வெங்காயச் சட்னி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5 கிராம்
புளி - 5 கிராம்
கடுகு - அரைத்தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய் காம்பை நீக்கி கல் உரலில் வெங்காயம், பச்சைமிளகாய், புளி, உப்பு அகியவற்றைப் போட்டு நன்றாகவும் கெட்டியாகவும் அரைத்து எடுத்தக் கொள்ளுங்கள்.
மிக்ஸியிலும் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அதிகம் தண்ணீர் விடாமல், கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
கடுகு, உளுத்தம்பருப்பைத் தாளித்து உபயோகிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்