***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

அறுசுவை தோழர் தோழிகளுக்கு வணக்கம்,
இந்தவார பட்டியின் தலைப்பு நம் தோழி "பூர்ணிமா சங்கர்" அவர்களோடது.......
தலைப்பு இதோ,

***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***

நீண்ட இடைவெளிக்கு பின் நடுவராகப் பொறுப்பேற்றுள்ளேன்,நமது தோழிகளின் காரசாரமான, அனல்பறக்கும் வாதங்களைக் காண ஆவல்கொண்டே இத்தலைப்பை தேர்வு செய்துள்ளேன்...
இன்றைக்கு வெளியாகும் படங்களில் சில என்னை இத்தலைப்பை எடுக்கதூண்டியதுன்னும் சொல்லலாம் தோழிகளே...

"விவாதங்கள் எதன் அடிப்படையில்:"

தோழிகளே இத்தலைப்பில் விவாதிக்கும் நம்தோழிகள் கருத்து, கதையம்சம், கலாச்சாரம், பொழுதுபோக்கு, சமுதாய விழிப்புணர்வு, நன்மை தீமைகள், நகைச்சுவை, நடனம், இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இதுபோல அனைத்தின் கீழும் தங்களது வாதங்களை சமர்பித்தால் வாதாடவும்,நடுவர் தெளிவடையவும் சிறப்பாக இருக்கும்.....
80க்கு முன் அக்கால திரைப்படங்களாகவும்,80க்கு பின் இக்கால திரைப்படங்களாகவும் எடுத்துக்கொண்டு வாதங்களில் ஈடுபடுங்கள்.....

வழக்கமான பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும்.அதனால் அதை மீறுதல் கூடாது. பதிவுகள் தமிழில் இருப்பது அவசியம்.
தோழிகள் எல்லாரும் வந்து கலந்துகிட்டு இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திகொடுக்கும்படி அன்போடு கேட்டுக்கறேன்.வாங்க தோழிகளே வந்து யார் எந்த அணியின் பக்கம்னு சொல்லிடுங்க.....:-))

// எல்லாவற்றிலுமே ஒரு நாடகத்தன்மை இருக்கும்.//
நாடகங்கள் என்பன என்ன நல்லதன்மை உடையன இல்லையா ?
பல வித நாடக சபாக்கள் பார்த்து உணர்ச்சி பொங்கின மக்கள் இதை பார்த்தும் பொங்கி இருக்க வாய்ப்பில்லையா ?என்ன ?

// பல புகழ்பெற்ற நடிகர்களின் நடிப்பு எல்லாமே ஓவர் ஆக்ட்டிங்காக இருக்கும்//
ஓவர் ஆக்டிங் கொடுத்த நடிகர்களுக்கு புகழ் எப்படி கிடைத்திருக்கும் ,உண்மையான ஆக்டிங் குக்கு தான் நல்ல பெயர் கொடுப்பார்கள்

//தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் எல்லா படமுமே ஒரே மாதிரி தான் இருக்கும்.//
அப்படியா ?இந்த கால தொழில்நுட்ப வளர்ச்சியால் "கிராபிக்ஸ் "
எனப்படும் போர்வையில் பல பல பொய்காட்சிகளை உருவாக்குவது நல்லதா ?
ஆரோக்கியமானதா ?

//இசையிலும் ரொம்ப பெரிய வித்தியாசம் இருக்காது.//
வித்தியாசம் இருக்காது தான் .ஏனெனில் எல்லாம் தமிழில் புரியக் கூடியவையாக இருக்கும் ,இக்காலம் போல வித்தியாசம் வித்தியாசமான புரியாத வார்த்தைகள் இருந்ததில்லை அல்லவோ ?

//புது முகக் கலைஞர்களுக்கு அவ்வளவு சப்போர்ட் இருக்காது.//
அந்த கால நடிகர்கள் யாரும் பழங்கால நடிகர்களின் மகன்கள் அல்ல ,எல்லோரும் புது முகம் தான் ..அவரவர் திறமையை காட்டி முன்னுக்கு வந்தவர்கள் அனைவரும் ,இக்காலத்தில் தான் பழங்கால நடிகர்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது .

//நடப்பு வாழ்க்கை முறையும் சினிமாவில் காட்டப்படும் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்//
இன்றைய சினிமா தான் குழந்தைகளுக்கு .இளைஞர்களுக்கு தெரியாத பல தீய விஷயத்தை எல்லாம் சொல்லி கொடுக்கும் பள்ளியாக இருக்கிறது .அக்காலம் நல்ல நடைமுறையை தான் சொல்லி தந்தது.

//வசனங்களிலும், பாடல்களிலும் நிறய வடமொழி கலப்பு இருந்தது.
உதாரணத்துக்கு சொல்லப்போனால் எல்லா பாடலுமே ஏதோ கர்நாடக இசைக்கச்சேரியில உட்கார்ந்து கேட்கறமாதிரிதான் இருக்கு.//
வடமொழி கூட இந்திய மொழி தான் ,கர்நாடக இசைக்கச்சேரி கூட இந்திய இசைக்கச்சேரி தான் ,ஆனால் இங்கோ ஆங்கிலம் புகுந்துவிட்டதே ?என்ன செய்வது ?

//உதாரணத்துக்கு ஒரு மூட்டைதூக்கும் உழைப்பாளி கூட சுருதி சுத்தமாக நல்ல கர்நாடக சங்கீதம் பாடுவார். ஆனா எதார்த்த வாழ்க்கையில இது எப்படி சாத்தியமாகும்.//
மூட்டை தூக்குபவருக்கு இசை ஞானம் இருந்தால் பாடலாம் .தெரியாதா ?அக்காலத்தில் பயிறு வேலை செய்பவர்கள் கூட சுதி சுத்தமாக தான் பாடுவார்கள் ,அவை என்ன சாத்தியமில்லாதவையா ?

//புதுமைகள் படைப்பதில் ஆர்வம் குறைவாகவே இருந்தது.//
புதுமைகள் இல்லாமலா ஒவ்வொரு படமும் வெற்றிபெற்றது .

// ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் பிற கலைஞ்ஞர்களின் உடைகள் பொறுத்தமே இல்லாமல் இருக்கும். உடைகளின் வடிவமைப்பு, டிசைன் நல்லா இருக்கும். ஆனா அவர்களுக்கு பொறுந்தி இருக்காது.//
பல கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் இந்த கால நடிகைகள் உடை இருந்தும் அரைகுறை ஆடை அணிகிறார்களே அது ஏன் ?ஒரு வேலை படத்துக்கு அரைகுறை தேவைப்பட்டிருக்கும் போல ..

//மேக்கப் எல்லாம் ரொம்ப மோசமா இருக்கும். உதாரணத்துக்கு முகத்துக்கும் கழுத்துக்கும் மட்டும்தான் வெள்ளை பெயின்ட் அடிச்சமாதிரி போட்டுயிருப்பார்கள்.//
இந்த கால நடிகைகள் முகத்துக்கு மேக்கப் போடுறாங்களோ இல்லையோ ,கண்டிப்பா தொடை ,வயிறு அப்டின்னு பெண்ணின் மறைக்க வேண்டிய பாகங்களுக்கு எல்லாம் மேக்கப் போடுகிறார்கள் ,அங்கு தானே எல்லோரதும்
பார்ப்பார்கள் அதற்காக

//அந்தகால திரப்பட நடிகைகளும் ஆபாசமாகத்தான் உடை அணிந்தனர். பத்மினி அவர்கள் மயில் பாட்டுக்கு எவ்வளவு டைட்டா ட்ரெஸ் போட்டு ஆடியிருப்பாங்க. மஞ்சுளா, கேஆர் விஜயா(ஒல்லியா இருந்த போது), ஜெயலலிதா இப்படி நிறைய பேர் ரொம்ப கிளாமரா உடையணிந்து நடிச்சிருக்காங்க.//
அவர்கள் தேவைபடும் காட்சிகளில் நடித்திருந்தால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை .
நடுவரே நன்றாக கவனியுங்கள் "//அந்தகால திரைப்பட நடிகைகளும்//"
நான் பட்டியல் போடணும்னா எல்லா புதுமுக கதாநாயகிகளும் வந்துடுவாங்க ,அப்புறம் வேற இழை ஆரம்பிக்க வேண்டி இருக்கும் ,சொல்லிட்டேன் .

