ரோல் தோசை

தேதி: May 28, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

தோசைமாவு - ஒரு கப்
முட்டை - 2
உப்பு - சிறிதளவு
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
சிவப்பு பழ மிளகாய் (அ) வரமிளகாய் - 3


 

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து தேங்காய் சட்னி தயாரித்து கொள்ளவும். அதில் கடுகு தாளித்து கலந்து கொள்ளவும்
முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள சட்னி சேர்த்து கலந்து கொள்ளவும். (அளவு: ஒரு முட்டைக்கு ஒரு குழிக்கரண்டி சட்னி )
தோசை மாவை சூடான கல்லில் தோசையாக வார்க்கவும்
அதில் உடனே கலந்து வைத்துள்ள சட்னி-முட்டை கலவையை பரவலாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்
சிவந்ததும் திருப்பி போடவும்
தோசையை ரோலாக சுற்றி துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்

இதனுடன் சாஸ் அல்லது காரசட்னி, தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். சட்னி முட்டை கலவையுடன் சிறிது வெங்காயம் சேர்த்து ஆம்லெட்டாக தயாரித்தால் நன்றாக இருக்கும். இக்கலவையை ஆப்பம், சப்பாத்தி தயாரிக்கும் போது மேலே ஊற்றி வேகவிட்டு எடுத்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சுலபமான நல்ல குறிப்புகளா கொடுக்கறீங்க. குட்டீஸ் ரெசிபி. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ப்ரியா ஈசி அன்ட் டேஸ்டி ரெசிபி. தொடர்ந்து குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

சட்னி முட்டை காம்பினேஷன் புதுசா இருக்கே. ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Very nice receipe it is very simple also.thank you

அன்பு ப்ரியா,

முட்டை சட்னி கலவை ஐடியா நல்லா இருக்கு. சப்பாத்திக்கும் சேர்க்கலாம்னு அடிஷனல் குறிப்பும் சேர்த்துக் கொடுத்திருக்கிங்க. பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

hai priya easy aana dish thanks