பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

அனைவருக்கும் வணக்கம்

ஆண் பெண் நட்பு காதலாக மாறாமல் அப்படியே நட்பாக இருக்கணும் என்பதுதான் பெற்றோர்களின் விருப்பமும்.

ஆணோ பெண்ணோ, அவங்களுக்கு எதிர்பாலில் நல்ல நட்பு அமையணும், ஏன்னா எல்லா இடத்திலும் இன்னிக்கும் நல்லது கெட்டது, நன்மை தீமை, நல்லவங்க கெட்டவங்க எல்லாம் கலந்தே இருக்கும்போது, உலகத்தைப் புரிந்து கொள்ளணும்னா, இந்த நட்பு அவசியம்.

கோ எஜுகேஷனில் படித்த மாணவர்களிடத்தில் இருக்கும் தெளிவு, தனியாகப் படித்த மாணவ மாணவிகளிடம் இல்லை. காலேஜில் சேரும்போது, அல்லது வேலைக்குச் சேரும் இடத்தில் எதிர்பாலினரிடம் பேசவும் சகஜமாகப் பழகவும் அவங்களால முடிவதில்லை. ஒரு விதமான பதட்டமும் கூச்சமும் இருக்கு. இதற்குக் காரணம், எதிர்பாலினரிடம் ஏற்படும் அச்சமும் காரணமேயில்லாத ஒரு வித எதிர்ப்புணர்வும்தான்.

சின்ன வயதிலிருந்தே ஆண் பெண் நட்பு உருவாகி வளர்ந்தால், எத்தனையோ ப்ரச்னைகள் தவிர்க்கப்ப்பட்டு விடும். அந்த நட்பில் காதல் என்பது விதிவிலக்கு மாதிரி எப்போதாவது உருவானால் விட்டுடுங்க, பரவாயில்லை. ஆனால், ஆண் பெண் நட்பு வளர வேண்டும், அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் இருக்கக்கூடாது என்பது மிக முக்கியம் எனும்போது, அங்கே காதல் உருவாகாது, அது நட்பாகவே செழிக்கும் எனும் ஒரு விதி செய்வோம், நட்பை தழைக்கச் செய்வோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

நட்பு நட்பாகவே இருக்கவேண்டும் என்று ஆணித்தரமான உங்களது வாதங்கள் வரவேற்க தக்கது.

காதலை சொல்லப்போகும் நபருடன் ஒருவரால் கண்டிப்பாக நடப்பாக பழகவே முடியாது, அப்படியே பழகினாலும் அதில் ஒரு வித்தியாசம் தெரியும் என்பதால் அழகாக விளக்கி உள்ளீர்கள்.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாங்க உத்திரா உங்களை தான் தேடிட்டு இருந்தேன்.....டூ கா எல்லாம் இல்லை....பழம் தான் சரியா??

உங்களுக்கு நான் அறுசுவையின் பாக்கியராஜ் பட்டம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?

// பொண்ணு பார்த்து , உற்றார் உறவினர் எல்லாருக்கும் பிடிச்சு தான் ஆகணும்னு என்ன கட்டாயம் ?// அதானே அப்படி என்ன கட்டாயம்? இல்லை இவங்களே பார்த்து வெச்ச மட்டும் அந்த பெண்ணை இவர்களுக்கு பிடித்து விடவா போகுது? இக்கரைக்கு அக்கரை பச்சை.

//இருக்கும் ஆனா இல்ல// இப்போ தான் பாகியாராஜ் என்று பட்டம் கொடுத்தேன். அதற்குள் எஸ் ஜே சூரியா மாதிரி ஆயிட்டீங்க.....

//போசசிவ்ன்ஸ் இல்லாத ஒரு உறவு இது தான்// இதை இப்ப தாங்க நான் கேள்வி படறேன். பெண்ணும் பெண்ணும் நடப்பாக இருந்தாலே ஏண்டி நீ அவ கூட மட்டும் அவ்வளவு நேரம் பேசின என்கூட பேசவே மாட்டியான்னு சண்டை எல்லாம் போட்டவங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒருவேளை இதற்க்கு பேர் பொசசிவ்னெஸ் இல்லையோ?

