பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---

அறுசுவையின் நாயகிகளே நாயகர்களே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். தோழி வனிதாவின் பிறந்த நாள் பரிசாக பட்டிமன்றத்தை இம்முறை நான் பொறுப்பேற்று நடத்த வந்துள்ளேன். . கோடை விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் நண்பர்களுடன் உறனவினர்களுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருப்பீர்கள். அவர்கள் இல்லையென்றால் ரொம்பவும் போர் அடித்து தான் போகும் இல்லையா தோழிகளே??? என்னடா இவ பட்டி தலைப்பை சொல்லுவா என்று பார்த்தா சம்மந்தமே இல்லாமல் ஏதோ பேசுறாலே என்றெல்லாம் யோசிக்கப்படாது. சம்மந்தம் இருக்கு.....

இதோ தலைப்பு : நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?

நம்ப சுகி தந்த தலைப்பு. நன்றி சுகந்தி.

வேற ஒன்னுமில்லைங்க நேத்து ஸ்ரீதர் படம் பார்த்ததன் எஃப்க்ட். ரொம்ப கொழப்பமாக இருந்தது சரி அதையே நம் தோழிகளிடம் பட்டி மன்ற தலைப்பாக கொடுத்தால் தெளிவாகிடுவாங்கனு ஒரு நம்பிக்கை. அதை மெய்யாக எல்லோரும் வாங்க. முதல் முறையாக நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதனால் என்னை பொருத்து வழிநடத்தி செல்லுமாறு தோழிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

தாக்குங்கள்.......

//காலத்துக்கேற்ப எல்லாத்தையும் சமூகம் , பழகுதல் ,நடை உடை பாவனை எல்லாத்தையும் நாம் மாற்றிவிட்டு , ஆனா தோழன் / தோழி கணவன் மனைவியா மாற கூடாதுன்னு சொல்றது ரொம்ப சோக்கா இல்ல கீது .
அப்போ நாம் திரும்பி அந்த காலத்துக்கு போயிற வேண்டியது தான் , ஏன்னா , நிறைய தோழர்கள் இருக்கும் ஒரு பெண்ணுக்கு சந்தேக பிராணியா ஒரு கணவன் அமைதால் அவ கெதி ??
அதே போலே நிறைய பெண் தோழிகள் இருக்கும் ஒரு ஆணுக்கு , நல்ல மனைவி கூட டவுட் சுந்தரியா மாறி விட வாய்ப்பு ஜாஸ்த்தி மை லார்ட் .//

நீங்கள் இப்படி சொல்வதை கேட்க வருத்தமாகவும் இருக்கிறது கவலையாகவும் இருக்கிறது...காலத்திற்கேற்ப நம் நடை உடை பாவனை மாறினாலும் அதிலும் ஒரு கட்டுப்பாடு இருக்க தானே செய்கிறது? காலம் மாறி விட்டது என்பதற்காக உறவு முறையில் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறோமே அல்லாது தூரத்து சொந்தம் என்றாலும் அண்ணன் - தங்கை உறவில் உள்ளவர்கள் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று நாம் ஏற்றுக் கொள்வோமா என்ன?

உண்மையில் நீங்கள் சொல்லும் பிரச்சனை பழகி பார்த்து திருமணம் செய்பவர்களுக்கு (நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்கள என்று சொல்ல எனக்கு விருப்பம் இல்லை...) வர தான் வாய்ப்பு அதிகம். முன்பே மற்றொரு தோழி சொன்னது போல் என்னுடனும் இப்படி தானே பேசி பழகினாள் அல்லது பழகினார் என மனதில் சந்தேகம் வர நிறைய வாய்ப்புகள் உள்ளது...

