கவ்வர் மசாலா

தேதி: May 30, 2012

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

கொத்தவரங்காய் - 250 g
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 tsp
கோடா மசாலா - 3/4 tsp
வேர்க்கடலை - 1 tbsp
சோம்பு - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கொத்தவரங்காயை ஒரு இன்ச் நீள துண்டுகளாக நார் எடுத்துட்டு வைக்கவும். வேர்க்கலடையை வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டின் பச்சை வாசம் அடங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து உப்பு மற்றும் கோடா மசாலா பொடி சேர்த்து கிளறவும்.

தக்காளி குழைந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காய் சேர்த்து வதக்கவும்.

தேவையெனில் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவிடவும்.

வெந்ததும் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை தூவி இறக்கவும்.

சாம்பார் சாதம், மோர் குழம்பிற்கு, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.


இது இரு மகாராஷ்ட்ரியன் உணவு வகை. கோடா மசாலா கடைகளில் கிடைக்கும் பொடி. இதே முறையில் கத்திரிக்காயையும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்