//சிலர் நட்பை பெற்றோருக்கு அறிமுகம் செய்து பின் தன் காதலையும் சொல்லி விடுவாங்க. // இந்த காட்சி எனக்கு நல்லாவே தெரியும். நிஜ வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்.

முத்து முத்தான கருத்துக்களை குவித்திருக்கீங்க. அந்த பிராக்கெட் குள்ளே இருக்கும் சாமாச்சாரம் எல்லாம் எனக்கா இல்லை எதிர்க்கட்சிக்கா?

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

// காதல் வந்தால் அங்கே நட்பு பிரிந்துவிடுகிறது. // அதானுங்களே அவங்களும் சொல்றாங்க......நட்ப்பாய் இருந்து பிறகு அங்கே காதல் மலர்கிறது.

// ஒரு நட்பு களங்கப்படுகிறது என்றால் .....// திரும்ப திரும்ப என்னை படிக்க வைத்த வரிகள். ஆனாலும் ஒரு சின்ன டவுட் எந்த உறவில் தான் எதிர்ப்பார்ப்பு இல்லை? எதிர்ப்பார்ப்பு இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையாமே!

// என்னை விட்டு செல்லும் காதலியை விட........
என்னை தொட்டு பேசும்
தோழியின் அன்பு அழகானது // நெஞ்சை வருடிய வார்த்தைகள். தோழமையின் ஆழத்தை அற்ப்புதமாக சொல்லியது.

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என்ன இன்னமும் ஃப்ரீஆகலையா? பட்டி பக்கம் ஆளையே காணோம்?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உலகத்தை புரிந்துக் கொள்ள நட்பு அவசியம். நட்பு அனுபவ அறிவை புகட்டுகிறது என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க.

ஆண் பெண் நட்பு வளர்ந்தால் // எதிர்பாலினரிடம் ஏற்படும் அச்சமும் காரணமேயில்லாத ஒரு வித எதிர்ப்புணர்வும் // இல்லமால் ஒரு தனி மனிதனால் சமுதாயத்தில் வெற்றி பெற முடியும் என்ற உங்களின் வார்த்தைகள் உங்களின் அனுபவத்தை உரைக்கிறது.

சிறு வயதிலிருந்தே ஆண் பெண் நடப்பை பேணி வளர்த்தால் அது பிற்காலத்தில் காதலாக உருவாகாதாமே? கேட்டு தான் பார்ப்போமோமே. என்ன எதிர் அணி சரி தானே?

மேலும் வாங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் அவர்களுக்கு எனது முதல் வணக்கங்கள் ,
நம்ம கருத்து "நண்பர்கள் காதலர் ஆகலாம் " தானுங்க .
உதாரணம் யார் என்றால் நானே தான் .நாங்க இரண்டு வருடம் நண்பர்களாக இருந்து காதலர்களாகி இப்போது தம்பதியாய் இனிமையாக இல்லறத்தில் இருக்கிறோம் .நான் மட்டுமில்லை வெற்றி பெற்ற காதல் திருமணத்தின் உள்ளே ஆராய்ந்தால் ,அது நட்பு காதல் ஆனதாக தான் இருக்கும் ,
இதில் ஐயமே இல்லை நடுவரே ...
உள்ளம் பார்க்கும் உன்னத காதல் எடுத்த உடன் ஆரம்பிப்பதில்லை .அதாவது முகம் பார்த்த உடன் வருவதில்லை .மனதுக்கு நெருக்கமாக பிடித்த ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அந்த சிறு இடைவெளியை தான் காதலுக்கு இடைப்பட்ட நட்பு என்கிறோம் .நட்பு எனும் உறவு தன்னலம் கருதாது ,மனதை புரிந்துக் கொள்ளும் ,அனைத்துக்கும் அடைக்கலம் கொடுக்கும் ,அன்பாய் வழிநடத்தும் ,அப்படி பட்ட பந்தம் திருமணத்தில் இணைந்தால் தவறேதும் இல்லையே .எல்லா நலமும் வளமும் ஒரு சேர அமைந்து ஒருவரின் குணம் மற்றொருவருக்கு பிடித்து போய் அவர்கள் நண்பர்களாக இருந்தால் காதல் செய்யலாமே .நட்பில் இருந்து காதல் தோன்றினால் வருத்தமில்லை ,காதல் என்பது நட்பானால் தான் கொஞ்சம் வருத்தம் .இல்லறத்தில் கணவன் மனைவி நட்பாக இருந்தால் பிரச்சனைக்கே இடம் வராது ,அப்படி இருக்கும் போது நட்பு காதல் ஆனால் என்ன பிரச்சனை வரும் ,எடுத்த உடன் காதல் செய்வது நூற்றில் இரண்டு பேருக்கு சரியாய் அமையும் ,ஆனால் புரிந்த பின் பின் தான் காதல் என்றால் அதற்க்கு முதலில் நட்பு கொள்ளலாமே ,அது பின்னர் காதல் ஆகலாமே ,ஆண் பெண் நட்பில் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு இருந்தால் அது கண்டிப்பாக காதலாக மாறும் ,இது உலக நியதி தான் ,இது தவறில்லை ,யாரும் மறுக்கவும் இயலாது ,

