மாம்பழ கேசரி

தேதி: June 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (9 votes)

 

பழுத்த மாம்பழம் - ‍ஒன்று
ரவை - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
பால் - 3/4 கப்
தண்ணீர் - 3/4 கப்
நெய் - 4 முதல் 5 மேசைக்கரண்டி
முந்திரி - ‍ அலங்கரிக்க‌
ஏலக்காய் - 3


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். மாம்பழத்தை தோலை நீக்கிவிட்டு பழத்துண்டுகளை நறுக்கி ஒரு மிக்ஸியில் போட்டு, சிறிது நீர்விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய்யை விட்டு ரவையை கொட்டி இளஞ்சூட்டில் லேசாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் + மாம்பழக்கூழ் + பால் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து (2 கப் அளவிற்கு குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்) அடுப்பில் வைத்து கலந்துவிட்டு சூடாக்கவும்.
கலவை கூழாகி வரும் போது, சர்க்கரையையும் கொட்டி கரைய விடவும். எல்லாமுமாக சேர்ந்து கொதி வரும் நிலையில், வறுத்து வைத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறி விடவும்.
இரண்டு மேசைக்கரண்டி நெய்யையும் கூடவிட்டு, ரவைக்கலவை வேகும் வரை அவ்வப்போது கிளறிவிடவும். ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.
எல்லாம் வெந்து பாத்திரத்தில் இருந்து ஒட்டாமல் விலகி வரும்போது, முந்திரியை நெய்யில் வறுத்து இதில் சேர்க்கவும். மேலும் ஒரு மேசைக்கரண்டி நெய்விட்டு கலந்துவிட்டு இறக்கவும்.
சுவையான மாம்பழ கேசரி தயார்!

மாம்பழத்திற்கு பதில் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மாம்பழக்கூழ் (mango pulp) டின் வாங்கி, அதில் அரை கப் அளவு எடுத்து உபயோகிக்கலாம். இங்கே மாம்பழத்தின் ஒரிஜினல் நிறத்தில் கேசரி செய்யப்பட்டுள்ளது. விருப்பப்பட்டால், (மேலும் நிறம்கூட்ட) ஒரு பின்ச் கேசரிக்கலர் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பைனாப்பிள் கேசரி தெரியும்,மாம்பழத்தில் இப்போதான் பார்க்கிறேன்,படங்களை பார்க்கும் போதே கேசரியின் சுவை தெரியுது,வாழ்த்துக்கள்.

மாம்பழ கேசரி படங்களுடன் சூப்பர் சுஸ்ரீ. பைனாப்பிள், வாழைப்பழம், ஆப்பிள் இவை தான் செய்திருக்கிரேன்.. மாம்பழம் அல்வாதான் ட்ரை பண்ணிருக்கேன்.. கேசரி இதுவரை செய்ததில்லைபா.. சீக்கிரம் செய்துவிட்டு பின்னூட்டம் அனுப்பரேன்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

சுவையான குறிப்பு! வாழ்த்துக்கள்! 5 ஸ்டார் குடுத்தாச்சு!

நிஜமாவே முகப்பில் படம் மட்டும் பார்த்ததும் ஐஸ்க்ரீம் குறிப்புன்னு நினைச்சுபுட்டேன் ;) அத்தனை அழகா ஸ்கூப் பண்ணி ப்ரெசண்ட் பண்ணிருக்கீங்க. சூப்பர். இங்க இருக்க வரை மாம்பழமெல்லாம் எட்டா கனி ;) ச... இந்த பழம் புளிக்கும்னு சொல்லிக்குவோம். கிலோ நம்ம ஊர் பணத்தில் 400 - 500 விக்கும் சீசன் நேரத்துலையே. ஊருக்கு வந்த பிறகு செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் சூப்பர்மா

சுஜா
அருமை போங்க.. ;)
பார்க்கவே அத்தனை அழகு
எனக்கு பிடித்த மாம்பழ சுவையிலும், பிடித்த எல்லோ கலரிலும் அட்டகாசமா இருக்கு
வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு சுஸ்ரீ,

கலர், ப்ரசண்டேஷன் எல்லாமே பிரமாதம்.

