லெமன் ஜிஞ்சர்

தேதி: May 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

எலுமிச்சை பழம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
சர்க்கரை - 2 தேக்கரண்டி
தேன் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
இஞ்சியை சிறுத் துண்டுகளாக்கி அதனுடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு ப்ளெண்டரில் சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு ஐஸ் வாட்டரை ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிது தேன் ஊற்றி ஓரங்களிலும் சிறிது தடவவும்
அடித்து வைத்துள்ள ஜூஸை அதில் ஊற்றவும். சில்லென்ற கோடைக்கு இதமான கூலர் ரெடி....


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சில்லுன்னு ஒரு குறிப்பு கொடுத்து இருக்கீங்க நன்றி ப்ரியா. இஞ்சி சேர்த்து செய்து பார்த்ததில்லைங்க செய்துடுறேன் இந்த முறை. வெயில எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல?

hi very naise>nga

hi uma

எனக்கு ரொம்ப பிடிச்ச ஜூஸ் தேன் சேர்த்ததில்லை ஆனால் இஞ்சி சேர்த்து குடிப்பது ரொம்ப சுவையா இந்த வெயிலுக்கு ஏற்றது இருக்கும் படங்கள் ரொம்ப நல்ல வந்து இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G

அன்பு ப்ரியா,

இஞ்சி தேன் சேர்த்து சூப்பரான ஜூஸ், வெயிலுக்கு மட்டுமல்ல, ஜீரணத்துக்கும் மிகவும் ஏற்றது.

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

ப்ரியா
இதிலே ஏலக்காயும் போடலாம்தானே.