க்ரிஸ்பி க்ரஸான்ட்

தேதி: May 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பஃப் பேஸ்ட்ரி - ஒரு சீட்டு
முட்டை - ஒன்று
நெட்டல்லா ஜாம் - ஒரு கப்
பட்டர் - தேவையெனில்


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். முட்டையை சிறிது நீருடன் கலக்கி அடித்து கொள்ளவும்.
பேஸ்ட்ரி சீட் ஒன்றை எடுத்து, மைதா மாவு சிறிது தூவி, கொஞ்சம் தேய்த்துக் கொள்ளவும்.
அந்த சீட்டை சரி சமமான, நான்கு பாகமாக அறுத்துக் கொள்ளவும்.
அறுத்த ஒரு துண்டின், இடையில் மூலைவிட்டத்தில் அறுத்துக் கொள்ளவும்.
பின் அந்த ஒரு துண்டில் ஜாமை சிறிது பெரிய பங்குள்ள இடத்தில் வைக்கவும். சுற்றியும் உள்ள மாவின் ஓரத்தில் முட்டையை தடவி விடவும்.
அதை அப்படியே சுருட்டி, முக்கோணத்தின் முனையை சுற்றி மூடி விடவும். ஜாம் வெளிவராதபடி மாவினை ஓரங்களில் அழுத்தி விட்டு மூட வேண்டும்.
ஒரு சீட்டை நான்காக வெட்டி, நான்கு துண்டுகளையும், மீண்டும் அதை முக்கோண வடிவில் வெட்டுவதால் நமக்கு 8 துண்டுகள் கிடைக்கும். சுருட்டிய அனைத்திலும் முட்டையை நன்கு தடவவும்.
350 டிகிரியில், முற்சூடு செய்யப்பட்ட அவனில் 20 நிமிடம் வைக்கவும்.
நன்கு பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.
பவுடர்ட் சர்க்கரையை அதன் மீது தூவி பரிமாறவும். சூடான, க்ரிஸ்பியான அலாதி சுவையுடைய க்ரஸான்ட் ரெடி

இந்த பேஸ்ட்ரி சீட்டு கடைகளில் ஃப்ரோஸன் செக்சனில் கிடைக்கும். இன்று செய்ய வேண்டும் எனில் முதல் நாள் இரவே ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். முட்டை பயன் படுத்தாதவர்கள் வெண்ணெய்யை பயன்படுத்திக் கொள்ளலாம். முட்டையை பயன்படுத்துவதால், வெளிப்புறம் நல்ல பொன்னிறமாக மாறும். நெட்டல்லா என்பது ஒரு பிராண்ட் தான். அது இல்லாதவர்கள் சாதாரண கிசான் ஜாமைக் கூட பயன்படுத்தலாம். ஆனால் இது போன்ற க்ரிஸ்பி இனிப்புகளுக்கு பழங்களினால் ஆனா ஜாமை விட சாக்லேட் ஜாம் தான் அருமையாக இருக்கும். சில நிமிடங்களில் விரைவாக, குறைவான பொருட்களை வைத்து, எதிர்பாராமல் வந்த விருந்தாளிகளையும், பார்ட்டிகளுக்கு வருபவர்களையும் அசத்தக் கூடிய, குட்டிஸ்களுக்கு விருப்பமான இனிப்பு இது. ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்ய தூண்டும் சுவைக் கொண்டது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்... சூப்பர் என்னோட ஃபேவரட் ரெசிபி. நானும் இதை ஒரு முறை செய்யனும்னு நினைச்சுட்டே இருந்தேன். இப்போ ரம்யா செய்த பிறகு செய்யாம இருக்கலாமோ... செய்துருவோம் சீக்கிரமே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ரம்யா,

முதல்ல பாத்ததும் ஏதோ நான்-வெஜ் ஐட்டம்னு நினைச்சேன்:)

நல்லா டேஸ்ட் ஆக இருக்கும்னு நினைக்கிறேன்.

சீக்கிரம் செய்யக் கூடிய குறிப்பு. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ரம்யா,

நீங்களும், ஹர்ஷாவும் தொடர்ந்து ஒரே பேக்கிங் ரெசிப்பீஸா கொடுத்து அசத்திட்டு இருக்கிங்க... ;) க்ரிஸ்பி க்ரஸான்ட், கட்டாயம் குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடித்தமானதா இருக்கும். நீங்க ரொம்ப அழகா, தெளிவா செய்து காட்டியிருக்கிங்க. வாழ்த்துக்கள் ரம்ஸ்!

வனி, சேம் பின்ச்! நானும்கூட இதை கொஞ்ச நாள் முன்னாடி செய்து பார்க்கனும்னு யோசிச்சி, பேஸ்ட்ரி ஷீட் கூட வாங்கி ஃப்ரீசரில் இருக்கு! :) இப்ப, ரம்யா வேற செய்து காட்டிட்டாங்க இல்ல..., நாமளும் செய்துடுவோம்! ;)

அன்புடன்
சுஸ்ரீ

Ramya crossiant looking yummy. My son love crossiant i will make for him thank u for sharing simply and super receipe

க்ரிஸ்பி க்ராஸண்ட் பார்க்கவே சூப்பரா இருக்கு.கண்டிப்பா எங்க வீட்டு குட்டீஸ்க்கு செய்து கொடுக்கிறேன்.ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.படங்களும்,விளக்கங்களும் வழக்கம் போலவே தெளிவு.வாழ்த்துக்கள் ரம்ஸ்.

ரெண்டு தான் இருக்கு மிச்சம் எங்கே? சுலபமான குட்டீஸின் பேவரைட் குறிப்பிற்கு வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரம்யா இப்போதான் செய்து அவன்ல இருந்து எடுத்து வச்சிட்டு வரேன்.நல்லா வந்துருக்கு ரம்யா :) இப்போதான் முதல் முறை செய்கிறேன்.ஆனா பேஸ்ட்ரி ஷீட்ஸ் இரண்டு வைத்து சுருட்டினேன்.நல்ல பெருசா வந்துருக்கு.நன்றி ரம்யா குறிப்புக்கு.எனக்கும் இனி க்ரசான்ட் செய்ய தெரியுமே ;)வாழ்த்துக்கள்

Kalai