இட்லி சாம்பார்

தேதி: June 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (16 votes)

 

வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
வர மிளகாய் - 5
சாம்பார் தூள் - அரை தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
மல்லி தழை
பெருங்காய பவுடர் - அரை தேக்கரண்டி
எண்ணெய்


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வரமிளகாய் தாளிக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், உரித்த சின்ன வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். பின் பருப்பை கரைத்து சேர்க்கவும். தக்காளியை கையால் நன்றாக கரைத்து ஊற்றவும்.
சாம்பார் சுண்டி வந்ததும் நல்லெண்ணெய், சர்க்கரை, பெருங்காய பவுடர் சேர்க்கவும். கடைசியாக கறிவேப்பிலை, மல்லி தழை சேர்க்கவும். சூடான இட்லியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு உங்க சாம்பார் நேரம் கிடைக்கும் போது ட்ரை பண்ணி பார்கிறேன் by Elaya.G

இட்லி சாம்பார் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் நீங்க ஈஸியா செய்திருக்கிங்க. ஆனால் நாங்க இட்லி செய்வது ரொம்ப அரிது. இங்கே அரிசி சரி வராது. இட்லி அரிசி வாங்கி வந்த அப்பறம் செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அன்பு மஞ்சுளா,

குறிப்பு நல்லா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

மஞ்சு
சூப்பர் சாம்பார். அவசியம் செய்து பார்க்கணும் நன்றி :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பு வெளியிட்டமைக்கு நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

இளையா - முதல் பதிவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி
பிரேமா- வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி
சீதா மேம்- நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க
ரம்யா - வாழ்த்திற்கு நன்றி. செய்துபாருங்க

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சுளா,
நானும் இது போலே அடிக்கடி செய்வதுண்டு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

hello madam, how are you? can i know the amount of 1 cup( how many milligram)? today i am doing your receipe after finish i will inform you about the taste. Thanks.

" Life is a Festival, Celebrate it "

நல்ல சுலபமான சுவையான சாம்பார் :) செய்துருவோம். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dr.. manjula unga sambar super...really my husband said very tasty....thank u....

kaivinai

இட்லி சம்பார் குறிப்பு மிக எளிமையாக அதிக சுவையொடு இருந்தது மிக்க நன்றி - ஹேமா பிரசன்னா - லண்டன்.

வாழ், வாழ விடு

மஞ்சு, இன்று காலை இட்லிக்கு இந்த சாம்பார் வைத்தேன். ஒரே ஒரு சின்ன குறை எனக்கு இங்கே சின்ன வெங்காயம் கிடைக்காது. அதனால் பெரிய வெங்காயத்தை வச்சே செய்துட்டேன். கரெக்டான ஒரிஜினல் டேஸ்டை மிஸ் பண்ணிட்டேன் ;( இருந்தாலும் டேஸ்ட் எனக்கு பிடிச்சிருந்தது. சுட சுட இட்லியோட உங்களோட கும்பகோணம் பில்டர் காபியை குடிச்சுட்டே சாப்ட்டது செம்மையா இருந்தது போங்க. அம்மா கையால சாப்ட்ட பீலிங்க்ஸ் இருந்தது பா. அதுக்கு உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்.நன்றி + வாழ்த்துக்கள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.