சம்மர் சமாளிஃபிக்கேஷென்ஸ்!!!

கத்திரி வருவதற்கு முன்னாலே வெயில் காட்டு காட்டுன்னு காட்டுதுனா.....எப்படி தான் சாமாளிக்க போறோமோ? வெயில் ஒரு பக்கம், வியர்வை ஒரு பக்கம், அதனால் வரும் வியர்க்குரு ஒரு பக்கம் புடுங்க, ஹை ஜாலி ஸ்கூல் லீவ் என்று பிள்ளைகள் மறுபக்கம் பிடுங்க, இனி வெகேஷன் வேற ப்ளான் பண்ணனும்...எல்லாத்தையும் நெனச்சா தலை சுத்துதேன்னு சொல்லாத குடும்பதலைவியே இருக்க முடியாது.

குழந்தைகளுக்கு லீவ் விட்டா அவர்களுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கொண்டாட்டம் தான். அறக்க பறக்க எழுந்து டிபன் செய்து பிள்ளைகளை எழுப்பி கிளப்பி அனுப்ப வேண்டாம். மாலை வீட்டுக்கு வந்ததும் டிபன் தந்து ட்யுஷன் அனுப்ப வேண்டாம், பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டாம், ஹோம்வர்க் செய்ய வைக்க பாடு பட வேண்டாம். ஆனால் அதை விட பெரிய தலைவலி அவர்களை எப்படி லீவில் சமாளிப்பது?

கோடை என்றாலே சுற்றுலா தான் அதற்காக பிளானிங் வருடம் முழுக்க ஓடினாலும் எப்படிடா எல்லாத்தையும் சமாளிச்சி கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரபோறோம்?

வெயிலை எப்படி சமாளிப்பது? விடுமுறை என்றாலே விருந்தாளிகளுக்கு பஞ்சமில்லை. அவர்களை எப்படி சமாளிப்பது. மின்சாரம் இல்லாமல் வீட்டில் உள்ள வெப்பத்தை எப்படி சமாளிப்பது? உடல் சூட்டல் வரும் அவதியை எப்படி சமாளிப்பது?

இப்படி நிறைய சமாளிஃபிக்கேஷென்ஸ் இருக்கும்....எல்லாத்தையும் இங்கே போட்டு உடைங்க. வாங்க ஹோம் மேக்கர்ஸ்......பெஸ்ட் ஹோம் மேக்கர் அவார்ட் வாங்க ரெடியா? டிப்ஸ் குவியுங்கள்.

இந்தியாவில் எங்கள் வீட்டில் வெப்பத்தை குறைக்க தினமும் மாடியில் தண்ணீர் ஊற்றுவோம்.

எல்லா ஜன்னல்களிலும் வெட்டிவேர் தட்டி கட்டி உள்ளோம். அவ்வபோது ஒரு ஸ்ப்ரெயர் கொண்டு அதில் தண்ணீர் தெளித்து விட்டுக் கொண்டே இருப்போம்.

திரைசீலை கரு நீளம் அல்லது அடர்ந்த பச்சை நிறத்தில் போட்டு வைத்து வைத்தால் வெயில் அந்த அளவுக்கு உள்ளே வராது.

வெள்ளரிக்காயில் ஒரு டயட் ட்ரின்க் செய்து வைத்து அதை குடித்துக் கொண்டே இருப்போம்.

சில நேரங்களில் வெள்ளரிக்காய் கசக்கும். அந்த கசப்பை நீக்க அதனுடைய நுனியை வெட்டி அந்த வேட்டியை சிறு துங்கு வைத்து மீதமுள்ள வெள்ளரிக்காயின் வெட்டுப்பட்ட பக்கத்தில் வைத்து தேக்க வேண்டும். அப்பொழுது நுரை போல வரும். அதை கழுவி விட்டு சாப்பிட்டு பாருங்கள். கசப்பே தெரியாது!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எப்பொழுதும் ஒரு ஸ்ப்ரே பாட்டலில் தண்ணீர் வைத்துக் கொண்டு (பிரிட்ஜில் கூட வைத்திருக்கலாம்) அடிக்கடி எடுத்து மேலே ஸ்ப்ரே செய்துக் கொள்ளலாம். அப்படி செய்வதால் நெரம்பில் பாயும் ரத்தத்தின் வெப்பத்தை தணிக்கலாம்.

