பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

தோழிகளே எனக்கு இங்கே நள்ளிரவு ஆகிவிட்டமையால் நாளை வந்து உங்களின் பதிவுகளுக்கு பதில் பதிவு கொடுக்கிறேன். தொடர்ந்து வந்து உங்களின் வாதங்களை குவித்து என்னை மேலும் குழப்பி தெளிவாக்குங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

so simply lovers ys irukum pothu athu avanga rendu perum matum pothum avanga adjust pannipanga but avangaluku marriage aaiduchu na rendu peru vitulayum konjam mavathu manasu sangadam irukum athu eathulayavathu chinna problem ya veliya vanthurum. aana friends ya irunthu ta eppavum athu avanga rendu perukula matum than athu nala entha problem yum varathu appadiye vanthalum konja nalla sari aaidum avanga problem la unna pathi munnadi ye theriyama pochu nu vartheye varathu enna solreanga

நட்பு -- காதல் இரண்டுக்கும் நூல் அளவு தான் இடைவெளி. ஆனால் அந்த இடைவெளியை யாராலும் அளவுகோல் போட்டு அளக்கவே முடியாது. நமக்கு கணவராக வரக்கூடியவர் நம்மை நல்லா புரிந்தவரா இருக்கனும்ன்னு தானே ஆசை படுவோம். நல்லா புரிந்து கொண்டாலே போதும் அங்கு வேறு எந்த பிரச்சனைக்கும் இடமில்லை. அனைத்துக்கும் பை பை சொல்லிவிடலாம். ஏன் நம்மை கரம் பிடிப்பவர் கூட நமக்கு நல்லா நண்பனாக இருக்க வேண்டும் என்று தானே அனைவரும் நினைக்கின்றோம். அது ஏன் ? ஏன்னா நண்பனைப்போல் நம்மை இந்த உலகத்தில் புரிந்து கொண்டவர் ஒருவரும் இல்லை.ஒரு நல்லா நண்பனால் மட்டும் தான் நாம் அழும் போது தோல் குடுத்து ஆறுதல் சொல்ல முடியும். அதே போல் தான் சந்தோசத்தை இரட்டிப்பாக்கவும் முடியும்.

காதலர்கள் நல்ல நண்பர்களாக வாழும் போது. நல்ல நண்பர்கள் மட்டும் காதலர்களாக மாறக்கூடாத ?

ஒரு மலர் எப்போது பூக்கும் எப்படி பூக்கும் அப்படின்னு யாரவது நேரம் குறித்து தர முடிமா ? அதே போல் தான் காதலும் எப்போது வரும் எப்படி வரும்ன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல வர வேண்டியவருக்கு கண்டிப்பா வந்திடும். இத யாராலும் தடுக்க முடியாது.

நல்லா புரிந்து கொண்ட இரு நண்பர்கள் இல்லறம் என்னும் ஓர் புனித பயணத்தில் இணைந்தால் அவர்கள் வாழ்க்கை அன்பு, சந்தோசம், புரிதல், ஊடல், கூடல் என அனைத்தும் கலந்த நவரசமாகி சொட்டும். புரிந்து கொள்ளாத கணவர் வாழ்க்கை துணையாக அமைந்தால் மனைவி பாடு திண்டாட்டம் தான்.

நண்பர்கள் காதலர்களாக மாறலாம் மாறலாம் மாறலாம்

மறுபடியும் வருவேன் ..........

ஜென்னிவினோ

Dare To Paly With Life

நடுவரே முடிவு செய்தாயிற்று அணியை.. நண்பர்கள் காதலர்களாக மாறக் கூடாது என்பதே என் வாதம்..

தலைப்பிலேயே தெளிவாக இருக்கிறது ”நண்பர்கள்” என்று பின் எப்படி அவர்களைக் காதலர்களாக்குவது.. ;))

தவிர நடுவரே எனக்கு தலைப்பைக் குறித்து சிறு விளக்கத்தைக் கொடுத்தால் சற்றே வசதியாக இருக்கும்.. அதாவது நட்பில் துவங்கி காதலில் முடியும் உறவு சிறந்ததா? இல்லை கண்டவுடன் காதல் உணர்வு ஏற்படுவது சிறந்ததா என்பதா இங்கு தலைப்பு? ஏனெனில் எதிரணியில் வாதங்கள் எல்லாம் அதை மையப்படுத்தியே இருப்பது போல் உள்ளது.

அதுதானே எங்க தலைப்போட குழப்பம் இன்னும்வரலியேன்னு…இவங்க குழம்பிட்டு எங்கள குழப்பறதா எதிரணி நக்கீரி சொன்னா வேடிக்கையால்ல இருக்கு ;)

சரி எங்கணி சார்பா எங்களுக்கான தெளிவை இங்க வைக்கிறேன்..

திருமணத்துக்கு பிறகு கணவன்,மனைவி காதல் சரிதான்றதில சந்தேகம் இல்ல நமக்கு அத விட்டுடலாம்...

ஆனா. திருமணத்துக்கு முன்பு காதல் சரியா?தவறான்னு பார்க்கறப்ப தவறுன்னு நினைச்சா இந்த தலைப்புக்கே அவசியமில்ல..எல்லா காதலும் தவறுதான்னு போயிட்டே இருக்கலாம் வாதாட வேண்டாம்..

திருமணத்துக்கு முன்பு காதல் சரி ஆனா எந்த காதல் சரி கண்டதும் பிடித்து சட்டுபுட்டுன்னு வீட்டில சொல்லி திருமணம் பண்ணிக்கற காதலா..இல்ல நண்பர்களா பழகி பின்பு காதலிக்க ஆரம்பிக்கிற அந்த காதல் சரியான்னு ஒப்பிடும்போதுதான் ஏன் தவறில்லைன்னு சரிக்கான விளக்கம் கொடுக்கமுடியும்.

அதோட (ஆண்/பெண்) நட்போட மேன்மைய நிலைநாட்ட நண்பர்கள் நண்பர்களாவே இருக்கனும்ன்றதுதான் எதிரணியின் கருத்து…….அது ஓளவை,அதியமான் போல காலம் உள்ள மட்டும் அதே புனிதமான நட்பு பகிரலாக இருப்பது சாத்தியமா இல்லையா என்பதைவிட அதற்கான சுதந்திரத்தை சூழ்நிலை கொடுப்பதில்லை..என்பதுதான் சத்தியமான உண்மை.

உடனே அந்த நட்புக்கு கொஞ்ச காலத்துல குட்பை சொல்லிட்டு அப்புறம் மறந்து போயிடுவோம்….இங்கேயும் நட்பின் விருத்திக்கு வாய்ப்பில்லை…காலப்போக்கில் பெரும்பாலான ஆண்/பெண் நட்பு கேசுவலாக இருக்கும்போது நட்பாகவே இருக்கும்…பகிர்தலின் அளவும்,புரிதலின் அளவும் ஆழமாகும்போது அந்த ஆழத்தில் வேர் விடுவது காதல் அது தவறில்லை..

நட்பு நட்பாகவே இருந்தால் வரம்(சரி)...அந்த நட்பு காதலானால் அது சாபமில்லை..தவறில்லை..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு நடுவருக்கு இனிய வணக்கம். பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்த என் வாழ்த்துக்கள். நட்பு என்றுமே காதலாக மாற கூடாதுங்கிற அணியில தான் என் வாதங்களை முன் வைக்க போகிறேன். வாதங்களோடு வருகிறேன்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

அன்பு நடுவர் அவர்களுக்கும்,அழகான தலைப்பு கொடுத்த தோழிக்கும் என்னோட வணக்கங்கள்.

"நான் நண்பர்களை நண்பர்களாகத்தான் பார்க்கிறேன்".அதனால் நண்பர்கள் காதலர்களாக மாறக் கூடாது என்பதே என்னோட வாதமும் ..

நடுவர் அவர்களே நட்பு வேறு.காதல் வேறு.

நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது
காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது.
நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது
காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது

இப்படிப்பட்ட புனிதமான நட்பில் காதல் மலர்ந்தால் ஒரு வகையில் ஏமாற்று வேலைத் தான்..... காதலை ஏற்றபின்... நட்பும் மறைந்து விடும், காதலும் கானல் நீராய் போய் விடும்... இதில் முக்கியமான ஒன்று நண்பர்களில் ஒருவர் மட்டும் காதலராக மாறி அதனை மற்றவரினால் அதனை ஏற்று கொள்ள முடியாத போது நட்பிலேயே விரிசல் ஏற்படும். காதலாக இல்லாமல் நட்பாக பழகிய மற்றவர் என்ன இப்படி நினைத்துவிட்டாரே என்று மனம் வருந்த கூடும். இது நட்பு இல்லாமல் போக வழி செய்யலாம்.

பிறகு வாதங்களோடு வருகிறேன்.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

எனது வாதத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் " நட்பு காதலாக மாறுவதில் தவறில்லை" என்று சொன்னேன் மேம்.
ஆண்,பெண் இருவரும் மனம் விட்டு பேசி அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்கள் இருவருக்கும் ஏற்படும் புரிதலால் நட்பு காதலானால் இரட்டிப்பு மகிழ்ச்சி,
பெண்களின் நட்பில் சிறந்த தோழி கிடைப்பது அதிசயம், ஆனால் சிறந்த தோழி காதலியானால் அதிர்ஷ்டம்,
இந்தவகை காதலால் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு. எனவே நட்பு காதலாக மாறுவதில் 100% தவறு கிடையாது. இதில் நட்பு பெரிசு . காதல்ங்கற சின்ன வட்டத்தில் அடைக்க வேண்டாம் என்பதெல்லாம் சும்மா.
"நட்பு காதலாக மாறவேண்டும் என்பது எனது ஒருமித்த கருத்து" இப்ப சொல்லுங்க மேம் . விசு ரேஞ்சுக்கு குழப்பலீங்க . தங்களுக்கு தெரியாதது இல்லை. ஆதலால் தாங்களே பார்த்து தக்க தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மேம்.

நட்புடன்
குணா

அன்பு நடுவரே... என் கேள்விக்கு பதில் சொல்லுங்க...

நம்ம எத்தனையோ உறவுகளிடம் பழகுறோம்... அவங்க மேல எல்லாம் காதல் வருமா??? அது அண்ணன், தம்பி, மாமா இப்படி அவங்களை நாம அவங்க உறவுலையே தானே வைக்கிறோம்??? நமக்கு அவங்களை பிடிக்கலயா என்ன?? அப்படி இருக்கும்போது ஏன் நட்பு என்ற உறவு மட்டும் ரொம்ப பிடிச்சிருக்குன்னு வாழ்க்கை துணை ஆகனும்???

இன்னொரு கேள்வி... வாழ்க்கை முழுக்க துணையா ஒரு நண்பனால வர முடியாதா??? நான் சொல்றது நண்பனாவே... கணவனாக அல்ல. நம்ம மற்ற உறவுகள் அப்படியே நமக்கு நெறுக்கமானவங்களா இருந்தா திருமணத்துக்கு பின்பும் அப்படியே தொடர்ந்து நம்ம வாழ்க்கையில் இருக்க தானே செய்யறாங்க??? நண்பன் மட்டும் கணவனா ஆனா தான் வாழ்க்கை முழுக்க துணையா வர முடியுமா???

இதுல எனக்கு நிறைய லாஜிக் இடிக்குது நடுவரே....

முன்பெல்லாம் ஆணகளும் பெண்களூம் சேர்ந்து பழக அனுமதித்ததில்லை. இன்று வீட்டில் அனுமதிக்கறாங்க. எதனால்??? இது இப்போ சாதாரணம்... ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியும் என்ற நம்பிக்கையில் தானே? நாளை நாமே அந்த நண்பனை கரம் பிடிக்க விரும்பினால் அவங்க நம்பிக்கையை ஒடச்ச மாதிரி ஆகாதா???

நம்மை பார்த்து இன்னும் 4 பேர் உண்மையான நண்பர்கள் காதலர்களாவார்கள் என்று நினைக்க மாட்டாங்களா?? அது நல்லதுக்கா???

சரி... இதை கூட விடுவோம்...

நமக்கு கணவன் மேல் ஏற்படும் காதலுக்கும், நண்பன் மேல் ஏற்படும் நட்புக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு நடுவரே. என்னவரை நான் முதன் முதலில் கண்டதும் எங்கள் கண்களில் தெரிந்தது காதல்... அன்று என் நெஞ்சில் பறந்த பட்டாம்பூச்சியெல்லாம் என் நண்பனை பார்த்தபோது என்னுள் பறக்கவில்லையே ஏன்??? ஏன்னா அந்த உணர்வே வேறு. அங்கே காதல் மலராது.

ஃப்ரெண்ட் எப்பவும் ஃப்ரெண்ட் தான். நட்புக்கும் காதலுக்கும் உள்ள நூலெழை இடைவெளியை, வித்தியாசத்தை நாமே காப்பாத்தலன்னா வருங்காலத்தில் எல்லா நட்பும் காதலா தான் போய் நிக்கும்... மீண்டும் பெற்றோர் ஆண், பெண் தனி தனியா படிக்க பள்ளி, கல்லூரி தேட ஆரம்பிச்சுடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் நடுவர் அவர்களே....
மிக நல்ல தலைப்பு... இன்றைய இளம் தளிர்களின் மனதில் குடி கொண்டிருக்கும் குழப்பம் இது தான்... நட்பு காதலாகுமா? அருமையான தலைப்பை தந்த தோழி சுகிக்கு நன்றி... என் வாதம் " நட்பு காதல் ஆகக்கூடாது" பிறகு வாதங்களுடன் வருகிறேன்.......

மேலும் சில பதிவுகள்