பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

மிகவும் அழகான தீர்ப்பு லாவகமா சொல்லியிருக்கீங்க..என்னால தொடர்ந்து பங்குகொள்ள முடியாத சூழல்..வனிட்டே சொன்னேன்..அவங்க நட்புக்குத்தான் தீர்ப்பு சொல்லுவாங்கன்னு..தோணுதுன்னு..அது சரின்னு காட்டிட்டீங்க

அருமையான நல்ல தீர்ப்பு...அழகான விளக்கம்...வாழ்த்துக்கள்..:)

என்னை கவர்ந்த வரிகள்

//எல்லா உறவுகளுமே யாருமே சொல்லிக்கொடுக்காமலே தன்னை சுற்றி ஒரு வரைகோடு போட்டுக் கொண்டு உள்ளன. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் பயிர் நாசமாகும். அதே போல் ஒரு உறவின் வரைக்கோடை விட்டு தாண்டினால் அந்த உறவு கலங்கப்படும்.//

//இயற்க்கை எப்படி நம்மை எமாற்றமால் எப்பொழுதும் போல் இருக்கிறதோ நாமும் கூடியமானவரை ஒரு உறவை நட்பென்னும் போர்வைக்குள் மறைத்து வைத்து அதற்க்கு காதல் முலாம் பூசாமல் இருப்போமே//

நீங்க சொன்ன பாட்டு (தோழா தோழா) என்னோட ஆல்டைம் பேவரைட் ..எப்பவும் தூங்கும்போது கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...அதை தீர்ப்பின் கடைசியில் வைத்து நீங்கள் விளக்கம் சொன்னது மனதை நெகிழசெய்தது..!!

எல்லா தோழிகளின் கருத்துக்களும் பளிச்சென்று துலக்கிய குத்துவிளக்கைபோல்
பாங்காக இருந்தது

பங்கு பெற்ற எல்லா உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அடடா பட்டி முடிந்து தீர்ப்பையும் தந்துட்டேனே......பார்க்கலையா.....இல்லை பார்த்துட்டு தான் போட்டீங்களா.....இருந்தாலும் வரவுக்கு மிக்க நன்றி. அடுத்த பட்டி ஆரம்பத்துலே வந்துருங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பட்டியின் தலைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிரன்

உண்மை அன்பு சாவது இல்லை

லாவண்யா..........

தீர்ப்பு மிக அருமை.... இன்று தான் ஊருக்கு வந்தேன்... வந்தவுடன் தீர்ப்பு என்ன ஆச்சினு தான் பார்த்தேன்.... நிஜமா இது தான் முதல் பட்டினு நம்பவே முடியல... அந்த அளவுக்கு பக்குவமான வார்த்தை கோர்வை....... சூப்பர்..... உங்களை ஏமாற்றம் கொள்ள வைத்ததற்கு மன்னிக்க........ பல கருத்துக்கள் சொல்ல முடியல... இப்போ படிச்சா பதில் வாத்ங்கள் பல தோணுது... மிஸ் பண்ணிட்டேன்... இன்னும் பல பட்டிகளுக்கு நடுவரா கலக்க வாழ்த்துக்கள்..........

வனிக்கா........
// இப்படி காணவே முடியலன்னாலும், நினைக நேரமில்லாமல் காலம் நம்மை பம்பரமாய் ஓட விட்டாலும், நெஞ்சில் ஏதோ ஒரு மூலையில் அந்த நட்பு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் நடுவரே. நட்புக்கு நடுவே பாலமாக கடிதமோ, தொலைப்பேசியோ, சந்திப்போ தேவை இல்லை... அன்பை பரிமாறிக்கொள்ளும் அவசியம் அங்கில்லை... எதுவுமே இல்லைன்னாலும் நண்பனே தன்னை வெருத்து ஒதுக்கினாலும் நண்பனுக்காக சிந்திக்கும் மனம்... அதுவே நட்பு. 10 வருஷத்துக்கு அப்பரம் ஏர்போர்ட்டில் சந்தித்தாலும் ஒரு நிமிஷம் இதயம் வித்தியாசமா துடிக்குது பாருங்க... அங்க இருக்கு நட்பு. கால ஓட்டத்தில் பல வருடங்கள் கழித்தும் நினவில் நிற்கும் நண்பன் முகம் கண்ணில் துளி நீரை கொண்டு வந்தால் அங்கே வாழ்கிறது நட்பு. சோகத்திலும் நண்பனின் நினவு முகத்தில் ஒரு புண்ணகையை கொண்டு வந்தால் அங்கே வாழ்கிறது நட்பு. எதிர் அணி கேட்ட இலக்கணம்...// அருமை அருமை... என் நண்பன் முகம் நிழலாடுகிறது... கண்களில் கண்ணீர் வந்தது... சூப்பர் ஆண் பெண் நட்பின் அருமையை அழகாக எடுத்து கூறி இருக்கீங்க....

மிக தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்....

நட்பு நட்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அருமையான தீர்ப்பினை வழங்கி அதற்கு நியாயமான விளக்கத்தையும் வழங்கிய நடுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள். வெற்றி பெற்ற அணியினருக்கும், வாதிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். நான் பங்கேற்ற முதல் பட்டியிலேயே என் அணி வென்றது நானே வென்றது போன்ற உணர்வு. இதற்காக ஸ்பெஷல் தாங்க்ஸ் நடுவருக்கு.....

நன்றிகளோடு...
அபி.

வாழ்க வளமுடன்

மகுடம் கனக்கச்சிதமாக பொருந்தி உள்ளதாக பாராட்டு வந்துள்ளது. மிகவும் நன்றி. இப்படி தாங்க ஒவ்வொரு முறை நீயா நானா நடுக்கும் போது வக்கீலை நாடும் அளவுக்கு எங்க வீட்டுலேயும் போயிடும் ;) கண்டிப்பாக இந்த தடவை தோழிகள் நட்பின் இலக்கணத்தை பற்றி பேசியதை பார்த்து நட்பின் மேல் காதலே வந்து விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ;) கவனிக்கும் நட்பின் மேல் தான் காதால்.....நட்பாக உள்ளவர் மேல் இல்லை!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கு மிக்க நன்றி ச்சாந்தினி! மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை.....சொல்லக் கூடாது....தப்பு தப்பு.....மீண்டும் சந்திப்போம்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்