ஃபாண்டண்ட் (Fondant)

தேதி: June 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (9 votes)

 

Marshmallows - சிறிது 1/2 கப் அல்லது பெரிது 3
பவுடர்ட் சுகர் - 1/2 கப் + சிறிது
ஜெல் ஃபுட் கலர்


 

முதலில் மார்ஷ்மெலோஸில் ஒரு மேசைக்கரண்டி நீர் விட்டு மைக்ரோவேவில் உருக்கவும். 20 நொடிகள் வைத்து எடுத்தாலே சற்று உப்பி வந்திருக்கும். கலந்து விட்டு மீண்டும் 20 நொடி வைத்து பார்க்கவும். மீண்டும் மீண்டும் கலந்து வைத்து நன்றாக உருகியதும் எடுக்கவும்.
இதில் சிறிது பவுடர்ட் சுகர் கலந்து கொண்டு மிச்சம் உள்ள பவுடர்ட் சுகரை டேபிள் மேலே பரப்பி கொள்ளவும். அதன் மேலே உருக்கிய மார்ஷ்மெலோவை ஊற்றி கொண்டு, கையில் வெண்ணெய் தடவிக்கொண்டு பிசைய ஆரம்பிக்கவும்.
மாவு கையில் ஒட்டாத பதத்துக்கு வரும் போது எடுக்கவும். ஃபாண்டண்ட் அழுத்தினால் மென்மையாக இருக்க வேண்டும், அதே சமயம் கையில் ஒட்டாமல் வர வேண்டும். அதற்கு ஏற்றபடி சர்க்கரை அளவை மாற்றிக் கொள்ளவும்.
இதன் மேல் வெண்ணெய் தடவி அப்படியே க்லிங் ஷீட் போட்டு முழுவதும் மூடி ஒரு காற்று புகாத கண்டைனரில் வைக்கவும். இப்போது ஃபாண்டண்ட் தயார். இதை முன்பே செய்து தயாராக வைத்து கொண்டால் வேண்டிய போது எடுத்து பயன்படுத்தலாம்.
கலர் ஃபாண்டண்ட் தயார் செய்ய மார்ஷ்மெலோவை உருக்கியதுமே கலர் சேர்த்து கலந்து பின் பவுடர்ட் சுகரில் சேர்த்து பிசையலாம். அல்லது வெள்ளை ஃபாண்டண்ட் தயார் செய்து அதில் தேவையான ஜெல் கலர் கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.
இவை உருவமாக செய்யும் முன் சில மணி நேரங்கள் அப்படியே வைத்திருந்து பயன்படுத்தினால், நல்ல பதமாக செய்ய வரும். உருவங்கள் செய்ய மீண்டும் பவுடர்ட் சுகர் சிறிது பரப்பி கொண்டு அதன் மேல் திரட்டி இதற்காக வரும் கட்டர் அல்லது வழக்கமான பிஸ்கட் கட்டர் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உருவம் கொடுக்கலாம்.
இலைகள், பூக்கள் என எல்லாமே அதற்கான அச்சு இல்லாமல் கெமிக்கல் க்ளே க்ராஃப்ட் செய்வது போல் செய்ய இயலும்.
இவற்றை சற்று வளைந்தது போல் இயற்கையான உருவம் கொடுக்க ரோலிங் பால் ஏதும் இல்லாமல் வெறும் தேக்கரண்டியின் பின் பக்கம் அல்லது உள் பக்கத்தில் போட்டு காய விட்டாலே வளைந்தது போல் காய்ந்து செட் ஆகி விடும்.
இவை எல்லாம் காய்ந்து பயன்படுத்த தயாராக குறைந்தது 8 மணி நேரம் வரை ஆகும். ஈரமாக இருக்கும் போது இவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக சுலபமாக ஒட்டி விடலாம். காய்ந்த பின் ஒட்ட ஐசிங் பயன்படுத்த வேண்டும்.
சுவையான சுலபமான மார்ஷ்மெலோ ஃபாண்டண்ட் தயார். விரும்பியபடி பயன்படுத்தலாம்.

