கொள்ளு குருமா

தேதி: June 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

முளை கட்டிய கொள்ளு - 1 கப்
பொடிய நறுக்கிய வெங்காயம் - 1
பொடிய நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி,பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மசித்த உருளைக்கிழங்கு - 1
மிளகாய்த்தூள்- - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

அரைக்க:

தேங்காய்(துருவியது) - 1/4 கப்
முந்திரி - 6

தாளிக்க:

சோம்பு - 1 டீஸ்பூன்
பிரிஞ்சிஇலை - 2

அலங்கரிக்க:

கொத்தமல்லித்தழை - சிறிது


 

(1)பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு,பிரியாணி இலை
சேர்த்து தாளிக்கவும்
(2) இதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
(3) பின் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்றாக குழைந்ததும் தூள் வகை எல்லாம் சேர்க்கவும்.
(4)மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து 1/2கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
(5) பின்பு கொள்ளை சேர்த்து வேகவிடவும்.
(6)கொள்ளு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
(7)கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்