"ஒருவரையொருவர் புரிந்த பின் இணைந்து கொள்ளுங்கள்
அதன் பாலமாக நட்பை இணைத்துக் கொள்ளுங்கள் "
இதுவே எனது ஆழமான கருத்து .
யோசியுங்கள் சரி தானே நடுவரே .மீண்டும் வருவேன்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நடுவரே... காரணம் உங்களூக்கே தெரியும் தானே ஏன் வரலன்னு ;) அப்பவும் என்னையே கேட்டா என்ன சொல்ல...

நட்பில் காதல் வந்தா என்ன என்ன பிரெச்சனைகள் வரும்னு எங்க அணியில் தெளிவா சொல்லிட்டாங்க. கூடவே ஒரு விஷயம் யோசிச்சு பாருங்க... இன்னைக்கு நண்பர்கள் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வெளியே போவது சாதாரணமா இருக்கு. யராவது நம்மை பெற்றோரிடம் போய் “உங்க பொண்ணு ஒரு பையன் கூட போச்சு”னு சொன்னா நம்ம வீட்டில் என்ன சொல்வாங்க??? “அந்த பையன் என் பொண்ணு ஃப்ரெண்ட்”னு கான்ஃபிடண்ட்டா சொல்வாங்க. அதே பொண்ணு அதே பையனை காதலிக்கிறேன்னு வந்து பின்னால் சொன்னா??? அந்த பெற்றோர் நிலை என்ன??? அங்கே சேர்வது காதல், ஆனால் உடைந்தது பெற்றோர் நம்பிக்கை. இது தேவை இல்லைன்னு தான் நாங்க சொல்றோம்.

கூடவே நண்பர்கள் காதலர்களானால் பின் நாட்களில் அவர்களின் மற்ற நட்புகள் காணாம போகும். ஒன்னு காதலை சொல்லாம இருந்தாங்க, இல்ல சேர்ந்தாலும் மற்றவர்கள் நட்பின் மேல் சந்தேகம்... இப்படி நிறைய காரணம் இருக்கும்.

இது போல் நட்பில் பூக்கும் காதலால் தான் நடுவரே பாதி ஆண்கள் மனைவியை கூட ஆபீஸுக்கு நம்பி அனுப்ப மாட்டங்கறாங்க ;) யாராவது ஒரு ஆணை ஃப்ரெண்ட்டுன்னு சொல்லிக்க முடியாது... ஃப்ரெண்ட்டுன்னா??? அப்படின்னு அடுத்த கேள்வி வரும். ஏன்னா அங்க ஃப்ரெண்ட் கணவனாயிருக்காங்க தானே. மற்ற நட்பை மட்டும் எப்படி நல்ல கண்ணில் பார்க்க தோணும்???

அது மட்டுமில்லை நடுவரே... எப்போது நண்பர்கள் காதலர்கள் ஆனாலும் அங்கே அவர்களுக்கு இடையே நட்பு என்பது இருந்ததாகவே என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஒரு வகை ஈர்ப்பு தான் இருந்திருக்கிறது. இல்லை எனில் இருவரில் ஒருவராவது அந்த காதலை மறுத்திருப்பர். இருவருமே ஒருவரை ஒருவர் நேசிக்க துவங்கினால ந்க்கே ஈர்ப்பு தான் இருந்திருக்கிறது.

பழகி பார்த்து பிடித்தது, புரிந்து கொண்டோம் காதலர்களாகிறோ என்றால் தப்புன்னு நாங்க சொல்லல... ஆனால் பழகிய அந்த காலத்தை நட்புன்னு சொல்லி சாயம் பூச வேண்டாம்... அங்கே இருந்தது ஈர்ப்பு மட்டுமே. உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உங்களூக்கு ஒரு நம்பிக்கை, அவர்கள் நல்லவர்கள் என்ற சான்று தேவைப்பட்டது... அதை புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள நீங்கள் நட்பு எனும் போர்வையில் ஒளிந்திருந்தீர்கள்.

//அந்த காலத்துல நிறைய பேர் தன் நட்பு ரீதியான காதலை மனதில் குழி தோண்டி புதைச்சிட்டு தான் மண மேடையில் மனமில்லாம உக்காருவாங்க .

அதெல்லாம் ரகசியம் வெளியில சொல்ல மாட்டாங்க ( ச்சே நாம மிஸ் பண்ணிட்டோம் என்ற ஏக்கம் இருக்க தான் செய்யும் )// - ஐ அப்ஜக்ட் யுவர் ஆனர்... நிச்சயம் இல்லை. நண்பனாக நினைத்திருந்தால் நம் திருமணத்து வேலையை கூட அவர்கள் செய்ய வேண்டும் என்று மனம் நினைக்கும். மற்றவரெல்லாம் திருமணத்துக்கு 1 நாள் முன் வீட்டுக்கு வந்தா உண்மையான நண்பன் 1 வாரம் முன்னாடி வந்து என் அப்பாவை ”அப்பா... சொல்லுங்க, என்ன வேலை இருக்குன்னு, நான் இருக்கேன் கூட... “ என்று நண்பனாகவே துணை இருப்பான். அவனே நண்பன். அப்படி எல்லாம் நண்பர்கள் இருந்திருந்தால் எதிர் அணிக்கு அந்த அருமை தெரியும். ஏன்னா அவங்களாம் அமந்தில் காதலை வைத்து கொண்டு நட்புன்னு வேஷமிட்டிருக்காங்க... அதான் இந்த வருத்தம் மிஸ் பண்ணிட்டோம்னு. மனதில் கடைசி வரை நட்பு மட்டுமே இருந்தால் இந்த கவலை, வருத்தம் வரவே வராது நடுவரே.

//ஒரு வேளை சிலர் நாங்க நண்பர்கள் என்று சொல்லிக்கிட்டு ரொம்பவும் எதிர்பார்த்தாங்க என்றால் அதுக்கு பேரு நட்பு இல்லீங்க .// - காதலை சொல்லும் போதே எதிர் பார்ப்பு வந்துருதே... நான் உன்னை விரும்பறேன், நீ என்னை விரும்பறியா என்று கேட்டால் அங்கே எதிர்பார்ப்பு இல்லாமலா போச்சு??? பதிலுக்கு மற்றவரும் தன்னை காதலிக்கனும் என்ற எண்ணம் இருக்கே. அப்போ அது உண்மையான நட்பு இல்லை... அதை பற்றி இங்கே கவலையும்ம் இல்லை. அது காதலாகலாம். இங்கே உண்மையான நட்பை தான் காதலாக கூடாதுன்னு சொல்றோம். :)

//நட்பு காதலில் முடிவது வயதில் மூத்த ஆணும, வயது குறைந்த பெண்ணுக்கும் மட்டுமே// - இதெல்லாம் யார் சொன்னது??? வயதில் பெரிய பொண்ணை கூட லவ் பண்றாங்க யுவர் ஆனர். பேப்பர் படிக்க சொல்லுங்க எதிர் அணியை.

// ஒரு வேளை பிடிக்கலை என்றாலும் நாம் நட்பா தொடரலாம் என்று சொல்லிடறாங்க// - ரொம்ப கஷ்டம் நடுவரே.... ;( இங்க நட்பும் உண்மை இல்லை, வந்த காதலும் உண்மை இல்லை.

நடுவரே... நல்லா கவனிங்க... ஃப்ரெண்ட் என்பதுக்கும் பாய் ஃப்ரெண்ட், கெர்ள் ஃப்ரெண்ட் என்பதுக்கும் வித்தியாசம் இருக்கு... ஆனால் இவங்க ஒரு பாய் ஃப்ரெண்டா இருந்தா பாய் ஃப்ரெண்டுன்னு ஏமாத்த பார்க்கறாங்க. வேணும்ங்கும் போது பாய் ஃப்ரெண்டும்பாங்க, இல்லன்னா ஃப்ரெண்டுன்னு மட்டும் சொல்வாங்க. டூ பேட் யுவர் ஆனர். ஒத்துக்காதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nichayamaga nanbargal kadhalargalaga maralam,enenil nanbargalaga palagum bodhu oruvaraioruvar nanraga purinthu kolvar,yarku edhu pidikum,pidikathu enru therinthu kolvar,anaithaaiyum manam vittu pesuvargal,entha oru prachanai enralum namakaga mun nirpar,avvaru irukum nanbanai nichayamaga kadalikalam ,thavarilai enbathu en vadham

அன்பு நடுவருக்கு ,

இப்படி பட்டமெல்லாம் கொடுத்து என்னை காற்றிலே பறக்க விட்டு , வலையிலே (இன்டர்நெட் ) சிக்க வெச்சுடீங்களே ,நீங்க என்னை பாக்யராஜி ன்னு சொன்னாலும் , எஸ் ஜே சூரி ன்னு சொன்னாலும் நான் இதே கட்சி தான் போங்க .

நட்பு காதலா மாறிட்டு தான் போவட்டுமே . நல்லா தானே இருக்கு .
நட்பு நிலைக்கட்டும்னு எதிர் அணி மைக் போட்டு சொன்னாலும் கூட , ஒரு பய பிள்ளை கேக்குறான பாருங்க , அவன் பாட்டுக்கு ஜோலியை பார்த்துகிட்டே இருக்கான்.
நட்புக்கு இலக்கணம் என்ன ? ( நோட்ஸ் எடுத்து எதிரணி சொல்லணும் )
ஆண் நட்பு எது வரை ? சினிமாவில டாஸ்மார்க் வரை (நிஜத்தில் நான் அதை நட்புன்னு சொல்லி அந்த வார்த்தைக்கு போதை எத்த விரும்பலை )
நீஜத்தில் அவசர பண உதவிக்கு ,ஆஸ்பத்திரி அலைச்சலுக்கு , மிஞ்சி போனா எங்கேயாவது ஊர் சுற்ற ;-(
பெண் நட்பு ?? தன சுக துக்கத்தை சொல்ல , தன ரகசியங்களை பகிர , தனக்கு அட்வைஸ் , மன அமைதியின்றி தவிக்கும் போது ஆறுதல் சொல்ல ,எல்லாமே திருமணம் வரை தான் -- ரெண்டு பேருக்கும் நல்ல கணவர் வாய்த்தால் ,இடைவிடாது பேசலாம், பேசிக்கொண்டே இருக்கலாம் , ஸ்டேடஸ் வேறு ஒரு தடை கல்லாக இருக்கும் , அதையும் மீறி சிலரால தான் வாழ்க்கை முழுதும் தொடர முடியும், இல்லையே மனதளவில் , நட்பு இருக்கும் .
இதெல்லாம் உயிர் தோழி /தோழர் வகை
ஆனால் இப்போவெல்லாம் பெஸ்ட் பிரண்ட்ஸ் தாங்க , ஒருவர் கிடைச்சால் இன்னொருத்தர் நாட் ரீச்சபிள் ,எல்லாருமே ரயில் சிநேகம் மாதிரி ஆகி போச்சு , இன்னிக்கி பார்ப்போம் , பேசுவோம் , நாளை தெரியலை ,அவ்ளோ வேக உலகம் .இதில் உண்மையான நட்பு ஜல்லல்டை போட்டு தான் தேடனும் .
ஆனா சிலருக்கு அமைய தான் செய்யுது , எதையும் எதிர்பார்க்காமல் , விட்டு கொடுத்து , தன நட்பு பாராட்ட படும்போது தானே பாராட்ட படுவதாய் நினைத்து மகிழ்வது , அவரின் துயரத்தை தன தலை மேல் வைத்து சுமப்பது , தினம் பேச வில்லை என்றாலும் கூட மனதால் அவர்களுக்கு நல்லது நினைப்பது என்று இருக்க தான் செய்கிறார்கள் .
இவர்கள் நட்பை தாண்டி அடுத்த கட்டமான காதலுக்கு போவாததுக்கு , ஒரு இனம் அது ஒரு காரணம் .

