பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

வாழ்த்துக்கு நன்றி ஷீபா. வாங்க வாங்க இப்போ தான் எதிரணி பளுக்கிறது. வந்து உங்களது பொன்னான வாதங்களை வைத்து உங்கள் அணிக்கு பலம் சேருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு நடுவருக்கும் பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும், மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்.

நடுவரே, உங்களை இந்தப் பதவியில் பார்க்கறப்ப, கண்ணுக்குக் குளிர்ச்சியா, மனசுக்கு நிறைவா இருக்கு. முதல்ல என்னோட வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.

அதிலும் தலைப்பயும் கலக்கலா எடுத்திருக்கீங்க. தலைப்பைக் கொடுத்த சுகந்திக்கும் நன்றி. நாட்டு மக்களாகிய நாங்க அனைவரும் தரும் வாதங்களை அலசி, அவங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை, தீர்த்து வைக்கும் மாபெரும் பொறுப்பு உங்களுக்கு.(பொற்கிழியெல்லாம் உண்டுதானே)

விஷயத்துக்கு வர்றேன். நண்பர்கள் நண்பர்களாகவே இருக்கட்டும். நட்பை வாழ வைக்கட்டும்.

நட்பில் தடை ஏதும் கிடையாது. அங்கே நான் பெரியவன், நான் சொன்னதை நீ கேளு என்பதெல்லாம் கிடையாது. நட்பில் ஆண்/பெண் பேதமோ, வயது வித்தியாசமோ, ஈகோவோ இல்லாம இருப்பதால்தான் நட்பு சுகமானது, மனதுக்கு நெருக்கமானது.

எங்க காலத்துல எல்லாம் பாய் ஃப்ரண்ட்/கேர்ள் ஃப்ரெண்ட் என்பதே ஒரு கெட்ட வார்த்தை:( அவ்வளவு ஏன், ஒரு ஆணும் பெண்ணும் பேசினாங்கன்னாலே, அது விமரிசனத்துக்கு உள்ளாகும். கோ எஜுகேஷன் ஸ்கூல்களில் கூட, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி பெஞ்ச்தான். இதெல்லாம் இப்ப சொன்னா நிச்சயம் சிரிப்பாங்க. இப்படியெல்லாம் நடந்ததா என்று ஆச்சரியப்படுவாங்க இல்லையா. ஏன் சொல்லுங்க. அப்பல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக முடியும் என்ற கான்செப்டே கிடையாது.

இப்ப அப்படியா சொல்லுங்க. பெற்றோர்கிட்ட, கூடப் பிறந்தவங்ககிட்ட, ஏன் கணவர் மனைவிகிட்ட/ மனைவி கணவர்கிட்ட - இது என் ஃப்ரண்ட் என்று அறிமுகம் செய்து வைக்க முடியும். நட்பின் சரளம் இப்ப எல்லோருக்குமே தெரியும், புரியும். கால மாற்றத்தினால் கிடைத்திருக்கும் மாபெரும் பரிசு - ஆண் பெண் நட்பு. அதை வாழ விடுங்கள்!

மீண்டும் வருகிறேன்

அன்புடன்

சீதாலஷ்மி

அட நீங்களும் மாறக்கூடாது கட்சியா. சபாஷ் சரியான போட்டி.

//நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது
காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது.
நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது
காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது//

கவிதை கவிதை. ஆஹா ஆஹா.....இது ஒன்றே போதுமே நடப்பின் மேன்மையை எடுத்து சொல்ல.

என்னங்க நீங்க அவங்க நட்பு தான் தடம் தெரியாமல் போய்விடும் என்றால் நீங்கள் காதல் கானல் நீராக மறைந்து விடும்னு சொல்றீங்க. நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்.

அதுவும் சரி தான் நட்பு வட்டாரத்தில் ஒரு காதலால் சண்டை கண்டிப்பாக வரும். வந்திருக்கே அதையும் சாமாதானமும் கூட செய்து வைத்திருக்கிறேன்.

வரும்போதே தாடாலடியாக வந்திருக்கீங்க. மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்னுங்கண்ணா இப்படி? நீங்க தானுங்க அண்ணே அதையும் சொல்லிப்போட்டீங்க "காதல் தான் நட்பாவது தவறுன்னு" அதை தான் மேற்கோள் காட்டினேன்.

//பெண்களின் நட்பில் சிறந்த தோழி கிடைப்பது அதிசயம்//அப்படியா சொல்றீங்க? சரி நீங்க அனுபவசாலி கண்டிப்பா உணர்ந்து தான் சொல்லியிருப்பீங்க.

விசு என்னதான் குழப்பினாலும் கடைசியில் நச்சுனு ஒரு கருத்தை சொல்லுவார் அது மாதிரி நம் தோழரும் எல்லோரும் நட்பு காதலாக மாறுவதை பரந்த மனதோடு பார்க்க சொல்லியிருக்கார். பாத்துருவோம். அதுக்குள்ளே தீர்ப்பா? பார்க்கலாமே எதிர் அணி என்ன தான் சொல்றாங்கன்னு.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்க கேள்விக்கு பதில் சொல்லாம வேற யார் கேள்விக்கு சொல்லப்போறேன். கேட்டுபோடுங்க.

அது எப்படிங்க அதை தான் நீங்களே சொல்லிட்டீங்களே அந்த உறவுகளோட பெயரையும், நட்பு ஒன்னும் மட்டும் தான் உறவில்லாமல் பில் இன் த ப்ளாங்க்ஸ் ஆகவே இருக்கு. அதை காதலால் நிரப்பினால் தப்பில்லை எதிரணி சொல்றாங்க.

அதானே நட்போடு பழகுங்கன்னு விட்டுட்டா அதையே அட்வான்டேஜா எடுத்து அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போனா பெற்றவர்களின் நம்பிக்கையை உடைச்சா மாதிரி ஆகுமா இல்லையா? வனி என்னை கேட்க்கிற மாதிரி எதிர்கட்சியை தானே கேட்க்குறீங்க. சொல்லிடுவாங்க. பதில் சொல்லிடுவாங்க.

என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அட இன்னொரு கை சேர்ந்திருக்கு மாறக்கூடாது அணிக்கு. வாங்க வாங்க ப்ரியா வந்து உங்க வாதங்களை அள்ளி வீசுங்க. அப்படியே கபக்குன்னு புடிக்க நெட் ரெடி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நம்பமுடியவில்லை .....என் கண்களை நம்பவே முடியவில்லை. பேக்கிங் பிசியிலும் நான் நடத்தும் பட்டியை ஆட்சி செய்ய வந்த கல்பனாவிற்கு என் நன்றிகள். நீங்களும் மாறலாம் அணியா. வொண்டர்புல்.

காதலுடன் பழகி கடைசியில் கழட்டி விட அக்கா தங்கைன்னு எல்லாமா சொல்றாங்க....அட பாவமே. இது கண்டிப்பா செல்லாது செல்லாது தான்.

காதலின் வெற்றி ஃபார்முலா நடப்போடு கூடிய காதல்.....உண்மை நூத்துக்கு நூறு உண்மை.

// இல்வாழ்க்கையில் நண்பர்களாக திகழும் அனைத்து தம்பதியருக்கும்// இது தான் காதலோடு நடப்பு பாராட்டுவதா?

//காதலன்னு சொன்னா ஒருத்தியோட தான் சுத்த முடியும் நண்பன்னு சொன்னா எல்லாரோடயும் சுத்தலாம்ல// என்ன எதிரணி இவங்க சொல்றது சரி தானே?

//கடலையை பொன்னிறமா வறுக்கவோ, தீய்க்கவோ குறைந்தபட்சம் ஆறு மாசம்// விழுந்து விழுந்து சிரிக்கிறேன். முடியலை. உங்களால் மட்டுமே தான் இப்படியெல்லாம் முடியும்.

தெரியாம பதிவுக்கு ஊடே காங்கோ ஜூஸ் கொடுத்துட்டீங்களா இல்லை.....உடம்பை பார்த்துக்க சொன்னீங்களே....அதான் ஒரு பீதியில் கேட்டேன் ;) மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அதானே பெண் பார்க்கும் வரன் தெரிந்தவர்கள் மூலமாக வந்தால் அதற்க்கு தான் முன்னுரிமை தருகிறோம். தெரிந்த நண்பர்களுடன் காதல் மலர்ந்தால் மட்டும் எப்படி தப்பாகும்னேன்? நான் கேட்கலை நம்ப இளவரசி கேட்க்கிறாங்க.