//அப்ப இருந்த குறைந்த டெக்னாலஜியில பிளாக் அண்ட் ஒயிட் கலர் ஸ்க்ரீன்ல அப்ப இருந்த போராட்ட கலத்தில, அப்ப இருந்த பஞ்சம், வறுமை போன்ற பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படமாக்கியிருக்காங்க.//
இப்ப இங்க திருட்டு ,நல்லதல்லாத காதல் ,கொலை செய்வது ,கற்பழிப்பு,சைகோ கதைகள் இதை தான் படமாக்கி கொண்டு இருக்கிறார்கள் ,தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்கள் .

//ஹீரோ, ஹீரோயினை மையப்படுத்துகின்ற கதை அமைப்புகளே பெரும்பாலும் இருக்கும்.//
கதை நாயகனையும் ,நாயகியையும் சுத்தி வராமல் நகைச்சுவை நாயகனையா சுத்தி வரும் ..

//படித்தவர்களாலும், கலை ஞானம் பெற்றவர்களால் மட்டுமே பாடலையும், நடனத்தையும், வசனங்களையும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.//
இந்த கருத்து முற்றிலும் நான் கண்டிக்கிறேன் ,இதில் எந்த உண்மையும் இல்லை .
தமிழ் பேச பாமர மக்களுக்கு தெரியும் என்றால் வசனம் புரியாதா ?கேட்க காது இருந்தால் பாடல் புரியாதா ?பார்க்க கண் இருந்தால் நடனம் கண்ணுக்கு தெரியாதா ?எல்லாம் ரசனையில் இருக்கிறது புரிந்து கொண்டால் நலம் .

ஆக பழைய படங்கள் பொக்கிஷமாக பாதுக்காக பட வேண்டியவை ,அவை என்றுமே சிறந்தவை நடுவரே என்று மறுமுறை கூறிக் கொள்ளுகிறேன்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அன்பு நடுவரே!
எங்கே ஏதாவது புது படம் பார்க்க போய்டீங்களா ??? (வழக்கு எண்) ஆளையே காணலை ??

நானும் இந்த வாரம் போய் பார்க்க்கனும் .

சரி பாயின்ட்ச்க்கு வரேன்.
* நாடகத்திலிருந்து வந்த அக்கால சினிமாக்கள் , எதையுமே மாற்றிக் கொள்ள விரும்பாத தால் தான் அந்த முறை மாறி புது விதமான சினிமாக்களை மக்கள் ஆதரிச்சாங்க .

*நாடகத்தில் மிகை உணர்ச்சிகள் அதிகம் இருந்தது. அதையே சினிமாவிலும் ஏகப்பட்ட பவுடர் பூச்சோட காண்பிச்சு கடுப்படைய வெச்சாங்க .கலரா இருக்கரவங்களுக்கே வாய்ப்பு . தலை அலங்காரம் எல்லா தாங்க முடியாது. பெரிய பெரிய கொண்டை வீட்டிலேயே கதாநாயகி அப்படி வலம் வருவாங்க . கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க .இதெல்லாமும் அந்த காலத்தில் இல்லைன்னு சொல்ல முடியுமா ?

* இப்போ மட்டும் அசிங்கமான படங்கள் வருதுன்னு சொல்ல முடியாது. அப்ப கூட ஒரே மாதிரியான கதை அமைப்புகள் கொண்ட படங்கள் வந்து போரடிச்சதாள தான் ,சினிமாவில் ஒரு மாற்றம் வந்த போது வரவேற்பு கிடைச்சது .நாதா, அன்பே கண்ணே என்ற வசனங்கள் திடுமென்று மாற யார் காரணம். ஆதரவு கொடுத்து பார்த்த மக்கள் தானே ???!!