ஃபாண்டண்ட் என்பது கேக்களில் பயன்படுத்தும் ஒரு வகையான ஐசிங் தான். இது சற்று கடினமானதாக இருக்கும். இதை பயன்படுத்தி கேக்களை முழுவதுமாக மூடலாம். சப்பாத்தி போல் திரட்டி க்ரீம் தடவிய கேக் மேல் மூடி வெளியே மிச்சம் இருக்கும் ஃபாண்டண்ட் நறுக்கிவிட்டால் ஃபாண்டண்ட் கவர் செய்த கேக் தயார். இது போல் உருவங்கள் செய்து மேலே ஒட்டினால் அழகான கேக்கள் தயாராகும். பயன்படுத்தும் பவுடர்ட் சுகர் நன்றாக சலிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மார்ஷ்மெலோவை உருக்க மைக்ரோவேவ் கட்டாயம் இல்லை. இவற்றை சாக்லேட் உருக்குவது போல் டபுள் பாய்லர் முறையிலும் உருக்கலாம். மைக்ரோவேவில் வைக்கும் நேரம் உங்கள் மைக்ரோவேவ் மற்றும் அளவை சார்ந்தது. நீரும் அப்படி தான். அதனால் சிறிது நேரம் வைத்து எடுத்து பார்த்து மீண்டும் வைப்பது நல்லது. அதிக நேரம் வைத்தால் இவை தீய்ந்து போகும். நீர் இல்லாமல் போனால் ஜவ்வு போல் ஆகும். பிசைந்த மாவு நல்ல பதத்தில் சரியாக இருந்தால் தான் உருவங்கள் கொடுக்கும் போதும், திரட்டி கேக் மேல் போடும் போதும் விட்டு போகாமல் விரிசல் விழாமல் இருக்கும்.
வெளிய வைத்தால் சில நாட்களுக்கும், ஃப்ரிட்ஜில் வைத்தால் 4, 5 மாதங்கள் வரையும் இவை கெடாமல் இருக்கும். சற்று கடினமாகி இருந்தால் மீண்டும் சில நொடிகள் மைக்ரோவேவில் வைத்து எடுத்து வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். கலர் சேர்க்காமல் வைத்து கொண்டால் விரும்பும் போது கலர் செய்யலாம். இவற்றை வெள்ளையாக உருவம் கொடுத்து விட்டு காய்ந்த பின் ப்ரஷ் கொண்டும் ஜெல் தொட்டு வர்ணம் தீட்டலாம். இவற்றுக்கான டூல்ஸ் இருந்தால் இவை செய்வது மிக சுலபம். ஆனால் இல்லாமலும் இது போல் செய்யலாம். இங்கே நான் பயன்படுத்தியது எதுவும் இவற்றுக்கான டூல்ஸ் இல்லை. ஃபாண்டண்ட் பிசையும் போது ஸ்க்ராப் செய்ய தோசை கரண்டி, திரட்ட வழக்கமான சப்பாத்தி கட்டை, உருவம் கொடுக்க சில பிஸ்கட் கட்டர், விரல்கள், தேக்கரண்டி, மேஜைக்கரண்டிகள்.
குழந்தைகளுக்கு பிடித்த உருவங்களை செய்து மேலே அலங்கரித்தால் குழந்தைக்ளுக்கான ஸ்பெஷல் கேக்கள் தயார் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்டகாசமா இருக்கு. முதலாவதாக பதிவு போட தான் இந்த பதிவு. விளக்கமாக பாராட்டுகிறேன் பிறகு!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

பார்க்கிறவங்க எல்லோரும் அப்படியே fond ஆயிடுனுன்னுதானே இதை செஞ்சீங்க ,சூப்பராக இருக்கு,இன்னும் சொல்ல நினைக்கிறன் ,நேரம் இல்லை.நான் எப்பவும் செஞ்சிட்டுதான் பதிவு போடனுன்னு நினைப்பேன்,இன்னைக்கு பதிவு போடாமல் இருக்க முடியலையே...

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

ரெண்டு தடவை பதிவு பண்ணிட்டேன்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

வனி
இதை சாப்பிட மனசே வராது .பார்த்துகிட்டே இருக்கலாம் அவ்வளவு அழகுப்பா.