//பேசாம ஆண் - பெண் நட்பு லவ் கம் தாங்களே அரேஞ்ச்ட் மேரேஜ்னு சொல்றாங்கன்னா பச்சை கோடி காண்பிச்சு வைப்போம் , மெட்ரோ கணக்கா ஸ்மூத்தா போவும்ல வாழ்க்கை .
நம்மை திட்ட , பாராட்ட ஷொட்டு வைக்க நம் நட்பு நம் கூடவே இருக்கும் போது , வேறு இடம் தேடி அலைய வேண்டியதே இல்லை//

இதெல்லாம் hypothetical நம்பிக்கை தானே இல்லாது இப்படி தான் என்று எப்படி சொல்ல முடியும்? காதலித்து மணம் முடித்தால் சந்தோசம் பொங்கி வழிந்து கொட்டும் என்று 100% கேரன்டீ இருக்கிறதா என்ன? காதலித்து மணம் புரிந்து விட்டு தினமும் சண்டை போடுபவர்களும் இருக்கிறார்கள், அரேஞ்ச்ட் திருமணம் செய்து கொண்டு மனம் ஒன்றி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்...

"எப்போது இரண்டு மனித மனங்களில் ஜெராக்ஸ் காப்பி போல ஒரே எண்ணம் ஓடுவதில்லையோ, அப்போது அந்த இருவரிடையே மன வேறுபாடுகள் ஏற்படுவதும் இயல்பு தான்." (ரமணி சந்திரன் என்னை மன்னிப்பாராக :))

காதலித்து மணம் புரிந்தாலும், பெரியவர்கள் பார்த்து நடக்கும் திருமணம் என்றாலும் பிரச்சனைகள் / கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு தான் அதற்காக நண்பனை / தோழியை வாழ்க்கை துணையாக மாற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை.. வேண்டுமென்றால் வனிதா சொன்னது போல் பழகி பார்த்து முடிவு செய்யலாம்... நட்பை அசிங்க படுத்த வேண்டாம்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//ஆனா சிலருக்கு அமைய தான் செய்யுது , எதையும் எதிர்பார்க்காமல் , விட்டு கொடுத்து , தன நட்பு பாராட்ட படும்போது தானே பாராட்ட படுவதாய் நினைத்து மகிழ்வது , அவரின் துயரத்தை தன தலை மேல் வைத்து சுமப்பது , தினம் பேச வில்லை என்றாலும் கூட மனதால் அவர்களுக்கு நல்லது நினைப்பது என்று இருக்க தான் செய்கிறார்கள் .
இவர்கள் நட்பை தாண்டி அடுத்த கட்டமான காதலுக்கு போவாததுக்கு , ஒரு இனம் அது ஒரு காரணம் .// - ஆண் பெண் நட்பில் எங்களுக்கு இப்படி ஒரு நட்பு அமைந்தது, அதனால் தான் அதை காப்பாற்றி நட்பாகவே நிலைக்க வைக்க விரும்புகிறோம்... இப்படி ஒரு நட்பு கிடைப்பது அறிது, அதை காதல் எனும் சொல்லால் அழிக்க விரும்புவது சரியா??? இப்படி அமைவது தான் நட்பு, மற்றதெல்லாம் சும்மாங்க.

//காலத்துக்கேற்ப எல்லாத்தையும் சமூகம் , பழகுதல் ,நடை உடை பாவனை எல்லாத்தையும் நாம் மாற்றிவிட்டு , ஆனா தோழன் / தோழி கணவன் மனைவியா மாற கூடாதுன்னு சொல்றது ரொம்ப சோக்கா இல்ல கீது // - ம்ம்... நல்ல கேள்வி... இதுக்கு எங்க அணீயில் வெச்சாங்களே பதில் கேள்வி... “காலம் மாறினா அண்ணன், தம்பியை கணவனாக்கிடுவோமா???”னு... சூப்பரில்ல ;)

//நம்மை திட்ட , பாராட்ட ஷொட்டு வைக்க நம் நட்பு நம் கூடவே இருக்கும் போது , வேறு இடம் தேடி அலைய வேண்டியதே இல்லை// - இங்க தான் தப்பு பண்றாங்க எதிர் அணி... நட்பு நிலைப்பது அறிதுன்னு இவங்க சொல்ற மாதிரி, நண்பன் திருமணத்துக்கு பின் நண்பனாவே இருக்க மாட்டானு நாங்க சொல்றோம். நான் நின்றைய பேஅரி பார்த்திருக்கேம்ன் யுவர் ஆனர்... “விளையாட்டு இன்னுமா?? இப்போ நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு, பொறுப்பா இருக்கனும்...”னு அட்வைஸ் பண்ணி தோழியை மனைவி ஆக்கிடுவாங்க... நான் சொல்லும் அர்த்தம் புரியுதில்ல??? ;)

நடுவரே... எதிர் அணி சொல்லும் நட்பு திருமணத்துக்கு பின் நிலைக்காதுன்னே வெச்சாலும் அதை நினைத்து வருந்தாது உண்மை நட்பு. உண்மையான நண்பர்கள் அவர்களால் ஒரு பெண்ணின் வாழ்க்கையிலோ, ஒரு நண்பனின் வாழ்க்கையிலோ சந்தேகம் வரும்னு தோணுச்சுன்னா அவங்களே விலகி நின்று நம்மை வாழ வைப்பாங்க. அது தான் நட்பு. அங்கே இவங்க கிட்ட பேச முடியலன்னு வருத்தமெல்லாம் இருகாது... அவங்க நல்லா இருக்கனும் என்ற தன்னலம் இல்லா அன்பு மட்டுமே மிச்சம் இருக்கும். நட்புன்னா என்னேரமும் தோலில் கை போட்டுகிட்டு ஊரை சுற்றுபவர்கள்னு நினைச்சா அது தப்பு யுவர ஆனர்.

எல்லாத்துக்கும் மேல நட்பு... எதிர் அணி சொன்ன மாதிரி நண்பர்கள் எனக்கும் உண்டு... திருமணமாகி நான் வெளி நாடு கிளம்பினதும், ஆண் பிள்ளை இல்லாத என் பெற்றோரை பார்த்து கொள்ளும் அன்பு நண்பர்கள் இன்னும் உண்டு. வெளிநாடு போன பின்னும் வருடா வருடம் எனை காண வந்து போகும் நண்பர்கள் அவர்கள். 1 நாள், 1 மணி நேரமானாலும் எனை காண வந்தே ஆவார்கள். “உன்னை போல் ஒரு பொண்ணை பார் என் மகனுக்கும்”னு அவங்க அப்பா அம்மா சொன்னப்போ கூட “அப்பா... அவ என் ஃப்ரெண்ட்.. என்ன பேசுறீங்க..”னு என் முன்னாடியே கோவித்த நண்பர்கள் உண்டு. அங்கே அவர்கள் என்னை போலன்னு சொன்னதுக்கே, தப்பான எண்ணத்தில் கேட்டு விட கூடாதே என்று துடித்தான் பாருங்க... அவன் நண்பன் :) இது தான் நட்பு. இப்படி காணவே முடியலன்னாலும், நினைக நேரமில்லாமல் காலம் நம்மை பம்பரமாய் ஓட விட்டாலும், நெஞ்சில் ஏதோ ஒரு மூலையில் அந்த நட்பு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும் நடுவரே. நட்புக்கு நடுவே பாலமாக கடிதமோ, தொலைப்பேசியோ, சந்திப்போ தேவை இல்லை... அன்பை பரிமாறிக்கொள்ளும் அவசியம் அங்கில்லை... எதுவுமே இல்லைன்னாலும் நண்பனே தன்னை வெருத்து ஒதுக்கினாலும் நண்பனுக்காக சிந்திக்கும் மனம்... அதுவே நட்பு. 10 வருஷத்துக்கு அப்பரம் ஏர்போர்ட்டில் சந்தித்தாலும் ஒரு நிமிஷம் இதயம் வித்தியாசமா துடிக்குது பாருங்க... அங்க இருக்கு நட்பு. கால ஓட்டத்தில் பல வருடங்கள் கழித்தும் நினவில் நிற்கும் நண்பன் முகம் கண்ணில் துளி நீரை கொண்டு வந்தால் அங்கே வாழ்கிறது நட்பு. சோகத்திலும் நண்பனின் நினவு முகத்தில் ஒரு புண்ணகையை கொண்டு வந்தால் அங்கே வாழ்கிறது நட்பு. எதிர் அணி கேட்ட இலக்கணம்... இது தான்... குறிச்சுக்க சொல்லுங்க யுவர் ஆனர்.

இப்படி ஒரு அழகான நட்பை காதலாக்கி மாற்றிவிடாதீர்கள் எதிர் அணி....

தன்னை போல் தன் நண்பனும் பாஸ் ஆகனும்னு காபி அடிக்க பேப்பர் கொடுப்பது நட்பு...
தன்னை விட ஒரு ரூபாய் கூட கூட வாங்கிட கூடாது மனைவின்னு நினைப்பது கணவன் மனைவி உறவு....

நட்பு அழகானது... நட்பாய் மட்டுமே இருக்கும் வரை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீர்ப்பு இன்று சாயங்காலம் வரும். அதுவரையிலும் தோழிகள் தங்களின் வாதங்களை தொடர்ந்து வைக்கலாம். நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் அவர்களுக்கும், என் அணி தோழிகளுக்கும், எதிரணி தோழிகளுக்கும் வணக்கங்கள்.

நடுவரே, எதிரணி சொல்வதை பார்த்தா, சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையா சொல்லுவாரே, "என்கிட்ட 2 பொண்ணு இருக்கு, புடிச்சா கட்டிக்குங்க, இல்லைனா ப்ரெண்ட்ஸாவே இருப்போம்" அப்படிம்பாரே அப்படிதான் இருக்கு. பழகி பார்த்து வருவதா காதல்????????????? நானும் காதல் திருமணம் செய்தவள்தான் யுவர் ஆனர்.

இந்த காலத்தில் பெற்றோர்களும் ஆண், பெண் நட்பை வரவேற்கவே செய்கிறார்கள். அவர்களது நம்பிக்கையில் புளியை கரைப்பது இவர்கள்தான். வீட்டிற்கு கூட்டிட்டு போய் நண்பன் என்று அறிமுகப்படுத்தி கொஞ்ச நாளில் கம்பி நீட்டிவிடுவார்கள். இதை கற்பனையில் சொல்லலை நடுவரே. இதனால்தான் நல்ல நட்பை கூட ஒரு சந்தேகத்தோடே பார்கிறார்கள் வீட்டிலும், வெளியிலும்.

பழகிவிட்டு நல்லவராக இருந்தால், மனதிற்கு பிடித்திருந்தால் காதலை சொல்லுவோம் என்று சொன்னால் கூட ஓகே (எல்லாம் ஒரு Safeக்கு என்று நினைப்பவர்களுக்கு). ஆனால் அந்த பழகும் நாட்களில் நண்பர்கள் என்று சொல்லி கொள்ளாதீர்கள் என்று தான் சொல்லுகிறோம்.

ஒருவருடைய நல்ல குணங்களை மட்டும் பார்த்து வருவது காதல். (கெட்ட குணங்கள் தெரிந்தால் உடனே மாத்திக்க சொல்லி அட்வைஸ் வரும்) ஒருவரின் நல்ல மற்றும் கெட்ட குணங்களை நன்கு அறிந்து அவனை அப்படியே ஏற்று கொள்வது நட்பு. எனவே நட்பு நட்பாவே இருக்கட்டும். நட்புக்குரிய மரியாதையை கொச்சைப்படுத்த வேண்டாமே... ப்ளீஸ்...

நன்றிகளோடு அபி.

வாழ்க வளமுடன்

மேலே தூக்கி விட நடுவரே....

தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்....

வாழ்க வளமுடன்

தோழிகளே மன்னிக்கவும்.

சில அலுவல்கள் காரணமாக என்னால் கடந்த இரண்டு நாட்களாக பட்டிக்கு தொடர்ந்து வர முடியவில்லை. அதுவும் இல்லாமல் நேற்றே வர வேண்டிய தீர்ப்பை வெளியிட இயலவில்லை.

தீர்ப்பு இன்னும் சில மணி நேரங்களில் .....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

// உள்ளம் பார்க்கும் உன்னத காதல் எடுத்த உடன் ஆரம்பிப்பதில்லை// கண்டிப்பாக இதையே தான் நானும் சொல்றேனுங்கோ

//நட்பு எனும் உறவு தன்னலம் கருதாது// நூத்துக்கு நூறு உண்மை.

//"ஒருவரையொருவர் புரிந்த பின் இணைந்து கொள்ளுங்கள்
அதன் பாலமாக நட்பை இணைத்துக் கொள்ளுங்கள் "//

திருக்குறள் மாதிரி இரண்டே வரிகளில் அழகாக சொல்லிட்டீங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

காரணம் தெரியும் இருந்தாலும் உங்களுக்காக ஆரம்பித்த பட்டியில் நீங்கள் இல்லாமல் இருந்தால் நல்லாவா இருக்கும்.....அப்பாடா ஒருவழியா ஐஸ் வெச்சாச்சு ;)

// அங்கே சேர்வது காதல், ஆனால் உடைந்தது பெற்றோர் நம்பிக்கை. / இந்த நிலையில் உள்ள பெற்றோரையும் நேரில் பார்திருக்கேனுங்கோ!

அப்போ அடிப்படியாக சந்தேகத்துக்கு காரணம் இது தான் சொல்ல வரீங்களோ?

// திருமணத்துக்கு 1 நாள் முன் வீட்டுக்கு வந்தா உண்மையான நண்பன் 1 வாரம் முன்னாடி வந்து // நிச்சியமாக.......இதை மறுப்பேதும் இல்லாமல் ஒத்துக்கொள்கிறேன்.

நீங்க சொல்லி நான் ஒத்துக்குவேனா ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

// ஆண் நட்பு எது வரை ? // டாஸ்மாக், அவரச வட்டிகடை, ஊர் சுத்துவதற்கு மட்டும் தான் இதுன்னு சொல்றீங்க. ஹம்....

// ஸ்டேடஸ் வேறு ஒரு தடை கல்லாக இருக்கும் // இது புதுசா இருக்கே.....

// காலத்துக்கேற்ப எல்லாத்தையும் சமூகம் , பழகுதல் ,நடை உடை பாவனை எல்லாத்தையும் நாம் மாற்றிவிட்டு , ஆனா தோழன் / தோழி கணவன் மனைவியா மாற கூடாதுன்னு சொல்றது ரொம்ப சோக்கா இல்ல கீது . ///அதானே? அதெப்படி மே மிடியிது.....மிடியவே மிடியாது......

// பேசாம ஆண் - பெண் நட்பு லவ் கம் தாங்களே அரேஞ்ச்ட் மேரேஜ்னு சொல்றாங்கன்னா பச்சை கோடி காண்பிச்சு வைப்போம் // பிரச்சனை இப்போ லவ் அல்லது அரேஞ்ச்ட் மேரேஜ் யா என்பதில்லை.......நட்பு ஏன் காதாலாகனும்? அதானுங்களே கேள்வி?

அப்படியெல்லாம் மன்னிச்சி விட முடியாது......என்ன தண்டனை கொடுக்கலாம்.......சரி சரி.....விட்டுட்டேன்....போங்க.....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

//அதிலும் ஒரு கட்டுப்பாடு இருக்க தானே செய்கிறது?// இதை இதை தான் நான் சொல்ல நெனச்சேன்....நீங்களே சொல்லிட்டீங்க....

//காதலித்து மணம் முடித்தால் சந்தோசம் பொங்கி வழிந்து கொட்டும் என்று 100% கேரன்டீ // என்னங்க நீங்க எல்லாத்துக்கும் வாரண்டி கேட்பீங்க போலிருக்கே?

சரியா சொன்னேங்க......எப்படி இருந்தாலும் திருமணதிற்கு பிறகு வரும் பிரச்சனைக்கு காரணம் தம்பதிகள் தானே அவர்களது கடந்த காலத்து நட்போ அல்லது பார்த்து வைத்த பெற்றோர்களோ காரணமாக இயலாது என்பது தெளிவாக விளக்கிட்டீங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்