*கவர்ச்சி என்பது இப்போ கிளாமர் அவ்ளோ தான் வித்தியாசம் . ஆனா என்ன இதில் வேறுபாடு என்றால் கவர்ச்சி நடிகை கவர்ச்சி மட்டுமே காட்ட முடியும், அவருக்குள் நடிப்பு ஆற்றல் இருந்தா கூட , யாரும் ஒரு கேரக்டரை கொடுக்க மாட்டாங்க. ஐடம் சாங் ஆட மட்டுமே அவங்க. சமூகத்த்தால் இழிவு படுத்தப்பட்டாங்க. எவ்ளோ வேதனைகள் , பணக்கஷ்டத்துக்காக நடிக்க வந்து , தவறாக யூஸ் பண்ண பட்டாங்க .வெளியில் சிலவற்றை சொல்லவே பயப்படுவாங்க. ஜோதிலட்சுமியை பாட்டி வேடம் போடட்ட கூட கவர்ச்சியா தான் யூஸ் பண்ணும அளவு போயாச்சு .
இப்போ பெண்கள் தெளிவா இருக்காங்க , தனக்கு என்ன தேவை என்பதில் கூட.
கிளாமர் தாலா இருந்த ரோஜாவுக்கு , அழகான பாத்திரம் கொடுத்த விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் எந்த கால படம். நாம் ஆதரவு கொடுக்கலையா என்ன ? இல்லை அவங்க நடிக்க தான் மருத்தாங்களா? அதே போலே பானுப்பிரியா, குஷ்பு இவர்களின் நடிப்பு திறனை வெளிக்கொண்டு வந்த இயக்குனர்கள் இந்த காலத்தை சேர்ந்தவங்க தான் .

நடிப்பு பாட்டி எஸ் என் லட்சுமி சின்ன வயசுலேந்தே அம்மா அண்ட் பாட்டி வேஷம் தான் , ஏன் அவங்க அழகானவங்க இல்ல அதான். பட் அவங்களுக்கு எவ்ளோ சூப்பர்ப் ரோலஸ் கொடுத்து , அவங்களுக்கு இன்னமும் இடம் கொடுத்து நல்ல நகைச்சுவை வசனங்களை கொடுத்த படங்கள் எந்த காலம் --- இந்தக்கலமே

* அதே போல் கோவை சரளா ஸ்டீரியோ டைப் நகைச்சுவை ஊறுகாயா இருந்த அவங்களுக்கு ,கதாநாயகி அளவுக்கு இம்பார்டன்ஸ் கொடுத்து சதிலீலாவதியில் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்து, அவங்களுக்கும் தன்னம்பிக்கையை விதைத்த படம் எந்த காலம் >>> இந்த காலமே

* வானத்தை போல __ சுத்தி சுத்தி சுழட்டி சுழட்டி அடிச்சு ஒத்தை காலே ஒடஞ்சி போய் , கண்கள் சிவக்க இருக்கும் விஜயகாந்த் இன் இன்னொரு பரிமாண நடிப்பா நிறைய நாள் ஓடி சாதனை படைச்சது. வசனம் பாடல் எல்லாமே நல்லா இருக்குமே

* ஆண் பாவம் எத்தனை தரம் பார்த்தாலும் விறுவிறுப்பு குறைவே இல்ல, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும். ஹீரோ முக அமைப்பு கிடையாது , அடி தடி இல்ல. என்ன ஒரு கதை அமைப்பு அது எந்த காலம் ???

*சேது _ இந்த மாதிரியும் படம் எடுக்கலாம் தைரியமா யோசிச்சு படத்தை நகர்த்தி உலக அளவில் அடுத்த படம் என்ன என்று ஆவலுடன் காக்க வைத்த இயக்குனர் . விக்ரம் இனி படமே நடிக்க முடியாது என்று இருந்தபோது ஒரு திருப்பம் கொடுத்து கதை போக்கே ஒரு டர்னிங் பாயின்ட் ஆ சினிமா உலகுக்கு வைத்த இது எந்த காலம் ?

இந்த கால படங்கள் வெற்றி அடையுதா என்று எதிரணி தோழி கேட்டிருந்தாங்க ?

