ஈசி கிட்ஸ் பாஸ்தா சமையல் குறிப்பு - 22744 | அறுசுவை


ஈசி கிட்ஸ் பாஸ்தா

food image
வழங்கியவர் : Ms. Moorthy, USA
தேதி : செவ்வாய், 22/05/2012 - 02:00
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
பரிமாறும் அளவு : 3

 

 • பாஸ்தா - 2 கப்
 • காரட், பீன்ஸ், பட்டாணி, சோளம், பிராக்கோலி - 1கப்
 • மிளகு தூள் - 1/2 tsp
 • பூண்டு - 2
 • பால் - 2 tbsp
 • முட்டை - 1
 • ஆலிவ் எண்ணெய் / பட்டர் - 3 tbsp
 • ட்ரைட் பார்ஸ்லி - 1/4 tsp
 • சீஸ் - 1/4 கப்
 • உப்பு - தேவையான அளவு

 

 • காய்கறிகளை உப்பு சேர்த்து முக்கா பதத்திற்கு ஸ்டீம் செய்து எடுத்து வைக்கவும். ரொம்பவும் வெந்து குழைந்து விடக் கூடாது.
 • ஆறு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து எட்டு முதல் பத்து நிமிடம் வேகவைக்கவும்.
 • (பாஸ்தா வகையை பொருத்து வேகும் நேரம் மாறலாம்)
 • வெந்ததும் தண்ணீரை முற்றிலும் வடிக்கட்டி வைக்கவும்.
 • வேகவைத்த பாத்திரத்திலே இருந்தால் ஒட்டிக் கொள்ளும் அதனால் எடுத்து வேறு ஒரு வாய் அகன்ற பாத்திரம் அல்லது தட்டில் கொட்டி வைக்கவும்.
 • மேலே ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் தெளித்து விடவும்.
 • ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிகவும் பொடியாக நறுக்கிய (அல்லது துருவிய) பூண்டு சேர்த்து வாசம் வரும் வரையில் வதக்கவும்.
 • பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
 • நன்கு வெந்ததும் காய்கறிகள் மற்றும் பாஸ்தாவை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
 • பால் சேர்த்தவுடன் மிளகு தூள் பார்ஸ்லி தூவவும். தேவைப்பட்டால் உப்பு மேலே தூவலாம்.
 • உடனே அடுப்பை அனைத்து மேலே சீஸ் தூவி பரிமாறவும்.
 • சுவையான சுலபமான கிட்ஸ் பாஸ்தா ரெடி.
பால் சேர்ப்பதால் ஆறியபின் பாஸ்தா ட்ரை ஆகாமல் இருக்கும். சீஸ் முட்டை இல்லாமலும் செய்யலாம்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..