சூப்பர்ப் வனி. அழகா பண்ணிக் காட்டி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

பார்க்க ரொம்ப நல்லா இருக்கு ஆனா இதெல்லாம் என்ன பொருள்னே தெரிலையே , டேஸ்டு எப்படி இருக்கும்னு நீங்க பார்சல் பண்ணினதுக்கு அப்பறம் தான் சொல்லுவேன் சரியா கைய்ய வச்சாலே கலைநயம் தானோ வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

ஹாய் வனி ரெம்ப அழகா இருக்கு. ஒரு சில மர்ஷ்மல்லோ ல ஜெலடின் இருக்கும் (ஜெலட்டின் போர்க் (pork) அல்லது பீப் (beef) கொழுப்பில் இருந்து தயார் செய்வது ) வெஜ் ஜெலட்டின் னும் உண்டு . இது ஒரு information ka then sonnen . தப்பா எடுத்துக்காதேங்க . because many people don't know about it

புதுவிதமான குறிப்பு கேள்விப்பட்டது இல்லை. கலர் கலரா பார்க்க அழகா இருக்கு. நோட்ஸ் எல்லா தெளிவா புரியும் படி சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்

அன்பு வனிதா,

பேக்கரி வகுப்புகளுக்குப் போனால் கூட, இவ்வளவு அழகாக சொல்லிக் கொடுப்பாங்களான்னு தெரியல. அந்த அளவுக்கு ஸ்பூன் ஃபீடிங் ஆக, விளக்கமாக, பளிச் படங்களுடன் சொல்லித் தர்றீங்க.

பாராட்டுக்களும், நன்றியும், வனி.

அன்புடன்

சீதாலஷ்மி

வனி அருமை ...தேன்க்ஸ் வனி..கண்டிப்பா செய்து பார்க்கணும்..பல முறை யோசித்திருக்கேன் கைய்யில் ஒட்டும் ஒட்டும்னு சொல்றதால் பயந்துட்டு செய்ததில்லை..தேன்க்ஸ் வனி

குறிப்பை வெள்யிட்டமைக்கு மிக்க நன்றி டீம் :)

லாவி... முதல் ஆளா ஓடி வந்துட்டீங்களா??? தேன்க்யூ தேன்க்யூ :)

பாத்திமா... மிக்க நன்றி :) பேரு நான் வைக்கலங்க, ஏற்கனவே யாரோ வெச்சிருக்காங்க. ஹிஹிஹீ. அவசியம் செய்து பார்த்தும் பதிவு போடுங்க.

நிகிலா... மிக்க நன்றி. செய்து வெச்சு பார்த்துட்டே இருங்க ;) பிரெச்சனை இல்லை. ஆனா அவசியம் செய்யனும்.

இமா... ரொம்ப நன்றி. உங்க அளவுக்கு வராது, இருந்தாலும் இன்னும் நல்லா எடுக்க நினைச்சேன், ஆனா அது கையெல்லாம் ஒட்டி என்னை போட்டோ எடுக்க விடாம படுத்திடுச்சு. :)

இளையா... இது நம்ம ஊரில் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும். மார்ஷ்மெல்லோ ஒரு மிட்டை தான். சின்ன பசங்க சாப்பிடுறது, ஸ்பாஞ் போல் இருக்கும். பரவாயில்லை விடுங்க... நான் உங்களுக்கு நேரில் பார்க்கும் போது செய்து தரேன் :) மிக்க நன்றி.

ஜெயலஷ்மி... மிக்க நன்றி. நான் எந்த பொருளும் இங்கிரடியண்ட்ஸ் பார்க்காம வாங்க மாட்டேன். :) இங்க இருக்கும் ஜெலடின் எல்லாமே பீஃப் உள்ளது தான். போர்க் இங்க அனுமதி இல்லை. இங்க சைவமெல்லாம் கிடைக்காது. உண்மை பலருக்கு இதிலெல்லாம் இப்படி பட்ட விஷயங்கள் இருப்பது தெரியாது. சீஸில் கூட கௌ ரெனெட் உண்டு... பலருக்கு அது தெரியாம தான் பயன்படுத்தறாங்க.