காதல்னு வந்துட்டாலே பட்டாம்பூச்சி, தேவதை, புகை மண்டலம், மணியோசை எல்லாமே அடையாளங்கள் தானே. அது யார் கூட வந்த என்ன? சரியா தான் சொல்றீங்க நீங்க.

கண்டிப்பா எல்லா பெண்களுமே தனக்கு வரப்போகும் மணாளன் தன்னை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று தான் எதிர்ப்பாக்கிறாள். எத்தனை "கல்யாண மாலை" பார்த்திருப்பேன்!

அப்படி நட்பு ஆழமாகும் போது அது மாறுவதற்கான சாத்தியகூறுகள் நிறையவே இருக்காமே பா? அதில் என்ன தவறுன்னு கேட்க்கிறாங்க.

நட்பு காதலில் உள்ள வகைகளை வகைப்படுதிட்டீங்க. சபாஷ். மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்கள் மாறக்கூடாது அணியா. சரி சரி.

புதுசா இருந்தாலும் நடப்பின் மரியாதையை நச்சுன்னு சொல்லியிருக்கீங்க உங்க கருத்தை. மன்னிப்பெல்லாம் எதற்கு? மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

// நான் நினைக்குறேன் எதிரணி மக்கள் ரொம்ப குழப்பத்துல இருக்காங்கன்னு. எத்தனை உறவுகள் இருந்தாலும் நாம யாரோ ஒரே ஒரு மனுஷனை தானே வாழ்க்கை துணையாக கை பிடிக்கிறோம். அது ஏன் ? நாம் எல்லா உறவுகளையும் தான் காதலிக்கிறோம்.// - நடுவரே... இவங்களே சொல்றாங்க பாருங்க... எல்லா உறவையும் காதலிக்கறாங்கன்னு... அதான் கேட்கறேன், அவங்க யாரையும் ஏன் வாழ்க்கை துணையா ஆக்க நினைக்கலன்னு... அவங்க அண்ணன், அவங்க தம்பி, அவ அக்கா, அவ தங்கை, அவ என்னோட சித்தப்பா பொண்ணு இப்படி எல்லாருக்கும் ஒரு உறவு இருக்கு... அதை மாற்றி அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அவங்க தான் எனக்கு லைஃப் பார்ட்னரா வரணும்னு நாம் ஆசைப்படுவதில்லை. அதே போல நட்பும் ஒரு உறவு... நிச்சயம் நிரப்ப படாதா வெற்றிடம் இல்லை நட்பு நடுவரே. அதுக்குன்னு ஒரு அழகும், அந்த உறவுக்கும் ஒரு இலக்கணமும் இருக்க தான் செய்யுது. அதனால் தான் நட்பை பற்றீ யார் பேசினாலும் ஒரே மாதிரி யோசிக்கறோம்... சீக்ரட்ஸ் இல்லாத, உண்மையை சொல்லும், உள்ளது உள்ளபடி பழகும், எதிர்பார்ப்பில்லாத உறவு நட்புன்னு.

நடுவரே... நல்லா யோசிங்க... முன்பெல்லாம் அக்கா மகள், தாய் மாமா, மாமன் மகன் கல்யாணம் பண்றதுலாம் சாதாரணம். இது தான் அதிகம்னு கூட சொல்லலாம். ஆனால் இன்றோ??? அப்பா கூட பிறந்த தம்பி சித்தப்பா, அப்பா மாதிரி... அப்போ அம்மா கூட பிறந்த உறவு மட்டும் எப்படி வேற மாதிரி???னு கேட்கறோம். அதில் ஒரு நியாயம் இருக்க தானே செய்யுது??? அதனால் தான் இப்போலாம் உறவுகளுக்குள் திருமணம் குறைஞ்சது.

ஒரு நண்பனின் கைகலை பிடித்து நடந்தால் என்னுள் காதல்/அதையும் தாண்டிய உணர்வுகள் வராது... ஆனால் என் கணவன் மேல் வரும். அப்படி இருக்கும் போது நண்பனையே கணவனாக எப்படி நினைக்க இயலும்??? எனக்கு புரிய மாட்டங்குது... :( அவங்க மேல் இந்த உணர்வுகள் எப்படி வரும்???

