பட்டாணி மசாலா கிரேவி

தேதி: August 15, 2006

பரிமாறும் அளவு: இரண்டு நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பச்சைப்பட்டாணி (முதல் நாள் இரவே ஊற வைத்தது) - 2 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
தேங்காய் துருவியது - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

ஊறிய பட்டாணியை உப்பு போட்டு வேக விடவும்.
ஒரு கடாயில், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, தனியா இவைகளை எண்ணெய் விடாமல் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு தனியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் எண்ணெய் விட்டு வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்துடன் துருவிய தேங்காய், வறுத்தெடுத்த மற்றவைகளை வைத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு, பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு கிளறவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்த உருளை மற்றும் பச்சை பட்டாணியையும் போட்டு கலக்கவும்.
அதெல்லாம் கலவையாக சேர்ந்த பிறகு கொத்தமல்லித் தழை போட்டு சிறிது தயிர் (அல்லது மோர்) விட்டு கலக்கவும்.
இதை சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சாப்பிடலாம்.


இதோடு இஞ்சி மற்றும் பூண்டு கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சந்தியா இன்று பட்டாணி கிரேவி தான் செய்தேன்,சப்பாத்திக்கு ரெம்ப நல்லா இருந்தது,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பட்டாணி கிரேவி தான் இன்று காலை சப்பாத்திக்கு.. நன்றாக வந்தது.. கணவருக்குப் பறிமாறிவிட்டு பதிவிடுகிறேன் :)
குறிப்புக்கு நன்றி..