பருப்பு கீரை கூட்டு

தேதி: May 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.8 (4 votes)

 

கீரை - 1 கட்டு(தண்டுகூரை,முளைகீரை,அரைகீரை,சிறுகீரை,பாலக்,பருப்புகீரை)
பாசிப்பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணை - 1 ஸ்பூன்


 

முதலில் பாசிப்பருப்பில் உப்பு தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு இறக்கவும்
பின்பு ஒரு கடாயில் எண்ணை காயவைத்து வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை வதக்கி கீரையும் வெந்த பருப்பும் சேர்த்து வேக விடவும்
கீரை வெந்ததும் இறக்கி விடவும்


வெறும் சுடுசாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.தண்ணீரை வற்ற வைத்தும், நீர்த்தும் கூட செய்யலாம். (திருமதி. சுமிபாபு அவர்கள் இந்த குறிப்பை பார்த்து செய்து எடுத்த படம்).

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா.. மிக எளிமையான சத்தான கூட்டு. நான் வெங்காயம் மற்றும் மற்றவைகளை தனியாக தாளிக்காமல் கீரையுடனே சேர்த்து வேகவைத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து பின்னர் கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி விடுவேன். இந்த முறையிலும் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நன்றி ரங்கலஷ்மி ..உங்களை போன்றவர்களின் உற்சாகம் ரொம்ப சந்தோஷம் தருது..என் அம்மா இப்படி தான் செய்வாங்க மைல்டா மற்ற அதிகம் வாசனை எதுவுமில்லாமல் இருக்கும்.செய்து பாருங்க கட்டாயம்

தளிகா.. மிக எளிமையான சுவையான கூட்டு.. என் மகனுக்கு ரொம்ப பிடித்து விட்டது. சுடு சாதத்தில் நெய் விட்டு உங்கள் பருப்பு கீரை கூட்டுடன் விரும்பி சாப்பிட்டான். ரொம்ப நன்றி தளிகா...:) படங்களை இணைத்துள்ளேன்... வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப ரொம்ப சந்தோஷம் சுமி..உங்கள் மகனுக்கு பிடித்தது எனக்கு கூடுதல் சந்தோஷம்.என்னை ரொம்ப சந்தோஷப்படுத்தறீங்க சுமி