உண்மையா சொல்லனும்னா தோல்வியே இல்ல . நூறு நாள் ஓடி சம்பாதிக்கும் லாபத்தை ஒரே நாள் நூறு ஷோ போட்டு எடுத்திறாங்க. அதை தவிர எல்லா டப்பா படம் கூட டி விக்கு வித்து பைசா பார்த்துடறாங்க . இப்போ எல்லாம் எதிலேயும் வெற்றி தோல்வி என்பது இல்லை. நம் கண்ணோட்டம் தான் எல்லாமே .

ஓகே நடுவரே . திரு திரு துறு துறு என்றொரு படம் . அதிலே ஒரு குழந்தை நடித்திருக்கும் . உண்மையா எனக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிப்பா அந்த குழந்தைக்கு கொடுக்கணும்னு தோணிச்சு. இந்த அறுசுவை பட்டி மூலம் கொடுத்துடறேன்.

அதே போல அபிநயா (நாடோடிகள் ) பாருங்க இந்த மாதிரி இருக்கறவங்களை கூட கை கொடுத்து தூக்கி விடும் நல்ல சினிமா உலகத்தை பாருங்க . எங்க அணியிலே சேர்ந்து விடுவீங்க .
நன்றி

பல நல்ல பாடல்கள் இக்காலகட்டங்களிலும் வெளியாவதை ஆதாரத்துடன் சொல்லிட்டீங்க.......வாங்க வாதத்தின் அடுத்த கட்டத்திற்கு.....

வாங்க வெண்ணிலா பட்டிங்கு உங்களை வரவேற்கிறேன்..நீங்களும் அக்காலமா.......அடடே அணியை சொன்னதோடு பல நல்ல பாடல்களையும் கொடுத்துள்ளீர்களே...வாழ்த்துக்கள்.....வாதத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்வோமா......

அடடே வாங்க சீதாம்மா, பல சொந்தக்குரல் நாயகிகளை அடுக்கிட்டீங்க,அடுத்து பாடல்களைலும் ஆரம்பித்துட்டீங்க...... இன்னும் விரிவான வாதங்களுடன் வாங்க......

என்ன இருந்தாலும் டீசண்டான படங்கள் அப்படிதானே வெண்ணி,(சரிசரி இக்காலமே முறைக்காதீங்க,நடுவர் என்றும் நடுவுநிலையில்தான் உள்ளார்)

**////*அந்த காலத்துலை அறியாத வயசுல காதல் பன்னவே இல்லையா? இன்னும் ஒரு படி மேலே போய் அறியாத வயசுல கல்யாணமே செய்து வைத்த காட்சிகள் உண்டு. ஏனென்றால் அந்த கால பழக்கவழக்கம் அப்படி. இப்ப நாம அதையா செய்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான பழக்கவழக்கங்களை எல்லாம் நம்மிடம் இருந்து களைந்தது இந்த கால சினிமா தானே. ///

காதல் பண்ணினாங்க அதுல ஒரு ஒழுக்கம் இருந்தது. காதல் பண்ணினாலும் கல்யனதுகப்புரம் தான் எல்லாமே.இப்போ?நடுவர் அவர்களே நீங்க காதலுக்கு மரியாதை படம் பாத்து இருப்பீங்க அந்த படத்தோட success என்ன தெரியுமா?அவங்க ரெண்டு பெரும் தொடாம லவ் பண்ணுவாங்களாம்!!!? இந்த காலத்துல தொடாம லவ் பண்றாங்கன்னு ஒரு கான்செப்ட் காகவே மக்கள் இந்த படத்த பார்த்து இருகாங்கனா சோ நம்ம ஜனங்க காதல் காட்சிகளால எவளவு நொந்து போய் இருக்காங்கன்னு பாருங்க.இப்போ முத்த காட்சி இல்லாத படமே இல்ல.இத பாத்துட்டு தான் நம்ம பசங்க மெரீனா,பெசன்ட் நகர் கடற்கரையும் அசிங்க படுத்தறாங்க.////**

உதிரா இன்னுமா பாட்ட அடுக்கரீங்க,எம்முட்டு படம் பாத்திருக்கீங்க நீங்க......

