முருங்கைக்கீரை பொரியல் - 2

தேதி: August 12, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

முருங்கைக்கீரை - ஒரு கட்டு
பூண்டு - 4 பல்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6 இலை
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
தனியா பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 1/2 கப்


 

வேர்க்கடலையை சிம்மில் மூன்று நிமிடம் வறுத்து பொடித்து கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்கு ஆய்ந்து இலைகளை உருவி எடுத்து கொள்ளவும்.
முருங்கைக்கீரையை ஒரு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு போட்டு கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போடவும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவும். வதங்கியவுடன் வேகவைத்த முருங்கைக்கீரையை போடவும்.
மஞ்சள் பொடி மற்றும் உப்பை அதில் போட்டு 2 நிமிடம் சிம்மில் வைத்து வதக்கவும்.
இறக்கும் முன் மிளகாய் பொடி மற்றும் வேர்க்கடலை பொடியை போட்டு கிளறி விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்