காய்கறி சாம்பார் (2)

தேதி: August 13, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு – நூற்றைம்பது கிராம்
கத்தரிக்காய் – ஒன்று
முருங்கைக்காய் – ஒன்று
அவரைக்காய் – பத்து
காரட் – ஒன்று
பச்சை மிளகாய் – மூன்று
சின்ன வெங்காயம் – இருபது
நடுத்தரமான அளவு தக்காளி – மூன்று
சாம்பார் பொடி – இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
புளி – மிகச்சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லி விதை – கால் டீஸ்பூன்


 

பருப்பில் மஞ்சள் பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
புளியை நானூறு மில்லி தண்ணீரில் கரைத்து வைக்கவும். வெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை வாய் பிளந்து வைக்கவும்.
தக்காளி, கத்தரிக்காயை நான்காகவும், மற்ற காய்களை ஒரு அங்குல நீளமான துண்டுகளாகவும் நறுக்கவும்.
தேங்காய் துருவல், மல்லியை விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு மூன்று நிமிடம் வதக்கி மற்ற காய்களைப் போட்டு மேலும் மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
பின் சாம்பார் பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி கரைந்ததும் உப்பு, மஞ்சள் பொடி, புளி சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் பருப்பு கரைசலை சேர்த்து சாம்பார் கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு தேங்காய் விழுது சேர்த்து மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.
மீதமுள்ள எண்ணெய்யை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் இரண்டு சின்ன வெங்காயங்களைத் தட்டி சேர்த்து, நன்கு சிவந்து வாசனை வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து சாம்பாரில் கொட்டி, மல்லி இலையும் தூவி இறுக மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து எடுத்துப் பயன்படுத்தவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Dear Madam,

Thanks a lot for posting Sambar recipe. I will try it soon.