///இப்ப தான் நாம் ஹாலிவுட் ரேஞ்சுக்கும், ஈரானிய படங்கள் பக்கத்திலேயும் வரோம்னுட்டு .//

அப்படி சொல்லுங்க இன்றைய டெக்னாலஜி,சயின்ஸ் பெசிலிட்டி இல்லைன்னாக்கா நம்ம படம் ஆஸ்கர் நாமினியா போகுமா?
கேக்குராங்கல்லா கேள்வி.......பதில் பதில் கொடுங்கப்பா அக்கால அணியே...

மாலத்தீவு போயாச்சா.....:-)

////படம் என்பது எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்க தான். ஒரு படத்தில் பாக்கியராஜ் கூட வந்த தங்கைகளை சினிமா தேட்டரில் 5 பைசா போட்டுட்டு தேட விடுவார். அது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அது தான் இது போல் ஆபாச படங்கள் வர துவங்கிய காலம். அப்போ அது அருவெருப்பா இருந்தது, சங்கட படுத்துச்சு. இப்போ படமென்றாலே இப்படி தான்னு ஆயிடுச்சு. இந்த காலத்தில் இப்படி ஒவ்வொரு சீனுக்கும் பைசா போட்டு தெட விடனும்னா, படம் முழுக்க எல்லாரும் தேட்டரில் கீழ தான் தேடிகிட்டே இருக்கனும். இது படமா??? சென்சாருக்கு போனா முழு படத்தையும் கட் பண்ணிட்டு மிஞ்சு மிஞ்சு போனா ஒன்னு, இரண்டு காட்சியை தான் வெளியிட முடியும்.///

எத்தன காசு வாங்கிவைக்கிறது???அட காட்சிகளை விடுங்க முதலில் படம் வெளிவருமாங்கறதே சந்தேகம்....

///ஒரு ஸ்டேஜ்ல சினிமா பாட்டு என்பது யாரும் பாட முடியாத அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளோடு வர ஆரம்பிச்சிருக்கு. சூப்பர் சிஙர் ப்ரோக்ராம் பார்ப்பவங்க நல்லா கவனிங்க... ஒரு பழைய பாடலை குட்டீஸ் பாடும் போது ரசிக்கும் நாம் புது பாடலை பாடி அதுக்கு உணர்வுகளையும் கொடுத்தா ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அர்த்தம் புரியாம பாடுறாங்களேன்னு மனசு தவிக்குது.///

அவங்க பாடுரதே பெருசு,இதுல குரல்ல ஃபீலிங்ஸ் பத்தல கெமிஸ்ட்ரி,பிசிக்ஸ் பத்தலன்னு கமண்ஸ் வேறம்ப்பா.......என்ன கொடுமடா இது.....??

///முன்பெல்லாம் 200 நாள் 300 நாள்னு ஓடுவது சகஜம்... இப்போ வரும் பொட்டி 25 நாள் ஓடி “வெற்றிகரமான 25வது நாள்”னு போஸ்டர் போடுறாங்க நடுவரே!!! 100 நாள் ஓடுறதுலாம் இப்போ பெரிய ஹிட் ஆயிடுச்சு. அப்போ அந்த கால படங்கள் எவ்வளவு ஹிட்???!!///

ஹீ...ஹீ நீங்க சொல்றத பாத்தா இனிவரும் காலங்கள்ல,10 நாள் ஓடினாலே பெருசுபோல....:)(

அட வாங்கப்பா இக்கால அணி, என்ன அக்கால அணி அடுக்கிட்டே போராங்களே......

வாங்க ஃபாத்திமா என்ன வந்த வேகத்திலே போரங்கரீங்க, உங்களைப்போன்றோரின் வாதங்கள் பட்டிக்கு தேவைப்பா....மீண்டும் வாங்க......