நாம் ஸ்பைசியான உணவையே சாப்பிட்டு பழக்கமானவர்கள். இப்படி சூடான நேரத்தில் இவ்வளவு கார சாரமான உணவை ஏன் நம் முன்னோர்கள் பழக்கப் படுத்தி உள்ளார்கள் தெரியுமா? மிளகாயில் உள்ள கேப்சைசின் வியர்வையை வர வைக்கிறதாம். அதானால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்கிரதாம். அதனால் சம்மரில் காரம் கண்டிப்பாக சாப்பிடலாம்.
-----------------------------------------------------------

இந்த சம்மரில் குழந்தைகளை வீட்டிலே எப்படி வைத்து சமாளிப்பது? ஸ்கூல் இல்லையென்றால் அவர்களுக்கும் போர் அடித்து தான் போகும். அதனால் தான் ஏன் குழந்தைக்கு நிறைய சம்மர் கிளாசில் போட்டுள்ளேன். சம்மர் என்றால் கண்டிப்பாக கொண்டாட்டம் தான். அதனால் படிப்பு சமந்தமான எந்த கிளாசும் கிடையாது. எல்லாம் கிராப்ட், ஸ்விம்மிங், ஜாஸ் இப்படியாக சில கிளாசில் போட்டுள்ளேன் இப்போதைக்கு.

அதே போல் அவளுடைய பள்ளி தோழர்களின் நம்பர்களை வாங்கி வைத்துள்ளேன். பதினைந்து நாட்களுக்கொரு முறை அல்லது வாரம் ஒரு முறை (எப்படி சாத்தியமோ) அவர்களுக்கு பேசி ஒரு சரியான நேரம் பார்த்து எல்லோரும் ஒரு பார்க்கில் மீட் பண்ணி விளையாட வைக்கலாம். இல்லையென்றால் யார் வீட்டில் அதிகம் இடம் இருக்கோ அவர்கள் வீட்டிலும் மீட் பண்ணலாம். ஒரு ப்ளே டேட் ஏற்பாடு பண்ணலாம்.

இங்குள்ள தீம் பார்க்குகளில் சீசன் பாஸ் எடுத்து வைத்துள்ளோம். அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் போய் வரலாம்.

அடுத்த பதிவில் எப்படி ட்ரிப் ப்ளான் பண்ணி உள்ளோம் என்பதை சொல்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு லாவண்யா,

இங்கே சென்னையில் வெயில் தாங்க முடியாத அளவு இருக்கு. வருஷத்துக்கு வருஷம் கூடிட்டேதான் போகும் போல:(

முக்கியமாக சாஃப்ட் ட்ரிங்க்ஸ் வாங்கறதேயில்லை. அதுக்கு பதிலாக, எலுமிச்சம்பழம் வாங்கி, சர்க்கரையும், துளி உப்பும் கலந்து வச்சு, குடிக்கிறோம். ஆனா, சீசன் என்பதால் பழம் விலை கூடிட்டே இருக்கு. சைஸ் சின்னதாகிட்டே இருக்கு.

தினசரி செய்யும் முக்கியமான வேலை - தயிரை நல்லாக் கடைஞ்சு, பெருங்காயம், இஞ்சி, கருவேப்பிலை, உப்பு போட்டு வச்சுடறோம். எவ்வளவு டைல்யூட் பண்ண முடியுமோ, அந்த அளவு நீர்க்க தண்ணீர் சேர்த்து, அப்பப்ப குடிச்சுட்டே இருக்கோம். வியர்வையில் சளி பிடிச்சுடுங்கறதால, ஃப்ரிஜில் வைத்ததை அப்படியே குடிக்காம, கொஞ்ச நேரம் வெளியில் வைத்திருந்து, சில்னெஸ் மாறினதும் குடிக்கிறோம்.

சாதம் கொஞ்சம் அதிகமாக வச்சு, தண்ணீர் ஊற்றி வைச்சுடறோம். காலையில் சாதத்தைப் பிழிஞ்சு, நல்லெண்ணெய் ஊற்றி, சாப்பிடறோம். நீராகாரம்(சாதத்தில் ஊற்றிய தண்ணீர்) உப்பு கலந்து, குடிக்கலாம். இப்படி நல்லெண்ணெய் ஊத்தி, சாப்பிடறதுக்கு, புழுங்கலரிசி சாதம் நல்லாயிருக்கும்.

வெள்ளரிக்காய் துருவி, தயிரில் போட்டு வைக்கிறேன். சில சமயம், வில்லைகளாக நறுக்கி, உப்பு, மிளகுத்தூள் தூவியும் வைக்கிறேன். இதுவும் நல்லா குளிர்ச்சியாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

நல்லா இருக்கே இந்த ஐடியா எல்லாம்... என் குட்டீஸ்க்கு இன்னும் கைவினை அது இதுன்னு சேர்த்து விடும் வயதில்லை... ஆனா எனக்கு தெரிஞ்ச யோசனைகளை பகிர்ந்துக்கறேன்.

1. இளநீர், எலுமிச்சை ஜூஸ், மோர்னு போகலாம். கூல் ட்ரின்க்ஸ், பக்கெட்டில் வரும் ஜூஸ் மிக்ஸ், இதெல்லாம் அவாய்ட் பண்ணலாம். குழந்தைகளுக்கு வீட்டில் ரோஸ் மில்க் பொன்றவை செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொடுக்கலாம்.

2. வெள்ளரிக்காய் மற்றும் இந்த சீசனில் கிடைக்கும் பழங்களில் தர்பூசணி போன்றவை வாங்கி வைக்கலாம். சாலட் போல தினமும் உணவில் சேர்க்கலாம்.

3. சீசனல் ஃப்ரூட்ஸ் மிஸ் பண்ணாம சாப்பிடனும்.

4. லஸ்ஸி போன்றவை வீட்டில் செய்தால் தினமும் குழந்தைங்களுக்கு கொடுக்கலாம்.

5. பிள்ளைகளை எதாவது நமக்கு உதவி செய்ய வைக்கலாம்... என் பிள்ளைகள் என்னை சமைக்க விடலன்னா காய் எடுத்து கொடுக்கும் வேலை எல்லாம் சொல்வேன்... இப்போதைக்கு அவங்களால் முடிஞ்சது இது தான் :) அதை கொண்டு வா, இதை கொண்டு வா... அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு... உடனே சேட்டையை விட்டுட்டு நல்ல பிள்ளைகளா வந்துருவாங்க ;) எப்பவும் ஒர்கவுட் ஆகுது... ஆனா பெரும்பாலும் ஒர்கவுட் ஆகும்.

6. அவங்களுக்கு வரைய நிறைய க்ரயான்ஸ் வாங்கி கொடுத்து வீட்டில் அங்க அங்க சார்ட் ஒட்டி வைப்பேன். அவங்கபாட்டுக்கு கிறுக்கிகிட்டு சுத்துவாங்க.

7. எப்பவும் இது போல் குளிர்ச்சி தரும் பழங்களை கட் பண்ணி டேபில் மேல் வைக்கலாம்... குட்டீஸ் எதாவது சாப்பிடனும்னு தோணும்போது அவங்களே போய் எடுத்துக்குவாங்க.

ம்ம்ம்.... வேற என்ன சொல்ல... இருங்க... மண்டையில் எதாவது தோணுச்சுன்னா நிச்சயம் வரேன்... ;) இப்போ சமையல் என்னன்னு யோசிச்சுட்டே இருக்கு. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்