சுண்டைக்காய் பிட்லை

தேதி: August 13, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சுண்டைக்காய் – நூறு கிராம்
துவரம் பருப்பு – நூறு கிராம்
தக்காளி – ஒன்று
புளி – ஒரு நடுத்தர எலுமிச்சையளவு
மஞ்சள் பொடி – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - மூன்று
எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன்
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு – இரண்டு டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
வரமிளகாய் – ஆறு
மல்லி விதை – இரண்டு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – ஐந்து
தேங்காய் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்


 

புளியை இருநூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். பருப்பில் இருநூறு மில்லி தண்ணீர் விட்டு குழைய வேக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லி விதை, வரமிளகாய், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இவைகளைப் போட்டு சிவக்க வறுத்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி ஆற வைத்து விழுதாக அரைத்து ஐம்பது மில்லி தண்ணீரில் கலக்கி வைக்கவும்.
சுண்டைக்காயை காம்பு நீக்கி இரண்டிரண்டாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். (இல்லையென்றால் கறுத்து விடும்)
தக்காளியை நான்காகவும், மிளகாயை வாய் பிளந்தும் வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள் போட்டு பொரிந்ததும் சுண்டைக்காய், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து மூன்று நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கி புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு பருப்பையும், அரைத்த விழுதையும் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கொதித்ததும் வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றி பத்து நிமிடம் இறுக மூடி வைத்து பிறகு எடுத்து பயன் படுத்தவும்.


சுண்டைக்காயை நறுக்குவதற்கு பதிலாக காம்பு நீக்கியதும் ஒன்றிரண்டாகத் தட்டியும் செய்யலாம். நன்கு கழுவி பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு அதன்மேல் அப்பளக்குழவியை அழுத்தி உருட்டினால் நசுங்கி விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

i have a doubt. what is malli vidhai? is it daniya? i could not understand the last 3 points.

சித்ரா இப்பலாம் பார்க்கறாங்களா தெரியல. அதான் பதில் சொல்ல வந்தேன்.

மல்லி விதை என்பது தனியா தான்.

கடைசி மூனு பாயிண்ட்டில் சொன்னது....

சுண்டைக்காய் வதக்கிய பின் தக்காளியை சேர்த்து அதில் கொஞ்சம் உப்பும் போட்டு நல்லா வதக்கனும். தக்காளி முழுசா இல்லாம நல்லா குழைந்து வரும் இல்லையா... அப்போ புளியை தண்ணி விட்டு கரைச்சு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடனும். அதன் பின் வேக வெச்ச பருப்பும், மிளகாய் தனியா வறுத்து அரைத்த பேஸ்ட்டும் சேர்த்து கொதிக்க விடனும். கடைசியா தனியா கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளிச்சு குழம்பில் சேர்க்க சொல்லிருக்காங்க.

தெளிவா தான் இருக்கு... உங்களுக்கு என்ன புரியலன்னு சொல்லுங்க... நான் அதுக்கு விளக்கம் சொல்றேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Is fresh sundaikai available in Kuwait?

டியர் நூடுல்ஸ்,
குவைத்தில் சுண்டைக்கய் கிடைக்காது.... ஊரிலிருந்து வரும் உறவினர்களை வருவதற்கு முதல் நாள் வாங்கி காம்பு நீக்கி ப்ளாஸ்டிக் கவர்களில் போட்டு கொண்டு வரச் சொல்லுங்கள்....பத்து நாள் வரை வைத்து உபயோகிக்கலாம்.....மதினா ஸ்டோரில் (பாஹீல் மற்றும் அபுஹலிபாவில் உள்ளது) சொல்லி வைத்து வாங்கலாம் என்று சொல்கிறார்கள்.... முயற்சி செய்து பாருங்கள்....

Vazhga Tamil!!!