தேங்காய் பால் குழம்பு

தேதி: June 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

 

பீன்ஸ் - 10
கேரட் - 2
உருளை - 2
பெரிய வெங்காயம் - 2
முருங்கைக்காய் - ஒன்று
கத்தரிக்காய் - 2
பூண்டு உரித்தது - ஒரு கப்
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - அரை மூடி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
உப்பு
தாளிக்க:
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய்


 

காய்களை 1 1/2 இன்ச் நீள துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
தேங்காயை துருவி 2 முறை பால் எடுக்கவும்.
பச்சை மிளகாய், பொட்டுக்கடலை இவற்றை எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து வைக்கவும்
இரண்டாம் பாலை விட்டு காய்களை குக்கரில் வெயிட் போடாமல் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
காய்கள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய், பொட்டுக்கடலை விழுதினை நன்றாக கரைத்து விடவும்.
கலவை கெட்டியானதும் முதல் பாலை சேர்க்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெயில் வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

முதல் பாலை சேர்த்ததும் அடுப்பை அணைத்து விடவும். கொதிக்க வைக்க கூடாது, திரிந்துவிடும். சாதம், சப்பாத்தி, நாண், பட்டூரா போன்றவைகளுக்கு சைட்டிஷாகவும் வைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கும்னு பார்த்தாலே தெரியுது வாழ்த்துக்கள் விரைவில் செய்து பார்த்து சொல்லுறேன் by Elaya.G

idha kandipa senchu pathu solren inga vasanai varuthu

மஞ்சு நானும் இப்படிதான் செய்வேன் ஆனா லெமன் ஜூஸ் விடுவேன். கடைசியில்.

idhula pulipuku enna serkalam

அன்பு மஞ்சுளா,

இதை நாங்க தேங்காய் சொதி என்று சொல்வோம். திருநெல்வேலிப் பக்கம், விருந்துகளில் கண்டிப்பாக சொதி இடம் பெறும்.

நல்லா இருக்கு, பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப நல்லா இருக்குங்க :) நான் அவசியம் செய்து பார்த்து சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது நெடுநாளைய ஆசைக்குரிய குறிப்பு இது.. வி.ப வில் சேர்த்து விட்டேன்.. செய்து பார்த்த பின் பின்னூட்டம் இடுகிறேன்.. குறிப்பிற்கு நன்றி.. :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

இளையா- முதல் பதிவிற்கு நன்றி
பூர்ணா - வாழ்த்திற்கு நன்றி, புளிப்பு சுவை இதற்கு பொருந்தாது

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சீதா மேம்- நன்றி
நிகிலா- வாழ்த்திற்கு நன்றி, புளிப்பு சுவை இதற்கு பொருந்தாது
வனி - செய்து பாருங்க நன்றி
சாந்தினி - ரொம்ம நாளைக்கு அப்புறம் உங்க பதிவு பார்க்க சந்தோஷம். நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சுளா,

தேங்காய்ப்பால் குழம்பு எல்லா காய்களும் சேர்த்து ரொம்ப நல்லா செய்திருக்கிங்க. வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

mrs.manjula neenga seitha thengai pal kuzhambu seithen,superaga vanthathu,veetil anaivarum virumbi sapitanar,idhe pol kaikarigal seivathai avvapothu sollunga,thank you