஆஹா : ஆஹா என்று சொல்ல வைத்த குடும்ப படம், ஒரு ஜாதியை பற்றிக்க்காட்டினாலும் எந்த வில்லங்கமும் இல்லாமல் , நகைச்சுவை இழையோடு, பாசத்தின் எல்லைகளை அழகாக காண்பித்து , கால் சரியில்லாத பெண், எதற்குமே லாயக்கில்லை என்று சொல்லப்பட்ட ஒரு மகன் ,எடுக்கும் திடமான முடிவு, என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர்க்கு உரிய குணா திசயத்தொடு வலம் வந்த இந்த கதையில் கருத்து இல்லையா என்ன ?

ரிதம் : திருமணம் என்பது ஒரு முறை தான் , ஆனால் காதல் கணவர் இறந்தால் அத்துடன் தன வாழ்வு முடிந்து விடுமா என்பதை ,அர்ஜுன், மீனாவின் அருமையான நடிப்பிலும், புரிந்து கொள்ளும் பெற்றோர்களாக நாகேசும்,வத்த்சு மாமியும் ,லக்ஷ்மிக்கு என்ன ஒரு சுபெர்ப் ரோல், அனாயாசமாக நடித்து , நிஜத்தில் நாம் பார்க்கும் நிறைய மனிதர்களின் பிரதிபலிப்பாகவே இருந்தாரே ? இந்த கதையில் ஒவ்வொரு நிமிடமும் வசனமும் கருத்துல்லவை தானே ?

பசங்க : அவார்ட் வாங்கியது ஒரு புறம. பசங்களை அணுக முடியாத பெற்றோரின் சண்டை,அதனால் எப்படி மனரீதியாக நன்கு படிக்கும் குழந்தை அபெக்ட் ஆகிறான் ,நேர்மையான வசனங்கள், நகராட்சி பள்ளியில் நடக்கும் அழகான காட்சிகள் ,ஏதோ நம் பள்ளி வாழ்க்கை போலே இருந்த காட்சி அமைப்புகள், மிகவும் வால் தனம செய்யும் பிள்ளை கூட அன்பால் மாறும் கதையோட்டம் ,கைத்தட்டல் என்பது வாழ்வு ஏணிபடிக்கட்டில் எப்படி பிடியாகிறது என்று இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ள முடியாதா என்ன ?

அன்பே சிவம் : ஒவ்வொரு முறை இதை டி வியில் பார்க்கும் போதும் கடைசி வசனம் (கமல் சந்தானபாரதிய்டம் ) பேசும் பொது கண்ணில் நீர் திரையிடுகிறது .உண்மையான அன்பு என்பது என்ன கடவுள் யார் என்பதை தியேட்டரில் ஒஓடாத ஆனால் இப்போ எப்போ டி வியில் போட்டாலும் எல்லார் வீட்டிலும் இதே சவுண்ட் கேட்கிறது . இதை வைத்து இந்த கதையில் கருத்து இல்லாத மசாலா படம் என்பதை சொல்லுவீங்களா என்ன ?

மறுபக்கம் : சிவகுமார், ராதா (இயல்பான மேக்கப்பில் இவரின் நடிப்பை வியந்தேன் )ஒரு சீன பார்க்கவில்லை என்றாலும் கதையில் எதாவது ஒன்றை மிஸ் பண்ணியிருப்பீர்கள். ஒரு பார்வை, ஆயிரம் விஷயங்கள் சொல்லும். படுத்த படுக்கையாய் கிடக்கும் ஒருவனின் மறக்க முடியாத நியாபகங்கள் .ஊரிலிருந்து வரும் பிள்ளையின் கண்ணோட்டம், அதீத பாசம் வைக்கும் மனைவி, எத்தனையோ பேர் இந்த படத்தை பார்த்து தன் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது .
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .
நாம் மட்டும் மாடர்ன் ஆகா மாறிவிட்டு ,இன்னும் சினிமாக்களில் எந்த முற்போக்கு தனமும் இருக்க கூடாது என்று எப்படி சொல்லலாம் ?
வெறும் ஆடைகளை வைத்து சினிமா கெட்டு விட்டது என்று சொன்னால் நாம் தான் பின் தங்கியவர்கள் ஆவோம்.

ஐம்பது வருஷம் முன்னேயே (ஏன் ஆங்கிலேயர் காலத்தில் கூட ) உள் பனியன் அண்ட் பேன்ட்டை மேல் நாட்டு மக்கள் போட்டா ஓகே வா ? மகாபலிபுரத்தில் டூரிச்டா அவங்க வரப்போ என்ன கெட்டு போச்சு ? கண்ணை மூடியா இருந்தோம். ஆனா இன்று நம் பிள்ளைகளோ வேறு யாரோ போட்டா ஏகப்பட்ட கூச்சல் போடுறோம்.
வெளியில் யாராவது போட்டால் ஹிஹி என்று இளிக்க வேண்டியது . வீட்டில் மனைவி சிறிது லோ நெக போட்டால் அப்படியே தன்மானமே பரி போய்விட்டது போலே பேசுவது . இதெப்படி சரியாகும்????

ஆடை என்பது அவர் அவர் விருப்பம் . உண்மையில் நம் இந்தியாவிலேயே வேறு வேறு க்ளைமேட்டுக்கும் சூழ்நிளைக்குமேற்ப ஆடை வேறுபடுகிறது. ஈசியான உடை என்றால் பேன்ட் சேர்ட் தான் அதை எல்லாரும் இப்போ விரும்பும் படியா ஆச்சு. அவங்க உடல்வாகுக்கு போருந்துதா , இல்லை அருவருப்பா பார்ப்பவருக்கு இருக்கா என்பதை பற்றி யாரும் யோசிப்பதே இல்லை.

சைண்டிபிக் ஆ பார்த்தால் , நம் பெண்கள் இந்த ஊர் சவுத் இந்தியா க்ளைமேட்டுக்கு புடவை அணிவது நல்லது ஏனென்றால் இடுப்பை ஒட்டிய உருப்ப்புகளை இருக்க பிடிக்கும் உடைகளால் ,கருப்பை சூடாகி நிறைய பாதிப்புகள் வரும். லூசான காற்றோட்டத்துடன் கூடிய புடவை, சரியாக இடுப்பை மட்டு பிடித்து நம் உள் அண்ட் வெளி உறுப்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.
இது தான் நம் முன்னோர்கள் இந்த உடையை வடிவமைத்து வைத்து எல்லாராலும் உடுத்தப்பட்டது.

அதை சொல்லுங்க.அதை விட்டு பார்க்க சகிக்கலை சொன்னா வெளிநாட்டுக்கு போய் போடப்போறாங்க அவ்ளோ தான் . மேலும் இக்கால சினிமாவிலும் உள்ள அழகிய வியக்க வைக்கும் வண்ண உடைகளை பற்றியும் எழுதறேன்

நன்றி நடுவரே.

அன்பு நடுவர் அவர்களே.... சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்....... 60, 70 க்கு முன் வந்த திரைப்படங்களை நம்ம கன்சிடர் பண்ண வேண்டியதே இல்லை... 60, 70 - 90வரை அந்த காலம் 91 - 2012 வரை இந்த காலம் அப்படினு எடுத்துக்கலாம் தானே........ 70க்கு பின் வந்தவை எல்லாம் இந்த காலம்னு சொல்றது உங்களை குழப்பும் முயற்சி... இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அந்த கால திரைப்படங்கள் தான் சிறந்தவைனு.........

70 க்கு முன் வந்த திரைப்படங்களை நம்ம கன்சிடர் பண்ண வேண்டியதே இல்லை..//.

அட இப்படி ஒரு தள்ளி வைப்பா ? என்னப்பா இது ? வாட் வாட் ? வொய் வொய் வொய் மை லார்ட் ? ஐ அம் க்ரயிங் , ஐ அண்டர்ச்டாந்து நோ ( இதை வடிவேல் வாய்ஸ்ல படிங்க )

இந்த கால திரைப்படங்களை நாம் மிகவும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பிக்கிறோம் ஆனா அது முடியும் போது ஏண்டா இதை பார்த்தோம்னு ஆகிவிடும் இதுவே அக்கால படங்களை வேறு வழி இல்லாமல் பார்க்க ஆரம்பித்தால் கூட படத்துடன் ஒன்றி விடுவோம்... முடிந்த பின்னரும் கூட நம் மனதை விட்டு அகலாமல் இருக்கும்.......
இக்கால காமெடிகள், அக்கால காமெடிகள் எடுத்து கொள்ளுங்கள்... காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் ஒரு திகில் காட்சியை விவரிப்பார் அந்த நகைச்சுவைக்காட்சிக்கு ஈடான ஒரு காட்சியை இப்பொதிலிருக்கும் படத்தில் இருந்து எதிரணி தோழிகளை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்...... ஒருவரின் உடலமைப்பை எள்ளி நகையாடுதல், ஊனத்தை கிண்டல் அடித்தல், கெட்ட வார்த்தைகளில் திட்டுதல், இரு அர்த்த வசனங்கள் போன்றவை தான் இக்கால நகைச்சுவை.... அதை பார்த்து பார்த்து அவையெல்லாம் தவறல்ல என்றே ஆக்கிவிட்டது........ இக்கால படங்களில் எடுத்துக்காட்டு சொல்லும்படி சில படங்கள் தான் உள்ளன... அதனால் தான் எதிரணி தோழிகள் அவற்றை உதாரணமாக சொல்கின்றனர் ஆனால் பழைய அக்கால திரைப்படங்கள் அனைத்திலுமே ஒவ்வொரு கருத்து, ஒவ்வொரு சிறப்பு இருக்கும் அதனால் அதனை தனியாக எடுத்து கூற வேண்டியதே இல்லை.......

// திரைப்பட தொழில்நுட்பமும் இக்காலத்தில்தானே வளர்ந்திருக்கு. உலகத் தரம் வாய்ந்த இசையில், வெரைட்டியான குரல்களில் பாடல்களை கேட்பது இப்போதானே. அப்போதெல்லாம் ஒன்றிரண்டு பாடகர்கள்தானே இருந்தாங்க. இசைக்கருவிகளும் கூட குறைவுதான்.// அப்படிப்பட்ட சிறந்த தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்தில் சிறந்த படங்கள் வந்து இருக்கு என்றால் அக்கால மக்களின் திறமை அப்படி... சிறந்த தொழில் நுட்பம் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லையே.......... மனதில் நிற்பது இல்லையே.......

மேலும் சில பதிவுகள்