சாதாரணமா கேசரி செய்யறப்ப, ரவை வெந்த பிறகு, சர்க்கரை சேர்ப்போம். பழக்கூழும் சர்க்கரையும் சேர்த்து, கொதித்த பிறகு, ரவையை சேர்த்து செய்யும் முறையை சொல்லித் தந்திருக்கீங்க. நன்றி

பாராட்டுக்கள் சுஸ்ரீ

அன்புடன்

சீதாலஷ்மி

intha mambala kesari differenta irukku,pakka azhaga iruku,kandipa naan try panithu solren,idhe pol niraiya sollunga

சூப்பர் மாம்பழ கேசரி..எல்லாமே எங்க வீட்ல இருக்கு இப்போ..எனக்கு எதுவும் வேணாம் அந்த கடைசி படம் மட்டும் போதும்

குறிப்பை படுவிரைவில் வெளியிட்டு அசத்திய அறுசுவை குழுவினருக்கு மிக்க நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ

தோழிகளே, ஒரு பாய்ண்ட் குறிப்பில் சேர்க்க‌ நினைத்து விட்டுப் போனதை இப்போதுதான் பார்த்தேன்.

மாம்பழத்தின் ரகம், தன்மையை பொருத்து, இனிப்பு சுவையும் சற்று மாறுபட வாய்ப்பிருக்கு. ஆக, ர‌வையை கொட்டி, கேசரி வெந்து வ‌ரும் நேர‌த்தில், கொஞ்ச‌மா செக் செய்து, தேவைப்பட்டால் சுவைக்கு ஏற்ப, மேலும் சிறிது சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரீம்,
முதலாவதாக வந்து தந்த பாராட்டுக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!

--
ர‌ங்கல‌ஷ்மி,
உங்க‌ பாராட்டுக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி! அது ஒண்ணுமில்லை, என் பசங்களுக்கு கேச‌ரியும் பிடிக்கும், மாம்ப‌ழ‌மும் ரொம்ப‌ பிடிக்கும். ஆக‌, இர‌ண்டையும் ஒன்னா சேர்த்து பார்த்தேன்! :)
நீங்க‌ செய்து பார்த்த‌தும் எப்ப‌டி இருந்த‌‌துன்னு சொல்லுங்க‌. ந‌ன்றி!

--
சுபா தியாகு,
பாராட்டுக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் ந‌ன்றி! 5 ஸ்டார்ஸ் கொடுத்த‌த‌ற்கும் மிக்க ந‌ன்றி! :)

--
வ‌னி,
பாராட்டுக்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!

அப்ப‌டியா, மாம்பழம் அங்கே அவ்வ‌ள‌வு டிமாண்டா?! எனக்கும்கூட நாங்க இங்கே வந்த‌‌ புதிதில் எல்லாம் ந‌ல்லாவே கிடைக்காது, ஒரே புளிப்பா, நார் நாரா வேற இருக்கும். எனக்கு பிடித்த மாம்பழம் கிடைக்கும் அழகைப்பார்த்து எனக்கு அழுகை அழுகையா வரும்! மாம்பழம் சாப்பிடும் ஆசையே விட்டுபோயிருந்தது. :( ஆனால், இப்ப‌ல்லாம் நல்லா, சில நேரம் அருமையாவே கிடைக்குது! எங்களைபோலவே ப‌ச‌ங்க‌ளுக்கும் மாம்பழம் ரொம்ப‌வே பிடிப்ப‌தால், சீஸ‌ன் தொட‌ங்கிட்டாலே ஒரே மாம்ப‌ழ‌த்தில் புகுந்து விளையாடிடுவோம்.
ஓ..ஓஒ..சாரி, ரொம்ப‌ ஆவ‌லைத் தூண்டறேனோ?! ச‌ரி, விடுங்கள் வனி, ஊருக்கு போகும்போது ஆசைதீர சுவைத்திடுங்க‌ள். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

நிகிலா,
வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி!

