ஓட்ஸ் சூப்

தேதி: June 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

ஓட்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகு - 1 tsp
ஜீரகம் - 1 tsp
பட்டை - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தனியா தூள் - 1 tsp
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

எண்ணெய் காய்ந்ததும் பட்டை சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் பூண்டை தட்டி சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் வதக்கி பிறகு ஓட்ஸ் சேர்க்கவும்.
இப்பொழுது நான்கு கப் தண்ணீர், உப்பு, மற்றும் தனியா தூளையும் சேர்த்து கொதிக்க விடவும்.
வெந்ததும் மிளகு ஒன்றிரண்டாக பொடித்து சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

thanks..........