வினோ... புது விதமான குறிப்பா??? இது தான் ஐசிங்... இப்ப தான் கோல்ட் கேக் அப்படி இப்படின்னு நிறைய ஐசிங் முறைகள் வந்துடுச்சு. மிக்க நன்றி வினோ :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. என்ன செய்ய அனுபவம் நிறைய சொல்லி தரும்... நான் தீய வெச்சேன், கை எல்லாம் ஒட்ட வெச்சேன்... இன்னும் நிறைய பண்ணேன்... இதை கத்துக்க ;) ஹிஹிஹி. அதான் முன் கூட்டியே எல்லாத்தையும் உஷாரா சொல்லிருக்கேன்.

தளிகா... மிக்க நன்றி. ஆமாம் ஒட்டும், கையில், விரல் இடுக்கில் எல்லாம் நிறைய வெண்ணெய் தடவுங்க. அப்போ ஒட்டாது. டேபிலுக்கும் வேணும்னா வெண்ணெய் பூசுங்க... ஆனா பிரெச்சனை இல்லை, காய்ந்ததும் தோசை கரண்டியால் தேச்சு விட்டா வந்துடும். இல்லன்னா எதாவது ப்ளாஸ்டிக் ஷீட் போட்டுக்கங்க. கலர் பண்ணும் போது கைக்கு க்ளவுஸ் வேணும். இல்லன்னா ஒரு நாள் கையில் கலர் நிக்கும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க ஃபாண்டண்ட் ரொம்ப அழகா கலர்புல்ல பண்ணிருக்கிங்க. ஆனா எனக்கு தான் இதெல்லாம் சாப்பிட குடுத்து வைக்கலை. Am allurgy with all artificial colouring and flavours. கேசரி பவுடர் கூட உபயோகிக்க முடியாது. ஆனா செஞ்சு குடுத்து மத்தவங்க சாப்பிட சந்தோஷப்படுறதே தனி சுகம் தான். முக்கியமா இந்த ஐடம் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வாரம்தோறும் ஆரவாரம் பண்றீங்க மேம் படங்களே சூப்பரா இருக்கு சாப்பிட ஆர்வமாய் இருக்கு
எப்படிங்க இப்படி அறுசுவையில் எங்கும் எதிலும் ஆல்ரவுண்டர் . மேலும் ஜமாய்ங்க

நட்புடன்
குணா

அதுக்குள்ளே (?!) யாரோ பதிலை தட்டிட்டாங்க......

இங்கே பார்ட்டிக்கு கேக் ஆர்டர் பண்ணும் போது கேட்கும் முதல் கேள்வி.....ஃபாண்ட்ண்டா இல்லை க்ரீமா என்று தான்? முதல் வகை விலை அதிகம் அதனால் இரண்டாவது வகை தான் எப்பொழுதுமே! ஆனாலும் இங்குள்ள குழந்தைகளுக்கு மார்ஷ்மேல்லோ தான் உலகமோ. இங்கே காம்ப் ஃபையர் என்றாலும் இதை தான் சுட்டு சாப்பிடுவார்கள்.

ஜெலட்டின் இதில் மட்டுமில்லை கம்மீஸ், ஜெல்லீஸ், சில வகையான காண்டீஸ் செய்யவும், டெக்ச்சர் கொடுப்பதற்காக கிரீம் சீஸ், ஜாம் போன்றவகைகளிலும், முழுங்க ஏதுவாக இருப்பதற்காக காப்சூயூல் செய்வதற்கு என்று ஏகப்பட்டதில் உபயோகிக்கபடுகிறது. இங்குள்ள பல செயின் ரெஸ்டாரன்ட்டில் பொரிப்பதற்கு அனிமல் பாட் தான் உபயோகிப்பார்களாம். சைவம் என்றாலுமே கூட ;) Just FYI...

இதில் வனியின் சமையல் கலையும் கைவினையும் ஒன்றோடோன்னு போட்டி போடுது. கை விரல் கொஞ்சம் பூசனாப்ள தெரியுது ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாவ்! அருமை! படங்கலும் விளக்கங்களும் சூப்பர்!!!இந்த marsmallow பத்தி இப்பதான் கேள்விபடுகிறேன்

பிரேமா... நானும் ஃபுட் கலர் சேர்த்ததெல்லாம் சாப்பிடுவதில்லை. இதெல்லாம் பார்ட்டி ஸ்பெஷல்ஸ்... ஆனா இந்த ஒர்க் அறுசுவைக்கு அனுப்பனே தான் செய்தேன். வெள்லையாவே செய்யுங்க ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி.

குணா... மிக்க நன்றி. எதாவது செய்துட்டே இருந்தா தானே போரடிக்காம இருக்கும். :)

லாவி... உண்மை உண்மை... மயோனீஸ்ல கூட சைவம் உண்டு... ஆனால் பெரும்பாலும் கிடைப்பவை முட்டையில் செய்தது தான்... நாம எல்லாம் வெளிய போய் சீஸ் போட்ட பீசா முதல் கொண்டு சாப்பிட தான் செய்யறோம்... ;) இதில் சைவம் அசைவம் ஏதுமில்லை. காரணம் இதெல்லாம் இந்தியாகாரன் கண்டு பிடிச்ச உணவில்லையே. நான் கூட இதை கைவினைக்கு அனுப்பவா, குறிப்புக்கு அனுப்பவான்னு கொஞ்சம் குழம்பினேன் ;) ஹிஹிஹீ. நன்றி லாவி.

சுபா... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க்... கடைகளில் மிட்டாய் செக்‌ஷனில் இருப்பாங்க இந்த மார்ஷ்மெல்லோஸ் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹ்ம்ம்.. இப்படி வித விதமாகச் செய்ய கலை ஆர்வம் எல்லாம் பத்தாது கலை வெறி இருந்தால் தான் உண்டு.. அது நிரம்ப இருக்கிறது போலும் உங்களிடம்.. வாழ்த்துக்கள்.. :) தொடருங்கள்.. :)

மிக்க நன்றி. அப்படி ஒன்னுமில்லங்க... எப்பவும் எதாவது செய்யனும் என்னை பிசியா வைக்க... இல்லன்னா என் எண்ண ஓட்டங்கள் என்னை டாமினேட் பண்ணிடும். :) அதான் நானே நீயான்னு இருவரும் போட்டி போட்டுகிட்டு எதாவது பண்ணிகிட்டு இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

வாவ்.. வாவ்..வாவ்..
அடேயப்பா.. அருமையா வந்திருக்கு.. இது தான்.சமாச்சாரமா?
கேக் இனி செய்து மேலே ப்ராச்டிங் செய்து நானே இந்த முறையில் பூக்கள் செய்து வைத்து
ஒரு பேக்கிரி கடை தொடங்கலாம்னு இருக்கேன் ;)
வாழ்த்துக்கள்.அசத்தல்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி. ஆமாம் இதே தான் சமாச்சாரம் ;) இனி கேக் குறிப்பெல்லாம் வெறும் கேக்கா வந்தா ஒத்துக்க மாட்டேன்... அலங்காரமா வந்தா தான் ஒத்துக்குவேன் :) ஓக்கே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் வனி, ஃபாண்டண்ட் சூப்பரோ சூப்பர்! :)
நிறைய முறை இங்குள்ள ஃபுட் சேனல்ஸ்ல போடற கேக் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் பார்த்து பார்த்து ரசிச்சிருக்கேன்! :) கைல எல்லாம் ஒட்டிட்டு, பெரிய எஃபர்ட்டா இருக்குமேன்னு நினைத்து செய்து பார்க்கவே தோன்றியதில்லை, இதுவரை! நீங்க என்னடான்னா, ரொம்ப அழகா செய்துகாட்டி ஆசையை கிளப்பிட்டிங்க! :)
தெளிவான செய்முறை விளக்கம், கூடுதல் டிப்ஸ்கள், படங்கள் , உபயோகித்திருக்கும் கலர்ஸ், என‌ எல்லாமும் அருமை!!
பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி. எனக்கு கேக்கை விட கேக் மேல் செய்யும் அலங்கார மேட்டரெல்லாம் ரொப இஷ்டம். நம்ம என்ன கஷ்டப்பட்டு சுவையா கேக் செய்தாலும் அதை ப்ரெசண்ட் பண்ண இதெல்லாம் இருந்தா தானே கேக் கேக் போல் தெரியுது :)

செய்வது சிரமம் இல்லை... ஒரு முறைக்கு இரு முறை குறைவான அளவில் செய்தீங்கன்னா டக்குன்னு வந்துடும். இப்போ நான் கொடுத்திருப்பது ரொம்ப குறைவான அளவு தான்... தைரியமா ட்ரை பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா