அரபிக் டிசைன் - 4

தேதி: May 16, 2012

5
Average: 5 (4 votes)

 

ஹென்னா கோன் - ஒன்று

 

முழங்கையின் கீழ் இரண்டு மாங்காய் வடிவம் வரைந்து விருப்பம் போல் நிரப்பவும்.
முதல் மாங்காய் டிசைனை சுற்றி ஒரு பூ டிசைனும், இரண்டாவது மாங்காய் டிசைனை சுற்றி படத்தில் உள்ளது போல் டிசைனும் வரைந்து கொள்ளவும்.
இரண்டாவது மாங்காய் வடிவத்தின் மேல் படத்தில் உள்ளது போல் இலை டிசைன் வரையவும்.
அதன் மேல் பூ இதழ்கள் வரைந்து கொள்ளவும்.
அதன் மேல் மீண்டும் சிறு பூ இதழ்கள் மற்றும் மாங்காய் வடிவம் வரைந்து கொள்ளவும்.
விரல்களில் சிறு மாங்காய் வடிவங்கள் வரைந்து முடிக்கவும். சுலபமாக போடக்கூடிய டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு இந்த டிசைன் பட் எனக்கு இந்த டிசைன் போட்ருக்க கைல தான் டவுட் உள்ளங்கை மாதிரியே தெரில பின் பக்கம் போட்ருக்க டிசைன் நு நெனச்சேன் கா எப்புடியோ எனக்கு போட்டு பார்க்க டிசைன் கிடைச்சாச்சு நன்றி அக்கா வாழ்த்துக்கள் இன்னும் நிறையா போட் அனுப்புங்க by Elaya.G

டிசைனை வெளியிட்ட அன்பு அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இளையா... முதல் பதிவு உங்களுடையதா??? எவ்வளவு நாளாச்சு... கையை பார்த்து குழப்பமா??? அது என் கை இல்லை... எங்க வீட்டில் ஒரு குட்டி மாடலோட கை. ;) இவருடைய அக்கா பொண்ணு. அவசியம் போட்டு பாருங்க. சுலபமா வரும். போட்டோ அனுப்ப மறக்கபுடாது. நன்றி இளையா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டிஷைன் நன்றாக இருந்தபோதும் படங்கள் முன்புபோல் இல்லையே?

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஆமாங்க... என் கேமரா இல்லை. இதில் உள்ள செட்டிங்ஸ் அடஜ்ஸ் பண்ண அப்போது நேரமும் இல்லை. குழந்தைகள் கை வேறு... எடுக்க கூடிய சூழலும் சரியா இல்லை. எனக்கே பார்த்ததும் சரி இல்லைன்னு தோணுச்சு, இருந்தாலும் குட்டீஸ் ஆசைப்படுவாங்கன்னு அனுப்பிட்டேன். மன்னிக்கனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் முயற்சி என்றுமே பாராட்டுக்குரியது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மெஹெந்தி டிசைன் ரொம்ப அழகாக இருக்கு... போட்டு பார்க்கனும்னு ஆசையா தான் இருக்கு... ஆனா என்னவருக்கு இதையெல்லாம் ரசிக்கிற அளவு நேரம் இல்லை. ஆளே இல்லாத கடையில் யாருக்கு டா டீ ஆத்துரே கதையா விட்டுடறது. அனால் உங்க டிசைன்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிட்டிருக்கேன். இந்தியா போகும்போது தான் ட்ரை பண்ணனும்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Jaypon... நன்றி :)

பிரேமா... மிக்க நன்றி. மெதுவா ஊருக்கு வந்து போடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்பவும்போல... டிசைன் அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்

உங்க பின்னூட்டம் இல்லன்னா என் கைவினை குறிப்புகள் ரொம்ப ஃபீல் பண்ணும்... :(

இத்தனை நாள் இடைவெளிக்கு பின் உங்க பின்னூட்டம் காண்பது தெம்பா இருக்கு :) மிக்க நன்றி இமா. செபா ஆண்ட்டியை ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்கோ. ஐ மிஸ் ஹர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா டிசைன் அட்டகாசமாகவுள்ளது.

எப்படி இருக்கீங்க?? எங்க ரொம்ப நாளா காணோம்?? பிசியா இருக்கீங்களா? இனி வருவீங்க தானே??? மிக்க நன்றி கீஃபா... வெகு நாட்களுக்கு பின் உங்க பின்னூட்டம் பார்த்தது உற்சாகம் தருது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா