மிர்ச் மசாலா

தேதி: June 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பச்சை குடைமிளகாய் - 2
சிகப்பு குடைமிளகாய் - 2
மஞ்சள் குடைமிளகாய் - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
வெள்ளை எள் - அரை கப்
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
கலோஞ்சி (நைஜெல்லா சீட்ஸ்) - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

எள் மற்றும் தேங்காயை எண்ணெயில்லாமல் வறுத்து பொடித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குடைமிளகாய்களை விதையில்லாமல் சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய்களை சேர்த்து வதக்கவும். ஓரங்கள் சிவந்து ஓரளவுக்கு வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், கலோஞ்சி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு, எள்ளு தேங்காய் பொடி சேர்த்து வதக்கவும்.
ஐந்து நிமிடம் வதக்கிய பின்னர் முன்னமே வதக்கி வைத்துள்ள காப்சிகம் சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடம் கழித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் தீயை குறைத்து வைக்கவும்.
குறைந்த தீயிலே ஐந்து நிமிடம் வேக விடவும். இடையிடையே கிளறி விடவும். கிரேவி கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். சுவையான மிர்ச் மசாலா ரெடி. இது சூடு சாதம் சப்பாத்திக்கு சரியான வித்தியாசமான காம்பினேஷன்.

எள் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையில் இருக்கும். எள்ளில் உள்ள லிக்னன்ஸ் என்கிற ஃபைபர் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்குமாம். கருப்பெள்ளை காற்றுபுகாத டப்பாவில் போட்டு வெளியிலே வைத்திருக்கலாம். ஆனால் தோல்நீக்கிய எள் என்றால் சீக்கிரமே கெட்டுபோக வாய்ப்புண்டு அதனால் அதை ஃபிரிட்ஜில் வைத்து பதப்படுத்தவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிர்ச் மசாலா வித்தியாசமா எள்ளை பொடித்து செய்திருக்கிங்க. கண்டிப்பா நல்ல டேஸ்டியா இருக்கும்னு நினைக்கறேன். சீக்கிரம் செய்து பார்த்திடறேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ரொம்ப நல்லா இருக்குங்க. குடைமிளகாய் கலரே எப்பவும் ஸ்பெஷல் தான்... எதை செய்தாலும் பார்க்க எடுப்பா, அட்டகாசமா இருக்கும். ஐ லைக் இட் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிர்ச் மசாலா சூப்பரா இருக்கு. படங்களை பார்க்கும் போதே சாப்பிட ஆர்வமாய் இருக்கு. Vr scorb என்பது உங்கள் பெயரா? அல்லது லாவண்யா என்பது உங்கள் பெயரா? டவுட்டா இருக்கு மேடம் பதில் தாருங்கள்

நட்புடன்
குணா

சமையலோடு நல்ல டிப்ஸ் குடுத்துருக்கீங்க! வாழ்த்துக்கள்!!

அன்பு லாவண்யா,

பெயரே சுண்டி இழுக்குது, செமயான கலர் காம்பினேஷன், அதோட உடல் நலத்துக்கான குறிப்புகள்!

எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல!!

பாராட்டுக்கள், பாராட்டுக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

லாவண்யா
எள்ளுப்பொடி சேர்ததாலே மணமும் சுவையும் மாறுபட்டதாஇ இருக்கும்னு நெனைக்கிரேன்.படம் கலக்கலா இருக்கு.லாவண்

லாவி
படங்கள் அருமை..
பார்க்கவே செய்து சாப்பிடனும்னு ஆசை வந்திருச்சி.. ஒரு பச்சை குடை மிளகாய் இருக்கு
செய்து பார்த்து சொல்கிறேன்.வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.

//வித்தியாசமா எள்ளை பொடித்து செய்திருக்கிங்// இல்லைங்க.....நம்புங்க எல்லாரையும் மாதிரி தான் நானும் பொடிப்பேன்....(கோவிச்சிக்காதீங்க பிரேமா....சும்மா தான்.....) கண்டிப்பா செய்துட்டு சொல்லணும். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ஐ டூ லைக் கலர்ஸ்.....தேங்க்ஸ் வனி.

சோக்கு சோக்கு.......என்னத்தை சொல்ல.....ஹெடிங் என்னவோ "லாவி மேடம்" ஆனா டவுட் என் பெயர் என்னன்னு? மேடமும் இல்லை, லாவியும் இல்லை, லாவண்யா மட்டுமே! சரி எனக்கும் ஒரு டவுட்.....உங்க பேரு குணா தெரியும்......அது என்ன 2962 (2-9-62)? பிறந்த தேதியா? அப்போ உங்களுக்கு இப்போ எப்படியும் ஐம்பது வயசை தாண்டியே இருக்கும்........வேலை ரொம்பவே ஜாஸ்தியோ???இல்லை பதிவெல்லாம் அமர்க்களமா வருதே அதான் கேட்டேன் .....

எனக்கு தெரிந்தை பகிர்ந்துக்க நினைத்தேன். அவ்வளவே.....வாழ்த்துக்கு நன்றி சுபா.

எதையும் இப்போ சொல்லவே வேண்டாம். செய்துட்டு சாப்டுட்டு சொல்லுங்க போதும். நன்றி சீதாலக்ஷ்மி.

கண்டிப்பா எள் சேர்த்தாலே ஒரு மணம் தான்....அதனின் சுவையே தனி தான். வாழ்த்துக்கு நன்றி நிகிலா.

ஆசையை தூண்டிடேனோ.....அப்போ ஜெய்ச்சிட்டேன்....செய்து பார்த்தாச்சா? பிடிச்சதா? நன்றி ரம்மி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
கம கம மிர்ச் மசாலா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

லாவி மிர்ச் மசாலா பார்க்கவே படு அமர்க்களமா இருக்குங்க கலர்ஃபுல் டிஷ் சூப்பர்ர்ர் வாழ்த்துக்கள்....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவி,
க‌ல‌ர்ஃபுல் மிர்ச் ம‌சாலா! கடைசிப்படம் கண்னை பறிக்குது! ;) எள் பற்றிய போன‌ஸ் டிப்ஸ் சூப்ப்ப‌ர்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கம கமன்னு கண்டிப்பா இருக்கும்.....எள்ளின் மனம் தான்.....நன்றி கவிதா.

அது என்னவோ ஸ்வர்ணா சாப்பாடுன்னா கூடா எனக்கு கலர்புல்லா இருந்தா பிடிக்கும். இப்படி இருந்தா கண்டிப்பா குழந்தைகளுக்கும் பிடிக்கும். அதான்......நன்றி.

வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சுஜா.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,

இன்று இரவு சப்பாத்திக்கு இதுதான் செய்துள்ளேன்.. டேஸ்ட் பார்த்து விட்டேன்.மணமாக..சுவையாக உள்ளது...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

nandraga irunthathu