பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

இன்னமொரு கதையா? சொல்லுங்க உம் கொட்டி கேக்குறதுக்கு ரெடி ஆயிட்டேன். டப்பிங் கதையோ எங்கோ கேட்ட மாதிரியே இருக்கு :)

//பெண்ணுக்கு பெண்கள் திருமணமா செய்கிறார்கள்// அதுக்கும் தான் சட்டத்தில் வழி இருக்கிறதே இப்பொழுது ;)

// நட்பு என்பது மனம் சம்பத்தப்பட்ட ஒன்று. அதுவே காதல் என்பது மனம் மற்றும் அல்ல உடலும் சம்பந்தப்பட்டது// அப்படியா சொல்றீங்க. ஏதோ நீங்க சொல்றீங்க நான் கேட்டுக்கறேன். ஆனாலும் எங்கையோ இடிக்குதே!

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் மேம், அது கதை அல்ல, நிஜம்.

//பெண்ணுக்கு பெண்கள் திருமணமா செய்கிறார்கள்// அதுக்கும் தான் சட்டத்தில் வழி இருக்கிறதே இப்பொழுது ;)// சட்டம் இருந்தாலும் பொதுவாக பெண்ணுக்கு பெண் திருமணம் மிக மிக மிக குறைவாக தான் இருக்குன்னு நான் நினைக்கிறேன். இதுவரை நான் எந்த பெண்ணும் பெண்ணை மணந்ததாக கேள்வி படவேயில்லை அதனால் தான்.

// நட்பு என்பது மனம் சம்பத்தப்பட்ட ஒன்று. அதுவே காதல் என்பது மனம் மற்றும் அல்ல உடலும் சம்பந்தப்பட்டது// அப்படியா சொல்றீங்க. ஏதோ நீங்க சொல்றீங்க நான் கேட்டுக்கறேன். ஆனாலும் எங்கையோ இடிக்குதே!// அதில்லைங்க யுவர் ஆனர், காதல் ஏன் மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்டது என்றால் காதலுக்கு மனம் தான் முக்கியம் என்றால் ஏன் திருமணம் செய்கிறோம் ஏன் பிள்ளை குட்டி பெற்றுக்கொள்ளவேண்டும். சோ காதல் மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்டதே என்பதே என் கருத்து.

இன்னொரு என் வாழ்வின் ஒரு உண்மை சம்பவம்...

என் கணவரும் அவர் மிக நெருங்கிய தோழி (சீன பெண் - என்றாலும் நம் இந்தியர்களின் கலாச்சாரம் போல் பாலோ பண்ற பொண்ணு) ஒருவரும் கிட்டத்தட்ட 7 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறார்கள். எங்கள் திருமணத்திற்கு முன்பு கூட அந்த பொண்ணும், என்னவரும் கம்பனி அக்கமடேசன் ல அடுத்தடுத்த வீட்டில் தான் வசித்து வந்தார்கள். ஒரு முறை அந்த பெண் உடம்பு சரி இல்லாமல் நடுநிசியில் ரூம்குள்ள வாந்தி எடுத்திட்டு இருந்திருக்காங்க. ஆனால் இந்த டெலிபதி மாதிரி என் கணவர் மனதில் ஏதோ தோன்ற தன தோழிக்கு போன் பண்ணி உனக்கு உடம்பு ஏதும் சரி இல்லையானு கேட்டிருக்காரு. அந்த பொண்ணும் ஆமாம்னு சொல்ல கிளினிக் போய் டாக்டர (அடுத்த வீது தான் கிளினிக்) பார்த்திருக்காங்க. அந்த அளவு க்ளோஸ் பிரண்ட்ஸ். அவங்க ப்ரண்ட்ஷிப்ப பார்த்து எனக்கு கூட சிறு பொறாமையா இருக்கும். ஒரு நாள் என்னவரிடம் நீங்களும் உங்க தோழியும் அவ்ளோ க்ளோஸ் ஆச்சே ஏன் நீங்க ரெண்டு பேரும் காதல் பற்றி யோசிக்களையான்னு கேட்டேன். எனக்கு செம திட்டு விழுந்திச்சு. அந்த பெண்ணை முதன் முதலில் பார்த்தபோதும் தோழியாக தான் பார்த்தேன், இப்பவும் அப்படி தான் பார்க்கிறேன், இனிமேலும் அப்படி தான் பார்ப்பேன். அவளும் என்னை நல்ல நண்பனாகவே பார்க்கிறா. அப்படி இருக்க எப்படி எங்கள் நட்பிலிருந்து விலகி காதலை பத்தி யோசிக்க முடியும். நாங்க இப்படியே எப்பவும் நல்ல நண்பர்களாகவே இருப்போம். அவ எவ்ளோ திக் பிரண்டா இருந்தாலும் அவ என்னோட பிரண்டு மட்டும் தான், ஆனா நீ நான் கட்டிக்க போற பொண்ணுங்கறதால என் காதலி நு சொன்னாரு. இவை அனைத்தும் எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்த பின் நடந்தவைகள்.
இதுவும் கதை அல்ல நிஜமே...

நடுவர் மேம், ஏதோ உங்களை பயங்கரமா குழப்பிட்டேன்னு நினைக்கறேன். அப்படியே மனசுக்குள்ள பிரியமான தோழி, ஆட்டோக்ராப் படத்தை ஓட்டி பாருங்க தெளிவாயிடுவீங்க.

நட்புக்கு மரியாதை நல்ல நட்பே.

மண்டையில் மசாலா தீர்ந்து போச்சு, லோடு வந்ததும் வருகிறேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அனைவருக்கும் வணக்கம்.

நட்பு காதலாக மாறலாமா வேணாமான்னு யோசிக்கறப்பவே அங்கே நட்பு காணாமப் போயிடும்.

இவன்/இவள் வாழ்க்கைத்துணையாக மாறினால் சரியா வருமா, ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகுமா இப்படியெல்லாம் எடை போடத் தோணும். ரெண்டு பேரோட குடும்பம்/படிப்பு/பிண்ணனி எல்லாம் யோசிக்க வைக்கும்.

நட்பு அந்த நண்பர்கள் மட்டும் சம்பந்தப் பட்டது. ஆனா, காதலாகி, கனியும்போது, குடும்பம் என்கிற ரெஸ்பான்சிபிலிடி எடுத்துக்கணும் என்பதையும் ஒருவருக்கு ஒருவர் கமிட் பண்ணிக்கணும் என்பதையும் அலச ஆரம்பிச்சுடுவாங்க மனசுக்குள்ள. அதுக்கப்புறம் அவங்க பேசுவதும் பழகுவதும் இதை நோக்கித்தான் இருக்கும்.

காதல் கல்யாணத்தில் முடியணுமே என்கிற கவலையில் பதட்டத்தில் ஒருவரை ஒருவர் இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணுவாங்க.

இதெல்லாம் எதுக்கு, தேவையா? நட்பு அழகாகப் பூத்துக் குலுங்கட்டும், அதை ரசியுங்கள், ப்ளீஸ்

அன்புடன்

சீதாலஷ்மி

அதுக்குன்னு இப்படியா இழையை உள்ளே தள்றது. யாரிந்த வேலையை செய்தது? சரி சரி அதெல்லாம் போகட்டும் வந்து பதிவு போடுங்கப்பா.....நடுவர் உங்களுக்காக வெயிட்டிங்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

// பெண்ணும் பெண்ணை மணந்ததாக கேள்வி படவேயில்லை அதனால் தான். // இப்போதானே நம்மூரில் சட்டமே வந்திருக்கு இனி பாருங்க. அதெல்லாம் இங்கே ரொம்பவே சகஜம்னுங்கோ!

// ஏன் நீங்க ரெண்டு பேரும் காதல் பற்றி யோசிக்களையான்னு கேட்டேன். // என்னைக்காவது ஒரு நாள் ஆசைக்கு நூடுல்ஸ் மன்சூரியன் சாப்பிடலாம்.....ஆனால் தினம் சாம்பார் சாதம் சாபிட்டாலும் திகட்டவே திகட்டாது ;)

// பிரியமான தோழி, ஆட்டோக்ராப் படத்தை ஓட்டி பாருங்க தெளிவாயிடுவீங்க. // ரொம்பவே பழைய பிரிண்ட் போல அதனால் ஒன்னும் தெளிவா தெரியலை அதனால டைலாக் மட்டுமே கேட்டுக்கறேன். இருந்தாலும் நீங்க சரக்கு வந்தவுடன் மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//நட்பு காதலாக மாறலாமா வேணாமான்னு யோசிக்கறப்பவே அங்கே நட்பு காணாமப் போயிடும்// அதானே அப்புறம் நண்பனை என்ன காதலிக்கறது?

//காதல் கல்யாணத்தில் முடியணுமே என்கிற கவலையில் பதட்டத்தில் ஒருவரை ஒருவர் இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணுவாங்க.// இது சொன்னீங்களே அது நூத்துக்கு நூறு சரி. இம்ப்ரெஸ் பண்றதுக்காக யோசிச்ச நேரத்தில் எதாவது ஒரு சர்டிபிகேஷனே முடிச்சிருக்கலாம்!

//நட்பு அழகாகப் பூத்துக் குலுங்கட்டும், அதை ரசியுங்கள், ப்ளீஸ்// ஐயோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க.

உங்களுக்கே உரிய பாணியில் தெளிவாக நறுகென்று சொல்லியிருகீங்க. மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் அவர்களுக்கு, வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

பட்டியில் வந்த எனது அணியினர் கூறியது போல, அக்காலத்தில் ஆண், பெண் நட்பு என்பது ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்ததற்கு காரணமே இந்த மாதிரி நட்புனு சொல்லிட்டு லவ் பண்ணியவர்களால்தான்.

இப்படி நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்கள் நிச்சயமா உண்மையாவே நண்பர்களாக இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் காதலுக்கு நட்பு ஒரு போர்வை. அடிமனதில் காதல் உணர்வோடவே இருந்து நண்பன் என்ற அடையாளத்தோடு பழகி சான்ஸ் கிடைத்தவுடன் காதலை சொல்லிருப்பார்கள்.

எவளோ படத்தில் பார்த்திருப்போம் நண்பர்கள்னு சொன்னாலும் மற்றவர்களை விட காதலிக்கும் அந்த நபரிடம் மட்டும் கூட பொசசிவ் இருக்கும், கேரிங் இருக்கும், இப்படி பல இத்யாதிகளை வைத்தே அவர்கள் கடைசியில் லவ்வர்ஸ்னு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

இப்படியாக பல காரணங்களை சொல்லலாம் நட்பு நட்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கு.

ஆகவே நடுவர் அவர்களே நட்பு என்பது நட்பாக மட்டுமே இருக்க வேன்டும் காதலாக மாறக் கூடாது என்ற சரியான தீர்ப்பை விரைவில் வழங்க வேண்டும் என வேண்டி என் சிறு வாதத்தை நிறைவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்.
அபி.

வாழ்க வளமுடன்

பட்டி ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகியும் பதிவிட முடியலை. அதுக்காவ டூ வெல்லாம் விடப் படாது.

நல்ல அரிய தலைப்பு தான் ( பையனோட கேர்ள் பிரண்ட்ஸ் லிஸ்ட் வெச்சு தேடிட்டு இருக்கற காலம் இது __ யாரு நம்ம பிள்ளைக்கு செட்டாவாங்க என்று அதையே தான் பொண்ணுங்க அம்மாவும் செய்யறதா கேள்வி )

என்ன பிரச்சினை வரும்னு புரிய வேயில்லை யுவர ஆனர்??:-(((( (நட்பே காதல் ஆகி கல்யாணம் பண்ணி சந்தோஷமா தான் இருந்துட்டு போவட்டுமே , பொண்ணு பார்த்து , உற்றார் உறவினர் எல்லாருக்கும் பிடிச்சு தான் ஆகணும்னு என்ன கட்டாயம் ?

ஆண் ஆண் நட்பு ஒரு பிரச்சினை யும் இல்ல . ( இருக்கும் ஆனா இல்ல )
பெண் பெண் நட்பு (ஒட்டி உறவா இருப்பாங்க ஆனா ஏகப்பட்ட உள் குத்து இருக்கும் )

ஆண் பெண் நட்பு ரோடு லீட்ஸ் டு காதல் , (இது தான் உண்மையான அட்ராக்ஷன் )நான் இந்த காலத்த மனசில் வைத்து பேசறேன் யுவர ஆனர்.

அந்த காலத்துல நிறைய பேர் தன் நட்பு ரீதியான காதலை மனதில் குழி தோண்டி புதைச்சிட்டு தான் மண மேடையில் மனமில்லாம உக்காருவாங்க .

அதெல்லாம் ரகசியம் வெளியில சொல்ல மாட்டாங்க ( ச்சே நாம மிஸ் பண்ணிட்டோம் என்ற ஏக்கம் இருக்க தான் செய்யும் )

நட்பு என்பதே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் தானே (போசசிவ்ன்ஸ் இல்லாத ஒரு உறவு இது தான் ) ஒரு வேளை சிலர் நாங்க நண்பர்கள் என்று சொல்லிக்கிட்டு ரொம்பவும் எதிர்பார்த்தாங்க என்றால் அதுக்கு பேரு நட்பு இல்லீங்க .

நட்பு காதலில் முடிவது வயதில் மூத்த ஆணும, வயது குறைந்த பெண்ணுக்கும் மட்டுமே -- ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து (ரெண்டு நாளில் வரும் நட்பு எல்லாம் கணக்கில் வராது -- அது பார்த்தவுடன் வரும் காதல் ).

அவருடைய பலம், பலவீனம் அறிந்து இருப்பதால் வாழ்க்கையிலும் முடிவெடுக்க முடியும்.

வீட்டில் பார்த்து வைக்கும் கல்யாணங்களில் கூட தான் பிரிவுகள் வருகின்றன.

என்ன நட்பில் வரும் காதலுக்கு, பெற்றோர்கள் எதிரிகளாகி போகிறார்கள் . நம்ம வீட்டுக்கு இவ ஒத்து வருவாளா என்ற குழப்பம் , எவ்வளவு நல்ல பிள்ளைகளாக இருந்தாலும் , பிள்ளை மனைவி பக்கம் சாய்ந்து விடுவானா என்ற எண்ணங்கள் , வேண்டுமென்றே சில சிக்கல்களை உருவாக்குவாங்க.

சிலர் நட்பை பெற்றோருக்கு அறிமுகம் செய்து பின் தன் காதலையும் சொல்லி விடுவாங்க. இவங்களுக்கு பிரச்சினையும் அதிகம் இருக்காது ( அல்ரெடி வீட்டார் அனைவருடனும் பேசி பழகி இருப்பாங்க ) ஒரு வேளை பிடிக்கலை என்றாலும் நாம் நட்பா தொடரலாம் என்று சொல்லிடறாங்க , அழது ரகளை பண்ணி தற்கொலை வரை போகாம , பழகுவோம் பிடிச்சிருந்தால் ஓகே, இல்லையா ரெண்டு பேருக்கும் , நிறைய சமாளிக்க வேண்டியிருக்கும் என்று திடமாய் மறுக்கறாங்க.
( இதெலாம் இப்போ கல்யாணத்துக்கு முன்னேயே அரேஞ்ச்டு மேரேஜ் என்று சொல்லுபவர்களே செய்யும் போது ஏன்பா நட்பை மட்டும் வேண்டாம் என்கிறீங்க ??). அவங்களுக்கு இவங்க எவ்வளவோ தேவலை.

