Terminating Pregnancy

நான் அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.

நான் பத்து வாரம் கர்ப்பமாக உள்ளேன். நேற்று ஸ்கேன் பண்ண சென்றோம்.

குழந்தை இதய துடிப்பு இல்லாமல் உள்ளது தெரிய வந்தது. டாக்டர் கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார். இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் எப்படியும் இயற்கையாக கரு சிதைவு உண்டாகுமாம்.

இயற்கை கரு சிதைவிற்கு காத்திருக்கலாமா அல்லது டாக்டர் சொன்ன படி செயற்கையாக கலைப்பது தான் நல்லதா?

D&E (Dilation & Evacuation) is the name of the procedure to terminate the pregnancy. The procedure has its own risk. Is it necessary to take the risk as it is just 10 weeks in the pregnancy. Is it better to wait for the natural miscarriage to happen? Please suggest what to decide.

நான் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள்.

நீங்க தனியா என்றால் வீட்டில் தானாக சமாளிக்க வேண்டும்.அந்தளவுக்கு தைரியம் இருந்தால் அல்லது ஒருவர் துணையிருந்தால் காத்திருக்கலாம்(பக்கத்து வீட்டுகாரங்க,தோழிகள்) இல்லையென்றால் டி & சி செய்வது நல்லது..மருந்து செலுத்தி பிரசவம் போல செய்வார்கள் அப்படி முடியுமா என்று பாருங்க அது நல்லது என்று கேள்விபட்டிருக்கேன்

அன்புத்தோழி அவர்களுக்கு...... நீங்க டாக்டரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வதுதான் நலம். இயற்கை முறையில் ஆகும் என்றால் அது நடக்கும் வரை உள்ளுக்குள் வேறு ஏதாவது பாதிப்பை உண்டு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாகும். எனவே இந்த சந்தேகத்தை உறுதி செய்துகொண்டு உங்கள் டாக்டரை கலந்தாலோசித்து இயற்கையோ செயற்கையோ உங்களின் கருப்பை ஆரோக்கியத்தை பொருத்து முடிவெடுங்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

என் சகோதரிக்கு (D&C) செய்தார்கள்,ஆனால் அதன் பின்பு இதுவரை கருத்தரைக்கவே இல்லை..அதை (D&C) செய்தபோது ரொம்ப க்‌ஷ்டபட்டாள்,

உங்களூக்கு 10 வாரம் தானே ஆகுது, பயப்படவேண்டாம்.. உங்க டாக்டரிடம் ஏதாவது மருந்து,மாத்திரை சாப்பிட்டு,தானே வெளியேற்ற வழி இருக்கா என கேட்கவும்...

எனகு தெரிந்தவருக்கு இதய துடிப்பு இல்லாத கரு 2 மாதங்களீள்,தானே வெளீயேரியது,அப்படி ஆகும்பொது வயிற்று வலி இருக்கும்,2 ,நாள் ஓய்வாகவே இருக்கனும்,, ஆனால் அதன் பின்பு நல்ல சத்தான உணவும்,ஓய்வும்,மன அமைதியும் அவசியம்,
பின் சில மாதங்கலில் தானே கருத்தரிக்கும் வாய்ப்புண்டு.. கவலை படாதிங்க... உங்கள் அம்மாவிடம், சகோதரியிடம் கேளுங்க...

மேலும் நம் தோழிகல் வந்து சொல்லுவாங்க..

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

Have to undergo another ultrasound today. Will have to decide after that.

Thank you everyone for your suggestion.

Have to undergo another ultrasound today. Will have to decide after that.

Thank you everyone for your suggestion.

மேலும் சில பதிவுகள்