இதோட இல்லை நடுவரே... நட்பு என்பது அலுவலகம், கூட படிக்கும் போது இப்படி தான் ஏற்படுது... இங்க பார்க்கும் சில மணி நேரம் வெச்சு நீங்க அவங்க ஒரிஜினாலிட்டியை தெரிஞ்சுக்குறீங்களா??? எனக்கு நம்ப முடியல. என் நண்பர் என்னிடம் பழகும் விதம் வேறு... ஆனால் அவர் தன் மனைவியிடம் பழகும் விதம் வேறு... அவர் அப்பா அம்மாவிடம் பழகும் விதம் வேறு. நானே மனைவியாக இருந்தாலும் ஒரு நண்பனாக நான் பார்த்தவராக இருக்க இயலாது. நட்பு வேறு குடும்பம் வேறு.

ஒரு மனைவியிடம் ஒரு ஆண் ஆதிக்கம் செலுத்தவே முயற்சிப்பர்.... நட்பில் விட்டு கொடுப்பது உண்டு. நண்பரே மனைவி / கணவன் ஆகும் போது பல விஷயங்கள் பழகிய போது கண்டதுக்கும் இப்போது காண்பதுக்கும் வித்தியாசம் இருக்கும்... வாழ்க்கை ரொம்பவே இடிக்கும்.

நண்பராகளாக இருந்த போது அம்மா என்று இருவரும் அவர்கள் தாயை அழைத்திருப்பார்கள்.... அம்மா அத்தை ஆகும் போது??? மாமியார் மருமகளுக்குள் பிரெச்சனை வரும்போது??? நிச்சயம் நட்பு காதலாகும் போது இதை எதிர் கொள்ள நேரிடும். எல்லோர் வீட்டிலும் காதலுக்கு மறு பேச்சின்றி பச்சை கொடி பறக்கது நடுவரே... போராட்டத்துக்கு பின் பச்சை கொடி என்றால் பின் நாட்களில் பிரெச்சனைகள் சாதாரணம். ஒரு தோழியாக நண்பனின் தாய் கொவித்தாலும் நான் “சரி விடுடா...”னு அவருக்கு சமாதானம் சொல்வேன்... ஆனால் கணவனின் தாய் கோவித்தால்??? “ஏன் இப்படி பேசுறாங்க”னு கேட்கும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன். அது தான் உறவுகளில் உள்ள வித்தியாசம். என்றோ ஒரு நாள் மட்டுமே பார்க்கும் போது நண்பனுக்காக “அவங்க அம்மா என்ன நம்ம வாழ்க்கைய மாத்த போறாங்களா.. இவங்களை நாம கண்டுக்க வேண்டாம்”னு தான் தோணும்... ஆனா கணவனாகி மாமியார் ஆகும் போது... அவங்க வாழ்க்கை முழுக்க இவங்க கூட நாம இருந்தே ஆகனும் எனும் போது... சின்ன சின்ன பிரெச்சனை கூட பெருசா நிக்கும்.

அதனால் நட்பு காதலாகும் போது இனிக்க தான் செய்யும் என்பது அர்த்தமில்லாதது. அதிலும் பிரெச்சனை வரும், கசக்கும்.

உண்மையில் என் நெறுங்கிய நண்பருக்கு திருமணம் ஆனது... அதுவரை நாங்கள் காணாத முகம் ஒன்று அவருக்கு இருப்பதை பின்பே நாங்கள் உணர்ந்தோம். எங்கள் நட்பு வட்டாரத்தில் எல்லோருமே குழம்பி போனோம்... ஏன் இப்படின்னு. அதனால் நிச்சயம் நண்பர்களாக நாம் பார்ப்பவர் எல்லாம் அப்படியே தான் கணவனாகவும் இருப்பாங்க என்ற நம்பிக்கையை முதல்ல விடுங்க... அது எதாவது ஒரு சில நல்ல மனுஷங்களா இருக்கும்... எல்லாரும் இல்லை.

ம்ம்... நடுவரே... இழை உள்ள போயிடுச்சேன்னு தூக்கி விட இப்போதைக்கு மண்டையில் வந்ததை தட்டி வெச்சேன்... எங்க அணியை பலம் சேர்க்க ஏகமா வந்திருக்காங்க... பிச்சி புசுவோம் பிச்சி. ;) உங்களை விட மட்டோம்ல. நான் கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு மீண்டும் வாரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்