ஆன பெண் நட்பு நட்பாகவே தொடர்ந்தா மட்டும் ஓகே, என்று சொல்வது வியப்பா இருக்கு. இனம் இனத்தோட சேரும் என்பது போல் ஒரு ஆணின மேல் ஒரு ஈர்ப்பு வருவதற்கு காரணமே , தன் சக இனத்திடம் இலாத ஒன்று இருப்பதால் தானே.

சிலர் அண்ணன் தங்கையா இருப்பாங்க. சிலர் அக்கா தம்பியா பழகுவாங்க, இன்னும் சிலர் , தன்னோடு முழு உறவு கொள்ள இவரால் தான் முடியும் என்ற ரீதியில் நினைப்பாங்க .

ஆண் பெண் நட்பு சம்திங் ஸ்பெஷல் தான்பா , அது பெரும்பாலனவ்ருக்கு அமையததுக்கு காரணம் நம் சமூகம், அந்தஸ்து ,கலாசார பயம் தான்.

மற்றபடி மாறிவரும் சூழ்நிலையில், உடைந்து போகாத திருமண வாழ்க்கைக்கு நட்பே காதலா மாறினா , நல்லா இருக்கும் ( ஒன்னும் குறைஞ்சு போயிடாது)

நல்ல நட்பு , ஆணோ பெண்ணோ யாரா இருந்தாலும், நம் துவண்ட சமயங்களில் தோள் கொடுப்பவர் தானே--- அது நம் வாழ்க்கை துணையா இருக்க , கேட்ட வரம் கிடைத்தால் எப்படி இருக்கும் , ரெட்டிப்பு மகிழ்ச்சி தான் .

பொறுமையா என் எண்ணங்களை கேட்ட அருமை தோழி நடுவர் லாவண்யாக்கு நன்றிகள் .

கலந்து கொண்டு சிறப்பிக்கும் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

"பிரிந்துவிட்டால் இறந்து விடுவோம் இது காதல் "
"இறந்து விட்டால் மட்டுமே பிரிந்துவிடுவோம் இதுதான் நட்பு"

இறந்து விட்டால் மட்டுமே பிரிகிறது நட்பு இதில் காதல் எப்படி மலரும்?சோ காதல் வந்தால் அங்கே நட்பு பிரிந்துவிடுகிறது.

நடுவர் அவர்களே ஒரு நட்பு களங்கப்படுகிறது என்றால் அங்கே பல எதிர்பார்ப்புகள் ஒருமித்து கலக்கிறது என்பது தான்,ஆனால் எதிர்பார்ப்புகள் இல்லாமல் காதல் இல்லை.சோ நட்பு எப்பொழுது காதாலாக மாறுகிறதோ அப்போதே அந்த நட்பு கலங்கப்பட்டு விடுகிறது.ஒரு நல்ல நட்பை காதலாக மாற்றி நாம் ஏன் நட்பை களங்கப்படுத்த வேண்டும்?

ஆண் பெண் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்றால்,

என்னை விட்டு செல்லும் காதலியை விட........
என்னை தொட்டு பேசும்
தோழியின் அன்பு அழகானது
எங்களின் கலங்கமற்ற நட்பை போல்...

இப்படி களங்கமற்று இருந்தால் அதுதான் உண்மையான நட்பு.மனித நாகரீகம் என்பது ஒரு நல்ல நட்பை கண்ணியத்துடன் பாதுகாப்பதில்தான் இருக்கிறது.நல்ல நட்பையும், நேசத்தையும் நேர்மையாக பகிர்ந்து கொள்ள தெரிந்த ஒரு ஆணின் நட்பு ஒரு பெண்ணிற்கு பக்கபலமாக இருக்க கூடுமானால் அது பெரிய பாக்கியமாக கருதப்படும்.இந்த நல்ல நட்பு, நம் வாழ்கை மேன்மையடைய உதவும் இதை காதல் என்று கலங்கபடுத்தாமல் இருந்தால்!!!!.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மேலே தூக்கி விட :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்