ஒன்னு சொல்றன்னுட்டு அதிலே எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே.....விரைவா அடுத்தகட்ட வாதத்திற்கு வாங்க.....(இன்னும் என்ன் என்ன் கருத்துகள் வருமோ)

////பழைய திரைபடங்கள் என்பது”பொற்காலம்”போன்றது
இன்றைய திரைபடங்களோ ”போர்க்காலம்”.அதுவும் சாதாரண போர் கிடையாது,அணு ஆயுத போர்,கொஞ்சம்,கொஞ்சமா இளம் சமுதாயத்தையே சீரழிக்கும் விஷத்தை பரப்புகிறது.இந்த நாட்டில் தமிழ் சினிமா தான் அவங்களுக்கு கலாசார முன்னோடி, தமிழ் சினிமாவுல வர மாதிரியே உடை,பாவனை எல்லாம் இருக்கும்,ஏன் பேச்சு கூட slum heroes மாதிரியே பேசுவாங்க.இப்படி தமிழ் சினிமாவின் தாக்கம் நாடு விட்டு நாடு பரவியிருக்கும்போது, ஏற்பட்டிருக்கிற மோசமான விளைவுகள் கண்டே இன்றைய திரைபடங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். விடைபெறுகிறேன்.////

/**// அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு... அந்த கால படங்களை ரசிக்க மட்டுமே முடியும், இந்த கால வாழ்க்கைக்கு ஒத்துவராது...// சினிமாக்களை பார்த்து நம் வாழ்க்கையை தீர்மானிக்க கூடாது... ஒரு நாள் முதல்வர், இந்திய தாத்தா, அந்நிய கொலைகாரன் நிஜத்தில் இருந்தால் நம் நாடு தாங்குமா?///**

வாங்க பிரியா பட்டிக்கு அன்புடன் வரவேற்கிறேன்....... மிக நல்ல கருத்து சினிமாவை பார்த்து நம் வாழ்வை தீர்மாணிக்க கூடாது.....கண்டிப்பா தாங்காதுப்பா தாங்காது........

////உதாரணமா கில்லி படத்துல நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க மிளகாய்த்தூள் தூவுவது போல ஒரு சீன்... அதை பார்த்துட்டு ஒரு பையனும் அதே போல செய்தான்னு பேப்பரில் படிச்சேன்... ஆனா அக்கால திரைப்படங்கள் மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டின(வீரபாண்டியகட்டபொம்மன் இன்னும் பல) இசையமுதம் தந்தன(திருவிளையாடல்) நடனம் நாதஸ்வர புகழ் பாடின(தில்லானா மோகனாம்பாள்) பக்திமனம் (கந்தன் கருணை, பல படங்கள் உதாரணம் கூறலாம் இன்றைய பக்திபடங்கள் பயத்தை தான் தரும்) மகாபாரத கதையை கர்ணன் படம் மூலம் அறியவில்லையா நாம்? இன்றைய படங்கள் மூலம் எதை அறிகிறோம் சொல்லுங்கள்? பழி வாங்குதல், ஒரே பாடலில் பணக்காரன் ஆக குறுக்கு வழி... காதலியின் அண்ணனிடம் மறந்து விட பணம் வாங்கி முன்னேறுவாராம் பிறகு அதே காதலியை மணம் முடிப்பாராம்... பார்ப்பவர்கள் முட்டாள்களாக்குபவை இக்கால திரைப்படங்களே......////

இப்படிப்பட்ட திருட்டுதனங்களையெல்லாமா கத்துதருது...அடப்பாவமே....
வீரத்தை வளர்க்கும் அந்தகால படங்களைப்போல் வருமான்னு பிரியா கேட்கராங்கப்பா......

///***//சிறிதும் சினிமாத்தனம் இல்லாத சிறந்த படம்// தூரத்தில் இருந்து பார்த்து முகம் சரியா தெரியாம, அம்மா பொண்ணு வித்தியாசம் தெரியாம லவ் பண்றது, யாருன்னே தெரியாத பொன்னுக்காக ஒரு நாள் ஈT கம்பெனிக்கு லீவ் போடுவது, அவளையே லவ் செய்வது எல்லாம் சினிமாத்தனம் இல்லையா? ////

இவற்றீல் இல்லையா சினிமாத்தனம்....... பிரியாவிற்கு பதில் சொல்ல வாங்க இக்கால அணியே......

மேலும் சில பதிவுகள்