தாபா சிக்கன்

தேதி: June 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

கோழி துண்டுகள் - கால் கிலோ
வெண்ணெய் மற்றும் எண்ணெய் - தலா 2 மேசைக்கரண்டி
பூண்டு மற்றும் இஞ்சி - தலா அரை மேசைக்கரண்டி
தக்காளி - கால் கிலோ
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கெட்டி தயிர் - அரை கப்
கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - அரை மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (விருப்பமிருந்தால்)
மல்லி இலை, இஞ்சி - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் தனியா தூள், சீரக தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
சிக்கனை சுத்தம் செய்து தண்ணீரை சுத்தமாக இருத்துட்டு வைக்கவும். பேனில் எண்ணெயும் பட்டரும் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்கும் வரை வதக்கவும். சிவந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
அதே பேனில் மீதமுள்ள எண்ணெயில் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
இரண்டு நிமிடத்திற்கு பின் கலந்து வைத்துள்ள மசாலாவில் பாதியை இதில் சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும். இடையிடையே பிடித்துக் கொள்ளாமல் கிளறி விடவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் வதக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகள், மீதமுள்ள கலந்த மசாலா மற்றும் தயிர் சேர்க்கவும். நன்றாக கிளறி தீயை குறைத்து திரும்பவும் எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேக விடவும்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு கசூரி மேத்தியை உள்ளங்கையில் வைத்து நசுக்கி சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டும் சேர்த்து கிளறவும். மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்.
ஐந்து நிமிடத்தில் இறக்கி கொத்தமல்லி, நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இமா ஒரு சிக்கன் குறிப்புக்கு கமண்ட் போடுறது இதுதான் முதல் தடவை. ;) கடைசி படம் அசத்தல்.

‍- இமா க்றிஸ்

உங்க குறிப்புகளுக்கு பெயரலாம் எப்படி வைபிங்க ரொம்ப நல்லா இருக்கு !! வாழ்த்துக்கள் அக்கா .பெயர் எப்படி இருந்தா என்ன சாப்பிட கிடைச்ச பத்தாதா சீக்கிரம் பார்சல் பண்ணுங்க செய்து சாபிடுரலவுக்கு பொறுமை இல்ல மனம் இங்க மயக்கிடுச்சு என்ன by Elaya.G

அடுத்து சஸ்பென்ஸ், குறிப்பு பேரா சொல்லாம விட்டு இருந்தீங்க. குறிப்பு வந்துடுச்சே. தாபா சிக்கன் சூப்பரா இருக்கு. கடைசிபடம் ப்ரசண்டேஷனும் சூப்பர். டெல்லி ஸ்பெஷலா.

நல்ல குறிப்பு! வாழ்த்துக்கள்! வெண்ணெய்க்கு பதில் நெய் பயன்படுத்தலாமா?

முடியலம்மா முடியல... எங்க தான் இப்படி குறிப்பெல்லாம் கத்துறீங்களோ!!! கலக்குறீங்க... வரிசையா எனக்கு பார்டிக்கு குறிப்பு நீங்களே கொடுத்தா எப்படி??? ;) ஹிஹிஹீ. நல்லா இருக்கு லாவி... வழக்கம் போல ப்ரெசண்டேஷன் சூப்பர். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவி
சிக்கன் அருமை.கண்டிப்பா செய்து பார்த்திடறேன்
கடைசி படம் சூப்பர்.
மேலும் உங்க தவா மஷ்ரும் செய்தேன்.:) கடகடவென காலி ஆயிடுச்சு ;) நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் லாவி,

தாபா சிக்கன் குறிப்பும் சரி, ப்ரசண்டேஷன் படமும் சரி, செமையா இருக்கு! :) அடுத்தமுறை சிக்கன் வாங்கும்போது செய்து பார்த்திடறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றிகள் பல.

இமாவின் கம்மென்ட், என் குறிப்பில், அதுவும் முதலாவதாக, சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கு. அதுவும் சிக்கன் குறிப்பில்......ஐ யாம் லக்கி. பாராட்டுக்கு மிக்க நன்றி.

இளையா இதற்க்கு பெயர் நான் வைக்கவில்லை. ஏற்க்கனவே உள்ள குறிப்பை தான் இங்கே அறுசுவைக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். //மனம் இங்க மயக்கிடுச்சு// உங்களுடையா கமண்ட் படிக்கவே ஆசையாக இருக்கு. உங்களுக்கு இல்லாததா இப்போவே கிளம்பி வாங்க வீட்டுக்கு. நன்றி.

வினோ....சும்மா அப்படி தான் பிட் போடுவோம்ல.....நன்றி.

தாராளமா பயன்படுத்தலாம் சுபா......நோ மேடம்....ஓக்கேவா....நன்றி.

கடுப்பெத்துறார் மை லார்ட்......நீங்க வாரம் வாரம் பார்டி கொடுக்கலாம் நாங்க புதுசா டிஷ் கொடுக்க கூடாதா? தாங்க்ஸ்.

அட ரம்மி செய்து பின்னூட்டமும் தந்தாச்சு.....பரம திருப்பதியா இருக்கு.....வாழ்த்துக்கு நன்றி.

சுஜா.....உங்களுடைய லவ்லி கமென்ட் படிக்க ஆவலா இருக்கேன்...சீக்கிரமே செய்துட்டு சொல்லுங்க. நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!