தஹி பிண்டி

தேதி: June 7, 2012

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

வெண்டைக்காய் - 1/4 kg

முந்திரி - 10

தேங்காய் துருவல் - 1 கப்

கெட்டியான தயிர் - 2 கப்

கடலை மாவு - 3 tsp

இஞ்சி விழுது - 1 tsp

மிளகு தூள் - 1 tsp

மிளகாய் தூள் - 1/2 tsp

மஞ்சள் தூள் - சிறிதளவு

கடுகு, சீராக, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

வெண்டைக்காயை கழுவி வால்மற்றும் தலை பகுதியை மட்டும் வெட்டி வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் வெண்டக்காயை சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து கொழகொழப்பு அடங்கும் வரையில் வதக்கவும்.

பிறகு மிளகு தூள் மற்றும் இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடம் வதக்கி தயிர், முந்திரி விழுது மற்றும் தேங்காய் விழுதை சேர்க்கவும்.

தேவையெனில் தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.

வேறு ஒரு பாதிரியாத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளதை தள்ளிது கறியில் கொட்டவும்.

சுவையான தஹி பிண்டி ரெடி. இது சுடு சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்