--
ர‌ம்யா,
ம‌ன‌ம் நிறைந்த‌‌ பாராட்டிற்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க ந‌ன்றி! நீங்க‌ளும் மாம்ப‌ழ‌ம் பிடித்த‌ க‌ட்சியா?! சூப்ப‌ர்! :)

--
சீதால‌ஷ்மிமா,
உங்களுடைய பாராட்டுக‌ளுக்கும், வ‌ருகைக்கும் ரொம்ப‌ ந‌ன்றிமா!

நானும் சாதாரணமா கேச‌ரி செய்யும்போது, ர‌வை வெந்த‌‌பிற‌கே ச‌ர்க்கரை சேர்ப்பேன். இது, பால், ப‌ழ‌க்கூழ் எல்லாம் சேர்ப்ப‌தால், எல்லாம் கொதித்ததும் ர‌வை சேர்த்து செய்துபார்த்தேன். ந‌ன்றாகவே வந்தது. மீண்டும் ந‌ன்றி!

--
பூர‌ணி,
உங்களுடைய பாராட்டுக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி! கண்டிப்பா எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன். நீங்க செய்துபார்த்திங்கன்னா எப்ப‌டி இருந்ததுன்னு வந்து சொல்லுங்க‌. ந‌ன்றி!

--
த‌ளிகா,
வாவ்... உங்க‌கிட்டே இருந்து பாராட்டு! என‌க்கு ரொம்ப‌ சந்தோஷ‌மா இருக்கு! :) உங்களுக்கு இல்லாததா? இதோ இப்பவே தந்திடறேன் அந்த கடைசிப்பட கேசரி பவுலை! :)
முடியும்போது செய்துபாருங்க தளிகா. அப்படி செய்திங்க‌ன்னா, எப்ப‌டி வந்ததுன்னும் ம‌ற‌க்காம‌ சொல்லுங்க‌. ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

hai how r u?yesterday mango kesari senjaen.romba nalla vandudhu.idae madiri sweet recipies thodarndu kudunga mam.thanks for ur receipy.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மாம்பழ கேசரி பார்கவே நல்லா இருக்கு செஞ்சி பார்த்துட்டு சொல்ரேன்.. இப்படி ஒரு ரெசிபி சொல்லிக்கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க..

அன்புடன்,
zaina.

சுஸ்ரீ,

ஹ்ம்ம்.. வித்தியாசமான கேசரி.. :)
பார்க்கும் போதே எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும் போல் உள்ளது.. கேசரியை இப்படி அழகாக ப்ரெசெண்ட் செய்து இப்போது தான் பார்க்கிறேன்.. லவ்லி.. :)இதற்கு மாம்பழம் நல்ல வெரைட்டியாக இருந்தால் தான் சுவை அபாரமாக இருக்கும் என நினைக்கிறேன்... கேசரியாக செய்யும் வரை எல்லாம் மாம்பழத்தைப் பொறுமையாக வைத்துக் கொண்டு இருக்க முடியுமா என்பது சந்தேகமே.. :) முடிந்தால் முயற்சித்துப் பார்க்கிறேன்.. :)

சுஸ்ரீ, மாமபழ கேசரி செய்தேன் அருமை...மேஙோ புட்டிங் செய்வதா இருந்து சினா க்ராஸ் இல்லாமல் போகவே அவசரத்துக்கு இது நியாபகம் வர செய்தேன் எல்லாரும் மாம்பழத்தில் கேசரியா என்று ஆச்சரியப்பட்டு விரும்பி சாப்பிட்டாங்க