ஜீரா ஆலூ

தேதி: June 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (8 votes)

 

உருளை - கால் கிலோ
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
அம்சூர் பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

உருளையை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தூள் வகை சேர்த்து பிரட்டவும்.
தூள் வாசம் கொஞ்சம் அடங்கியதும் உருளை சேர்த்து பிரட்டவும்.
தூள் வாசம் போய், மசாலா உருளையில் நன்றாக ஒட்டியதும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
சுவையான ஜீரா ஆலூ தயார். ரொட்டி, தயிர் சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் என அனைத்துக்கும் நல்ல ஜோடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதே மாதிரி தான் நம்ம வீட்டிலையும் செய்வோம் பட் இங்க கடுகு சேர்த்து பண்ணுவோம் ஆம்சூர் பொடி சேர்க்க மாட்டோம் போட்டோஸ் ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

வனி,
எனக்கு ரொம்ப பிடித்த டிஷ் இது..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி ஜீரா ஆலூ சூப்பரா இருக்கும் போல மசாலா எல்லாம் சேர்த்து படங்கள் இப்பவே செய்து சாப்பிட சொல்லுது நான் இதை பண்ணிட்டு சொல்லுறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அன்பு வனிதா,

இதுவ்ரைக்கும் ஆம்சூர் பொடி சேர்த்து செய்ததில்லை. அடுத்த முறை இந்தக் குறிப்பின்படி செய்து பார்க்கிறேன்.

எப்பவும் போல படங்கள், விளக்கங்கள் பளிச், தெளிவு!

பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

எங்க வீட்டில் இதே செய்முறை தான், ஆனா எங்க அம்மாக்கு பேரு எல்லாம் தெரியாது. இன்னைக்கு நான் போய் கண்டிப்பா சொல்றேன். டிஸ்ப்ளே சூப்பர் வனி.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி

ஆளு அழகா மொட்டு மொட்டா கைவினை பகுதிக்கு வர வேண்டிய குறிப்பை போல அம்சமா இருக்கு.
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இளையா... மிக்க நன்றி. ஆம் நம்ம ஊர் ஸ்டைல் அது தான். கடுகு சேர்த்து தாளிப்பது. இது போலும் செய்து பாருங்க, சீரக வாசம் நல்லா இருக்கும். :)

கவிதா... மிக்க நன்றி :) பிடிச்சாலும் செய்ய மாட்டீங்களே...

தனா... மிக்க நன்றி. எனக்கு ஒவ்வொரு பார்ட்டிக்கும் ஒரு வகை ஆலூ ட்ரை பண்ணுவேன். இந்த முறை இது... நல்லா இருந்தது. நம்பி ட்ரை பண்ணுங்க :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. ஆம்சூர் இல்லன்னா வெறும் லெமன் சேருங்க... புளிப்பு சுவைக்கு தானே. :)

சுகி... மிக்க நன்றி. உங்க அம்மா மட்டுமில்ல... எங்க அம்மாக்கும் செய்யும் எல்லா விதத்துக்கும் ஒரே பேரு தான் ;) உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்வாங்க. ஹிஹிஹீ.

ரம்யா... மிக்க நன்றி. எப்படி இப்படிலாம் வர்ணிக்க வருது??? ;) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி
இன்னைக்கு இந்த டிஷ் தான் செய்தேன்
அருமையாக இருந்தது :). தூங்கி முடிந்து இப்ப தான் அறுசுவையை எட்டி பார்க்க முடிந்தது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி. செய்து பார்த்துட்டீங்களா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எளிதில் செய்ய கூடிய அருமையான குறிப்பு.

தேவிகா

The Education of an individual is endless.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா