மலபார் சிக்கன் கறி

தேதி: May 29, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

1. கோழி - 1/2 கிலோ
2. வெங்காயம் - 1
3. தக்காளி - 1 (அ) எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 1
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. உப்பு
7. கறிவேப்பிலை, கொத்தமல்லி
8. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
9. தேங்காய் பால் - 1 கப்
10. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி

வறுத்து அரைக்க

11. மிளகாய் வற்றல் - 3
12. மல்லி விதை - 1 மேஜைக்கரண்டி
13. மிளகு - 1 தேக்கரண்டி
14. பட்டை - சிறு துண்டு
15. லவங்கம் - 3
16. ஏலக்காய் - 2


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் வறுத்து அரைக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதில் கோழி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
கோழி பாதி வெந்ததும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
சுவையான மலபார் சிக்கன் கறி தயார்.


தக்காளிக்கு பதிலாக எலுமிச்சை சேர்க்க விரும்பினால் கடைசியாக அடுப்பில் இருந்து எடுத்த பின் சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்