ஆனா ஆண் -- பெண் நட்பு நட்பாகவே நிலைக்கனும் : நட்பு சாக கூடாது என்று சொல்றாங்களே எதிர் அணி ,
நான் ஒன்னு கேக்குறேன் , அது எப்படி முடியும் ? காலத்துக்கேற்ப எல்லாத்தையும் சமூகம் , பழகுதல் ,நடை உடை பாவனை எல்லாத்தையும் நாம் மாற்றிவிட்டு , ஆனா தோழன் / தோழி கணவன் மனைவியா மாற கூடாதுன்னு சொல்றது ரொம்ப சோக்கா இல்ல கீது .
அப்போ நாம் திரும்பி அந்த காலத்துக்கு போயிற வேண்டியது தான் , ஏன்னா , நிறைய தோழர்கள் இருக்கும் ஒரு பெண்ணுக்கு சந்தேக பிராணியா ஒரு கணவன் அமைதால் அவ கெதி ??
அதே போலே நிறைய பெண் தோழிகள் இருக்கும் ஒரு ஆணுக்கு , நல்ல மனைவி கூட டவுட் சுந்தரியா மாறி விட வாய்ப்பு ஜாஸ்த்தி மை லார்ட் .

வொய் திஸ் ப்ராப்ளம் ?
பேசாம ஆண் - பெண் நட்பு லவ் கம் தாங்களே அரேஞ்ச்ட் மேரேஜ்னு சொல்றாங்கன்னா பச்சை கோடி காண்பிச்சு வைப்போம் , மெட்ரோ கணக்கா ஸ்மூத்தா போவும்ல வாழ்க்கை .
நம்மை திட்ட , பாராட்ட ஷொட்டு வைக்க நம் நட்பு நம் கூடவே இருக்கும் போது , வேறு இடம் தேடி அலைய வேண்டியதே இல்லை
.பெண்ணும் பெண்ணும் நடப்பாக இருந்தாலே ஏண்டி நீ அவ கூட மட்டும் அவ்வளவு நேரம் பேசின என்கூட பேசவே மாட்டியான்னு சண்டை எல்லாம் போட்டவங்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒருவேளை இதற்க்கு பேர் பொசசிவ்னெஸ் இல்லையோ?//
இதுக்கு பேரு நட்பே இல்லீங்கோ , ஆளுமை ஒருத்தி கையிலே கிடைச்ச போதும் ன்ற அளவுக்கு பிரச்சினை கொடுக்கறது , ஒரு வேளை இதை நட்பு என்று சொல்லி இவங்க தொடர்ந்தால் கூட நட்பு பாலத்தில் விரிசல் விட ஆரம்பிச்சாச்சு , கூடிய சீக்கிரம் எந்த அணு குண்டு ம வைக்காம தானே விழுந்துடும் .
அப்புறம் வேற நட்பு ??? தேடி அலைவாங்க .
ஒகே மை லார்ட் , வொர்க் டென்சன் ரொம்ப அதிகம் , அதானால் கண்டினோஸ் ஆ பதிலடி கொடுக்க முடியலை , மன்னிச்சு அனுப்பி விட்ருங்கோ .
பை

மேலும் சில பதிவுகள்